Home
/
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் கூற்று
/
இஸ்லாத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்ட இறைவனே என்னைத் தேர்ந்தெடுத்தான்!
இஸ்லாத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்ட இறைவனே என்னைத் தேர்ந்தெடுத்தான்!
( ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) )
*******************************************************************************
எல்லாம் வல்லவனும் என்றென்றும் நிலைத்து நிற்பவனும் கண்ணியமிக்கவனும் தூயவனும் மிக உயர்ந்தவனும் எப்போதும் நல்லடியார்களுக்கு உதவி புரிகின்றவனுமாகிய அல்லாஹ்வே! உனது திருப் பெயர் என்றென்றும் புகழக்கூடியதாகும். உனது வல்லமை மிகு செயல்கள் எப்போதும் நின்றுவிடக்கூடியவையல்ல. உனது பலமிகு கரங்கள் அற்புதங்களை நிகழ்த்த கூடியதாகும்
.
இந்த (ஹிஜ்ரி) பதினான்காம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதியாக நீயே என்னை அனுப்பினாய். இஸ்லாத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காகவும் அதன் உண்மைகளை உலகில் பரவச் செய்வதற்காகவும் ஈமானை உயிர்ப்பித்து அதற்கு ஊக்கமளிப்பதற்காகவும் நான் உன்னை இக்காலத்தில் எழுப்பினேன் என்று நீ என்னிடத்தில் கூறினாய்.
நீர் எனது பார்வையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறீர். எனது அர்ஷில் நான் உம்மை மதிக்கின்றேன். நீரே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் உமது நேரம் வீணாவதில்லை என்றெல்லாம் நீ என்னிடத்தில் கூறினாய்.
மக்களை அழைப்பதற்காக நான் உம்மை தேர்ந்தெடுத்துள்ளேன் என்றும் ” நான் உங்கள் அனைவருக்குமாக அனுப்பப்பட்டவனென்றும் நம்பிக்கை கொண்டவர்களில் முதன்மையானவனென்றும் மக்களிடம் கூற நீயே எனக்கு கட்டளையிட்டாய். (அர்பயீன்)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None