ஹஸ்ரத் அஹ்மத் (அலை) கத்மே நுபுவ்வத்தின் மீது வைத்திருந்த ஈமான்

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) காதமுல் அன்பியா ஆவார்கள். அதாவது எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிறகு எந்தவித புதிய ஷரியத், புதிய வேதம் வராது. புதிய கட்டளை தோன்றாது. இதுதான் வேதம் மற்றும் கட்டளை ஆகும். எனது நூலில் என்னை குறிப்பிட்டு வரக்கூடிய நபி, ரசூல் என்பது ஒரு புதிய ஷரியத்தையோ, புதிய கட்டளையோ கொண்டு வந்ததை சாராது. மாறாக தேவைக்குறிய நேரத்தில் ஏதாவதொரு தீர்க்கதரிசியை அனுப்புவானோ அவ்வேளையில் அவருக்கு அவன் (அல்லாஹ்) தன்னிடம் பேசக்கூடிய பாக்கியத்தை வழங்குகிறான். மேலும் மறைவான விஷயத்தை தெரிவிக்கிறான். இவ்வாறானவர்களுக்கு நபி என்று கூறப்படுகிறது. மேலும் தீர்க்கதரிசி என்ற நபி பட்டத்தை வழங்கப்படுகிறது. இதனால் அவருக்கு புதிய ஷரியத் வழங்கப்படுவார் என்று பொருள் அல்ல. அல்லது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் ஷரியத்தை நஊதுபில்லாஹ் நீக்கக்கூடியவராக இருப்பார் என்றோ பொருள் அல்ல. மாறாக அவருக்கு கிடைக்கூடிய அனைத்துமே அண்ணாரை (ஸல்) முழுமையாக பின்பற்றியதானாலேயே கிடைக்கின்றது. இது அல்லாமல் அவருக்கு எதுவும் கிடைக்காது. (மல்ஃபூசாத் பாகம் 3 பக்கம் 498)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.