ஆறாவது கேள்வி: கலிஃபா தவறு செய்வாரா? எவ்வகையான தவறுகள் கலிஃபாவின் மூலம் நிகழக்கூடும்?
கிலாஃபத் என்ற தலைப்பில் எவ்வகையான தவறுகள் கலிஃபாவின் மூலம் நிகழக்கூடும் அல்லது நபிமார்களை போன்று கலிஃபாக்களும் தவறுகளிலிருந்து தூய்மையானவர்களா? என்ற அம்சம் மிகவும் முக்கியமானதாகும்.
அவைகளை மூன்று அங்கங்களாக பிரிக்கலாம்
1. உலக பணிகள் தொடர்பான தவறுகள்
2. ஜமாஅத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தவறுகள்
3. ஷரியத் விஷயங்கள் தொடர்பான தவறுகள்.
உலக பணிகள் தொடர்பான தகவல்கள்
நபி மற்றும் கலிஃபா இவ்விருவரையும் இறைவன் தேர்ந்தெடுத்து இருக்கும்போது இவர்களில் ஒருவர் மூலம் ஏதாவது ஒரு தவறு நிகழும். ஆனால் மற்றவர் மூலமாகவும் அதே போன்ற தவறுகள் நிகழ்வது சாத்தியமாகும். ஆகையால் நபி மூலம் எப்படிப்பட்ட தவறுகள் நிகழக் கூடும் என்பதை காண வேண்டும். இறைவன் நபிமார்களை மக்கள் நேர்வழி பெறும் பொருட்டு அனுப்பியுள்ளான். மாறாக உலக விஷயங்களில் தனித்துவத்தை பெறுவதற்காக அனுப்பவில்லை. எனவே உலக விஷயங்களில் நபி ஏதாவது தவறு இழைத்தால் அது ஒரு பொருட்டாகாது. பொது மக்களைப் போன்று நபியும் உலக விஷயங்களில் தவறு செய்தால் இது ஒரு வெட்கக்கேடான விஷயமாகாது. சில அறிவிப்புகள் மூலம் நமக்கு நபி ஸல் அவர்கள் விவசாயம் தொடர்பான சில விஷயங்களில் தவறு செய்தார்கள் என்று தெரியவருகிறது. உதாரணத்திற்கு அன்னார் ஸல் அவர்கள் பேரிச்சை பழத்தின் மகரந்த சேர்க்கை செய்வதிலிருந்து சஹாபவை தடுத்தார்கள். ஆனால் இதனால் அன்னாருடைய கண்ணியத்தில் எந்த குறைவும் ஏற்படவில்லை. ஏனென்றால் உலக விஷயத்திலும் நபிமார்கள் இறைவனிடமிருந்து வஹி பெறுவது அவசியமாகாது.
நபி ஸல் கூறினார்கள்:
اَنْتُمْ اَعْلَمُ بِاَمْرِ دُنْیَاکُمْ (مسلم)
உலக விஷயங்களை நீங்கள் என்னைவிட நன்றாக அறிந்துள்ளீர்கள்.
எனவே நபி மூலம் உலக விஷயத்தில் தவறு நிகழ்ந்தால் கலிஃபாவின் மூலமும் உலக விஷயத்தில் தவறு நிகழக் கூடும்.
ஜமாஅத்தின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தவறுகள்
பத்ர் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம் படைக்கு தலைமை வகித்தார்கள். அன்னார் ஸல் மீது இந்த படையின் பொருப்பு இருந்ததன் காரணமாக; அனைத்து முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பான சில முக்கிய நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாக இருந்தது. இந்த படை முகாம் அமைப்பதற்காக ஓர் இடத்தை அன்னார் ஸல் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்த தேர்வு சரியானதாக அமையவில்லை. தண்ணீரை விட்டு படையின் முகாமை தொலைவில் அமைப்பது முறையானதாக இல்லை என்றும், படையை தண்ணீர் அருகாமையில் முகாமிட செய்ய வேண்டும் என்று ஒருவர் அன்னாருக்கு ஆலோசனை வழங்கினார். சஹாபி உடைய கருத்து அன்னாருக்க மிகவும் சிறந்ததாக விளங்கியது. எனவே படையை தண்ணீருக்கு அருகாமையில் முகாமிடுவதற்கு ஆணையிட்டார்கள். ஆக அன்னார் ஸல் மூலம் ஒரு தவறு நிகழ்ந்தது. சஹாபி உடைய ஆலோசனைப்படி உடனடியாக அது சரி செய்யப்பட்டது. இதன்மூலம் நம்பிக்கையாளர்களின் ஜமாஅத் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நபி அல்லது கலிஃபாவின் மூலம் தவறு நிகழக் கூடும் என தெரிய வருகின்றது .
ஆனால் அந்த தவறு உடனடியாக சரி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். ஒருவேளை எவருக்கும் இந்த தவறை பற்றி தெரிந்திருக்க வில்லை என்றால் பிறகு இறைவன் அனைத்து விஷயங்களையும் தானாகவே கவனித்துக் கொள்கிறான். அந்த தவறுக்கு எப்படிப்பட்ட முடிவுகளை வெளிப்படுத்துகிறான் என்றால் அந்த தவறானது ஜமாஅத்திற்கு சிறந்ததாகவே அமைகின்றது. இறைவன் அந்த தவறில் ஜமாஅத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பை நிர்ணயித்து விடுகின்றான்.
இது வெறும் கற்பனையான விஷயம் அல்ல. மாறாக நபி ஸல் அவர்களுடைய வாழ்க்கையில் துள்ளியமாக வெளிப்பட்ட உண்மையாகும். ஒருமுறை அன்னார் ஸல் அவர்கள் காபாவை நுழைந்த வாரும் சஹாபாவுடன் காபாவை சுற்றி வருமாறும் கனவு கண்டார்கள். இந்த கனவை நிறைவேற்றுவது அவசியமாகும் என்று கூறி 1500 சஹாபிகளுடன் மதினாவிலிருந்து மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். ஆனால் குரைஷ் அண்ணார் ஸல் அவர்களை மக்காவில் நுழைய அனுமதிக்கவில்லை. மாறாக முஸ்லிம்களுடன் போரிட நேர்ந்தாலும் முஸ்லிம்களை மக்காவில் நுழைய செய்யக்கூடாது என்ற விஷயத்தை வெளி காட்டும் வகையில் அவர்கள் சிறுத்தையின் தோல்களை அணிந்தவாறு முன் வந்து நின்றார்கள். மக்காவாசிகள் முஸ்லிம்களை அமைதியாக காபாவை சுற்றி வர அனுமதிக்க வேண்டும் என்பதற்காக உஸ்மான் பின் அஃபான் ரலி அவர்களை அவர்களிடம அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய பகைமையில் நிலைத்து நின்றார்கள். முஸ்லிம்களின் மனதில் தங்களுடைய அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உஸ்மான் ரலி அவர்களை கொன்று விட்டதாக செய்தியைப் பரப்பினார்கள். நபி ஸல் அவர்களுக்கு உஸ்மான் ரலி கொல்லப்பட்ட செய்தி கிடைத்தபோது உஸ்மான் உடைய கொலைக்கு பழிவாங்குவோம் அல்லது மரணித்து விடுவோம் என்ற விஷயத்தில் முஸ்லிம்களிடம் பைஅத் வாங்கினார்கள். மேலும் முஸ்லிம்கள் அனைவரும் தன்னுடைய நபிக்கு இறைவன் காண்பித்த கனவின் படி அவர்கள் நிச்சயமாக காபாவில் நுழைவார்கள் என்றும் முஸ்லிம்கள் தலை முடியை வழித்தாவாரு காபாவில் நுழைவார்கள் என்றும் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
முஸ்லிம்களுக்கும் மக்கா வாசிகளுக்கும் கடுமையான போர் நேரிடும் என்ற அளவுக்கு நிலைமை விரைவாக மாறிக் கொண்டே சென்றது. மேலும் கனவின் சரியான அர்த்தத்தை விளங்காததன் காரணமாக இருபுறமும் லட்சக்கணக்கான நபர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள். எவருடைய கவனமும் இந்த தவறின்பால் செல்ல வில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு ஹஸ்ரத் உஸ்மான் ரலி அவர்கள் பாதுகாப்பாக திரும்பி வந்தார்கள். மேலும் இவ்வருடம் முஸ்லிம்கள் மக்காவில் நுழையக்கூடாது என்ற விஷயத்தை முன்நிருத்தி மக்காவாசிகள் சமாதான உடன்படிக்கை முன்வைத்தார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு இவ்விஷயம் பிடிக்கவில்லை. அவர்களுக்கு திரும்பி செல்வதில் உடன்பாடு இல்லை. ஆகையால் அவர்கள் நபி ஸல் அவர்களிடம் சென்று; நாம் காபாவில் நுழைவதாக இறைவன் நமக்கு வாக்குறுதி அளித்துள்ளான் என்று கூறினார்கள். நபி ஸல் அவர்கள் இறைவனுடைய வாக்குறுதியை ஒப்புக்கொண்டவாரு கூறினார்கள்; இதில் இவ்வருடமே இந்த வாக்குறுதி நிறைவேறும் என்று எங்கும் கூறப்படவில்லை என்றார்கள். ஆக நபி ஸல் அவர்களுக்கு கனவின் விளக்கத்தை புரிவதில் தவறு ஏற்பட்டது. இந்தத் தவறின் காரணமாக முஸ்லிம்களுக்கு ஒரு மிகப்பெரிய பயணத்தை மேற்கொள்ளும் கடினம் ஏற்பட்டது. பிறகு காபாவில் நுழையாமலேயே திரும்பி செல்ல நேரிட்டது. ஆனால் இறைவன் இந்த தவறை முஸ்லிம்களுக்காக அருளுக்குறியதாக ஆக்கிவிட்டான். இதன் விளைவாக சமாதான உடன்படிக்கை நடந்தது. இதில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பலன் இருந்தது என்று அடுத்துவந்த நாட்கள் நிரூபித்தது.
இந்த சம்பவத்தின் மூலம் முழுவதுமாக கட்டுப்பட வேண்டும் என்ற பாடம் நமக்கு கிடைக்கின்றது. சஹாபிகள் நபி ஸல் அவர்களுடைய கட்டளையை ஏற்காமல் இருந்த நேரத்தில் அவர்கள் நெருப்பின் விழும்பில் இருந்தார்கள். சம்பவம் இவ்வாறு நிகழ்ந்தது அதாவது தன்னுடன் கொண்டு வந்த குர்பானி விலங்குகளை இங்கயே அருத்து விட்டு இஹ்ராமை திறந்து விடுங்கள் என்று சஹாபாக்களுக்கு நபி ஸல் அவர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். ஆனால் எந்த சஹாபியும் இதன்படி செயல்படவில்லை. பிறகு நபி ஸல் அவர்கள் தன்னுடைய மனைவி உம்மே சல்மா ரலி அவர்களிடம் சென்று கூறினார்கள்:
ھَلَکَ الْقَوْمُ
அதாவது சமுதாயம் அழிந்து விட்டது.
ஆனால் இறைவன் நம்பிக்கையாளர்களை இந்த அழிவிலிருந்து காப்பாற்றினான். மேலும் உம்மே சல்மா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் கூறினார்கள்; அண்ணார் தன்னுடைய குர்பானி விலங்கை அருத்து இஹ்ராமை திறங்கள். எனவே நபி ஸல் அவர்கள் இவ்வாறு செய்த போது அனைத்து முஸ்லிம்களும் அன்னாருக்கு கட்டுப்படுவதில் ஒருவர் மற்றவரை முந்திக்கொண்டு குர்பானி கொடுப்பதில் ஒருவர் மற்றவருக்கு உதவி புரிந்தார்கள். மேலும் இஹ்ராம் திறந்தார்கள். ஒருவேளை நம்பிக்கையாளர்கள் கட்டுப்படுவதில் சிறு காலதாமதம் ஏற்படுத்திருந்தால் அவர்களுக்கு மிகவும் அபாயகரமான முடிவு ஏற்பட்டிருக்கும். ஆனால் இறைவன் தன்னுடைய அருளை வெளிப்படுத்தினான். மேலும் அனைத்து விஷயங்களையும் இறுதியில் நம்பிக்கையாளர்களுக்கு சாதகமாக சிறந்த முடிவுகள் உருவாகுமாறு மாற்றிவிட்டான்.
ஷரியத் விஷயங்கள் தொடர்பான தவறுகள்
அதாவது ஷரியத் விஷயங்களை மீறுவதால் நிகழும் தவறுகள். ஐவேளை தொழுகை கடமையானது என்பதை நாம் அறிவோம். ஃபஜரின் இரண்டு ரக்அத்துகள் லுஹருடைய நான்கு ரக்அத்துகள் போன்றவை. மேலும் இதையே நபி ஸல் அவர்கள் ஷரியத் அடிப்படையில் நமக்கு கற்பித்தார்கள். ஆனால் ஒருமுறை அன்னார் ஸல் லுஹருடைய தொழுகையை தொழுது கொண்டிருந்தார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு ஸலாம் கூறினார்கள் சஹாபா கேட்டார்கள்; தொழுகை சிறியதாக்கப்பட்டதா என்ன? அப்போது நபி ஸல் அவர்கள் தான் இழைத்த தவறை அறிந்துகொண்டார்கள். பிறகு கூடுதலாக இரண்டு ரக்அத்துக்கள் நிறைவேற்றினார்கள். இதன் மூலம் நமக்கு தெரியவருவது என்னவென்றால்; ஷரியத் கட்டளையிலும் இவ்வகையான தவறுகள் நபி அல்லது கலிஃபாவின் மூலம் நிகழக்கூடும். மேலும் இது மனிதன் மறந்து விடுகின்ற காரணத்தினால் நிகழ்கின்றது. மேலும் நபி மற்றும் கலிஃபா மனிதர்களாகவே இருக்கின்றார்கள். ஆனால் இவ்வகையான தவறுகளை உடனடியாக சரி செய்து கொள்வது அவசியமாகும். எவ்வாறு தொழுகையில் இமாம் கிராஅத்தில் தவறிழைத்தால் அவருக்கு பின்புள்ளோர் வார்த்தையை எடுத்து தர வேண்டுமோ; அதைப்போன்றே இவ்வகையான தவறுகளையும் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
நபி அல்லது கலிஃபா ஷரியத் விஷயங்களில் வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் ஒருபோதும் தவறு இழைக்க மாட்டார்கள்.
அஸ்மத் என்பதன் (பாவங்களிலிருந்து தூய்மையாய் இருத்தலின்) பொருள்
பொதுவாக நாம் கேட்கின்றோம்; நபிமார்கள் பாவம் இழைக்காதவர்களாக இருக்கின்றார்கள். இறைவனுக்கு கட்டுப்படுவதில் தன்னை மாய்த்து கொள்வதினால் இவ்வாறு இருக்கின்றார்கள். மேலும் இவர்கள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இறைவனை உணர்கின்றார்கள். இறைவன் இருப்பதைப் பற்றிய நிலையான உணர்வு அவரைப் பாதுகாக்கிறது. இவ்வாறு அவர்களை பாவத்திலிருந்து தடுத்தும் வைக்கின்றது. இதையே இறைவனுடய அஸ்மத் (தவறு இழைக்காதவன்) என்பார்கள். எனவே நபி இறைவனுடைய கட்டளையை எவ்வாறு மீற நினைப்பார்? இவ்வாறு நிகழ்வது என்பது நிச்சயமாக சாத்தியமற்றதாகும்.
இதைப்போன்றே கலிஃபா எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்றால்; நம்பிக்கையாளர்கள் கூட்டத்தின் கண்காணிப்பாளராக இறைவன் அவரை தேர்தெடுத்துள்ளான். இறையச்சம் மேற்கொண்டவர்களின் இமாமாக இறைவன் அவரை தேர்ந்தெடுத்துள்ளான். மேலும் அவர் உலகில் உள்ள அனைத்து மக்களையும் விட இறையச்சத்திலும் நேர்மையிலும் மேன்மையானவர். மேலும் நம்பிக்கையாளர்கள் கூட்டத்தை இறையச்சத்திலும் நேர்மையிலும் உயர்ந்த இடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பது இவருடைய பொறுப்பாகும். எனவே இப்படிப்பட்ட நபர் இறைவனுடைய கட்டளையை எவ்வாறு மீறுவார்? இவ்வாறு ஒரு போதும் நடக்காது.
ஜமாஅத்தின் ஆன்மிகத்தை பாதுகாப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நபரை விட்டு இறைவன் எவ்வாறு விலகுவான்? மேலும் பாவத்திலிருந்து தூய்மையானவன் என்கின்ற தன்னுடைய பண்பிலிருந்து அவரை இழப்புக்றியவனாக எவ்வாறு ஆக்குவான்? சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து உண்மையான நம்பிக்கையாளரை பாதுகாப்பான் என்று இறைவன் வாக்குறுதி அளித்துள்ளான்.
اِنَّ عِبَادِیۡ لَیۡسَ لَکَ عَلَیۡہِمۡ سُلۡطٰنٌ (الحجر:43)
நிச்சயமாக என் அடியார்கள் மீது உன்னுடைய ஆதிக்கம் ஒருபோதும் இருக்காது
இறையச்சம் மேற்கொண்ட அடியார்கள் மீது ஷைத்தானுடைய எந்த ஒரு ஆதிக்கம் இல்லை என்றால் இறையச்சம் மேற்கொண்டவர்களின் இமாமாகியவர் மீது எவ்வாறு ஆதிக்கம் இருக்கும்? நபி மூலம் நிகழ்கின்ற தவறுகள் கலிஃபாவின் மூலமும் நிகழக்கூடும். நாம் இவ்விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளும் போதுதான் நாம் கிலாஃபத்தினுடைய மகத்துவம் மற்றும் அந்தஸ்தை சரியான முறையில் புரிந்து கொள்ள முடியும். கிலாஃபத் என்பது நபித்துவத்தின் தொடர்ந்த அருளேயன்றி வேறில்லை.
அஹ்மதி முஸ்லிம்கள் எந்த அளவு நற்பாக்கியம் சாலியாக இருக்கின்றார்கள் என்றால்; இறைவன் அவர்களுக்கு இந்த அருளை தந்துள்ளான். கிலாஃபத் தேர்ந்தெடுப்புக்கு பின் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, விசால உள்ளம், திருப்தி, நிம்மதி அவர்களுக்கு கிடைக்கின்றது. இதற்கு நிகராக வேறு எந்த மகிழ்ச்சியும் இருக்க இயலாது இறைவனுடைய இந்த அருள் இன்ஷா அல்லாஹ் மறுமை வரை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும்.
நன்றி: அல்-ஃபஸ்ல் இன்டர்நேஷனல் பத்திரிகை
மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன்-திருச்சி
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None