ஹஸ்ரத் மஸீஹ் மஊத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"நமது ஜமாஅத் இரவு நேரம் அழுதழுது துஆ செய்ய வேண்டும். உத்ஊணி அஸ்தஜிப் லகும் (முஃமின்:61) என்பது அவனது வாக்குறுதியாக இருக்கின்றது. சாதாரண மக்கள் துஆ என்றால் இந்த உலகத்தின் துஆ தான் என்று கருதுகின்றனர். அவர்கள் இந்த உலகத்தின் பூச்சியாக இருக்கின்றார்கள். இதிலிருந்து அவர்கள் தவிர்ந்து செல்வதில்லை. உண்மையில் மார்க்கத்தை சார்ந்த துஆவே அசல் துஆவாக இருக்கின்றது. நாம் பாவியாக இருக்கிறோம், இதிலிருந்து நம்மால் மாற முடியாது ஆதலால் இந்த துஆ எவ்வாறு நிறைவேறும் என்று ஒரு போதும் நினைத்துவிடாதீர்கள். இந்த நினைப்பு தவறானதாகும். சில நேரம் மனிதன் பாவத்துடன் இவ்விஷியத்தில் (துஆ வில்) வெற்றி அடைகிறான். இதற்கு காரணம் அவனது தூய்மையான இயல்பாகும். பாருங்கள், நீர் எவ்வளவுதான் சூடாக இருந்தாலும் அதனை நெருப்பில் ஊற்றும்போது அந்த நெருப்பு அணைந்து விடுகிறது. காரணம் அதில் (அந்த நீரில்) குளிர்படுத்தும் தன்மை இருக்கிறது. இவ்வாறே மனிதனின் இயல்பிலும் தூய்மை இருக்கிறது. ஒவ்வொருவரிலும் இது இருக்கிறது. அந்த தூய்மை எங்கும் செல்லவில்லை. இவ்வாறு , உங்களது உள்ளம் எந்த அளவுக்கும் காழ்புணர்ச்சியால் நிரம்பி இருந்தாலும் அழுது துஆ செய்யும்போது அதனை அல்லாஹ் நீக்கி விடுகின்றான்."
(மல்ஃபூசாத் பாகம் 5 பக்கம் 132-133)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை)அவர்கள்அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவனுமே இல்லையென்றும் செய்யதுனா ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் அவனுடைய திருத்தூதரும் காதமுல் அன்பியாவுமென நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். மலக்குகள், மறுமை, கேள்வி கணக்கு, சுவர்க்கம், நரகம் இவையெல்லாம் உண்மைகளென நாங்கள் நம்புகிறோம். இஸ்லாமிய ஷரிஅத்திலிருந்து ஒரு கடுகளவு அதிகப்படுத்தவோ குறைக்கவோ அல்லது அதன் கட்டளைகளை விடவோ துன்மார்க்கத்திற்கான அடித்தளம் போடவோ செய்கிறவர் ஈமானில்லாதவரும் இஸ்லாத்திற்கப்பாற் பட்டவருமாவார்.நாம் நமது ஜமாஅத்திற்கு போதிப்பது என்னவெனில் அவர்கள் உளப்பூர்வமாக லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் மீது ஈமான் கொண்டு அதிலேயே நிலைத்து நின்று அதிலேயே மரணிக்க வேண்டும் என்பதாகும்.மேலும் திருக்குர்ஆனிலிருந்து தெரிய வரும் எல்லா நபிமார்கள் மீதும் வேதங்கள் மீதும் நம்மபிக்கை கொள்ளவேண்டும் என்பதாகும். அடுத்து , அவர்கள் தொழுகை, நோன்பு, ஸக்காத்து, ஹஜ்ஜு ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். அதோடு அல்லாஹ்வும் அவனுடைய திருத்தூதர் நபி பெருமானார் (ஸல்) அவர்களும் குறிப்பிட்டுள்ள கட்டளைகளையும் கடமைகளாக கருதி அவற்றை நிவைவேற்றி வர வேண்டும் என்பதுமாகும். சுருக்கமாக கூறுவதென்றால் எந்த கொள்கைகள் ஸலபுஸ்ஸாலிஹீன்கள் ஒருமனதாக ஏற்றிருந்தார்களோ எந்த கொள்கைகள் அஹ்லே சுன்னத்தின் ஏகமனதான கருத்தில் இஸ்லாம் எனப்படுகிறதோ அவற்றின் மீது நம்பிக்கை கொள்வது கடமையாகும. இதுவே எங்களின் மார்க்கம் என்பதை வானத்தையும் பூமியையும் சாட்சியாக கொண்டு கூறுகிறேன்.(அய்யாமுஸ்ஸுல்ஹ் – ருஹானி கஸாயின் பாகம் 14 பக் 323)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None