ஈஸா (அலை) உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்க்கு எடுத்து வைக்கும் எதிர் வாதம் - 8,9



எட்டாவது எதிர் வாதம்

ஈஸா அலை அவர்கள் சிலுவை சம்பவதிற்கு முன்பே அல்லாஹ் அவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்பதற்கு எதிரிகள் எடுத்து வைக்கும் மற்றுமொரு வாதம் 

وَ مُطَھِّرُکَ مِنَ الّذِیْن کَفَرُوْا (آل عمران:55)

அதாவது இறைவன் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு நான் உன்னை காபிர்களிடமிருந்து தூய்மை படுத்துவேன் அதாவது முழுமையான முறையில் யூதர்களின் கையிலிருந்து காப்பாற்றுவேன். ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டு பிறகு உயிரோடு இறக்கப்பட்டார்கள் என்ற அஹ்மதிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டோம் என்றால் இறைவனின் இந்த வாக்குறுதி பொய்யாகிறது. என்று அஹ்மதி அல்லாதவர்கள் தமது வாதத்தை வைக்கின்றார்கள்.
நமது பதில்: تَطْھِیْرُ என்றால் இந்த வசனத்தில் காஃபிர்களின் குற்றச்சாட்டுகளிலிருந்து தூய்மை படுத்துதல் என்பதாகும். அல்லாமல் அவர்களின் கரங்கள் மூலமாக ஏற்படக்கூடிய காயத்திலிருந்து பாதுகாத்தல் என்ற பொருள் கிடையாது. திருக் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

اِنَّمَا یُرِیْدُ اللہُ لِیُذْھِبَ عَنْکُمُ الرِّجْسَ اَھْلَ الْبَیْتِ وَ یُطَھِّرَکُمْ تَطْھِیْرًا (الاحزاب:34)

அதாவது நபியின் வீட்டையுடையவர்களே! உங்களிடமிருந்து அசுத்தத்தை அகற்றி உங்களை நன்றாக தூய்மைபடுத்த வேண்டும் என்று அல்லாஹ் நாடுகிறான்.
இதிலிருந்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களைத் தவிர ஹஸ்ரத் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களின் வீட்டை சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். இவர்களை தத்ஹீர் ஆக்கினானா. (அதாவது எதிரிகளின் கூற்றின்படி அவர்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டார்களா?) யசீதின் பிடியிலிருந்து உடல்ரீதியாக அவர்களுக்கு துன்பம் இழைக்கப்படவில்லையா...? ஆகவே ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்காக மட்டும் தத்ஹீர் என்பதற்கு வேறொரு பொருளை கொள்வது திருக்குர்ஆன் நடைமுறைக்கு மாற்றமானதாகும்.


ஒன்பதாவது வாதம்

அஹ்மதி அல்லாத சகோதரர்கள் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்காக எடுத்து வைக்கும் இன்னுமொரு வாதம்

کَیْفَ اَنْتُمْ اِذاَ نَزَلَ ابْنُ مَرْیَمَ فِیْکُمْ (بخاری کتاب الانبیاء باب نزول عیسیٰ بن مریم جلد 1صفحہ495، جلد 2 صفحہ 236مصری)
முஸ்லிம்களே! உங்களில் ஈசாப்னு மர்யம் இறங்கும்போது உங்களின் நிலை எவ்வளவு பாக்கியமுள்ளதாக இருக்கும். என்ற ஹதீஸை முன் வைத்து ஈஸா வானத்திலிருந்து இறங்குவார் ஆகவே அவர் இன்று வரை உயிரோடு வானத்தில் இருக்கிறார் என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.
நமது பதில்: இந்த ஹதீஸில் “மினஸ் ஸமாயி” (வானத்திலிருந்து) என்ற வாசகமே இல்லையே. ஆம், சகோதரர்களுக்கு இரண்டு வார்த்தைகளினால் தவறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒன்று “நுசூல்” மற்றொன்று “இப்னு மர்யம்” என்பதாகும். “நுசூல்” என்ற வார்த்தை வந்தால் அதற்கு வானத்திலிருந்து இறங்குதல் என்ற பொருள் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
‘‘نزول’’என்ற சொல் திருக்குர்ஆனில் எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்

·         قَدْ أَنزَلَ اللَّهُ إِلَيْكُمْ ذِكْرًا -رَّسُولًا يَتْلُو عَلَيْكُمْ (الطلاق:11،12)
அதாவது அல்லாஹ் தஆலா உங்களுக்காக முஹம்மத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை இறக்கிறான், அவர் உங்களுக்கு இறைவனின் அடையாளத்தை வாசித்து காட்டுகிறார்....இந்த வசனத்தை வைத்து ரசூல் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து இறங்கினார்கள் என்று வாதம் புரிய முடியுமா...?

·         وَأَنزَلَ لَكُم مِّنَ الْأَنْعَامِ(الزمر:7)
அதாவது, அல்லாஹ் உங்களுக்காக விலங்குகளை இறக்கினான்.

·         وَأَنزَلْنَا الْحَدِيدَ (الحدید:26)
அதாவது, நாம் இரும்பினை இறக்கினோம்.

·         وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ (الحجر:22)
அதாவது, ஒவ்வொரு பொருளுக்குமான பொக்கிஷங்கள் நம்மிடமே இருக்கின்றன அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கிவைப்பதில்லை.

·         يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا(الاعراف:27)
அதாவது, ஆதமின் மக்களே! நாம் உங்களுக்காக ஆடையை இறக்கி வைத்துள்ளோம்.
(இவ்வாறு திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் நுசூல் என்ற பதம் இடம்பெற்றுள்ளது. நாம் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வசனத்திலும் நேரடியாக நுசூல் என்பதற்கு வானத்திலிருந்து இறங்குதல் என்று பொருள் கொள்ள முடியாது.)

இனி நாம் ஹதீஸில் நுசூல் என்ற பதத்தை எந்த பொருளில் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பதை கீழே பார்க்கலாம்:
·         கன்ஸுல் உம்மால் பாகம் 7 பக்கம் 59 இல் இவ்வாறு இடம்பெற்றுள்ளது;

اَنَّ النَّبِیَّ صَلّی اللہ علیہ وسلم نَزَلَ تَحْتَ شَجَرَۃٍ

பொருள்: ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தின் கீழ் இறங்கினார்கள்.
·         இதே கன்ஸுல் உம்மால் பாகம் 4 பக்கம் 19 கிதாப் ஷமாயில் மின் கசமுல் அக்வால் வல் அஃப்ஆல் பாப் ஆதாபுஸ் ஸஃபர் ஹதீஸ் நம்பர் 474 இல் இவ்வாறு வருகிறது;

کان اذا نَزَلَ مَنْزِلاً فی سَفَرٍ لم یَرْتَحِلْ حتّٰی یُصَلِّیْ فیہ رَکْعَتَیْنِ

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் (ஓரிடத்தில்) நின்றதும் இரண்டு ரக்அத் தொழுது விட்டு தனது பயணத்தை தொடருவார்கள்.
·         ஃபத்ஹுல் பாரி ஷரஹ் புகாரி பாகம் 8 பக்கம் 965 இல் இவ்வாறு வருகிறது;

لَمَّا نَزَلَ الْحَجَرَ
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஹஜர் எனும் நிலத்தில் இறங்கிய பொது.
(என்று பல்வேறு ஹதீஸில் “நஸல” என்ற பதம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எங்குமே வானத்திலிருந்து இறங்குதல் என்றே பொருளே கொள்வதில்லை.)
முஹம்மத்திய்ய உம்மத்தை குறிப்பிட்டு கூறும்போதும் ஹதீஸில் “நுஸூல்” என்ற பதத்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

கன்ஸுல் உம்மால் ஹதீஸ் நூலில் பாகம் 7 பக்கம் 180 கிதாபுல் கியாமா மின் முஸ்லிமுல் அக்வால் (அல்அக்மால்) ஹதீஸ் நம்பர் 1824 இல் இவ்வாறு வருகிறது;

لَتَنْزِلَنَّ طَآئِفَۃٌ مِّنْ اُمَّتِیْ اَرْضاً یُقَالُ لَھَا الْبَصْرَۃُ
பொருள்: எனது உம்மத்தில் ஒரு கூட்டம் பஸ்ரா எனும் இடத்தில் இறங்கும். (என்று வந்துள்ளது)

இதே போன்று தஜ்ஜாலுக்காகவும் “நுஸூல்” என்ற பதம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

மிஷ்காத் கிதாபுல் ஃபித்ன் பாப் இலாமாதே பைன யதஸ் ஸாஅஹ் வ திக்ரத் தஜ்ஜால்- கன்ஸுல் உம்மால் பாகம் 6 பக்கம் 250 போன்ற ஹதீஸ் நூட்களில் இவ்வாறு வருகிறது;
یَاْتِی الْمَسِیْحُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ وَ ھِمَّتُہ’ الْمَدِیْنَۃَ حَتّٰی یَنْزِلَ دُبُرَ اُحُدٍ
பொருள்: மஸீஹுத் தஜ்ஜால் மதீனாவை நோக்கி கிழக்கிலிருந்து வருவான். உஹத் மலையின் பின்புறம் இறங்குவான். (என்று வந்துள்ளது. இவ்வாறு பிறிதொரு ஹதீஸில் இவ்வாறு வந்துள்ளது)
فَیَنْزِلُ بَعْضَ السَّبَاخِ
பொருள்: மதீனாவின் நன்கு சப்தமுள்ள இடத்தை நோக்கி இறங்குவான். (புகாரி கிதாபுல் ஃபித்ன் பாப் லா எத்குலுத் தஜ்ஜால் அல்மதீனா; பாகம் 4 பக்கம் 143) (என்ற ஹதீஸிலும் வந்துள்ளது)
ஆகவே “நுஸூல்” என்ற சொல்லின் மூலம் ஈஸா வானத்திலிருந்துதான் வருவார் என்று ஏமார்ந்து விடக் கூடாது.

பைஹக்கியில் “மினஸ் ஸமாயி” என்ற சொல்

குறிப்பு: இவ்விடத்தில் சில அறிவீன முல்லாக்கள் இமாம் பைஹக்கியின் (1328 ஹிஜ்ரி ஆண்டு) நூல் “அல் அஸ்மாஉ வஸ் ஸஃபாத்” பக்கம் 301 லிருந்து ஓர் ஹதீஸை எடுத்து வைக்கின்றார்கள். அதில் இவ்வாறு வருகிறது;
کیف انتم اِذا نَزَلَ ابن مریم مِنَ السَّمَاءِ فِیْکُمْ وَ اِمَامَکُمْ مِنْکُمْ
முதலில் ஒரு விஷயத்தை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்த வாசகத்தை சொன்ன இமாம் மேற்கொண்டு இந்த வாசகத்திற்கு பின்பு இவ்வாறு எழுதுகின்றார்:
رواہُ البخاری فی الصّحیح عن یَحْیٰ بن بکْرٍ وَ اَخرَجَہ’ مُسَلِمٌ وَ مِن وجْہٍ اٰخرَ عن یُوْنُسٍ وَ انَّما اَرَادَ نُزُوْلُہ’ مِنَ السّمَاءِ بَعْدَ الرَّفْعِ اِلَیْہِ(صفحہ 201)
பொருள்: இந்த ஹதீஸை புகாரி (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இமாம் முஸ்லிம் அவர்கள் யூனுசிடமிருந்து வேறொரு காரணமாக பெற்றார்கள். அவர் (யூனுஸ்) இறங்குவார் என்பதற்கு “மினஸ் ஸமாயி” என்ற பொருளிலேயே கூறியுள்ளார்கள்.
இமாம் கூறுகிறார்; புகாரியிடமிருந்து அறிவிக்கப்பட்டது என்று. புகாரியில் அறிவிப்பாளர் மற்றும் வாசகம் அனைத்தும் உள்ளது. ஆனால் “மினஸ் ஸமாயி” என்ற வாசகம் இல்லை. ஆகவே இது ஹதீஸின் ஒரு அங்கம் இல்லை என்பது தெளிவாகிறது.

இரண்டாவது: இந்த அறிவிப்பாளர் வரிசையில் அபூ பக்கர் முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் முஹம்மத் அன்நாக்கித் என்ற அறிவிப்பாளரும் இருக்கிறார். இவரை பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது;

کَانَ یَدَّعِی الْحِفْظَ وَفِیْہِ بَعْضَ التَّسَاھُلِ 

பொருள்: இந்த அறிவிப்பாளரிடம் பலகீனங்கள் இருக்கின்றன. (லிஸாநுல் மீஸான் ஹர்ஃபுல் மீம் – இப்னு ஹஜர் பாகம் 5 பக்கம் 69)
ஆக இந்த அறிவிப்பாளரின் மினஸ் ஸமாயி என்ற சொல்லும் கூட பலகீனதாகும். இது அசல் நூலின் வார்த்தையும் இல்லை. இவ்வாறு இந்த அறிவிப்பாளர்களின் வரிசையில் அஹ்மத் பின் இப்ராஹீம் என்ற அறிவிப்பாளரும் கூட பலகீனமானவரே. (பார்க்க: லிஸாநூல் மீஸான் பாகம் 1) ஆகவே மினஸ் சமாயி என்பது ஆதரத்திற்குரியது அல்ல.
இது மட்டுமல்லாது, இந்த அறிவிப்பின் ஒரு அறிவிப்பாளராக எஹ்யா பின் அப்துல்லாஹ் என்பவரும் இருக்கிறார். இவரைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாவது;

قَال اَبُو حَاتِمٍ۔۔۔۔۔۔لا یُحْتَجُّ بَہِ۔۔۔۔۔۔۔۔و قال النَّسَائی ضَعیفٌ۔۔۔۔لَیْسَ بِثِقَۃٍ قال یَحْیٰ۔۔۔۔۔۔لیس بشَیْ  ٍٔ۔

இவ்வாறு இந்த அறிவிப்பின் வரிசையில் யூனுஸ் பின் யஸீத் என்ற அறிவிப்பாளரும் பலகீனமானவரே. இந்த அறிவிப்பை யூனுஸ் பின் யஸீத் என்பவர் இப்னு ஷஹாபுஸ் சஹ்ரி என்பவரிடமிருந்து அறிவித்துள்ளார். இவரை பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாவது;

قال ابو زَرْعَۃُ الدَّمَشْقِی سَمِعْتُ ابا عبدِ اللہِ احمد ابنَ حنبلٍ یقوْلُ فی حدیثِ یونسَ عنِ الزُّھْرِیِّ مُنْکَرَاتُ۔۔۔۔۔۔قال ابنُ سَعْدٍ۔۔۔۔۔لیسَ بِحُجّۃٍ۔۔۔۔۔کان سیّی َٔ الحِفْظِ۔

பொருள்: இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறுகின்றார்கள், யூனுஸ் அவர்கள் சுஹ்ரியிடமிருந்து அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் மறுக்கப்படவேண்டியவையே. இப்னு சஅத் கூறுகின்றார்கள், யூனுஸ் ஏற்கத்தகாதவர் ஆவார்......மேலும் வக்கீ இவரது நினைவாற்றல் பலகீனமானதாக இருந்தது என்று கூறுகிறார்.
இவரைப் பற்றி மீஸானூல் ஈத்ததால் இல் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது;

کان یُدَلِّسُ فی النَّادِرِ۔

பொருள்: சில நேரங்களில் இவர் மோசடி செய்துள்ளார்.( மீஸாநூல் ஈத்ததால் பாகம் 2 பக்கம் 448, அன்வார் முஹம்மதி பதிப்பகம்) ஆக இந்த அறிவிப்பிலும் கூட மினஸ் சமாயி என்ற வார்த்தையை அதிக்கப்படுத்தியிருப்பதும் ஒன்று இவரின் நினைவாற்றலின் தடுமாற்றமாக இருக்கலாம் இல்லையென்றால் மோசடியின் விளைவாகவும் இருக்கலாம்.
மூன்றாவது: பைஹக்கி அவர்கள் முதலாவதாக எழுதியது ஹிஜ்ரி 1328 இல் முதல் முறையாக அச்சிடப்பட்டது. அதாவது ஹஸ்ரத் மஸீஹ் மஊத் (அலை) அவர்களின் வாதத்திற்கு பிறகு இன்னும் சொல்லப்போனால் அவர்களின் மரணத்திற்கு பிறகு (அச்சிடப்பட்டுள்ளது). எனவே பெயர் தாங்கிய ஆலிம்கள் “மினஸ் சமாயி” என்ற வாசகத்தை தன் புறமிருந்து அதிகப்படியாக சேர்துள்ளனர். இதற்கான ஆதாரம் என்னவென்றால், இமாம் ஜலாலுத்தீன் சயூத்தி (ரஹ்) அவர்கள் பைஹக்கியிடமிருந்து இந்த ஹதீஸை எடுத்து எழுதியுள்ளார்கள். ஆனால் அதில் “மினஸ் ஸமாயி” என்ற வாசகம் இல்லை. தமது தஃப்சீர் “துர்ரே மன்ஸூர் பாகம் 2 பக்கம் 242 இல் இந்த ஹதீஸை இவ்வாறு எழுதுகிறார்;

واَخْرَجَ اَحمدُ و البُخَارِیُّ و الْمُسْلِمُ و البیھقیُّ فی الاَسْماءِ و الصِّفاتِ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم کَیْفَ اَنْتُم اِذا نَزل فیکم ابن مریم و امامکم منکم۔

மேலே குறிப்பிட்டுள்ள ஆதாரத்தில் “மினஸ் ஸமாயீ” என்ற வாசகத்தை விடப்பட்டதின் அடிப்படையில் இது ஹதீஸின் ஓர் அங்கமில்லை என்பது தெளிவாகிறது. மாறாக பிறகு அதிக்கப்படியாக சேர்க்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. எவ்வாறு இருந்த போதிலும் இது ஹதீஸ் இல்லை.

(தப்லீக் பாக்கட் புக் நூலிலிருந்து எடுக்கப்பட்டது)  


  





கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.