இறைவன் எத்தகையவன்?

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
நீங்கள் இறைவனுக்காக ஆகிவிட்டால்,அவன் உங்களுடையவனாய் ஆகிவிடுவான் என்பதனை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் இறைவன் உங்களுக்காக விழித்துக் கொண்டிருப்பான். நீங்கள் உங்கள் பகைவர்களைக் குறித்து கவனமற்றிருக்கும்போது அவன் அவர்களைக் கண்காணித்து வருவான்.மேலும் உங்களுக்கு விரோதமான அவர்களது சதித்திட்டங்களை எல்லாம் முறியடிப்பான். உங்களிறைவன் எத்தகைய வல்லமை மிக்கவன் என்பதை நீங்கள் இதுவரை அறிந்ததில்லை. நீங்கள் இதனை அறிந்திருந்தால் இவ்வுலகிற்க்காக கவலைப்படும் ஒரு நாளும் உங்களுக்கு வராது. தன்னிடம் ஒரு செல்வக் குவியலைகொண்டுள்ள ஒருவன் அதிலிருந்து ஒரு பைசாவை இழந்துவிட்டால் அதற்க்காக கண்ணீர் வடிப்பானா?கூச்சல் போடுவானா? அல்லது தன்னை மாய்த்துக் கொள்வானா? இவ்வாறிருக்க இறைவன் உங்களது ஒவ்வொரு தேவையின் போதும் உங்களுக்கு எப்போதும் வழங்கக்கூடிய கருவூலமாக இருக்கிறான் என்பதனை நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் உலகிற்காக தம்மை இழந்த நிலையில் மயங்கி இருப்பானேன்?
இறைவன் கிடைப்பதற்குரிய பெரும் கருவூலமாக இருக்கிறான். நீங்கள் ஒவ்வோர் அடி எடுத்துவைக்கும்போதும் அவன் உங்களுக்கு உதவி புரிகின்றவனாய் இருக்கிறான் எனவே அத்தகைய இறைவனுக்கு மதிப்பளியுங்கள்.அவனில்லாமல் நீங்கள் ஒரு பொருட்டல்ல, உங்களது வழிவகைகளும் திட்டங்களும் ஒன்றுமற்றவையாகும். நீங்கள் உலகப் பொருள்கள்மீது முற்றிலும் சார்ந்திருக்கின்ற பிற சமுதாயத்தினரை ஒருபோதும் பின்பற்றாதீர்கள். பாம்பானது மண்ணைத் திண்பதுபோல் அவர்கள் உலகின் அற்பப் பொருள்களையே தின்றுள்ளனர். கழுகுகளும் நாய்களும் பிணங்களைத் தின்பதைப்போல் அவர்களும் உலக இச்சை என்னும் பிணங்களையே கவ்விப் பிடித்துள்ளனர்.அவர்கள் இறைவனை விட்டும் வெகு தூரம் சென்றுவிட்டனர்.அவர்கள் மனிதர்களைத் தெய்வமாக மதித்து வணங்கினர் பன்றியைத் தின்றனர், மதுவை தண்ணீரைப்போல் அருந்தினர் அவர்கள் அளவுக்கு மீறி உலகப் பொருள்கள் மீது விழுந்ததாலும் இறைவனிடமிருந்து உதவி தேடாததாலும் மரணித்துப் போயினர்.ஒரு புறாவானது தனது கூட்டிலிருந்து பறந்து செல்வதைப்போல் அவர்களிடமிருந்து ஆன்மீக ஆவி பறந்து போய்விட்டது.  
(கிஷ்தி நூஹ்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.