About
எமது கொள்கை
அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் நிறுவனர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) வாக்களிக்கப்பட்ட மசீஹ் மற்றும் மஹ்தி அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களை பின்பற்றுதல் மற்றும் அவர்களின் வழியில் செல்லுதலை விட்டுவிட்டு மனிதன் எந்தவித ஆன்மீக அருட்களையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பது எமது கொள்கையாகும் என்பதை நான் மிக தெளிவாக கூறிக் கொள்கிறேன்."
(மல்ஃபூஸாத் பாகம் 4 பக்கம் 543-544)
----------------------------------
"ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் காதமன் நபிய்யீனாக இருக்கின்றார்கள். திருக்குர்ஆன் காதமுல் குதுப் ஆக இருக்கிறது. இனி எந்த கலீமாவோ அல்லது தொழுகையோ கிடையாது. எதனை ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் சொல் வழியாக அல்லது செயல் வழியாக காட்டி தந்து சென்றார்களோ மேலும் திருக்குர்ஆனில் எது இருக்கிறதோ அதனை தவிர்த்து இரட்சிப்பை பெற முடியாது. எவரொருவர் இதனை தவிர்ப்பாரோ அவர் நரகம் செல்வார். இதுவே எமது மார்க்கம் மற்றும் கொள்கையாக இருக்கிறது".
(மல்ஃபூஸாத் பாகம் 4 பக்கம் 558)
-----------------------------------
தமது ஜமாஅத்திற்கு அறிவுரை கூறியவாறு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"தன்னை எமது ஜமாஅத்தில் இணைத்து கொண்டோர்களே! எப்போதுவரை நீங்கள் உண்மையான முறையில் இறையச்சத்தில் காலடி எடுத்து வைக்க மாட்டீர்களோ அது வரை வானத்தில் எமது ஜமாஅத்தை சார்ந்தவர்களாக நீங்கள் கருதப்படமாட்டீர்கள். ஆகவே நீங்கள் உங்கள் தொழுகையை தொழும்போது இறைவனை பார்க்கின்றீர்கள் என நினைத்து தொழுங்கள். மேலும் நோன்பினை நேர்மையுடன் இறைவனுக்காக கடைபிடித்து வாருங்கள். எவர் ஒருவரால் ஸகாத் கொடுக்க இயலுமோ அவர் ஸகாத் கொடுக்கவும். எவர் மீது எந்த தடையுமின்றி ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளதோ அவர் ஹஜ் செய்யவும். நன்மையை அழகான முறையில் கடைபிடித்து வாருங்கள். தீயவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். இறையச்சமில்லாத எந்த செயலும் இறைவன் வரை சென்றடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இறையச்சம் எல்லா நன்மையான காரியங்களுக்கும் வேறாக இருக்கிறது".
(கஷ்தியே நூஹ்- ரூஹானி கஜாயீன் பாகம் 19 பக்கம் 15)
...................................................
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் பார்வையில்:
"எந்த அளவுக்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளை எடுத்துக் கூற முடியுமோ அந்த அளவுக்கு வேறெந்த சமுதாயமும் தமது நபியின் நடைமுறையை எடுத்துக் கூறமுடியாது. உதாரணமாக மசீஹ் (அலை) அவர்களின் பொறுமை பற்றி மட்டும் கிடைக்கும் , அதாவது அவர் அடி வாங்கி கொண்டே இருந்தார். ஆனால் அவர்களுக்கு வலிமை கிடைத்தது என்று எங்கிருந்து கிடைக்கும். அந்த நபி உண்மையாளராகவே இருக்கின்றார். ஆனால் அவர்களின் அனைத்து வகையான நடைமுறைகளும் நிரூபிக்கபடாததாகும். அவர்களை பற்றி திருக் குரானிலும் வந்துள்ளது. ஆகவே நாம் அவர்களை நபி என்று ஏற்றுக் கொள்கிறோம். இன்ஜீலில் ஓர் ஆற்றல் மிகுந்த நபியின் மகத்துவம் எவ்வாறு இருக்குமோ அவ்வாறான எந்த நடைமுறையை பற்றி எதுவும் இன்ஜீலில் அவர்களை (ஹஸ்ரத் ஈஸா (அலை)) பற்றி நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறே எமது முழுமையான நேர்வழி காட்டி (ஸல்) அவர்களும் துன்பம் நிறைந்த முதல் 13 ஆண்டு காலத்தில் மரணம் அடைந்திருந்தால் அன்னாரின் பல நடைமுறைகள் நமக்கு ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை போன்று நிரூபிக்கப்பட்டிருக்காது. ஆனால் இரண்டாவது காலமான வெற்றியின் காலம் வந்த போது, குற்றவாளிகள் அன்னாரின் முன்பு கொண்டு வரப்பட்டது. அப்போது அன்னாரின் கருணை மற்றும் மன்னித்தல் என்ற குணத்தின் முழு ஆதாரம் (நமக்கு) கிடைக்கின்றது. இதன் மூலம் அன்னார் (ஸல்) அவர்களின் எந்த பணியும் கட்டாயத்திற்கு உட்பட்டது அல்ல நிர்பந்தத்திற்கும் உட்பட்டது அல்ல என்பதும் தெளிவாக விளங்குகிறது."
(மல்ஃபூசாத்)
.................................................
என் வருகையின் நோக்கம்
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி மிர்சா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
இறைவனுடைய ஏகத்துவத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகத்துவத்தையும் உலகில் நிலைநாட்டுவதுதான் என் வருகையின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. நான் நபிகள் நாயகத்தின் ஊழியனாக இருக்கின்றேன். அவர்களின் நபித்துவத்தின் ஒளியிலிருந்துதான் எனக்கு ஒளி கிடைக்கின்றது. அன்றி எனக்கு சொந்தமாக எதுவும் இல்லை. அதனால் எனது பூரணமான நம்பிக்கையாவது நபிகள் நாயகத்திற்கு பிறகு அவர்களுடன் எந்தவித தொடர்புமில்லாமல் இறைவன் புறமிருந்து நேரடியாக நான் வந்துள்ளேன் என்று எவரொருவர் சுயமாக வாதம் செய்தால் அவர் சபிக்கப்பட்டவர் என்பது எனது பூரணமான நம்பிக்கையாக இருக்கிறது. நபிகள் நாயகத்தை (ஸல்) பின்பற்றாமல் எவராலும் இறைவன் புறமிருந்து வர முடியாது என்று என்றென்றைக்கும் இறைவன் புறமிருந்து முத்திரை இடப்பட்டிருக்கின்றது.
(நூல்: மல்ஃபூஸாத் பாகம் 3 பக்கம் 287)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None