ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு எதிராக பிரான்சில் நடந்த குழப்பமும்-ஒரு முஸ்லிமீன் கடமையும்



اِنَّ اللہَ وَمَلٰۗىِٕکَتَہٗ یُصَلُّوْنَ عَلَی النَّبِیِّ۝۰ۭ یٰٓاَیُّہَا الَّذِیْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَیْہِ وَسَلِّمُوْا تَسْلِــیْمًا۝
நிச்சயமாக அல்லாஹ்வும் மலக்குமார்களும் நபியின்மீது அருளைப் பொழிந்து கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்களும் இந்த நபியின் மீது ஸலவாத்தையும், ஸலாத்தையும் கூறுங்கள். (33:57)
அல்லாஹ் தன்னுடைய நபியின்  மீது தனது அருள்களை இறக்குகிறான் என்பதை இந்த வசனம் தெளிவாக்குகிறது. அவனுடைய மலக்குமார்களும் னை (ஸல்) அவர்களுக்காக துஆ செய்கின்றனர். அன்னாருக்காக அருள்களை வேண்டுகின்றனர். இவ்வாறிருக்கும்போது பல்வேறு சூழ்ச்சிகளையும் திட்டங்களையும் கையாண்டு நபி (ஸல்) அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கவோ அல்லது குறைக்கவோ நினைக்கின்றவர்கள் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. நபி (ஸல்) அவர்களின் மீது தவறான ஆட்சேபனை செய்கிறவர்களும், எள்ளி நகையாடி விட்டு நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று எண்ணக் கூடியவர்கள் மூடர்களின் சுவர்க்கத்தில் இருக்கின்றனர். அவர்களுடைய இந்த சூழ்ச்சிகளும், முயற்சிகளும் அல்லாஹ்வின் அன்பிற்குரிய நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வித இழப்பையும் ஏற்படுத்த முடியாது. எந்த நோக்கத்திற்காக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை அனுப்பினானோ அது அல்லாஹ்வின் அருளால் நடந்து கொண்டே செல்லும்.
மேலும் இந்த காலத்தில் அந்த நோக்கத்தை அடைவதற்காக அல்லாஹ் அன்னாரின் (ஸல்) பேரண்பரை அனுப்பி இஸ்லாத்தின் அழகிய போதனைகளை பரப்புவதற்கான புதிய வாயில்களை திறந்துள்ளான். நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் இதற்கு முன்பும் ஒரு போதும் வெற்றி பெற இயலவில்லை. இப்போதும் வெற்றி பெற முடியாது. இது அல்லாஹ்வின் தீர்ப்பாகும். எனவே, இஸ்லாத்திற்கோ அல்லது ரசூல் (ஸல்) அவர்களின் அந்தஸ்திற்கோ ஏதேனும் உலக முயற்சிகள் இழப்பை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலை ஓர் உண்மையான முஸ்லிமுக்கு இருக்க வேண்டியதில்லை. உண்மையான முஸ்லிமுக்கு அல்லாஹ் வழங்கிய பணி என்னவென்றால், எவ்வாறு அல்லாஹ் மற்றும் அவனது மலக்குமார்கள் இந்த நபியின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக அன்னாரின் மீது அருள்களை அனுப்புகின்றார்களோ அதே போல் நீங்களும் உங்களுடைய கடமையை நிறைவேற்றியவாரு அல்லாஹ்வின் அன்பிற்குரிய முழுமையாக மற்றும் இறுதி நபியின் மீது அளவற்ற ஸலவாத்தை, ஸலாத்தை அனுப்புங்கள். ஆக, இதுதான் ஓர் உண்மையான முஸ்லிமின் கடமையாகும். இந்த நபி (ஸல்) அவர்களின் பணியை முன்னேற்றமடைய செய்பவர்களுடன் இணைந்து அல்லாஹ் மற்றும் அவனது மலக்குமார்களின் கூற்றின் பின்சென்றவாறு அளவற்ற ஸலவாத்தையும், ஸலாத்தையும் நாம் ரசூல் (ஸல்) அவர்கள் மீது ஓத வேண்டும்.

கடந்த நாட்களில் ஃபிரான்சில் ஏற்பட்ட நிலைமை அதாவது முஸ்லிம் என்று தம்மை கூறிக் கொள்பவர்கள் ஒரு பத்திரிக்கையின் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி 12 பேரைக் கொன்றனர். அது தொடர்பாக கடந்த ஜுமுஆவில் சுருக்கமாக எடுத்துரைத்து நான் அஹ்மதிகளை, ஜமாஅத் உறுப்பினர்களை ஸலவாத் ஓதுவதன் பக்கம் கவனமூட்டியிருந்தேன். இந்த கொலைகளால் இஸ்லாம் வெற்றி பெற இயலாது. மாறாக, நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுவதன் மூலமாகவே நாம் நம்முடைய நோக்கத்தில் வெற்றி பெற முடியும். மேலும் இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக தவறான எதிர் நடவடிக்கை காட்டப்படலாம் அல்லது காட்டப்படும் என்ற கவலையையும் வெளிப்படுத்தியிருந்தேன். இதுவே இவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது. தவறான எதிர் நடவடிக்கையைக் காட்டி இவர்களும் மீண்டும் கேலிச்சித்திரம் வெளியிட்டனர். பிறகு அது நமக்கு மேலும் வேதனைக்குக் கரணமானது. மேலும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமுக்கும் வேதனைக்குரியதாக இருந்திருக்க வேண்டும். இந்த தீவிரவாதத்திற்கு என்ன பலன் கிடைத்தது?
இந்த செயல் உலகின் பல்வேறு நாடுகளில் இஸ்லாத்தின் போதனை பற்றிய தப்பெண்ணத்தை வளர்த்த அதே வேளையில் மரணித்து கொண்டிருந்த எதிரிக்கு மீண்டும் உயிரூட்டும் வேலையை செய்துள்ளனர். அந்தோ ! இஸ்லாத்தின் பெயரில் அநீதி இழைக்கின்ற முஸ்லிம் அமைப்புகள் இஸ்லாத்தின் அன்பு மற்றும் நேசத்தின் போதனைகளால் மிக விரைவில் உலகை இஸ்லாத்தின் மடியில் கொண்டு வர இயலும் என்பதை புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இவர்களோடு வாய் கொடுப்பதற்கு பதிலாக இந்த வீணானவற்றால் நிரம்பியவர்களிடமிருந்து திரும்பியவாறு தனியாக சென்று விடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். விவகாரத்தை இறைவனின் மீது விட்டு விட வேண்டும். என் பக்கம் திரும்பி வரும்போது அவர்களின் செயலுக்கு அவர்கள் அனுபவிக்க வேண்டியது வரும் என்றே அல்லாஹ் கூறுகிறான்.
நான் கூறியது போன்று இந்த தீய பத்திரிக்கைக்கு எதிராக இருந்தவர்கள் இந்த தாக்குதலுக்கு பிறகு அவர்களில் அதிகமானோர் ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று அதற்கு சாதகாமாகிவிட்டனர். ஆனால் இவ்வாறிருந்தும் கூட ரசூல் (ஸல்) அவர்களைப் பற்றி தீய வெளிப்பாட்டை விரும்பாத நீதியை விரும்பக் கூடியவர்களும் அறிவுடையவர்களும் இருக்கின்றனர். அதை வெறுத்தவாறு அதன் அமைப்பாளர்களை இதற்கு பொறுப்பாக்கியுள்ளான்.
உதாரணமாக இந்த Charlie Hebdo என்ற பத்திரிக்கையாளர் ஆரம்ப உறுப்பினரான Henry Russel கூறுகிறார்: இந்த பத்திரிக்கை தயாரித்த கேலிச் சித்திரம் கோபமூட்டக் கூடியதாகும். இந்த பொறுப்பற்ற செயலின் காரணமாக எடிட்டர் தன்னுடிய குழுவை மரணத்தின் வாயிலில் தள்ளிவிட்டார். கடந்த சில வருடங்களாக இவர்கள் செய்து வந்த இது போன்ற விஷயங்கள் எங்களுடைய அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானவையாகும்.
இதே போல் போப்பும் மிகவும் நல்ல கருத்தைக் கூறியுள்ளார். அதாவது கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு எல்லை இருக்க வேண்டும். முற்றிலும் சுதந்திர வழங்க வேண்டும் என்பது கருத்து சுதந்திரம் என்று பொருளல்ல. அவர் கூறினார்: ஒவ்வொரு மார்க்கத்திற்கும் ஒரு கண்ணியம் இருக்கிறது. அதற்கு மதிப்பளிப்பது அவசிமாகும். எந்தவொரு மார்க்கத்தின் கண்ணியத்தின் மீதும் தாக்குதல் நடத்தக் கூடாது. உதாரணம் வழங்கியவாறு கூறுகிறார்: என்னுடைய நெருக்கமான நண்பர் (அவர் இவரது சுற்றுப் பயணத்தை நிர்வகிக்கிறார்) எண்ணுடைய தாயின் மீது சாபமிட்டால் அல்லது ஏசிப் பேசினால் நான் அவருடைய முகத்தில் குத்துவதே என்னுடைய எதிர் நடவடிக்கையாக இருக்கும். மேலும் அவர் குத்துவார் என்ற இந்த எதிர் நடவடிக்கையே என்னிடமிருந்து எதிர் பார்க்கவும் வேண்டும். எவ்வாறிருப்பினும் ஒருவருடைய உணர்வுகளை கோபமூட்டக்கூடாது. இவர்கள் கோபமடையச் செய்துள்ளார்கள். எனவே இது இவர்களுடைய தவறே ஆகும் என்று கூறியுள்ளார். போப் மிகவும் உண்மையான கருத்தை கூறியுள்ளார்.
இன்று ஊடகம் உலகில் மேலோங்கியுள்ளது. எங்கு வேண்டுமானாலும் தீ மூட்டுவதற்கும், தீயை அணைப்பதற்கும், குழப்பத்தை ஏற்படுத்துவதிலும் குழப்பங்களை தடுப்பதிலும் அது மாபெரும் பங்கு வகிக்கிறது. இது முதன்முறையாக இவ்வாறு நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு U.K மற்றும் உலகின் பல்வேறு ஊடகங்களும் ஜமாத்திடமும் நமது எதிர் நடவடிக்கை அல்லது கருத்தை கேட்டது. அதில் இந்த கொலை சம்பவத்தைப் பற்றி இது இஸ்லாத்திற்கு மாற்றமான செயலாகும் என்று கூறினோம். மேலும் நாங்கள் இதற்கு வருந்துகிறோம். ஆனல் கருத்துச் சுதந்திரத்திற்கும் சில வரம்புகள் இருக்க வேண்டும். இல்லையென்றால் எவர்கள் பிறருடைய உணர்வுகளை புண்படுத்துகிறார்களோ அவர்களே உலகின் குழப்பங்களுக்கு காரணம் ஆகிவிடுவார்கள். எவ்வாறிருப்பினும் இது மட்டுமின்றி சில விஷயங்கள் பற்றி விரிவாகவும் பேசப்பட்டது. U.K வில் Sky News, News5,BBC Radio, LBC, BBC, Leads, London Live பிறகு வெளிநாட்டு டி.வி Fox TV, CNN இதுபோன்று கனடாவின் பத்திரிக்கைகள், யூனான், Ireland, France, America வின் பல்வேறு பத்திரிக்கைகளும் நமது கருத்தைக் கூறியுள்ளார்கள். அவர்களுடைய ஸ்டூடியோவிற்கு சென்றும் நேர்காணல் நடந்துள்ளன. மேலும் பல மில்லியன் மக்கள் வரை இஸ்லாத்தின் உண்மையான கருத்து மற்றும் போதனை இவ்வாறு சென்றடைந்தது. இது அல்லாஹ்வின் நியதியாகும். அதாவது இஸ்லாத்தின் போதனைகளின் சரியான பாதை இப்போது ரசூல் (ஸல்) அவர்களின் பேரன்பரின் ஜமாஅத் அன்னாரிடம் இருந்து கற்றதை உலகிற்கு கூற வேண்டும்.
நான் கடந்த குத்பாவில் கூறியது போன்று தத்தமது வட்டத்தில் தவறான எதிர் நடவடிக்கைகளால் குழப்பங்கள் பிறக்குமே தவிர வேறொன்றும் நடக்காது என்பதை உலகிற்கு புரிய வையுங்கள். கோபமடைந்து உலகில் மீண்டும் ஒரு தீ மூண்டு விடும். இந்த தீ நாலாப்புறமும் பரவி விடும். வலப்பக்கமும் இடப்பக்கமும் பரவி விடும். அதை உலகால் தாங்கி கொள்ள முடியாது. ஆக தவறான எதிர் நடவடிக்கைகளால் மக்களை தூண்டி விடாதீர்கள். அல்லாஹ்வின் பிடியையும் அழைக்காதீர்கள். அல்லாஹ் உலகிற்கு அறிவை வழங்குவானாக.!
ஆனால் அத்தோடு ஓர் அஹ்மதியின் மிகப்பெரிய பணி இறைவனின் கட்டளையின்படி நடப்பதுமாகும். அதாவது நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் இந்த நபியின் மீது ஓர் உணர்வுடன் ஸலவாத்தும் ஸலாமும் அனுப்புங்கள்.
இது தொடர்பாக நான் ஒரு சில ஹதீஸ்களையும், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் மேற்கோள்களையும் எடுத்து வைப்பேன். அவை ஸலவாத் ஓதுவதன் முக்கியத்துவத்தையும், பலனையும் தெளிவுப்படுத்துகின்றன. நாம் ரஸூல் (ஸல்) அவர்களோடு அன்பு கொண்டுள்ளதாக வாதம் செய்கின்றோம். இந்த அன்பின் எதிர்பார்ப்பின் காரணமாக நமது உள்ளங்கள் ரஸூல் (ஸல்) அவர்களைப் பற்றி ஏதேனும் தகாத வார்த்தைகள் கூறப்படும்போது சுக்கு நூராகிவிடுகின்றன அல்லது துண்டு துண்டாகிவிடுகின்றன அல்லது ஏதேனும் வகையில் அன்னாரின் மீது ஏதேனும் விஷயம் கூறப்படும்போது அவ்வாறு ஆகின்றது. ஆனால் இந்த அன்பின் உண்மையான வெளிப்பாடும் மற்றும் அதன் பலன் எவ்வாறு கிடைக்கும்? இது தொடர்பாக ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் அதிகமாக என் மீது ஸலவாத் ஓதுவாரோ அவரே கியாமத் நாளன்று எனக்கு மிகவும் அருகில் இருப்பார். எனவே ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள் மீது உண்மையான அன்பிற்கான வெளிப்பாட்டின் விளைவாக அன்னாருடைய நெருக்கம் ஸலவாத் ஓதுவதானாலேயே கிடைக்கும்.
பிறகு ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ எவர் உலகில் என்மீது எல்லாரையும் அதிகமாக ஸலவாத் ஓதினாரோ அவரே கியாமத் நாளன்று அதன் அபாயத்திலிருந்து ஆபத்தான தருணத்திலிருந்தும் பாதுகாப்பாக இருப்பார்.
பிறகு துஆ செய்வதன் சரியான முறை பற்றி ஒரு அறிவிப்பில் இவ்வாறு வருகிறது, ஹஸ்ரத் கஸாலா பின் உபைதத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் இதனால் தான் கூறினார்கள், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதாத வரை உங்களுடைய துஆ வானத்திற்கும் பூமிக்கும் இடையில் நின்று விடுகின்றது. அதில் ஒரு பகுதி கூட இறைவன் சன்னிதியில் சென்றடைவதில்லை.
ஸலவாத் ஓதுவதற்கு எவ்வாறு முயற்ச்சி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தினது சீடருக்கு எழுதும் போது அதில் எழுதுகிறார்கள்:
“நீங்கள் ஸலவாத் ஓதுவதன் பக்கம் அதிகமாக கவனம் செலுத்துங்கள். எவ்வாறு ஒருவர் தனது வேதத்திற்குரியவருக்காக அருளை வேண்டுவாரோ அதே போன்ற ஆர்வம் மற்றும் தூய்மையுடன் நபி (ஸல்) அவர்களுக்காக அருளை நாட வேண்டும். மிகவும் உருக்கத்துடன் வேண்ட வேண்டும். அந்த உருக்கம் மற்றும் துஆவில் சற்று செயற்க்கைத்தனம் இருக்கக்கூடாது. மாறாக நபி (ஸல்) அவர்களின் மீது உண்மையான நட்பும் அன்பும் இருக்க வேண்டும். உண்மையில் ஆன்மாவின் உண்மைத் தன்மையோடு ஸலவாத்தில் கூறப்பட்டுள்ள அந்த அருள்கள் ரஸூல் (ஸல்) அவர்களுக்காக கேட்கப்பட வேண்டும். தனிப்பட்ட அன்பின் அடையாளம் என்னவென்றால், மனிதன் ஒருபோதும் களைப்படைய கூடாது. சோர்வடைந்து விடக்கூடாது. மேலும் சுய நோக்கங்கள் அதில் இருக்கக்கூடாது. ரஸூல் (ஸல்) அவர்களின் மீது இறைவனின் அருள்கள் வெளிப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
பிறகு ஸலவாத்தின் உண்மையான ஞானத்தைப் பற்றி ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
“ரஸூல் (ஸல்) அவர்களுக்கு வேறு எவருடைய தேவையும் இல்லாமல் இருக்கலாம். ரஸூல் (ஸல்) அவர்கள் ஹதீஸிலும் எனக்கு அல்லாஹ் மற்றும் அவனது மலக்குமார்களின் ஸலவாத்தும் எனக்கு போதுமானது என்று கூறியுள்ளார்கள்.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
“நமது எஜமானர் ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உண்மையும் விசுவாசத்தையும் பாருங்கள். நபி (ஸல்) அவர்களின் அமல்கள் எந்த அளவுக்கு பிடித்தமானதாக இருந்தது என்றால் அல்லாஹ் என்றென்றைக்குமாக மக்கள் இனிமேல் நன்றி செலுத்தும் விதமாக ஸலவாத் ஓத வேண்டும் என கட்டளையிட்டான்.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
உறுதித்தன்மையைப் பெறுவதற்கு ஸலவாத் அதிகமாக ஒதுங்கள். சடங்காகவும், பழக்கமாகவும் இல்லாமல் ஓத வேண்டும். ரஸூல் (ஸல்) அவர்களின் அழகு மற்றும் அந்தஸ்து உயர்வதற்காக அன்னாருடைய வெற்றிற்காக ஓத வேண்டும். இதன் விளைவாக துஆக்கள் ஏற்றுக் கொள்ளபடுவதற்கான இனிப்பான சுவையான கனி உங்களுக்கு கிடைக்கும்.
ஹுஸூர் (அலை) கூறுகின்றார்கள்: இந்த காலம் எவ்வளவு அருளுக்குரிய காலமாக இருக்கிறது! இறைவன் இந்த குழப்பம் நிறைந்த காலக்கட்டதிலும் முழுக்க முழுக்க தன்னுடைய அருளால் அன்னார் இதை கூறிய அந்த நாட்களிலும் ரஸூல் (ஸல்) அவர்களைப் பற்றி தவறான விஷயங்கள் கூறப்பட்டு வந்தன. ரஸூல் (ஸல்) அவர்களின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதற்க்காக மறைவாக இஸ்லாத்தின் உதவிக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று எண்ணினான். ஒரு இயக்கத்தை நிலை நாட்டினான். தன்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்திற்காக ஒரு வேதனை கொண்டுள்ள மேலும் அதன் கண்ணியம் அவர்களின் உள்ளங்களில் கொண்டுள்ளவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். கூறுங்கள் இந்த அளவு அநீதியிழைக்கப்பட்டும் ஏதேனும் இறை இயக்கத்தை நிலைநாட்டாமல் இருக்க ரஸூல் (ஸல்) அவர்களின் கண்ணியம் இறைவனுக்கு முக்கியமானதாக இருக்கவில்லையா? நீங்கள் எழுங்கள். துப்பாக்கிகளையும், கம்புகளையும் ஏந்துங்கள். கொலை செய்ய ஆரம்பித்து விடுங்கள் என்று கூறவில்லை. மாறாக, இந்த கண்ணியத்தை நிலைநாட்ட ஒரு இறை இயக்கத்தை நிலைநாட்ட வேண்டியதிருந்தது.
ஹுஸூர் (அலை) அவர்கள் கூறினார்கள்: இந்த இஸ்லாத்தின் எதிரிகளின் வாயை அடைத்து அன்னாரின் கண்ணியத்தையும், தூய்மையையும் உலகில் பரப்ப வேண்டியதிருந்தது. ஆதாரங்களை கொண்டும், அழகிய போதனைகளைக் கொண்டும் அவர்களின் வாயை அடைக்க வேண்டியதிருந்தது. குண்டுகளை வீசியவாறு அல்ல. அல்லாஹ் மற்றும் அவனது மலக்குமார்கள் ரஸூல் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓடும்போது இந்த அவமானத்தின் போது இந்த ஸலவாத்தை வெளிப்படுத்துவது எந்த அளவுக்கு முக்கியமாக இருக்கின்றது? அதை இந்த இயக்கத்தின் அதாவது அஹ்மதிய்யா ஜமாஅத்தின் வடிவில் வெளிப்படுத்தினான். எனவே, நாம் முன்னரை விட அதிகமாக ரஸூல் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுவது நம்மீது கடமையாகி விடுகின்றது.
எனவே அதிகமாக ஸலவாத் ஓதுவது இன்று ஒவ்வொரு அஹ்மதிக்கும் முக்கியமானதாகும். அதன் மூலமாக நாம் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்களின் வருக்கையின் நோக்கத்தையும் நாம் பூர்த்தி செய்பவர்களாக வேண்டும். இறைவனின் குரலுக்கு நாம் செவிசாய்க்கக் கூடியவர்களாக வேண்டும். ரஸூல் (ஸல்) அவர்களின் மீது அன்பும் நேசமும் கொண்டுள்ளோம் என்ற வாதத்திற்கேற்ப செயல்படுபவர்களாக வேண்டும். ஜமாஅத் அல்லாத மற்றும் பேரணிகளின் மூலம் இந்த அன்பின் வாதத்தின் உரிமையை செலுத்த முடியாது. இந்த நபின் உரிமையைச் செலுத்துவதற்கு இன்று ஒவ்வொரு அஹ்மதியும் கோடிக்கணக்கான ஸலவாத்தும், ஸலாமும் உள்ளத்தின் வேதனையுடன் வானிற்கு எடுத்து செல்ல வேண்டும். இந்த ஸலவாத்துகள் துப்பாக்கிக் குண்டுகளை விட அதிகமாக எதிரிகளின் அழிவிற்குக் காரணமாகி விடும்.
பிறகு ஸலவாத் ஓதுவதற்கான முறை தொடர்பாக ஹுஸூர் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
“உதாரணமாக சாதாரண மக்கள் கிளையைப் போன்று படிப்பதைப் போல் ஸலவாத் ஓதாதீர்கள். அவர்களுக்கு ரஸூல் (ஸல்) அவர்களோடு முழுமையான விசுவாசமும் இருப்பதில்லை. மேலும் இறைவனிடம் அவனுடைய நபிக்காக அருள்களை வேண்டுதலும் இல்லை.
ஸலவாத் ஓதுவதற்கு முன்னர் இந்த கொள்கையை உள்ளதில் நிலை நாட்ட வேண்டும். அதாவது ரஸூல் (ஸல்) அவர்களுடைய அன்பின் தொடர்பு எந்த உயர் அந்தஸ்தைப் பெற வேண்டுமானால் ஆரம்ப காலத்திலிருந்து இறுதி  வரை இந்த லௌ அன்பிற்குரியவராக இருக்க முடியும் என்றும் அல்லது அப்படி யாரேனும் இதை விட முன்னேறக்கூடியவர் வருவார் என ஒரு போதும் உள்ளம் கூறக்கூடாது.
இதிலிருந்து எனக்கு இன்னா நன்மை கிடைக்கும் அல்லது அந்தஸ்து கிடைக்கும் என்று தனது பங்கு எதனையும் வைக்கக்கூடாது. மாறாக முற்றிலுமாக இறைவனின் அருள்கள் ஹஸ்ரத் ரஸூல் (ஸல்) அவர்கள் மீது இறங்க வேண்டும். அன்னாரின் கம்பீரமும் இவ்வுலகிலும் மறுமையிலும் மின்ன வேண்டும் என்ற எண்ணமே இருக்க வேண்டும். இந்த நோக்கத்தோடு தான் ஓத வேண்டும். மேலும் இரவு பகலாக கவனம் செலுத்த வேண்டும். எதுவரை என்றால் இதை விட அதிகமாக உள்ளத்தில் வேறெந்த ஆசையும் இருக்கக்கூடாது. உறுதியான நிலைபாட்டுடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு ஸலவாத் ஓதப்பட்டால் அது சடங்கு மற்றும் பழக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும். எவ்வித சந்தேகமுமின்றி இதற்கு வியக்கத்தக்க ஒளிகள் பிறக்கும். அதிகமான வேளையில் அழுதாலும் அத்தோடு இருப்பது இறைவனின் அடையாளமாகும். எதுவரையென்றால் இந்த கவனம் நாடி நரம்புகளில் புகுந்து கனவும், விழித்திருத்தலும் ஒன்றாகிவிட வேண்டும்.
“அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.”
ஒரு தூயவரின் நாவிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளில் நிச்சயமாக ஓரளவுக்கு அருள் இருக்கும். அவர் தூயவர்களின் தலைவரோ நபிமார்களின் படைத்தளபதியோ அவரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அதாவது இப்போது பதிக்கப்பட்ட ஸலவாத்தின் சொற்கள் எந்த அளவுக்கு அருளுக்குரியதாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள்.
ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்: இதுவே மீண்டும் மீண்டும் இந்த எளியவனின் நாவிலும் உள்ளது. எந்த எண்ணிக்கையைப் பேணுவதும் அவசியமில்லை. தூய்மை, அன்பு மற்றும் உருக்கத்துடன் ஓத வேண்டும்.
அல்லாஹ் நம் அனைவரிடமும் இட்ன்க ஆன்மாவை உருவாக்குவானாக. இறைவனின் அரியணை வரை சென்றடையக்கூடிய ஸலவாத் நம் உள்ளத்திலிருந்து எழட்டுமாக. அது நன்மையும் அருளுக்குரியதாக ஆகட்டுமாக. அல்லாஹ்வின் அருளிளால் நம்மில் அதிகமானோர் ஸலவாத் ஓதுகின்றனர். மிகவும் வேதனையுடன் ஓதுகின்றனர். அல்லாஹ் அதன் அருள்களின் காட்சிகளையும் அவர்களுக்கு காட்டுகிறான். இவ்வாறு ஸலவாத் ஓதக்கூடியவர்களின் எண்ணிக்கை ஜமாத்தில் அதிகமாகட்டுமாக. அதன் பயன் ஜமாஅத் அளவிலும் இருக்கும். ஜமாஅத்தின் முன்னேற்றத்திலும் இருக்கும்.
ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மஸீஹ் (ரலி) அவர்களின் ஸலவாத்தின் நடைமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை நம்மில் சிலர் ஏறக்குறைய அதே போன்று ஓதுகின்றனர். இது எப்படிப்பட்ட நடைமுறை என்றால் அதை நான் உங்கள் முன்னும் வைக்க விரும்புகிறேன். இதனால் ஸலவாத்தோடு ரஸூல் (ஸல்) அவர்களோடு தனிப்பட்ட அன்பில் ஒரு புதிய கோணத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது. ஜமாஅத்தின் முன்னேற்றத்திற்காகவும் துஆவிற்கான அறிவு கிடைக்கிறது.
ஹுஸூர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் என்னைப் பற்றி கூறுகிறேன். நான் எப்போதெல்லாம் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் அடக்கஸ்தலத்திலும் துஆ செய்வதற்காக வரும்போது நான் இந்த வழிமுறையை மேற்கொண்டுள்ளேன். அவர்களின் மீது ஸலவாத் ஒதும்போதும் அல்லாஹ் நம் தரப்பிலிருந்து இந்த துஆக்களின் விளைவாக அவர்களுக்கு ஏதேனும் அன்பளிப்பை வழங்குவான். சுவர்க்கத்தில் என்னென்ன அருள்கள் இருக்கிறது என்று நாம் அறிய மாட்டோம். ஆனால் அல்லாஹ் அந்த அருள்களை நன்கறிவான். எனவே, இறைவா! நீ ரஸூல் (ஸல்) அவர்களுக்கு இதற்கு முன் அவர்களுக்கு கிடைக்காத அன்பளிப்பை வழங்குவாயாக! என்று துஆ செய்யும் போது நிச்சயமாக அவர்களுக்கு அந்த அன்பளிப்பு வழங்கப்படும்போது இது இன்ன நபர் தரப்பிலிருந்து அன்பளிப்பதாகும் என்றும் அல்லாஹ்வின் தரப்பிலிருந்தும் கூறப்படும். பிறகு இந்த அறிவு கிடத்த பிறகு அன்பளிப்பு வழங்கியவருக்காக துஆ செய்யாமல் அமைதியாக எவ்வாறு இருப்பார்கள்? அப்படிபட்ட சந்தர்ப்பத்தில் அவர்களுடைய ஆன்மா அல்லாஹ்வின் சன்னிதியில் வீழ்ந்து இறைவா! நீ எங்கள் தரப்பிலிருந்து இதை விட சிறந்த கூலியை வழங்குவாயாக! என்று கூறும். இவ்வாறு ஃபஹய்யு பி அஹ்ஸன் மின்ஹா-இன் அடிப்படையில் அந்த துஆ பிறகு ஸலவாத் ஒதுபவரின் பக்கம் திரும்பி வரும். அது அவருடைய படித்தரங்கள் உயரக் காரணமாக அமையும்.
சிலர் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்/ அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் தனித்தனியாக ஏன் உள்ளது? என்று கேள்வி கேட்கின்றனர். இது தொடர்பாக அகராதியில் விளக்கம் உள்ளது. இவ்வாறு அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் என்பதன் பொருள், நீ முஹம்மது (ஸல்) அவர்களை இவ்வுலகில் அவர்களின் புகழை உயர்த்தி அவர்களின் தூதுச் செய்திக்கு வெற்றியை வழங்குவாயாக! இவர்களின் மார்க்கத்திற்கு எஞ்சியிருத்தலையும், என்றென்றைக்கும் நிலைத்திருத்தலையும் விதித்து கண்ணியத்தை வழங்குவாயாக! மறுமையில் இவர்களுடைய உம்மத்திற்கான சிபாரிசை ஏற்றுக் கொண்டு அவர்களின் நற்கூலியை பன்மடங்கு அதிகப்படுத்தி வழங்குவதன் காரணமாக அவர்களுக்கு கண்ணியத்தை வழங்குவாயாக என்பதாகும்.
அல்லாஹ் நமக்கு உண்மையான முறையில் ஸலவாத் ஓதுவதற்கான நல்வாய்ப்பினை வழங்குவானாக்கள். அந்த ஸலவாத்தினால் இறைவனின் நெருக்கத்தை பெறக்கூடியவர்களாக ஆகக்கூடிய அதே வேளையில் ரஸூல் (ஸல்) அவர்களின் அன்பில் எப்போதும் முன்னேறிக் கொண்டே செல்பவர்களாவோமாக. மேலும் அன்னாரின் மார்க்கத்தை பரப்பக்கூடிய பணியில் தமது சக்திகளை செலவிடக் கூடியவர்கள் ஆவோமாக. ஹுஸூர் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கேற்ப உலகிலிருந்து குழப்பத்தை முடிவுக்கு கோண்டு வருவதற்கு நமது பங்களிப்பை நிரவேற்றக் கூடியவர்களாவோமாக. அல்லாஹ் நமக்கு இதற்கான நல்வாய்ப்பினை வழங்குவானாக.
(அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் உலகளாவிய தலைவர் ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதகுல்லாஹு...) அவர்களின் குத்பா உரையிலிருந்து)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.