திருக்குர்ஆன், நபிமொழி மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்களின் வழிகாட்டல்களின் ஒளியில் திருமண உறவுகள் தொடர்பான பிரச்சனைகளின் தீர்வுகள்

وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا ۚ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ ۖ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ ۖ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
இணைவைக்கின்ற பெண்கள் நம்பிக்கை கொள்ளாதவரை, நீங்கள் அவர்களை மணந்து கொள்ளாதீர்கள் இணைவைக்கின்ற ஒருபெண் உங்களுக்கு (மிக) விருப்பமானவளாயிருப்பினும், அவளைவிடவும் நிச்சயமாக நம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப் பெண் நிச்சயமாக சிறந்தவளாவாள்.  இணைவைக்கின்ற ஆண்கள் நம்பிக்கை கொள்ளாதவரை, நீங்கள் அவர்களுக்கு (முஸ்லிம் பெண்களை) மணமுடித்து கொடுக்காதீர்கள் இணைவைக்கின்ற ஒரு ஆண் உங்களுக்கு (மிகவும்) விருப்பமுள்ளவனாயிருப்பினும் (சுதந்திரமான) அவனைவிடவும் நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் அடிமை நிச்சயமாக சிறந்தவனாவான். இவர்கள் நெருப்பிற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது கட்டளையின் மூலம் சுவர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கின்றான். மக்கள் அறிவுரையினைப் பெறுவதற்கு தனது அடையாளங்களை அவர்களுக்கு தெளிவாக விளக்குகின்றான் (அல்பக்கரா – 222)
وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
        உங்களிடையே உள்ள விதவைகளையும், உங்கள் ஆண் அடிமைகள், பெண் அடிமைகள் ஆகியவர்களுள் நல்லவர்களையும் மணமுடித்து கொடுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் அருளால் அவர்களைச் செல்வர்களாக்கி வைப்பான்.  அல்லாஹ் வளமிக்கவனும் நன்கு அறிபனுமாவான்.  (அந்நூர் -33)

  கண்ணியத்திற்குரிய கூட்டத்தின் தலைவர் அவர்களே, மற்றும் மதிப்பிற்குரிய அவையோர்களே,  தாங்கள் செவியுற்றுள்ளீர்கள்!  எனது உரையின் தலைப்பு “திருக்குர்ஆன், நபிமொழி மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்களின் வழிகாட்டல்களின் ஒளியில் திருமண உறவுகள தொடர்பான பிரச்சனைகளின் தீர்வுகள்” என்பதாகும்.

    மதிப்பிற்குரிய சபையோர்களே! இஸ்லாமிய மார்க்கத்தில், மனிதன் ஆன்மீக, பௌதீக ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்திற்கென திருமணம் இன்றியமையாததாக அமைக்கப்பட்டுள்ளது.  எனவேதான், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

        நிக்காஹ் என் நடைமுறையில் ஒன்றாகும்.  நிக்காஹ்வின் தத்துவத்தை எடுத்துரைத்தவாறு  நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “இளைஞர்களின் பட்டாளமே! உங்களிள் எவர் திருமணம் செய்யும் ஆற்றல் உடையவராக இருக்கின்றாரோ அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது “பார்வையைத் தாழ்த்திக்” கொள்வதற்குரிய வழியாகும். மேலும் சரீரத்தின் தூய்மைக்கு வழியாகும்.  மேலும், உங்களில் ஆற்றல் கொண்டிராதவர் நோன்பு வையுங்கள் – அது அவருக்கான கேடையமாக அமையும்.

     துறவறம் அதாவது திருமணம் செய்து கொள்ளாமல், மணமுடிக்காமலேயே வாழ்வினைக் கழிப்பதை இஸ்லாம் விரும்புவதில்லை. எனவேதான் சில கிருத்துவர்களின் இந்த மார்க்கத்திலில்லாத புதுமையை எடுத்துரைத்தவாறு அல்லாஹ் கூறுகிறான்:

  “அவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொண்ட  துறவறம் நாம் அவர்களுக்கு விதித்ததன்று (அல்ஹதீது -23)

   மனிதன் தீய செயல்களின் விளைவாக ஆன்மீகம் மற்றும் நல்லொழுக்க ரீதியாக இருள் மற்றும் குழப்பத்திற்கு இறையாகிவிடுகின்றான். அல்லாஹ் தஆலாவின் புறமிருந்து அனுப்பப் படுபவர்கள் மனிதனிடம் உணமைத் தூதினை எட்டவைக்கின்றபோது, அத்தூதினை எட்ட வைக்கு முன்புவரை கண்ணியத்திற்குரியவர்களாகவும், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் விளங்கிய அவர்கள், அவர்களுக்கு அனைத்தையும்விட தீயவர்களாகிவிடுகின்றார்கள்.  அவரிடம் வெறுப்புணர்வைக்காட்டியும், அவருக்கெதிராக வெறுப்பினை பரப்பவும் செய்கின்றனர். அவர் அவர்களிடம் எட்டவைத்த தூது செய்தியானது, அவர்கள் நிலை நாட்டிய சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் மற்றும் மார்கத்தில்லா புதுமைகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் ஒரே காரணத்தினால்தான்.

   ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ் தஆலாவிடமிருந்து போதனைகளைப் பெற்று இணைவைத்தலுக்கு எதிராக போராட்டம் செய்தார்கள். ஆனால் பொய்க்கடவுளை நம்பி வந்தவர்களுக்கு இவ்விஷயம் ஜீரணமாகவில்லை. அவர்கள் அவர்களுக்கெதிராக கொடிய விரோதிகளாயினர்.  இதே போன்று இணைவைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களோடு திருமணம் கூடாது என்று கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டதும், இவ்விஷயமும் கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை.  ஆயினும் அன்னாரது வாதத்தை ஏற்று ஓர் இறைவனின் இருப்பை ஏற்றுக் கொண்ட  நல்லியல்பு கொண்ட மனிதர்கள் அன்னாரது எல்லா கூற்றுகளையும் ஏற்றுக் கொண்டனர். அன்னாரது ஒவ்வொரு கட்டளையையும் எவ்வித கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக் கொண்டு செயல் பட்டனர்.  ஆனால் அன்னாரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அன்னாரை எதிர்த்தனர்.

        எனவே, திருமண பந்தம் தொடர்பாக எதிர்வரும் கட்டுப்பாடுகள், குறிப்பாக, இப்போது இணைவைப்பவர்களுடன் நிக்காஹ் செய்யமுடியாது என்ற இந்த கட்டுப்பாட்டின் காரணமாக, சில பலமீனமான ஈமான் கொண்டவர்களுக்கு கடினமாக தோன்றியது. வரவிருந்த கடினங்களைப்பற்றி மிக நன்றாக அறிந்திருந்த, நன்கு அறிபவனாகிய அந்த அல்லாஹ் தஆலா அவற்றின் தீர்வு பற்றிய போதனைகளையும், தனது அன்பிற்குரிய நபி ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளினான்.

        ஆகவேதான், நான் எனது உரையின் ஆரம்பத்தில் ஓதி காட்டிய அதிகாரம் அல்பக்கராவின் 222 ம் வசனத்திலும் அந்நூரின் 33 வது வசனத்திலும், திருமண பந்தத்தில் வர இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வை கூறியவாறு, இனி மூமீன்கள், இணை வைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களோடு நிக்காஹ் செய்ய கூடாது.  மாறாக அதற்கு பகரமாக ஈமான் கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களை, அவர்கள் அடிமைகளாக இருந்தாலும் சரியே, அவர்களையே திருமணத்திற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுக்கு சுதந்திரமான பெண்கள், மற்றும் ஆண்கள் எவ்வளவுதான் விருப்பத்திற்குரியவராக இருந்தாலும் அதுவே அவர்களுக்கு சிறந்ததாகும்.

      இணைவைப்பவர்களுடன் திருமணம் கூடாது என்ற கட்டுப்பாட்டை எடுத்து கூறியவாறு அல்லாஹ் தஆலா தொடர்ந்து கூறுகின்றான்.  எந்த இணைவைபபவர்களுடன் உங்களை திருமணத்திற்காக தடை செய்யப்ப்டுகின்றதோ அவர்கள் உங்களை நரகத்தின்பால் அழைத்து செல்பவர்களாவர்.  மேலும் உண்மையில் அந்த நரகமானது இவ்வுலகில் உங்களால்  உருவாக்கப்பட்டதாக இருக்கும். அதாவது இணைவைப்பவர்களுடனான் திருமண பந்தங்களின் காரணமாக இஸ்லாம் எத்தகைய வாழ்வின் சூழலை ஏற்படுத்த விரும்பியதோ, எத்தகைய நல்லொழுக்கப் பண்புகளையும், ஆன்மீக ஆற்றல்களையும் வழங்க விரும்பியதோ (அது கிடைக்காது).  அது உங்களுக்கு ஒரு மார்க்கப் பற்றுமிகுந்த ஈமான் கொண்ட ஆண் மற்றும் பெண்ணாலேயே கிடைக்க முடியும். அதன் விளைவாகவே நீங்கள் சுவர்க்க வாழ்வின் வாரிசுகளாக முடியும்.

    அதிகாரம் அந்நூரின் 33 வசனத்தில் திருமணம் பந்தம் தொடர்பான முஸ்லிம் அல்லாதவர்களுடைய சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்தவாறு கூறுகின்றான்; விதவைப் பெண்களுடனும் திருமணம் செய்து கொள்ளுங்கள் இதுவும் சமூகத்தை தூய்மையின் பக்கம் இட்டு செல்கிறது.

    செய்யதுனா ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) கூறுகின்றார்கள்; விதவைப் பெண்ணின் திருமணம் தொடர்பான கட்டளை, கன்னிப் பெண்ணின் திருமணம் தொடர்பான கட்டளையை ஒத்ததே ஆகும்.  ஏனெனில் சில சமுதாயங்கள் விதவையின் திருமணத்தை கண்ணிய குறைவானதாக எண்ணுகின்றனர். மேலும் இத்தீய சம்பிரதாயமானது மிகவும் பரவியுள்ளது.  இதன் காரணமாகவே விதவையின் திருமணம் தொடர்பான கட்டளை இடப்பட்டது.  ஆனால் ஒவ்வொரு விதவைக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல.  திருமணமானது, திருமணம் செய்ய தகுதியுடையவர்களுக்கே, அவளுக்கு  திருமணம் செய்ய வேண்டியது அவசியமாக கருதப்படுபவளுக்கே செய்ய வேண்டும் (மல்ஃபூஸாத், பாகம் 5, பக்கம் 320)

  எனவே அல்லாஹ் தஆலா கூறுகின்றான்; உண்மை நோக்கம் மார்க்கமுடைமையே ஆகும்.  அது ஈமான் கொண்ட அடிமை அல்லது அடிமைப் பெண்ணை திருமணம் செய்வதனால் கிடைத்தாலும் சரியே. அல்லது ஒரு ஈமான் கொண்ட விதவைப் பெண்ணை திருமணம் செய்வதனால் கிடைத்தாலும் சரியே.  இதனால்தான், எம்பெருமானார் , ஈருலக அதிபதி ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) ஓரிடத்தில் கூறினார்கள்.

     ஹஸ்ரத் அபுஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்; ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) கூறினார்கள் ; “ எந்தப் பெண்ணுடனும் திருமணம் முடிக்க  நான்கு காரணங்களே இருக்க முடியும்.  ஒன்று அவளுடைய செல்வத்தின் காரணத்தினாலோ, அல்லது அவளுடைய குலத்தின் காரணத்தினாலோ, அல்லது அவளுடைய அழகின் காரணமாகவோ, அல்லது அவளுடைய மார்க்கமுடைமையின் காரணமாகவோத்தான் (இருக்கும்). ஆனால் நீ மார்க்கமுடைய பெண்ணுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அல்லாஹ் தஆலா உனக்கு நன்மை செய்யட்டும். உனக்கு மார்க்கமுடைய பெண் கிடைக்கட்டும்” (புகாரி)

  மதிப்பிற்குரிய அவையோர்களே,  திருமணம் நிச்சயிக்கும் போது மார்க்கதிற்கு பதிலாக, உலகின் அற்ப தகுதிகளையும், செல்வத்திற்கும் மேன்மை வழங்கும் நம்முடைய அஹ்மதி குடும்பத்தார்கள் இந்த வசனங்களின் மீது மிகுந்த கவனம் செலுத்தவும், அதன்படி அமல் செய்வது மிகவும் அவசியமானதாகும். மேலும், கண்ணியமிக்க ஸஹாபாக்கள் (ரலி) இறைக் கட்டளைகளின்படியும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிக்காட்டல்களின் ஒளியிலும் எவ்வாறு சுதந்திரமான இணைவக்கும் ஆண்களையும், பெண்களையும் விட்டு விட்டு அடிமை ஆண்களையும், பெண்களையும் ஏற்றுக் கொண்டார்கள் மேலும் எவ்வாறு இணைவக்கும் கன்னியர்களை விட்டு விட்டு விதவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

   இதன் விளைவாக ஆரம்ப காலகட்டத்தில் முஸ்லிமகளின் பந்தங்கள் தொடர்பான பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டனவோ மறுபுறம் ஆரம்ப காலத்தின் அந்த முஸ்லிமகள் சுவர்க்கத்தை ஒத்த வீடுகளின் அடித்தளமிட்டார்கள். மேலும் சுவர்க்கங்களின் அந்த நறுமணங்களை முழு உலகிலும் பரப்பிக் கொண்டே சென்றனர். மதிப்பிற்குரிய அவையோர்களே,  இக்காலத்தில் மார்க்கத்தை உயிர்ப்பிக்கவும் ஷரீஅத்தை நிலை நாட்டவும் அல்லாஹ் தஆலாவால் அனுப்பப்பட்ட ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களும் நமக்கு இந்த திருமணம் பந்தம் தொடர்பான வழிக்காட்டல்களை வழங்கியுள்ளார்கள். அந்த வழிக்காட்டல்களை இன்றைய யுகத்தில் கலீஃபாக்கள் மூலமாக அந்த வழிக்காட்டல்கள் தொடர்கின்றன. ஒருவேளை நாமும் நமது அஹ்மதிய்ய சமூகத்தை சுவர்க்கத்திற்கு ஒப்ப ஆக்க விரும்புகின்றோம் எனில் நாமும் தியாகங்களின் முன் உதாரணங்களை நிலை நாட்டி அன்னாரின் வழிகாட்டல்களின்படி செயல்படவேண்டியது நம்மீதான கடமையாகும்.

      மிக அழகிய மற்றுமொறு ஹதீஸ் உள்ளது.  அதனை ஹஸ்ரத் அபூ காத்தம் (ரலி) அறிவிக்கின்றார்கள்; நபி (ஸல்) கூறினார்கள்; ஒரு வேளை உங்களிடம் எவரும் உங்களுக்கு பிடித்தமான மார்க்கப் பற்றுக்கொண்ட,  நல்லொழுக்கங்களையுடைய வரனை கொண்டு வந்தால் அவருடன் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை அவ்வாறு செய்யவில்லையாயின் பூமியில் குழப்பங்களும், கலகங்களும் ஏற்பட்டுவிடும். கேள்வி கேட்பவர், கேட்க நினைத்தார் ஆனால், அன்னார் மூன்று முறை; ஒருவேலளை உங்களிடம் எவரும் நல்ல வரனை கொண்டு வந்து, அவருடைய மார்க்கப் பற்றும்,  நல்லொழுக்கமும் உங்களுக்கு பிடித்திருந்தால் அவருக்கு பெண்ணை கொடுங்கள். (திர்மிதி கிதாபுந்நிகாஹ்)

  ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த அருளுக்குரிய வழிகாட்டல்களை விளக்கியவாறு ஹஸ்ரத் அமீருல் மூமினீன் 5வது கலீஃபத்துல் மஸீஹ் (அய்ய) அவர்கள் டிசம்பர் 24 2004ம் ஆண்டு பிரான்ஸின் பேரீஸில் வழங்கிய தனது ஜுமுஆ உரையில், கூறுகின்றார்கள்; ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்; மார்க்கப் பற்றுள்ள பையனுடனே சம்பந்தம் வைத்துக் கொள்ளுங்கள் என்பதன் பக்கம் கவனமூட்டியுள்ளார்கள். செல்வத்தில் குறைபாடு இருப்பினும், அல்லாஹ்வின் வாக்குறுதி என்னவெனில், மார்க்கத்தில் நிலைத்திருப்பவர்களாயிருந்தால் அவர்களது செல்வத்தின் நிலையினை சீர் செய்துவிடுவான் என்பதாகும். ஆகவே, பெண் பிள்ளைகளுக்கான சம்பந்தம் வருகையில் அதனை அதிகம் தாமதிக்காமல், ஒரு வேளை மார்க்கப்பற்று பற்றிய விஷயத்தில் திருப்தி ஏற்படின் சம்பந்தம் செய்திட வேண்டும். இதே போன்று பையன்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் யாதெனில் சம்பந்தம் செய்கையில் பெண்ணின் வெளிபுற தோற்றத்தையோ அல்லது பௌதீக நிலையையோ பார்க்காதீர்கள். மாறாக அவளிடம் எவ்வளவு  நன்மைகள் இருக்கின்றன் என்று பாருங்கள்.

  கூறுகின்றார்கள்; இதன்புறம் கவனமூட்டி இனிவரும் சந்ததிகளின் மார்க்கப்பற்றுள்ளவர்களாக இருக்க, வெளிப்படையான வழிவகையின் பால் உண்மையில் கவனமூட்டியுள்ளார்கள். நமது இல்லற சூழலை நிம்மதியானதாக ஆக்குவதன்பால்  கவனமூட்டியுள்ளார்கள். ஏனெனில் தாய் மார்க்கப்பற்றுள்ளவளாக இருந்தால் பொதுவாக சந்ததிகளும் மார்க்கப்பற்றுள்ளவர்களாக இருப்பர். மேலும் தூய மார்க்கப்பற்றுள்ள சந்ததிகளைவிடவும் வேறு எந்த செல்வமும் மனிதனுக்கு நிம்மதியை வழங்கமுடியாது. ஒரு நம்பிக்கையாளருக்கு சமுதாயத்தில் கண்ணியத்திற்கு காரணமாக விளங்குவது நல்ல மார்க்கப்பற்றுள்ள சந்ததிகள் மட்டுமே. ஆக ஒவ்வொரு அஹ்மதியும் இதன் பால் கவனம் செலுத்த வேண்டும்.

        பெண் தூய, மேன்மையான, நல்லொழுக்கமிக்க, நல்ல கல்வியறிவு பெற்ற, ஜமாஅத்தின் பணிகளில் பங்கு பெறக்கூடியவளாக இருந்தாலும், அழகு குறைவு என்றோ, அல்லது உயரம் பார்ப்பவர்களுக்கு பொருத்தமானதாக இல்லை இதனால் மக்கள் வந்து பார்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர். என்று ரிப்போட் செய்வது பொதுவாகி கொண்டிருக்கிறது.

  கூறினார்கள்; நான் முன்னரும் இது பற்றி ஒருமுறை கவனமூட்டியிருக்கிறேன். உருவம் மற்றும் உயரம் போன்றவை புகைப்படத்திலும் பிறரிடத்தில் கேட்டறிவதனாலும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும், வீட்டிற்கு சென்று பெண்களைப் பார்ப்பதற்கும் அவர்களை தொந்தரவு செய்வதற்கும் என்ன அவசியம் இருக்கின்றது.  எனவே தான் அல்லாஹ் தஆலா, இவ்விஷயங்களைப் பார்க்காதீர்கள் மார்க்கப் பற்றினை பாருங்கள் என்று கட்டளையிட்டுள்ளான்.

       எனவே தான்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; உங்களுடைய சந்ததிகளை நல்லபடியாக பேண வேண்டுமெனில் மார்க்கப் பற்றினை பாருங்கள் ஒருவேளை பெண் பிள்ளைகளின் மார்க்கப் பற்றினைப் பார்ப்பீர்களெனில் நபி (ஸல்) அவர்களின் துஆக்களுக்கும் வாரிசாவீர்கள். மேலும் உங்களுடைய சந்ததிகளும் மார்க்கத்தோடு செல்பவர்களாக காண்பீர்கள்.  கூறினார்கள் சில மக்கள் பெண் பார்க்கும் தருணத்தில் பெண்ணை ஒரு ஆட்டினை ஆராய்ந்து பார்ப்பதைப் போன்று ஆராய்ந்து பார்க்கின்றனர்.  திருமணமானது ஒரு உடன்படிக்கையாகும். ஒரு சாராரின் தியாகத்தின் பெயராகும். மாறாக இரு சாராரின் ஒருவர் மற்றவருக்காக செய்யும் தியாகத்தின் பெயராகும்.  இது எப்படிபட்ட சொந்தம் என்றால் ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் அம்ர் அறிவிக்கின்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; உலகம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாகும். ஆயினும் நல்ல பெண்ணைக் காட்டிலும் மேன்மையான எந்த ஒரு வாழ்வின் அத்தியாவசியமும் இல்லை.

        ஹஸ்ரத் 5வது கலீஃபத்துல் மஸீஹ் கூறுகின்றார்கள்; எனவே ஒவ்வொரு விஷயத்தையும்  உலக அளவைகளால் அளக்கும் அப்படிபட்ட மக்களும் இந்த ஹதீஸை நினைவிற் கொள்ள வேண்டும். தூய பெண்ணைவிட இவ்வுலக வாழ்விற்கான அத்தியாவசிய பொருள் இல்லை.  நல்ல பெண் உங்கள் வீட்டையும் பேணி பாதுகாப்பாள். உங்களுடைய சந்ததிகளுக்கும் மேன்மையான தர்பிய்யத்தை வழங்குவாள். இதன் விளைவாக நீங்கள் மார்க்கம் மற்றும் பௌதீக நன்மைகளை பெற்றவர்களாவீர்கள்.

        ………………..பெற்றோர்களுடன் பையன்கள் வருகின்றனர்.  அவர்களுக்கு 35,36 வயது ஆகியிருந்தும் அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்காமல் தன்னுடனேயே வைத்திருக்கின்றனர்.  திருமணத்தின் பக்கம் கவனம் செலுத்துவதில்லை.  சில மக்கள், பெண் பிள்ளைகளின் வருமானத்தை பெறுவதற்காக இவ்வாறு செய்பவர்களாக உள்ளனர். பெண் பிள்ளைகளின் வருமானத்தை எதிர்ப்பார்ப்பது எதனால் என்றால் அவர்களுடைய  பையன்கள் உதவாக்கரைகளாக எந்த வேலையுமின்றி, படிப்பறிவற்றவர்களாக இருப்பதனால் தான் வீடானது பெண் பிள்ளைகளின் சம்பாத்தியத்தில் ஓடுகின்றது. மேலும் ஒருவேளை திருமண முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்றாலும் வீட்டோடு மாப்பிள்ளைக்கான முயற்சியே செய்கின்றார்கள். வீட்டோடு இருக்க வேண்டும் (என்று எண்ணுகிறார்கள்) இது பெரும்பாலும் நடக்காத ஒன்றாகும். இதனால் சண்டைகள் ஏற்படுகின்றன. எனவே திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி தனியாக செல்ல விரும்பினால், மேலும் பெற்றோர்கள் அவர்களுக்கு உதவி தேவைப்படும் இறுதிக் கட்ட்தில் இருந்து, வேறு பிள்ளைகள் இல்லை என்றால் அது வேறு விஷயம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அதுவும் ஆண்களின் பணியாகும். ஒரு வேளை ஒருவருடைய வீட்டில் ஆண் பிள்ளை இல்லையெனில் பெண் பிள்ளைக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் பொதுவாக பெண் மணம் முடித்து விட்டு மறுவீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டால் அவளை அவளுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்ள விடவேண்டும். மேலும், இதன் பக்கம் ஜமாஅத் அமைப்போடு சேர்ந்து நமது மூன்று கிளை அமைப்புகளான லஜ்னா, குத்தாம், அன்ஸார் ஆகியோரும் கவனம் செலுத்த வேண்டும். அவர்களும் தங்கள் சார்பாக தர்பிய்யத் ரீதியாக புரிய வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அன்ஸார் பெற்றோருக்கு புரிய வையுங்கள். லஜ்னா பெற்றோருக்கும், பெண் பிள்ளைகளுக்கும் புரிய வையுங்கள். குத்தாம் ஆண் பிள்ளைகளுக்கு புரிய வையுங்கள்.

        சகோதர சகோதரிகளே! குர்ஆன் மற்றும் ஹதீஸின் விளக்கமாகவும், விரிவுரையாகவுமே இருக்கும் காலத்தின் கலீஃபாவின் வழி காட்டல்களை மிகுந்த கவனத்துடன் கேட்டு அதன்படி செயல் படவேண்டியதற்கு மிகுந்த அவசியம் இருக்கின்றது. ஏனென்றால் ஜமாஅத்தே அஹ்மதிய்யாவின் திருமண பந்தம் தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த வழி காட்டல்களின்படி செயல் படுவதிலேயே இருக்கின்றது.  எந்த அஹ்மதி இந்த வழி காட்டல்களின்படி அமல் புரிகின்றாரோ, அல்லாஹ்வின் அருளால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

        ஹஸ்ரத் அமீருல் மூமினீன் (அய்ய) கூறுகின்றார்கள்; இக்கால கட்ட்த்தில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைகளின்படி மிகுந்த கவனத்துடன் செயல்பட முயற்சி செய்திருக்கிறார்கள்.  குறிப்பாக அஹ்மதி ஆண்கள் மற்றும் பெண்களது திருமணம் ஜமாஅத்துடனே இருப்பதனால் இனிவரும் சந்ததியினர் மார்க்கத்தில் நிலைத்திருக்கும்  சந்ததியினராக இருப்பதற்கான மிகுந்த கவனமும் முயற்சியும் மேற்கொண்டார்கள்.

    அன்னார், ஜமாஅத்தில் திருமணம் செய்து வைப்பதற்கு ஒவ்வொருவரையும் வலியுறுத்திக் கூறிவந்தார்கள். இது மற்றவர்களுடன் மணம் முடித்து கொடுப்பவர்களுக்கான வலியுறுத்தல் ஆகும்.

    ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்; இறைவனின் கருணையினாலும், அருளினாலும் அவனுடைய பேரருளினாலும் நமது ஜமாஅத்தின் எண்ணிக்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.  மேலும் தற்போது ஆயிரம் கணக்கானவர்கள் வரை ஜமாஅத்தில் இணைந்துள்ளனர். மேலும் இறையருளால் இதன் எண்ணிக்கை இலட்ச கணக்கானவர்கள் வரை எட்டும். அல்லாஹ்வின் அருளால் தற்போது கோடிக்கணக்கில் இந்த எண்ணிக்கை எட்டிவிட்ட்து.  எனவே, சிறந்த யோசனை என்னவெனில் இவர்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தவும், மேலும் உற்றார், உறவினர்களின் தீய தாக்கங்கள் மற்றும் தீய விளைவுகளிலிருந்து தப்பிக்கவும் ஆண்பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகளுடைய திருமணம் தொடர்பான சிறந்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தீய மௌலவிகளின் நிழலின் கீழ் அவர்களோடு சேர்ந்துக்கொண்டு, பகைமை மற்றும் குறுகிய மனதுடன், எதிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்ட மக்களோடு நமது ஜமாஅத்தின் புது பந்தமானது, அவர்கள் பாவமன்னிப்பு செய்துவிட்டு இந்த ஜமாஅத்தில் இணையாதவரை நடக்காத ஒன்றாகும். மேலும் இப்போது இந்த ஜமாஅத் எவ்விஷயத்திலும் அவர்களுடைய தேவையற்றதாகும். செல்வத்தில், பொருள்ளவில், ஞானத்தில், மேன்மையில், குலத்தில், விழிப்புணர்வில், இறையச்சத்தில், முன்னேறியவர்கள் இந்த ஜமாஅத்தில் அதிகமானோர் இருக்கின்றனர்.

  மேலும் அனைத்து இஸ்லாமிய சமூக மக்களும் இந்த ஜமாஅத்தில் காணப்படுகிறார்கள். ஆக, இவ்வாறான சூழ்நிலையில், நம்மை காஃபிர் என்றழைப்பவர்களுடன், தஜ்ஜால் என்று நமக்கு  பெயரிடுபவர்களுடன், தாமாக அவ்வாறு செய்யாமலிருந்தாலும் அவ்வாறு செய்பவர்களது புகழ் பாடுபவர்களாகவும், அவர்களை பின்பற்றுப்வர்களாகவும் இருப்பவர்களுடன் நமது ஜமாஅத் புதிய உறவினை ஏற்படுத்திக் கொள்ள எந்த அவசியமும் இல்லை. எவரொருவர் இப்படிப்பட்ட மக்களை விட்டு விட முடியவில்லையோ அவர்கள் நம் ஜமாஅத்தில் இணைவதற்கு தகுதியானவர்கள் அல்லர் என்பது நினைவிருக்கட்டும். எப்பொழுதுவரை தூய்மை மற்றும் உண்மைக்காக ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை விட்டு விட வில்லையோ, மேலும் ஒவ்வொரு தந்தையும் மகனை விட்டு பிரிய வில்லையோ அப்பொழுதுவரை அவர் நம்மை சார்ந்தவரில்லை.

  எனவே ஜமாஅத்தினர்கள் அனைவரும் கவனமாய்க் கேளுங்கள்; உண்மையாளராயின் இந்த நிபந்தனைகளின்படி நடப்பவராக இருப்பது அவசியமாகும்.  எனவே நான் இனி என் கையில் ஒரு ரகசிய குறிப்பேடு வைத்திருக்க ஏற்பாடு செய்துள்ளேன்.  அதில் ஜமாஅத்தின் ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகளின் பெயர்களை எழுதி வைத்து, ஒருவேளை எந்த பெண் பிள்ளையின் பெற்றோருக்கு தங்களுடைய சமூகத்தில் இப்படிப்பட்ட  நிபந்தனைகளையுடைய தங்களுடைய ஊரில் (ஜமாஅத்தில்) உள்ள பையன் கிடைக்கவில்லையென்றால், மேலும் நன்னடத்தையுடைய, அவர்களுக்கு திருப்தி தரும் அளவிற்கு பையன் கிடைக்கவில்லையென்றால், அதே போன்று அவ்வாறான் பெண் கிடைக்கவில்லையென்றால், அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் எங்களிடம் ஜமாஅத்தில் நாங்கள் வரன் தேட அனுமதி அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.  மேலும் பெற்றோர்கள் ஒவ்வொருவரும்,  நாங்கள் பெற்றோர்களின் உண்மையான அனுதாபிகளாகவும், குறை தீர்ப்பவர்களாகவும் தேடுவோம் என்ற திருப்தி கொள்ளவேண்டும். மேலும் இயன்ற அளவு தேடப் படும் ஆண் அல்லது பெண் சம்பந்தம் செய்பவர்களது சொந்த ஊரைச் சார்ந்தவராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும்.  ஒருவேளை அவ்வாறு இல்லையெனில் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் சமூகத்திலிருந்து பார்க்கப்படும். மேலும் அந்த பையன் அல்லது பெண் நன்னடத்தையுடையவர்களாகவும், தகுதியுடையவர்களாகவும், நல்லவர்களாக தென்படுபவர்களாக  இருக்க பெருமளவு கருத்தில் கொள்ளப்படும். இந்த குறிப்பேடு ரகசியமாக வைக்கப்படும். மேலும் சூழ்நிலைக்கேற்ப அந்தந்த நேரத்தில் அறிவிக்கப்படும். மேலும் எந்தவொரு பையன் அல்லது பெண் பற்றியும் அவர்களது தகுதி மற்றும் நன்னடத்தை நிரூபிக்கப்படாதவரை கருத்து வெளியிடப்படமாட்டாது. எனவே, நமது மார்க்கப் பற்றுள்ளவர்கள், தங்களது பிள்ளைகளின், பெயர், வயது அடங்கிய பட்டியலை குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட அனுப்பி வையுங்கள். (மஜ்மூஆ இஷ்திஹாராத்-பாகம் 3-பக்கம் 50-51)

    ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்களின் இந்த அறிவிப்பையே மேலும் விளக்கியவாறு ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் (அய்ய) கூறுகின்றார்கள்;

        “இது ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்களின் ஒரு அறிவிப்பாகும். இதன் அடிப்படையில் தான் தற்போது தலைமையகத்திலும் நிறுவப்பட்டுள்ளது. முழு உலகிலும் நிறுவப்பட்டுள்ளது. சிலர் தனிப்பட்ட முறையிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். அவர்கள் வசமும் இப்பணி ஜமாஅத் மூலமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் இறையருளால் சம்பந்தம் முடிவாகின்றது. ஆனால் பிறகும் கூட சில பிரச்சனைகள் உள்ளன. அல்லாஹ் அவற்றையும் விலக்கி வைப்பானாக. ஆனால், இதில் எங்களுக்கு அசலில் சம்பந்தம் முடிக்க அனுமதி தர வேண்டும் என்று கூறுபவர்களுக்கும் இது திருப்திகரமான பதிலாகும்.

        கூறுகிறார்கள்; ஒருவேளை இப்படிப்பட்ட மக்கள் தாங்களாக காஃபிர் என கூறாவிடிலும், அல்லது வாதிக்காவிடிலும், அவ்வாறு செய்பவர்களோடு ஒட்டி உறவாடுகிறார்கள். அவர்களது சொல்லை ஏற்றுக் கொள்கின்றனர்.  அச்சத்தினால் வேறொன்றும் சொல்ல இயல்வதில்லை. அவர்களுடைய பள்ளிவாயில்களுக்கு செல்கின்றனர். அவர்களது கூற்றை பேசுகிறார்கள் என்றால் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களே ஆவர். அவர்களுடனும் சம்பந்தம் செய்து கொள்ள கூடாது.

        பிறகு அன்னார் (அலை) கூறுகிறார்கள்; பையன்கள் மற்றும் பெண்களின் பெயர்களை அனுப்புங்கள் தற்போது நமது இந்த திருமண சம்பந்த அமைப்பு உள்ளது. நான் கூறியது போன்று ஜமாஅத்தில் எல்லா இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றி பொதுவாக இவர்கள் பெண்களுக்கு சம்பந்தம் செய்து வைக்க முடிவதில்லை என்று குறை கூறப்படுகிறது. முதலில் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளின் பெயர்களை அனுப்பிவைக்கின்றனர் ஆனால் பையன்களின் பெயர்களை அனுப்பிவைப்பதில்லை. பையன்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தால் தான் சம்பந்தம் செய்து வைப்பது இலகுவாகும். பொதுவாக பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருக்கிறது. சரிதான் ஆனால் எந்த அளவுக்கு வித்தியாசம் என்றால் 51-52 பெண்கள் இருக்கின்றனர் எனில் 47-48 பையன்கள் இருப்பர் ஆனால் ஜமாஅத்திடம் வருகின்ற அறிக்கையில் 7-8 பெண்களின் விபரம் இருந்தால், ஒரு பையனுடைய விபரம் இருக்கும். இவ்வாறானல் பிறகு சம்பந்தம் பொருத்திப் பார்ப்பது மிக கடினமாகிவிடுகின்றது. ஒருவேளை இருபுறமும் முழுவதுமான விபரங்கள் வந்தால் தான் சம்பந்தம் செய்து வைப்பதில் எளிதாக இருக்கும். பையன்களின் சம்பந்தத்தை சில சமயங்களில், மாறாக பெற்றோர்கள் தாங்களே முடித்து வைக்க முயற்சி செய்கின்றனர்.

        நெருங்கிய உறவினர்கள், அல்லது நெருக்கமானவர்களின் பையன்கள் தவிர, மற்ற பையன்களின் சம்பந்தத்திற்காகவும் பெயர் மற்றும் பட்டியல் மற்றும் விபரங்கள் ஜமாஅத் அமைப்பிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு சம்பந்தம் செய்து வைக்கமுடியும். அப்போதுதான் ஒருவருக்கொருவர் பார்த்து நிச்சயிக்க முடியும். எனவே பெற்றோர் மட்டுமின்றி பையன்களும் இதன் பக்கம் கவனம் செலுத்த வேண்டும். ஜமாஅத்திலிருந்தே பெண்களை நிச்சயம் செய்ய முயற்சிக்க வேண்டும். ஒருவேளை சொந்ததில் வரன் கிடைக்கவில்லையென்றால் ஜமாஅத் அமைப்பின் கீழ் நிச்சயிக்க முயற்சியுங்கள். மேலும், சிலர் குலம், கோத்திரம், அழகு போன்றவற்றில் ஆழ்ந்துவிடுகிறார்கள். சிறிது நான் முன்னரே கூறியிருந்தேன் பிறகு மறுத்து விடுகிறார்கள். பிறகு இந்த பிரச்சனைகளில் இவ்வாறு ஆழ்ந்து விட்டால் பிறகு பெண்களின் சம்பந்தத்தினை நிச்சயிப்பதில் கடினம் ஏற்பட்டு விடுகின்றது. எனவே இத்தகைய குலம், கோத்திரம் பார்ப்பதையும் விட்டு விட வேண்டும்.

இது பற்றி ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்;

        இத்தகைய பல்வேறு குலம், கோத்திரங்கள், எந்த ஒரு கண்ணியத்திற்கும் காரணமாகிவிடாது. அல்லாஹ் தஆலா வெறும் அடையாளத்திற்காக மட்டுமே இந்த குலம், கோத்திரங்களை உருவாக்கினான். மேலும் இன்றைய தினங்களில்  நான்கு தலைமுறைக்குப்பிறகு அடையாளம் தெரிந்து கொள்வது கடினம். குலம், கோத்திரச் சண்டைகளில் மூழ்குவது இறையச்சம் உடையவர்களுக்கு உகந்ததல்ல.   அல்லாஹ் தஆலா என்னைப் பொருத்தவரை குலம், கோத்திரத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை. உண்மையில் க்ண்ணியம் மற்றும் மேன்மைக்கான காரணம் இறையச்சம் மட்டுமே என்று தீர்மானித்த பிறகு இவ்விஷயங்களில் ஈடுபடுவது கூடாது.

        இப்போது இறுதியில் ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் (அய்ய) அவர்கள், பல்வேறு நிக்காஹ் அறிவிப்பின் போது அல்லாஹ் தஆலாவிடம் செய்த துஆக்களின் வார்த்தைகளை எடுத்து வைக்கிறேன். அவையோர்களிடம் விண்ணப்பம் யாதெனில் இந்த துஆக்களின் இறுதியில் கண்டிப்பாக ஆமீன் என்று கூறுங்கள். மேலும் இந்த துஆக்கள்  அல்லாஹ் தஆலாவிடம் ஏற்றுக்கொள்ள தகுந்தனவாக, நீங்கள் உங்கள் பொறுப்புகளை முழுவதுமான மன்றாடல்களுடன் செய்து வாருங்கள். அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் தனதருளால் அதற்கான நல்வாய்ப்பினை வழங்கிக்கொண்டே செல்வானாக. ஆமீன்.

ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் (அய்ய) அவர்களின் துஆக்களின் வார்த்தைகளாவன;

        “அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் இறையச்சத்தின்படி சென்றவாறு திருமண உறவுகளை நிலை நாட்டும் நல்வாய்ப்பினை தந்தருள்வானாக. பிள்ளைகளுக்கு சம்பந்தம் செய்து வைக்கும் நல்வாய்ப்பினை தந்தருள்வானாக. மேலும் திருக்குர்ஆனின் கட்டளையின்படி, அநாதைகள் மற்றும் விதவைகள் ஒவ்வொருவருக்கும் சம்பந்தம் செய்து வைக்கும் நல்வாய்ப்பினை நல்குவானாக. ஜமாஅத் அமைப்பு, மற்றும் மக்கள், மற்றும் சமுதாயம், மற்றும் எவர்களது பெற்றோர்கள் துயரத்தில் உள்ளனரோ அவர்கள் அனைவரின் பெண் பிள்ளைகள் ஆகிய அனைவர்களின் துயரங்களை நீக்குவானாக.  ஆமீன்.


சொற்பொழிவாளர்(உருது மொழியில்): மௌலானா இனாயதுல்லாஹ் சாஹிப்

தமிழில் :  மௌலவி சுல்தான் முஹிய்யுத்தீன் சாஹிப்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.