திருக்குர்ஆன், ஹதீஸ்கள் மற்றும்
உம்மதே முஹம்மதிய்யாவின்
சான்றோர்களின் ஆன்மீக காட்சிகள்
மற்றும் கூற்றுகளை ஆராய்ந்து
பார்க்கும்போது, ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள் தனது இந்த உம்மத்தில்
எந்த வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் மற்றும்
மஹ்தியின் வெளிப்பாட்டினை பற்றி முன்னறிவிப்பு
அறிவித்திருந்தார்களோ அவர்கள் ஹிஜ்ரி 13 ஆம் நூற்றாண்டின்
இறுதி அல்லது ஹிஜ்ரி 14 ஆம்
நூற்றாண்டின் துவக்கத்தில் அவர்கள்
தோன்றுவார்கள் என்பது நமக்கு தெளிவாகிறது.
திருக்குர்ஆன் மற்றும் இமாம் மஹ்தி தோன்றும்
காலம்
திருக்குர்ஆன் இமாம் மஹ்தி தோற்றத்தின்
காலத்தை பற்றி கூறும்போது
இவ்வாறு கூறுகிறது:
“يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ"
அதாவது, அல்லாஹ்
வானம் மற்றும்
பூமியை நோக்கி தனது கட்டளையை
தனது நாட்டத்திற்கிணங்க
நிலைநாட்டுவான். மேலும்
ஹஸ்ரத்
ரஸூல் (ஸல்) அவர்கள்
இஸ்லாத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளை “கைருல் குரூன்” (சிறந்த நூற்றாண்டுகள்) என்று கூறியுள்ளார்கள். மேலும் மார்க்கம்
வானத்தை நோக்கி சென்றுவிடும். அந்த ஆயிரம் காலம் நிச்சயமாக
இந்த மூன்று வருடங்களுக்கு பிறகுதான் தோன்ற வேண்டும். இந்த மூன்று சிறந்த நூற்றாண்டுகள் மற்றும் ஆயிரம் வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து
மார்க்கம் மீண்டும் (இப்பூமியில்) நிலைபெறுவது நியமிக்கப்பட்ட
ஒன்றாக இருந்தது. 13 நூற்றாண்டுகள் கடந்த பிறகு மார்க்கத்தில் உலகத்திலுள்ள அனைத்து
மார்க்கத்தை பின்பற்றுபவர்களும் வானத்திலிருந்து ஒரு சீர்திருத்தவாதியை
எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். ஆம், வாக்களிக்கப்பட்ட
அந்த இமாம் மஹ்தியின், மஸீஹின்
வெளிப்பாட்டை பற்றி ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள் அறிவித்திருந்த
அந்த காலம்தான்.
அது
மட்டுமல்லாமல், திருக்குர்ஆனில்
சூரா நூர் வசனம் 56 இல்
அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கும் வாக்குறுதியை பற்றி எடுத்து கூறுகிறான். தொடர்ந்து இந்த வசனத்தில் அல்லாஹ்
அந்த நம்பிக்கையாளர்கள்
மத்தியில் அவர்களுக்கு முன்புள்ளவர்களுக்கு
கலீஃபாவை நியமித்ததை போன்று நியமிப்பான். அவர்கள்
மார்க்க வலுவிற்கு காரணமாக
அமைவார்கள் என்று இறைவன் அந்த வசனத்தில்
நம்பிக்கையாளர்களுக்கு வாக்கு கொடுப்பதாக
நாம் பார்க்கிறோம். இந்த வாக்கிற்கிணங்க
எவ்வாறு மூஸா (அலை) அவர்களின் உம்மத்தில் 13 நூற்றாண்டுகளுக்கு
பிறகு மஸீஹ் வந்தார்களோ அவ்வாறே
முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்திலும் 13 நூற்றாண்டுகள் கடந்த பின்பு மஸீஹ், மஹ்தியின்
வருகை அவசியமாகும்.
சூரா
ஜுமுஆவில் ஈமானை நிலைநிறுத்துவதற்காக
ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்களின் உவமை வடிவிலான ஒரு அடிமையின் வருகையை
பற்றி நற்செய்தி
கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَآخَرِیْنَ مِنْھُمْ لَمَّا یَلْحَقُوْابِھِمْ
“அல்லாஹ் இவர்களை
சந்திக்காத பிறிதொரு சமுதாயத்திலும்
ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை
அனுப்புவான். (சூரா ஜுமுஆ:4)
இந்த
வசனம் இறங்கிய
பின் நபித் தோழர்கள், நீங்கள்
மீண்டும் (உவமை வடிவில்) வருகை தரும் அந்த சமுதாயம் யார் என்று வினவவே, ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) சல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்களின்
தோழில் கை வைத்து இவ்வாறு
கூறினார்கள்:
“(ஒரு காலம் வரும் அப்போது) ஈமான் கார்த்திகை நட்சத்திரம் வரை சென்றடைந்து விடும். ஆனாலும் ஃபார்ஸி வம்ஸத்திலிருந்து ஒருவர் அல்லது பலர் ஈமானை மீட்டு கொண்டு வருவார்கள்.” (புகாரி கீதாபுத் தஃப்ஸீர்
சூரா ஜுமுஆ)
ஆக, ஃபார்ஸி
வம்சத்தை சார்ந்த அந்த மனிதரின் வருகையை
தமது வருகையாக
எடுத்து கூறுகின்றார்கள். அந்த மனிதர் மூலம் இறுதி நாளில் இவ்வுலகத்தில் ஈமான் மீண்டும்
நிலை நாட்டப்படும்
என்பது நியமிக்கப்பட்ட
ஒன்றாகும். இதில் எதார்த்தம் என்னவென்றால், அப்ஜத் கணக்கின்
படி இந்த வசனத்திலுள்ள சொற்களுக்கான
எண்ணிக்கையை கூட்டி பார்க்கும்போது 1275 வருகிறது. இதன் மூலம் இறுதி காலத்தில் ஈமானை நிலை நாட்டக்கூடிய
எந்த வாக்களிக்கப்பட்ட
மஸீஹைப் பற்றி இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதோ
அவர் 13 வது
நூற்றாண்டின் இறுதி பகுதியில்
தோன்றுவார் என்பது சைகையாக எடுத்து கூறப்படுகிறது.
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளின் அடிப்படையில் மஸீஹ், மஹ்தியின் காலம்
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக இப்னு மாஜாவில்
ஒரு ஹதீஸ் இவ்வாறு வருகிறது:
اَلْاٰیَاتُ بَعْدَ الْمِاَئتَیْن
அடையாளங்கள் இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளிப்படும்” (இப்னு மாஜா
கிதாபுல் ஃபித்ன் பாடம்: அடையாளங்கள்)
மேலே குறிப்பிட்டுள்ள
இந்த ஹதீஸிற்கு
விளக்கம் அளித்தவாறு பிரசித்தி பெற்ற முஹத்திஸ் ஹஸ்ரத் முல்லா இமாம் அலியுல் காரி அவர்கள் இவ்வாறு
எழுதுகின்றார்கள்:
’’وَیَحْتَمِلُ اَنْ یّکُوْنَ اللَّامُ فِی الْمِائَتَیْنِ لِلْعَھْدِاَیْ بَعْدَ الِمائَتَیْنِ بَعْدَ الأَلْفِ وَھُوَ وَقْتُ ظُھُوْرِ الْمَھْدِی‘‘
அதாவது, “அல் மிஅதய்ன்” எனும் சொல்லில் வரக்கூடிய “லாம்” என்பது குறிப்பிட்ட அந்த இரண்டு நூற்றாண்டை (கைருல் குரூன்) குறிப்பிடுவதாக இருக்கலாம். இவ்வாறு
இதற்கு ஆயிர வருடத்திற்கு பிறகு 200 ஆண்டுகள் அதாவது 1200 ஆண்டுகள் பிறகு இந்த அடையாளங்கள்
வெளிப்படும். மேலும் அந்த காலம்தான் (அதாவது 13 வது
நூற்றாண்டு) இமாம் மஹ்தி வெளிப்படும்
காலமாக இருக்கும். (மிர்க்காதுல் மிஸ்பாஹ் ஷரஹ் மிஷ்காதுல்
மஸாபிஹ் பாகம் 10 பக்கம் 182 - அலி இப்னு
சுல்தான் அல்காரி அச்சிடப்பட்டது- இம்தாதியா முல்தான்)
பிறிதொரு ஹதீஸில்
இவ்வாறு வருகிறது:
اِنَّ اللّٰہَ یَبْعَثُ لِھٰذِہِ الُامَّةِ عَلَی رَاسِ کُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ یُجَدِّدُ لَھا دِیْنَھَا
அதாவது, நிச்சயமாக
அல்லாஹ் தஆலா இந்த உம்மத்தின் ஒவ்வொரு
நூற்றாண்டின் துவக்கத்திலும் முஜத்தித் (மார்க்க
சீர்திருத்தவாதி) அனுப்புவான்” (அபூ தாவூத்
கிதாபுல் மலாஹிம் பாப் “மா
எஸ்குரு
ஃபீ கரனில்
மிஅ)
இந்த ஹதீஸின்
அடிப்படையில் உம்மத்தின் உலமா பெருமக்கள், இமாம் மஹ்தி 14 வது நூற்றாண்டின்
முஜத்திதாக இருப்பார் என்று நம்பினர்.
இவ்வரிசையில் அஹ்லே ஹதீஸை சார்ந்த
பிரசித்திப் பெற்ற ஆலிம் நவாப் சித்தீக் ஹஸன் கான் சாஹிப் 13 நூற்றாண்டுகளின்
முஜத்தித்மார்களின் வரிசையை எடுத்துக் கூறிய பிறகு இவ்வாறு
எழுதுகின்றார்கள்:
“14 வது நூற்றாண்டு
துவங்குவதற்கு இன்னும் 10 வருடம்
மீதமுள்ளது. இந்த நூற்றாண்டில் மஹ்தி மற்றும் ஈஸா தோன்றிவிட்டால் அவரே 14 வது
நூற்றாண்டின் முஜத்திதாக இருப்பார்.” (மொழியாக்கம் ஃபார்ஸி: ஹஜஜூல்
கராமா பக்கம் 139-நவாப் சித்தீக்
ஹஸன்
கான், பதிப்பகம்
ஷாஹ்ஜஹானி, போபால். 1291 ஹிஜ்ரியில் அச்சிடப்பட்டது)
மஸீஹ், மஹ்தியின் காலம் பற்றி சான்றோர்களின்
கூற்றுகள்
(இமாம் மஹ்தி அலை அவர்களின்
தோற்றத்தைப் பற்றி இந்த உம்மத்தில் தோன்றி மறைந்த பல சான்றோர்கள் பல கருத்துக்களை கூறியிருக்கின்றார்கள்.அதில் ஒரு சிலவற்றை நாம் கீழே தருகிறோம்).
•
ஹஸ்ரத் நிஃமதுல்லாஹ் வலி (ஹிஜ்ரி
729-834) அவர்கள்
தனது பிரசித்திப் பெற்ற கசீதா வில் இறுதி நாட்களின்
நிலையைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார்கள். அவர்கள் எழுதுகின்றார்கள்:
غین ری سال چوں گزشت ازسال
بوالعجب کاروبار
می بینم
مہدی وقت
و عیسیٰ
دوراں
ہر دو
را شاہسوار
می بینم
அதாவது, “கைன்” “ரே” அதாவது 1200 வருடங்கள் கடந்துவிடும். அதற்கு பிறகு நடக்கவிருக்கும் பல்வேறு நிலைகள்
எனக்கு தென்படுகிறது. காலத்தின் மஹ்தி மற்றும் ஈஸா இருவரையும் வெளிப்பட்ட
வண்ணம் நான் காண்கிறேன்” (அர்பயீன்
ஃபி அஹ்வாளில்
மஹ்திய்யீன், எழுதியவர்; முஹம்மது இஸ்மாயீல் ஷஹீத் பக்கம் 2,4, அச்சிடப்பட்டது 1268 ஹிஜ்ரி)
மஸீஹ் மற்றும்
மஹ்தி 14 வது
நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றக்கூடிய
ஒரே வாக்களிக்கப்பட்டவரின்
இரு வேறு பெயர் ஆகும். இதைப் பற்றி நாம் ஹதீஸில்
பார்ப்போமானால், ஹதீஸில் இவ்வாறு
வருகிறது:
’’لَاالْمَھْدِیُّ اِلَّا عِیْسٰی بنُ مَرْیَمَ‘‘
பொருள்: மஸீஹ் இப்னு மர்யமை தவிர வேறு எந்த மஹ்தியும்
இல்லை.” (இப்னு மாஜா
கிதாபுல் ஃபித்ன் பாப் ஷித்ததுஸ்
ஸமான்)
2- ஹஸ்ரத் ஹாஃபிஸ்
பர்கூர்தார் சாஹிப் (985-1093ஹிஜ்ரி)
1300 ஆண்டுகள் கழிந்த பிறகு ஹஸ்ரத் இமாம் மஹ்தி தோன்றுவார். அவர் நீதியுடனும் நேர்மையுடனும் செயல்படுவார்.
3)ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ்
தஹ்லவி (1114-1175 ஹிஜ்ரி)
عَلَّمَنِیْ رَبّیِ جَلَّ جَلَالُہٗ اَنَّ القَیَامَةَ قَدِ اقْتَرَبَتْ وَالْمَھْدِیُّ تَھَیَّا لِلْخُرُوْجِ
பொருள்: இறைவன் எனக்கு கூறினான், அதாவது இறுதி நாள் வந்துவிட்டது. மேலும் இமாம் மஹ்தி தோன்றவிருக்கிறார். (அல் தஃப்ஹீமாதே
இலாஹிய்யா பாகம் 2 பக்கம் 160, தஃப்ஹீம் நம்பர் 146 ஷாஹ் வலியுல்லாஹ்
அகேடமி தில்லி)
பிறகு மௌலானா நவாப் சித்திக்
ஹஸன் கான் சாஹிப் ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ்
முஹத்திஸ் தெஹ்லவி பற்றி இவ்வாறு எழுதுகின்றார்கள்: “ஹஸ்ரத் ஷாஹ் வலியுல்லாஹ் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் தோன்றும்
தேதியை “லஃப்ஸ் சிராக் தீன்” இல் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள், “அப்ஜத் எழுத்தின்
பிரகாரம் ஆயிரத்து இருநூற்று அறுபத்தி
எட்டு ஹிஜ்ரி ஆண்டுகள் ஆகும்.” (ஹஜஜூல் கராமா ஃபி
ஆஸாரில் கியாமா பக்கம் 394- நவாப் சித்தீக்
ஹஸன் கான் பதிப்பகம்: ஷாஹ்ஜஹானி போபால்)
4) ஹஸ்ரத் ஷாஹ் அப்துல் அஸீஸ்
(1159-1239 ஹிஜ்ரி) அவர்கள் கூறுகின்றார்கள்: “1200 ஹிஜ்ரி வருடத்திற்கு
பிறகு ஹஸ்ரத் மஹ்தியை எதிர் பார்க்க வேண்டும். ஆண்டின் துவக்கத்தில்
ஹஸ்ரத் பிறப்பார்கள்.” (அர்பயீன் ஃபி அஹ்வாலூல்
மஹ்திய்யீன்-தொகுத்தவர்: முஹம்மத்
இஸ்மாயீல் ஷஹீத் இறுதி
பக்கம்- 1268 ஹிஜ்ரியில் அச்சடிக்கப்பட்டது)
5) ஹஸ்ரத் அஷ்ஷேக்
அலி அஸ்கர் அல்பரூஜர்வி (1231 ஹிஜ்ரியில்
பிறந்தவர்) அவர்கள்
கூறுகின்றார்கள்: “..ஸர்கீ ஆண்டில் உயிருடன் இருந்தால் ஒவ்வொரு நாட்டிலும் மற்றும் மார்க்கத்திலும் புரட்சி ஏற்பட்டு விடும். சர்கீ என்பதன் அப்ஜது கணக்ககின்படி 1300 ஆகின்றது. (நூருல்
அன்வார்-ஷேக்
அலி அஸ்கர் பக்கம் 215-1328 ஹிர்ஜியில் அச்சடிக்கப்பட்டது)
6) மௌலானா நவாப் சித்தீக் ஹஸன் கான் சாஹிப்
(1248-1307 ஹிஜ்ரி) அவர்கள் கூறுகின்றார்கள்: (அ) “சில பெரியோர்கள் மற்றும்
சிந்தனையாளர்களின் பார்வையில் இமாம் மஹ்தி அவர்களின்
தோற்றம் 1200 வருடத்திற்கு
பிறகு ஆகும். ஆனால் 1300 வருடத்தை
கடந்து செல்லாது.” (ஹுஜஜூல்
கராமா பக்கம் 394-பதிப்பகம்: ஷாஹ்ஜஹானி
போபால்-1291 ஹிஜ்ரியில் அச்சடிக்கப்பட்டது).
(ஆ) மேலும் எழுதுகின்றார்கள்: “பிறகு 1301 ஹிஜ்ரி மற்றும் 1884 ஆண்டிலிருந்து 14 ஆம்
நூற்றாண்டு துவங்குகிறது. மேலும் ஈஸாவின் இறங்குதல், மஹ்தியின் தோற்றம்
மற்றும் தஜ்ஜாலின் வெளிப்பாடு
நூற்றாண்டின் முதல் பகுதியில்
நிகழும்.” (தர்ஜுமான் வஹாபியா பக்கம் 45-42-நவாப் சித்தீக்
ஹஸன் கான்- பதிப்பகம்: முஹம்மதி லாஹூர் 1312 ஹிஜ்ரி)
7) அபுல் கைர் நவாப் நூருல் ஹஸன் கான் சாஹிப் அவர்கள்
ஹிஜ்ரி 1301 ஆம்
ஆண்டில் இவ்வாறு எழுதுகின்றார்கள், “இமாம் மஹ்தியின்
தோற்றம் 13 ஆம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்க வேண்டும். ஆனால் இந்த நூற்றாண்டு
முடிவடைந்துவிட்டது. ஆனால் மஹ்தி தோன்றவில்லை. தற்போது 14 ஆம் நூற்றாண்டு
துவங்கி விட்டது. அல்லாஹ்
தஆலா தனது அருளை, நீதியை, கருணையை வெளிப்படுத்தலாம். நான்கு ஆறு ஆண்டிற்குள் மஹ்தி தோன்றலாம்.” (இக்தரபஸ் சாஆ பக்கம் 221-நவாப் நூருல்
ஹஸன் கான், பதிப்பகம்: முஃபீத் ஆம்,1301 ஹிஜ்ரி)
8) அல்லாமா செய்யது
முஹம்மது அப்துல் ஹை லக்னவி அவர்கள் ஹிஜ்ரி 1301 ஹிஜ்ரியில் இவ்வாறு
எழுதுகிறார்: ''தற்போது 14 ஆம் நூற்றாண்டு
துவங்கிவிட்டது. 6 மாதங்கள்
கடந்துவிட்டன. இந்த நூற்றாண்டில் இது முதல் வருடம் ஆகும். எந்த ஒற்றைப்படை (மாதத்தில்) அவர் தோன்றுகிறார் என்பதை நாம் பார்ப்போம்.” (ஹதீஸ் அல்காஷியா
அனில்
ஃபிதனில் காலியா
வல் காஷியா பக்கம் 350, பதிப்பகம்: சயீதுல்
மதாபிஃ பனாரஸ் ஹிஜ்ரி 1309)
9) ஹஸ்ரத் ஹக்கீம்
செய்யது முஹம்மது ஹஸன் சாஹிப் ரயீஸ் அம்ரூஹா
அவர்கள் ஹிஜ்ரி 1302 இல்
இவ்வாறு கூறுகின்றார்கள்: “ஆக, இவர்களின் (இமாம் மஹ்தியின்) வருகை 1306 ஹிஜ்ரியிலிருந்து 21 வருடத்திற்கு
பிறகு நிகழவிருக்கிறது. வல்லாஹு அஃலமு பிஸ்ஸவாப்.” (கவாகிபு
துர்ரிய்யா-ஹக்கீம் செய்யது முஹம்மது ஹஸன் சாஹிப்
ரயீஸ் அம்ரூஹா
பக்கம் 155, பதிப்பகம்: செய்யதுல்
மதாபிஃ அம்ரூஹா)
10) மௌலானா அப்துல்
கஃபூர் “அன்னஜ்முஸ்
ஸாகிப்” என்ற நூலை எழுதியவர்
அவர்கள் ஹிஜ்ரி 1310 இல்
இவ்வாறு கூறுகிறார்: “இக்காலமே
இமாம் மஹ்தி வெளிப்படும் காலமாகும்.” (அன்னஜ்முஸ் ஸாகிப் பாகம் 2 பக்கம் 233 அபுல் ஹஸனாத்
முஹம்மது அப்துல் கஃபூர், அச்சகம்: பாட்னா)
11) காஜா ஹஸன் நிஜாமி (1296-1374 ஹிஜ்ரி) அவர்கள்
கூறுகின்றார்கள்:
“இமாம் மஹ்தியின்
தோற்றத்திற்காக தூய வேதங்களில்
குறிப்பிட்டுள்ள அடையாளங்கள் தற்போது
நம் முன் அப்பட்டமாக தெரிகின்றது. ஆகவே ரஸூல் ஹஸ்ரத் முஹம்மது
இப்னு அப்தில்லாஹ்
அவர்களுக்கு பிறகு கைருல் பஷர் (மக்களில்
சிறந்தவர்) காலத்தின்
இமாம் மஹ்தி வெளிப்படும் காலம் நெருங்கி விட்டது
என்பதை நாம் நம்பிதான் ஆக வேண்டும்.” (கிதாபுல் அம்ர்-இமாம்
மஹ்தி கே அன்ஸார்
அவ்ர் உன்கே ஃபராயிஸ்
பக்கம் 3 – காஜா ஹஸன்
நிஜாமி 1912 ஹிஜ்ரி)
காத்திருக்கும் இந்த காலங்களில்
இமாம் மஹ்தியின் தோற்றத்திற்கான அனைத்து
அடையாளங்களும் நிறைவேறிவிட்டன. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) (1835-1908) அவர்கள் இவ்வாறு
வாதம் செய்தார்கள்,” திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள
அந்த வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் நானே ஆவேன். காலம் கடந்து சென்ற சான்றோர்கள் பெரியோர்கள்
எவருக்காக காலம் காலமாக எதற்காக காத்திருந்தார்களோ
அவர் நானே ஆவேன் என்று வாதம் புரிந்தார்கள். அல்லாஹ் தஆலா அன்னாரின் உண்மைத்துவத்திற்காக
மாபெரும் வான அடையாளமாகிய
சூரிய சந்திர கிரகணத்தை வெளிப்படுத்தி
விட்டான். இதனை பற்றி ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள்
இமாம் மஹ்தியின்
அடையாளமாக நியமித்திருந்தார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நமது மஹ்திக்கு இரண்டு அடையாளங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வானம் பூமி தோன்றியதிலிருந்து இவ்வாறான அடையாளம் நிகழ்ந்ததில்லை. இந்த அடையாளம் வேறொரு இறை அடியாருக்கு சாதகமாக நிகழ்ந்ததில்லை. அதில் ஒன்று, "வாக்களிக்கப்பட்ட மஹ்தியின் காலத்தில் ரமலானில் சந்திரனுக்கு (அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட இரவின்) முதல் இரவில் கிரகணம் ஏற்படும்; மேலும் சூரியனுக்கு (அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட பகலின்) இடைப்பட்ட (நாளில்) வேளையில் கிரகணம் ஏற்படும். இந்த அடையாளம் வானம் பூமி படைத்த நாள் முதல் கொண்டு இன்று வரை எந்த இறை அடியாருக்கும் வெளிப்படாத அடையாளம் ஆகும்." (சுனன் தார குத்னி,கிதாபுல்
ஈதைன், பாகம் 1,பக்கம் 65)
ஆக இதன் அடிப்படையில் 14 ஆம்
நூற்றாண்டின் துவக்கத்தில் சந்திர கிரகணத்திற்காக நியமிக்கப்பட்ட இரவு (13,14,15) களில் முதல் இரவாகிய 13 ரமலான் 1311 ஹிஜ்ரி 23 மார்ச் மாதம் 1894 ஆம் ஆண்டு , அதே போன்று சூரிய கிரகணத்திற்காக
நியமிக்கப்பட்ட தேதி (27,28,29) களில் இடைப்பட்ட
தேதியாகிய 28 ரமலான் 2 ஏப்ரல் 1894 ஆம்
ஆண்டு கிரகணம்
ஏற்பட்டது. ஹஸ்ரத் அஹ்மத் (அலை) தனது உண்மைத்துவத்திற்கு
இந்த அடையாளத்தை
எடுத்து கூறியவாறு இவ்வாறு
கூறுகின்றார்கள்.
“இந்த 1300 ஆண்டுகளில்
பலர் தாம்தான்
மஹ்தி என்று வாதம் புரிந்தார்கள். ஆனால் எவருக்கும்
இந்த வான அடையாளம் வெளிப்படவில்லை.......எவனின் கையில் எனது உயிர் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக! அவன்தான்
எனது உண்மைத்துவத்திற்காக
வானத்தில் அடையாளத்தை வெளிப்படுத்தினான்....நான் கஅபா ஷரீஃபில் நின்று உரக்க குரலில்
இவ்வாறு கூறமுடியும் அதாவது இந்த அடையாளத்தினால் (மஹ்தி தோன்றும்
அந்த) காலம் எது என்பது தெளிவாகிவிட்டது. ஏனென்றால்
இந்த அடையாளம் 14 ஆம் நூற்றாண்டில்
ஒரு நபரின் உண்மைத்துவத்திற்காக வெளிப்பட்டது. இவ்வாறு
ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள்
இமாம் மஹ்தியின்
தோற்றத்திற்காக 14 ஆம்
நூற்றாண்டையே நியமித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது.” (துஹ்ஃபா கோலடுவிய்யா, ரூஹானி கஸாயின்
பாகம் 17 பக்கம்
142-143)
اللھم صلِّ علی محمد وَبَارِک وسلم انک حمید مجید
Asbunalla va nihmal vakel Asbunalla va nihmal mavla Asbunalla va nihmal masir
பதிலளிநீக்கு