اِنَّ الَّذِیۡنَ سَبَقَتۡ لَہُمۡ مِّنَّا الۡحُسۡنٰۤی ۙ اُولٰٓئِکَ عَنۡہَا مُبۡعَدُوۡنَ - لَا یَسۡمَعُوۡنَ حَسِیۡسَہَا ۚ وَہُمۡ فِیۡ مَا اشۡتَہَتۡ اَنۡفُسُہُمۡ خٰلِدُوۡنَ
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
“ஜன்னத்திற்குரியவர்கள் என்று நம்முடைய தரப்பிலிருந்து தீர்மானிக்கப்பட்டுவிட்டவர்கள், நரகத்திலிருந்து வெகு தொலைவில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் ஜன்னத்தின் நிலையான இன்பத்தில் இருப்பார்கள்.
இந்த வசனத்தில் குறிப்பிடப்படுபவர்கள் ஹஸ்ரத் உஸைர் மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் ஆவர். அவர்கள் ஜன்னத்தில் நுழைந்திருப்பது இந்த வசனத்தின் மூலம் நிரூபணமாகிறது. இதன் மூலம் அவர்களின் மரணமும் நிரூபிக்கப்பட்டதாகிறது.”
— (அஸ்ராருல் வஹீ / ரூஹானி கஸாயின், தொகுதி 3, பக்கம் 333)
“எங்களுடைய வாக்குறுதிக்கு ஏற்ப ஜன்னத்திற்குத் தகுதியானவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டவர்கள், நரகத்திலிருந்து வெகு தொலைவில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் ஜன்னத்தின் நிலையான இன்பத்தில் இருப்பார்கள்.
அனைத்து முஃபஸ்ஸிர்களும் (திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்களும்), இந்த வசனம் ஹஸ்ரத் ஈசா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றியதே என்று எழுதியுள்ளனர். இதிலிருந்து ஒரு முக்கியமான விஷயம் நிரூபணமாகிறது: அவர் ஜன்னத்தில் இருக்கிறார்.
எனவே, அவர் வஃபாத் (மரணம்) அடைந்துவிட்டார் என்பது நிரூபணமாகிறது. இல்லையெனில், மரணத்திற்கு முன்பே அவர் எவ்வாறு ஜன்னத்தை அடைந்திருக்க முடியும்?”
— (அய்யாமுஸ்ஸுல்ஹ், ரூஹானி கஸாயின், தொகுதி 14, பக்கம் 388)
