அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி அவர்கள் என்று தான் ஒரு இறைவனால் அனுப்பபட்ட தீர்க்கதரிசி என்று வாதம் செய்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் என்ற ஓர் இறை ஜமாஅத்தை நிறுவினார்களோ அன்றிலிருந்து அன்னாரின் எதிரிகள் அண்ணாரையும், அண்ணாரை ஏற்று இந்த ஜமாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஏனைய முஸ்லிம் மற்றும் இதர மாற்று சகோதரர்களை காஃபிர் என்று கூறுவது மட்டுமல்லாமல் கொடிய காஃபிர் என்றும் தஜ்ஜால் என்றும் கூறி பாமர மக்களை இந்த ஜமத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு எதிராக திருப்புவது வாடிக்கையாக ஆகிவிட்ட்டது. இந்த ஈனத்தனமான கொடூர செயல் தற்போது பாகிஸ்தானில் அதிகமதிகமாக நடந்து வருகின்றது.
இந்தியாவிலும் இந்த கொடூர முல்லாக்கள் பாமர மக்களை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு எதிராக திருப்பவது மட்டுமல்லாமல், இவர்கள் முஸ்லிம் அல்ல, ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களை முற்றிலுமாக எதிர்க்க கூடியவர்கள், அவர்களை நஊதுபில்லாஹ் மட்டம் தாழ்த்தி பேசக்கூடியவர்கள் என்று கூறி அந்த பாமர மக்களை அஹ்மதி சகோதரர்களை இரத்த வெறி பிடித்து கொள்ளும் அளவுக்கு மாற்றி விடுகின்றனர். இவர்கள் மற்றவர்களை காஃபிர் என்று கூறி தாம் அந்த நிலைக்கு தள்ளப்படுகிறோமே என்பதை அறிவதில்லை. இவர்களை நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது. இவர்கள் நிலை ஒரு நெருப்புக் கோழியின் நிலைக்கு ஒத்ததாக இருக்கிறது. காரணம், நெருப்புக் கோழி தன்னை எதிர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தன் தலையை மட்டும் மண்ணில் மறைத்துக் கொண்டு நாம் பாதுகாக்கப்பட்டு விட்டோம் என்று நினைக்குமாம். இவ்வாறு ஒருவன் மற்றவர்களை காஃபிர் ஆக்கி விட்டு தான் முஸ்லிம் ஆக இருக்கிறோம் என்று நினைத்து வருகிறான்.
ஆனால் அவன் எந்த முஸ்லிமை காஃபிர் என்று கூறி காஃபிர் என்ற ஈட்டியை எரிகிறானோ அந்த ஈட்டி திரும்பி அவன் பக்கமே வருகின்றது என்பதை அறியாது நெருப்புக் கோழி போன்று செயல்படுகிறான். இதற்கு அடிப்படை காரணம் இந்த மூட முல்லாக்கள் இஸ்லாத்தை சரியாக அறியாத ஒரு காரணம் மட்டுமல்லாமல் தற்போதைய பாமர முஸ்லிம்கள் இஸ்லாத்தையும் அதனின் அழகிய போதனையையும் அறியாது மூட முல்லாக்களின் வாக்கே வேத வாக்கு என்று கூறும் அளவிற்கு இருந்து கொண்டு அந்த கொடூர முல்லாக்களின் கூற்றை கேட்டு தனது செயலை கொடூரமாக மாற்றிக் கொண்டதே ஆகும்.
ஆனால் அவன் எந்த முஸ்லிமை காஃபிர் என்று கூறி காஃபிர் என்ற ஈட்டியை எரிகிறானோ அந்த ஈட்டி திரும்பி அவன் பக்கமே வருகின்றது என்பதை அறியாது நெருப்புக் கோழி போன்று செயல்படுகிறான். இதற்கு அடிப்படை காரணம் இந்த மூட முல்லாக்கள் இஸ்லாத்தை சரியாக அறியாத ஒரு காரணம் மட்டுமல்லாமல் தற்போதைய பாமர முஸ்லிம்கள் இஸ்லாத்தையும் அதனின் அழகிய போதனையையும் அறியாது மூட முல்லாக்களின் வாக்கே வேத வாக்கு என்று கூறும் அளவிற்கு இருந்து கொண்டு அந்த கொடூர முல்லாக்களின் கூற்றை கேட்டு தனது செயலை கொடூரமாக மாற்றிக் கொண்டதே ஆகும்.
இவ்வாறான பாமர மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இஸ்லாம் மனித நேயத்தை எந்த மதமும் போதிக்காத வண்ணம் போதிக்கும் ஒரே மார்க்கம் ஆகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், எவர் ஒருவர், நான் அல்லாஹ்வை அவன் ஒருவன் என்றும் அவனைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் வேறு எவனும் இல்லை என்றும் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று சாட்சி கூறுபவரோ அவர் இஸ்லாத்தில் இணைந்து விடுகிறார் என்று ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறிய கூற்றை தன் மனதில் பதிய வைத்தால் இவ்வாறான கொடூர உணர்வை தனது உள்ளத்தில் ஏற்படுத்திக் கொண்டு நடந்து வரமாட்டார்கள். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை ஏற்றுக் கொண்ட மக்களை எதிர்க்கவும், கொள்ளவும் முன் வர மாட்டார்கள். காரணம் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை சார்ந்த மக்களும் இதே கலிமாவை தனது உயிர் மூச்சாக, இஸ்லாம் மார்க்கத்தின் சாராம்சமாக கருதி வருகின்றனர்.
ஹஸ்ரத் ரசூல் (ஸல்) யாரை முஸ்லிம் என்று கூறியுள்ளார்கள் என்பதை இந்த பாமர மக்கள் அறிந்து கொண்டால் அவர்கள் சுய நலத்தை கருதி செயல்பட்டு வரும் இந்த கொடூர முல்லாக்களின் கூற்றுக்களை ஏற்று நடந்து வர மாட்டார்கள். ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் யாரை முஸ்லிம் என்றும் யார் இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் என்றும் கூறுகின்றார்கள் என்பதை ஹதீசிலிருந்து எடுத்து நாம் கீழே தருகிறோம்;
ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: யார் நாம் அறுப்பதை போல் அறுப்பாரோ, கிப்லாவை முன்னோக்கி தொழுவாரோ அவர் முஸ்லிம் என்பதற்கு அல்லாஹ்வும் நானும் பொறுப்பேற்றுள்ளோம். அதற்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள்."
(புகாரி, ஹதீஸ் நம்பர்;391, முஸ்லிம்)
(மூல ஹதீஸ் கீழே)
மேலும் கூறுகின்றார்கள்:
ஒரு முறை ஒரு கூட்டத்தில் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள், ஹஸ்ரத் ஜிப்ராயீல் (அலை) வருகை தந்தார்கள். ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் அருகில் அவர்களது முட்டின் மீது கை வைத்தவாறு அமர்ந்தார்கள். மேலும் கூறினார்கள், "யா ரசூலுல்லாஹ் (ஸல்) இஸ்லாம் என்றால் என்ன?" ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இஸ்லாம் என்றால் நீங்கள் உங்களை இறைவன் பொறுப்பில் விட்டு விடுவதாகும். மேலும் அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை அவன் ஒருவனே ஆவான், அவனுக்கு வேறு யாரும் இணையில்லை மேலும் முஹம்மத் (ஸல்) அவனது அடியான் மற்றும் தூதராக இருக்கின்றார் என்று சாட்சி கூறுவதே இஸ்லாம் ஆகும் (என்று பதிலளித்தார்கள்). ஹஸ்ரத் ஜிப்ராயீல் அலை இந்த காரியங்களை செய்துவிட்டால் நான் முஸ்லிமை சார்ந்தவனாக ஆகிவிடுவேனா என்று கேட்டார்கள்? இதற்கு பதில் கூறியவாறு ஹஸ்ரத் ரசூல் (ஸல்) நீர் எப்போது இந்த காரியத்தை செய்கிறீரோ அப்போதே நீர் முஸ்லிமாக ஆகிவிடுகின்றீர் என்று கூறினார்கள். (ஆதாரம்; முஸ்னத் அஹ்மத் பின் ஹன்பல் ஹதீஸ் நம்பர் 2926)
(மூல ஹதீஸ் கீழே)
அஹ்மதிகள் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதை போன்று அவர்கள் எவ்வாறு அறுத்து உண்டார்களோ அவ்வாறே அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்து புசித்து வருகின்றார்கள். ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் எவ்வாறு கிப்லாவை முன்னோக்கி தொழுது வந்தார்களோ அவ்வாறே தற்போது இந்த உலகில் எங்கெல்லாம் அஹ்மதி சகோதரர்கள் வசித்து வருகின்றார்களோ அல்லது மஸ்ஜிதுகள் இருக்கின்றனவோ அங்கு கிப்லாவை முன்னோக்கிதான் தொழுது வருகின்றார்கள். மட்டுமல்லாமல் முஸ்னத் அஹ்மத் பின் ஹன்பல் ஹதீஸில் கூறியுள்ளதை போன்று கலீமா ஷஹாதத்தையும் கூறி வருகின்றார்கள் அதுவே தமது உயிர் என்றும் கருதி வருகின்றார்கள். ஆக இவ்வாறு ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு முஸ்லிமிற்கான மூன்று நிலைகளும் அஹ்மதி சகோதரர்களிடம் இருக்கும்போது எந்த அடிப்படையில் அவர்களை காஃபிர் என்று சொல்லி அவர்களை கொன்று குவித்து வரலாம்?. யார் அதற்கு உரிமை வழங்கினார்? பாமர மக்கள் சற்று சிந்திக்க வேண்டும். நீங்கள் இதனை மீறாதீர்கள் யார் இவ்வாறான நிலையை தன்னுடையதாக கருதுகின்றாரோ அவரை நீங்கள் காஃபிர் என்று கூறாதீர்கள் என்று கூட ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் தனது உம்மத்திற்கு அழகாக எடுத்து கூறியுள்ளார்கள். இதையும் மீறி நான் சொல்வதுதான் ஃபத்வா...இதுவே மார்க்க தீர்ப்பு என்று மூட முல்லாக்கள் கூறி வரும் பத்வாவை ஏற்று பாமர மக்கள் அதுவே வேத வாக்கு என்று நம்பி நாங்கள் அஹ்மதி சகோதரர்களை காஃபிர் என்று கூறத்தான் செய்வோம் என்று கூறி வெறித்தனமாக செயல் பட்டு வந்தால் இவ்வாறு செயல் பட்டு வரும் அந்த மக்களை குறித்து ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறும் பத்வாவையும் கீழே தருகிறோம் அதனை நீங்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்;
"யார் ஒரு முஸ்லிமை காஃபிர் என்று கூறுகிராரோ அவ்வாறு கூறியவர் காஃபிர் ஆகிவிடுகிறார்." (முஸ்லிம் ஹதீஸ் நம்பர் 6045)
ஆகவே இஸ்லாத்திலுள்ள பாமர மக்கள் ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது இஸ்லாத்தில் குர்ஆன் மற்றும் ஹதீஸின் தீர்ப்பே இறுதியாதானது. இதை தவிர்த்து இதற்கு எதிராக வழங்கப்படும் மூட முல்லாக்களின் தீர்ப்பு மற்றும் ஃபத்வாக்கள் குப்பை கூடத்திற்கு போய் சேர வேண்டியவை. ஆகவே இந்த மூட முல்லாக்களின் கூற்றை கேட்டு பாமர மக்கள் வழிகெட்டு போய்விட வேண்டாம். தயவு செய்து குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒரு மனிதனை பற்றி, ஒரு முஸ்லிமை பற்றி அவர்கள் யார் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் காஃபிர்கள் என்றால் யார் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வாசித்து அறிந்து கொள்ள முன் வாருங்கள். மூட முல்லாக்களின் தீர்ப்புதான் இறுதியான தீர்ப்பு என்று நம்பி உங்களின் மறுமை வாழ்வை நரகத்திற்குரியதாக ஆக்கி விடாதீர்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் இதற்கான தவ்ஃபீக்கை வழங்குவானாக ஓர் நல்ல முஸ்லிமாக இருக்கும் நிலையில் மரணத்தை தந்தருள்வானாக. ஆமீன்.
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None