ஏப்ரல் ஃபூல் ஓர் சீர்கெட்ட, தீய பழக்கம் ஆகும்

கிருத்தவ படை வீரர்கள் ஸ்பெயின் ஐ வெற்றி கொண்ட போது முஸ்லிம்களை எந்த அளவுக்கு அவர்கள் கொன்று குவித்தார்கள் என்றால் வீதியில் படை வீர்களின் குதிரை செல்லும்போது அதனின் மூட்டு அளவிற்கு இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. முஸ்லிம்கள் முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை அறிந்த அந்த வீரர்கள் (கோழையர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்) இருந்த போதிலும் இனி முஸ்லிம்களில் எவரேனும் இங்கு இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தத்தமது குடும்பத்துடன் மராகஸ் (இங்கிருந்துதான் முஸ்லிம்களின் மூதாதையர்கள் ஸ்பெயின் வந்தனர்) சென்று விடுங்கள் என்று அறிவிப்பு செய்தனர். இதற்கு பிறகும் கூட கிருத்தவ படை வீரர்கள் இன்னும் முஸ்லிம்களின் எவரேனும் மீதம் இருக்கிறார்களா என்று வீதி வீதியாக தேடி தேடி அழைந்தனர். எவரேனும் தென்பட்டால் அவர்களை ஷஹீத் ஆக்கினர். சில முஸ்லிம்கள் சிலுவையை தனது கலுத்தில் மாட்டி கொண்டு கிருத்தவ பெயரை வைத்துக் கொண்டனர். ஒரு சில முஸ்லிம்கள் இன்னும் ஒழிந்து கொண்டிருக்கின்றனர் என்று கிருத்தவர்கள் நம்பி வந்தனர். இதனை அறியவே அவர்கள் நாடு முழுவதும் ஒரு அறிவிப்பை விடுத்தனர் அதாவது இன்னும் எவரேனும் முஸ்லிம்கள் இருந்தால் அவர்கள் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அன்று அவரவர் நாட்டுக்க்கு திரும்பி செல்ல வேண்டுமானால் கர்நாதா என்ற இடத்திற்கு வருகை தாருங்கள் என்று அறிவிப்பு செய்தனர். ஸ்பெயின் இல் சாந்தி நிலவி விட்டதால் எந்த வித அச்சமுமின்றி மறைமுகமாக வாழ்ந்து வந்த பல்வேறு முஸ்லிம்கள் இவர்களின் இந்த பொய்யான பேச்சை கேட்டு நம்பி கர்நாதா என்ற இடத்திற்கு
வந்தார்கள். அதன் பிறகு கிருத்தவ ஜெனரல் அவர்களை நம்ப வைத்து  ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அன்று ஒரு கப்பலில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இது சுமார் ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள காலம். இறுதியில் கப்பல் நடுக்கடலில் வரவே அந்த கப்பலை மூழ்கடித்தனர். இவ்வாறு அதிலிருந்த அனைத்து முஸ்லிம்களும் இறந்தனர். இவ்வாறு ஆங்கிலேயர்கள் அந்த நாளாகிய ஏப்ரல் ஒன்றை ஒரு சந்தோஷ நாளாக கருதினர். இவ்வாறு முழு உலகிலும் அப்போதிருந்து ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அன்று APRIL FOOL ஆக கொண்டாடி வருகின்றனர். இவ்வாறு மக்களை ஏமாற்றி முட்டாளாக்கி வருகின்றனர்.

இதில் வருத்தம் என்னவென்றால் முஸ்லிம்களில் பலர் இந்த உண்மையை அறியாமல் இந்த APRIL FOOL நாளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் இந்த தீய பழக்கத்தினால் என்னென்ன கெடுதிகள் சமுதாயத்தில் ஏற்படுகின்றன என்பதை அறிவதில்லை. இதனால் ஒன்று பொய் சொல்லும் பழக்கம் ஏற்படுகின்றன. இரண்டாவது பிறரை ஏமாற்றும் பழக்கம் ஏற்படுகிறது. மூன்று இறை கோபத்திற்கு ஆளாகின்றோம். ஈமான் பாலாகிறது. இவ்வாறு பல சீர்கேடுகள் நம்மில் உருவாகின்றன. இவ்வாறான ஒரு சீர்கெட்ட பழக்கத்தை எந்த மனிதரும் குறிப்பாக முஸ்லிம் பெரு மக்கள் அறவே பேணக்கூடாது. இதை விட்டு தவிர்ந்திருக்க வேண்டும்.
---------------------------------------------------------------------  
ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி அவர்கள் கூறுகின்றார்கள்:

திருக்குர்ஆன் பொய்யர்கள் மீது சாபமிடுகிறது. மேலும் பொய்யர்கள் ஷெய்த்தானின் சகோதரர்கள் ஆவார்கள் என்று கூறுகிறது. பொய்யர்கள் ஈமான் அல்லாதவர்களாக இருக்கிறார்கள். பொய்யர்கள் மீது ஷெய்த்தான் இறங்குகிறான். நீங்கள் பொய் கூறாதீர்கள் என்று மட்டும் குர்ஆன் கூறவில்லை மாறாக நீங்கள் பொய்யர்களின் அருகாமையில் கூட அமராதீர்கள் அவர்களை தங்களது நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள் உண்மையாளர்களுடன் இருங்கள் என்று கூறுகிறது. மற்றோரிடத்தில் நீங்கள் எப்போது பேசினாலும் உங்களது பேச்சில் உண்மை மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறுகிறது. கிண்டலுக்காக கூட உங்களது பேச்சில் பொய் இருக்கக்கூடாது. இப்போது கூறுங்கள் இந்த போதனைகள் இஞ்சீலில் எங்கு காணப்படுகிறது? இவ்வாறான போதனைகள் இருந்திருந்தால் கிருத்தவர்களில் ஏப்ரல் ஃபூல் என்ற இந்த சீர்கெட்ட பழக்கம் இப்போது வரை ஏன் தொடர்ந்து இருக்க வேண்டும்?.பாருங்கள் ஏப்ரல் ஃபூல் எவ்வளவு தீய பழக்கமாக இருக்கிறது. இந்த நேரத்தில் தேவை இல்லாமல் பொய் சொல்வதை ஓர் பண்பாடாக கருதப்படுகிறது. இது கிருத்தவர்களின் பண்பாடாக மற்றும் இஞ்சீலின் போதனையாகவும் இருக்கிறது. கிருத்தவர்கள் பொய்யை நன்கு விரும்புகிறார்கள் என்பது தெரியவருகிறது. ஆதலால் இவர்களின் செயல் இதற்கு சாட்சி பகரக்கூடியதாக இருக்கிறது.
(நூருல் குர்ஆன் நம்பர் 2, ரூஹானி கஸாயீன் பாகம் 9 பக்கம் 408)

  

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.