அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் வளர்ச்சி முன்னேற்றப்பாதைகளில்-2013 ஆகஸ்ட் வரையிலான கணக்கெடுப்பு

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தோற்றுனரான ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது  காதியானி (அலை) அவர்கள் (1835-1908) இந்தியாவின் கிழக்கு பஞ்சாபிலுள்ள ஒரு குக்கிராமமான காதியானில் இறைவனிடமிருந்து இல்ஹாமைப் பெற்று, ஹஸ்ரத் காத்தமுன்னபிய்யீன் முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த இறுதிகாலத்து மஹ்தி ம்ற்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் வருகைப் பற்றிய செய்தியை கூறியிருநதார்களோ மேலும் எவரால் இஸ்லாமிய மார்க்க வெற்றி மற்றனைத்து பொய்யான மார்க்கங்களின் மீது ஏற்படுவது நிச்சயிக்கப்பட்டுள்ளதோ அது தான் தான் என்று வாதம் செய்தார்கள்.  உண்மையான மார்க்கத்தின் வெற்றிக்கான இந்த மாபெரும் உலகளாவிய திட்டப் பணிகளை இறுதி நாள் வரை செயல்படுத்திக் கொண்டிருக்க அன்னார் (அலை) இறை ஆணைக்கிணங்க 1889-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் நாள் இந்திய நகரமான லூதியானாவில் 40 உண்மையாளர்களிடம் பைஅத் உடன்படிக்கையைப் பெற்று ஒரு ஜமாஅத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள் பிறகு அதன் பெயரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பெயரான அஹ்மது என்பதற்கேற்ப அஹ்மதிய்யா ஜமாஅத் என்று வைத்தார்கள்.

               கி.பி.1908 ம் ஆண்டில் அன்னார் (அலை) அவர்களின் மறைவிற்குப் பிறகு அஹ்மதிய்ய ஜமாஅத்தில் கிலாபத் அமைப்பு நிலை நாட்டப்பட்டது. தற்போது ஜமாஅத்தின் ஐந்தாவது கலீஃபாவாக ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்ய) அவர்கள் லண்டனில் உள்ளார்கள்.  அஹ்மதிய்ய ஜமாஅத்தானது இந்த கிலாபத் அமைப்பின் அருளினால் தனது ஆற்றல்கள் அனத்தையும் ஒன்று திரட்டி உலகின் எல்லைகள் வரை இறைவன் புறம் அழைத்தல் மற்றும் திருக்குர்ஆனை பரப்பும் மாபெரும் பணிகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது மேலும் ஒத்துழைப்பற்ற நிலைகளுக்கும், எல்லாவித எதிர்ப்புகளுக்குமிடையே அல்லாஹ்வின் உதவினாலேயே அஹ்மதிய்யா ஜமாஅத்தானது உலகின் எல்லா கண்டங்களிலும் வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் பெற்று வருகிறது.  மேலும் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த. சமுதாயங்களைச் சார்ந்த, பல்வேறு நிறங்களைக் கொண்ட, பல்வேறு சந்ததியனர்கள், மார்க்கத் தொடர்புடைய மக்கள் இஸ்லாத்தின் கொடியின் கீழ் ஒன்று சேர்கின்றனர்.  மேலும் இவ்வுலகம் ஒரே சமுதாயமாக மாறி வருகிறது.


            அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் இத்தகைய முன்னேற்றங்களைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம் கிழே கொடுக்கப் படுகின்றது. இந்த கண்ணோட்டம் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டு வரையிலானதாகும்.



      1.  இப்போது வரை அஹ்மதிய்யா ஜமாஅத்தானது அல்லாஹ்வின் அருளால் 204 நாடுகளில் நிலைப்பெற்றுள்ளது.  இவ்வாண்டு 2 புதிய நாடுகளில் அஹ்மதிய்யத் பரவியுள்ளது. 1.  கோஸ்ட்டாரிக்கா , 2. மோன்டேங்குரோ.

        2.  இவ்வாண்டு உலகில் 565 புதிய ஜமாஅத்துகள் நிலை பெற்றுள்ளன.  இந்த ஜமாஅத்துகளைத் தவிர 1052 புதிய இடங்களில் அஹ்மதிய்யத்தின் விதை விதைக்கப்பட்டுள்ளது.

     3.  நடப்பாண்டில் இறையருளால் 394 மஸ்ஜிதுகள் பெருகியுள்ளன அவற்றுள் 136 மஸ்ஜிதுகள் புதிதாக கட்டப்பட்டவையாகும்.  258 மஸ்ஜிதுகள் ஏற்கனவே கட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ளன.

          4.  இவ்வாண்டு 211 புதிய தஅவத்தே இலல்லாஹ்வின் தலைமையகங்கள் நிறுவப்பட்டுள்ளன.  தற்சமயம் வரை 108 நாடுகளில் உள்ள ஒட்டு மொத்த தஅவத்தே இலல்லாஹ் தலைமையகங்களின் எண்ணிக்கை 2563 ஆக உள்ளது.

            5.  அச்சகங்கள் துறையின் சார்பாக லண்டனிலுள்ள "ரகீம் அச்சகத்திற்கு" 4,14,000  நூல்கள் மற்றும் இதழ்கள் அச்சடிக்கும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.  மேலும் "அல்ஃபஸ்ல் இன்டர் நேஷ்னல்" இதழும் வெளியாகின்றது.  காதியானிலுள்ள "ஃபஸ்லே உமர்" அச்சகத்திலும் பணிகள் மேம்பட்டுள்ளன.  அதுமட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளிலும் கூட வெளியீட்டுப்பணிகளில் மேம்பட்டு விளங்கும் அச்சகங்கள் உள்ளன.  அவற்றிலிருந்தும் சுமார் 8,65,000 வெளியீடுகள் அச்சாகின்றன.

        6.  உலகின் 71 மொழிகளில் திருக்குர்ஆனின் முழு மொழியாக்கங்கள் அஹ்மதிய்ய ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 15 மொழிகளில் மொழியாக்கப் பணி தீவிரமடைந்துள்ளது.  இன்ஷா அல்லாஹ் விரைவில் அவை வெளிவந்துவிடும்.

           7.  நடப்பாண்டில் உலகின் பல்வேறு நாடுகளில் 625 பல்வேறு நூல்களும், 57,70,000 இதழ்களும், பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

     8.  இவ்வாண்டு திருக்குர்ஆனின் மொழியாக்கங்கள் மற்றும் இதர நூல்களுக்கான 2320 கண்காட்சிகளுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் சுமார் 4,74,000 மக்களிடையே அஹ்மதிய்யத்தின் தூதுச்செய்தி எட்டவைக்கப்பட்டுள்ளது.

        9.  அஹ்மதிய்யா ஜமாஅத்தின் அமைதியின் தூதினை முழு உலகிலும் எட்டவைக்க லீஃப்லெட்ஸ் (இருபக்கங்கள்) மற்றும் ஃபிளையர்ஸ் (சிறிய பிரசுரங்கள்)  விநியோகிக்கும் திட்டத்திலும் அல்லாஹ் வழக்கத்திற்கு மாறான அருளை வழங்கியுள்ளான்.  மேலும் தூதுச் செய்தியை எட்டவைப்பதில் கீழ் வரும் நாடுகள் சிறந்து விளங்குகின்றன.

         அமெரிக்காவில் இவ்வாண்டு 2,70,000 திற்கும் அதிகமான ஃபிளையர்ஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  கனடாவாசிகளுக்கு இவ்வாண்டு 5 இலட்சத்திற்கும் அதிகமான ஃபிளையர்ஸ் விநியோகிக்கப்பட்டுள்ளன. 85 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் அஹ்மதிய்யத்தின் தூதுச் செய்தி எட்டவைக்கப்பட்டுள்ளது.  ஜெர்மனியில் 4 மில்லியனுக்கும் அதிகமான லீஃப்லெட்ஸ்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.  அங்கு பல்வேறு காரணிகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே தூதுச் செய்தி எட்டவைக்கப்பட்டுள்ளது.  ஸ்வீடனில் 20,00,000  ஃபிளையர்ஸ் விநியோகிக்கப்பட்டுள்ளன. 2 மில்லியன் 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்களிடையே தூதுச் செய்தி எட்டவைக்கப்பட்டுள்ளது. டிரினிடாலில் 4 இலட்சத்து 35 ஆயிரம்,  நார்வேயில் 2 இலட்சத்திற்கு அதிகமாகவும், பெல்ஜியத்தில் 4 இலட்சத்திற்கும் அதிகமாகவும், ஹாலந்தில் 6 இலட்சம் மற்றும் ஸ்பெய்ன் மற்றும் கயானாவில் 30,000 மும் அதே போனறு உலகின் எல்லா நாடுகளிலும்  விநியோகிக்கப்படுகின்றன.  மேலும் கோடிக்கணக்கான மக்களிடையே இறைவனருளால் அஹ்மதிய்ய ஜமாஅத்தின் தூதுச்செய்தி எட்டவைக்கப்படுகிறது.  இங்கிலாந்தில் ஃபிளயர்ஸ் விநியோகிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளிலும், பேருந்துகளின் வாயிலாகவும் அஹ்மதிய்யத்தின் தூதுச் செய்தி எட்டவைக்கப்பட்டுள்ளது.

               10.  தற்சமயம் ஆப்பிரிக்காவின் 12 நாடுகளில் அஹ்மதிய்ய ஜமாஅத் சார்பாக நிறுவப்பட்டுள்ள 41 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களில் 44 மருத்துவர்கள் மனித நேயத் தொண்டில் மும்முரமாக உள்ளனர். அதுமட்டுமின்றி 12 நாடுகளில் 681 மேநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் அறிவொளியைப் புகட்டிக் கொண்டிருக்கிறது.

         11.  அஹ்மதிய்ய ரேடியோ மூலமாகவும் பல பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  தென் ஆப்பிரிக்காவின் 3 நாடுகளில் 11 அஹ்மதிய்ய வானொலி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.  மக்கள் இந்த வானொலியை கேட்டு ஜமாஅத்தைப் பற்றி தெரிந்து கொள்கின்றனர்.

        12.  அஹ்மதிய்ய ஜமாஅத் சார்பாக வலைதளத்தில் அமெரிக்க அஹ்மதிய்ய ஜமாஅத்தின் மேற்பார்வையில் www.alislam.org  என்ற இணையம் செயல்படுகின்றது.  கனடா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் அவர்களின் குழு உள்ளது.  ஜுமுஆ பேருரைகள் 18 மொழிகளில் ஒலி மற்றும் ஒளியின் வடிவில் "யூ டியூப்"ல் (you tube) ஏற்றப்படுகிறது.  ஐ பேடு மட்டுமின்றி ஐஃபோன் மற்றும் பிளாக் பெர்ரி போன்ற தொலைபேசிகள் வாயிலாகவும் குத்பாக்களை (பேருரைகளை) காணமுடியும்.  இந்த இணைய தளத்தில் 500 உருது நூல்களும், 180 ஆங்கில நூல்களும் கிடைக்கும்.  43 மொழிகளில் திருக்குர் ஆனின் மொழியாக்கம் ஆன்லைனில் கிடைக்கிறது.

       13.  " அஹ்மதிய்யா இன்டெர்நேஷனல் அசோஸியேஷன் ஆஃப் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ்" அல்லாஹ்வின் அருளால் பல பணிகளை மேற்கொள்கின்றனர். மேலும் மாதிரி கிராமங்கள் உருவாக்குதல், மின்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல், மிஷன் ஹவுஸ்களைக் கட்டுதல் போன்றவற்றின் பணிகளை மேற்கொள்கின்றனர். மாதிரி கிராமங்களுள் ஒன்று ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. மேலும் மற்றொன்றும் விரைவில் ஆரம்பமாகிவிடும்.

        14.  "மனிதம் முதலில்" "Humanity First" எனும் அமைப்பு கடந்த 17 ஆண்டுகளாக மனித நேயத் தொண்டில் மும்முரமாக உள்ளனர்.  வீடில்லாத மற்றும் தேவையுடையவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால் உதவிகள் தொடர்கின்றன.  மேலும் ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான குழந்தைகளும், நோயாளிகளும் பயன்பெறுகின்றனர்.

          15.  அல்லாஹ்தாலா அஹ்மதிய்ய ஜமாஅத்திற்கு வழங்கியிருக்கும் ஒரு மாபெரும் மேன்மை யாதெனில், 1994 ம் ஆண்டு ஜனவரியிலிருந்து தொடர்ச்சியாக செயற்கைக்கோள் வாயிலாக முழு உலகிலும் மார்க்க  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.  அது டிஷ் ஆண்டினா வாயிலாக தொலைக்காட்சியில் பார்க்கவும், கேட்கவும் முடியும்.  M.T.A. வில் 24 மணி நேரமும் ஒரு டஜனுக்கும் அதிகமான மொழிகளில் ஐந்து கண்டங்களிலும் டிஜிட்டல் சேவைகள் ஒளிப்பரப்பபடுகின்றது.  மேலும் லண்டனில் உள்ள பைத்துல் ஃபுதூஹ் பள்ளிவாயிலிருந்தும் நேரடி நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.  M.T.A. வின் சர்வதேச மேலாண்மை வாரியத்தின் 14 பிரிவுகளில் அஹ்மதி ஆண்கள் மற்றும் பெண்கள் சேவை மனப்பான்மையுடன் பணி புரிகின்றனர்.  இணையதளத்தில் M.T.A.பார்ப்பவர்களது எண்ணிக்கை எந்த அளவு அதிகமாகிவிடுகிறதென்றால் சில நேரங்களில் அதிகப்படியான பார்வையாளர்களின் காரணமாக "ஸ்ட்ரீமில்" தாமதம் ஏற்பட்டு விடுகிறது.  ஆக தற்போது ஒரு "குளோபல் IPT டிஸ்ட்ரிபியூட்டரின் வாயிலாக M.T.A ஒளிபரப்பாகப்படும்.  அதனால் எந்த தடையும் ஏற்படாது.  இவ்வாறு மொபைல் போன்களிலும் எம்.டி.ஏ இண்டெர் நெட் விரிவடைந்துவிட்டது.

         16.  ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் 1987ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அஹ்மதிய்ய ஜமாஅத்தில் இனிவரும் இரு வருடங்களில் பிறக்கும் குழந்தைகளை அவர்கள் பிறப்பதற்கு முன்னதாக பெற்றோர்கள் மார்க்கத் தொண்டாட்டுவதற்காக அர்ப்பணம் (வக்ஃப்) செய்ய வேண்டும் என்ற திட்டத்தை தீட்டினார்கள். இத்திட்டத்திற்கு வக்ஃபே நவ் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  தற்போது இத்திட்டமானது நிரந்தரத் திட்டமாக ஆகிவிட்டது.  அல்லாஹ்வின் அருளால் இவ்வாண்டு உலகின் வக்ஃபே நவ்களின் எண்ணிக்கையில் 2801 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது வக்ஃபே நவ்களின் எண்ணிக்கை 50,693 ஆகிவிட்டது.  வக்ஃபே நவ் சிறார்களின் எண்ணிக்கை 31,357 ஆகவும் சிறுமிகளின் எண்ணிக்கை 19,336 ஆகவும் உள்ளது.  தற்சமயம் வரை வக்ஃபே நவ் சிறுவர்களுள் 93 பேர் முரப்பியாக ஆகிவிட்டனர்.  70 முஅல்லிம்கள் ஆயத்தமாகி விட்டனர்.  29 ஆசிரியர்கள் ஆயத்தமாகிவிட்டனர்.  ஒரு டிராஃப்ஸ் மேன், 16 நர்ஸ்கள், 66 மற்ற பணியாளர்கள் உள்ளனர்.  2 பொறியாளர்கள், 1 ஃபார்மலிஸ்ட், 2 மருத்துவர்கள் உள்ளனர்.  ஜாமிஆ அஹ்மதிய்யாவில் 1,342 வக்ஃபே நவ்கள் உள்ளனர்.  மேலும் 101 முஅல்லிம்கள் உள்ளனர்.  இருவர் பி.எச்.டி படிக்கின்றனர்.  126 பேர் எம்.பி.பி.எஸ். பயில்கின்றனர்.  30 பேர் டென்டல் சர்ஜரி பயில்கின்றனர்.  67 பேர் ஃபார்மஸிஸ்டாக ஆகின்றனர்.  3 கால்நடை மருத்துவர்கள் உள்ளனர்.  24 ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர்.  5 ஃபிஸியோ தெரப்பிஸ்ட்கள் உள்ளனர்.  70 பேரா மெடிக்ஸ் உள்ளனர்.  20  ஜி.ஸி.எஸ். ஆனர்ஸ், 227 பி.காம் மற்றும் இவ்வாறு பல்வேறு துறைகளில் வக்ஃபே நவ்கள் உள்ளனர்.

         17.  இவ்வாண்டு 116 நாடுகளில் இருந்து 309 சமுதாயங்களை சார்ந்த 5 இலட்சத்து 40 ஆயிரம் பேர்களுக்கு அஹ்மதிய்ய ஜமாஅத்தில் இணையும் நற்பேறு கிடைத்துள்ளது.

        18.  இவ்வாண்டு யு.கே. (இங்கிலாந்து) ஜமா அத்தின் ஆண்டு மாநாடு அஹ்மதிய்ய ஜமாஅத்தால் வாங்கப்பட்ட 208 ஏக்கர் நிலமான "ஹதீகத்துல் மஹ்தி"-யில் நடைப்பெற்றது.  அதில் உலகின் 89 நாடுகளிலிருந்து 31,205 அஹ்மதி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.  இந்த எண்ணிக்கையானது சென்ற ஆண்டைவிட 4,000 அதிகமாகும்.

               இங்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகின்றது,  அதாவது அஹ்மதிய்ய ஜமாஅத்தானது உலகத்தைப் பொறுத்தவரை ஒரு சிறிய ஜமாஅத் ஆகும்.  மேலும் பணத்தின் அடிப்படையிலும் அதனிடம் எண்ணெய் உற்பத்தி ஆற்றலும் இல்லை.  வர்த்தக ஆற்றலும் இல்லை. பிறகு அதற்கு இம்மாபெரும் வெற்றியும் , மிகப்பெரும் வளமும் எவ்வாறு கிடைக்கின்றது.  இத்தனைக்கும் மற்ற மார்க்க ஜமாஅத்துகள் தொடர்ந்து பிரிவுகள் மற்றும் விரிசல்களுக்கு இலக்காகின்றனர்.  மேலும் தினம் தினம் உடைந்தும், சிதறிக் கொண்டும் செல்கின்றனர்.

   ஆக, அஹ்மதிய்ய ஜமாஅத்தின் வளர்ச்சியின் பெரும் இரகசியம் என்னவெனில், அஹ்மதிய்ய ஜமாஅத்திற்கு பின்னே அனைத்து ஆற்றல்களுக்கும் அதிபதியான எல்லா செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட இறைவன் இருக்கின்றான்.  மேலும், அந்த வல்லமை மிக்க ஆற்றல் படைத்த இறைவனின் மேற்பார்வையில் வளர்கின்ற விதையே இந்த அஹ்மதிய்ய ஜமாஅத் ஆகும்.

      மற்றுமொரு முக்கிய காரணம் யாதெனில், அந்த ஏக இறைவன் இந்த ஜமாஅத்திற்கும் தனித்துவத்தை வழங்கியுள்ளான்.  மேலும் இந்த ஜமாஅத், அவனது அருளால் எல்லாவிதமான வெறுப்புகள், வேற்றுமை, பிரிவினை மற்றும் குளறுபடிகளை விட்டும் தூய்மையானதாகும். மேலும், இறைவன் ஜமாஅத்தினர்களின் உள்ளத்தை அன்பு மற்றும் நேசத்தின் பந்தத்தால் இணைத்துவிட்டான்.  மேலும் இவர்கள் சகோதரர்களாகிவிட்டனர்.  மேலும் இந்த ஜமாஅத்தில் ஒரு உலகளாவிய சகோதரத்துவமானது இறைவனருளால் உருவாகிவிட்டது.

          மூன்றாவது முக்கிய காரணம், அஹ்மதிய்ய ஜமாஅத்திற்கு கிலாபத்தின் வடிவில் ஒரு உலகளாவிய தலைமை கிடைத்துள்ளது.  அஹ்மதிய்ய ஜமாஅத்தின் தலைவர் ஒவ்வொரு அஹ்மதியோடும் எல்லையற்ற நேசமும் தாய்,தந்தையை விட மேலான அனுதாப உணர்வையும் கொண்டுள்ளார்கள்.  மேலும் ஒவ்வொரு அஹ்மதியும் தனது இமாமோடு அளவற்ற அன்பும், நன்றியுணர்வின் வலுவான தொடர்பையும் கொண்டுள்ளனர்.  மேலும் அவர்களது ஒவ்வொரு கட்டளைகளின் படியும் செயல்படுவதை தங்களது வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.  எனவே, இமாம் மற்றும் அஹ்மதிகளின் அன்பு மற்றும் நேசத்தின் பந்தத்தைப் போன்று உதாரணம் உலகின் வேறெங்கும் கிடைக்காது.  மற்ற உலகத்தினர் இன்று இந்த பரிசிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.  இந்த காரணங்களின் அடிப்படையில்தான் இறைவனருளால் அஹ்மதிய்ய ஜமாஅத்திற்கு வழக்கத்திற்கு மாறான முன்னேற்றங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
"இது இறைவனின் அருளாலும், அவன் தான் நாடியவருக்கு அதனை வழங்குகிறான்."

 அஹ்மதிய்ய ஜமாஅத்தின் செயல்பாடுகள் பற்றிய ஒரு பார்வை:-

  # அஹ்மதிய்ய ஜமாஅத் இறைவனின் அருளால் 204 நாடுகளில்  நிலைப்பெற்றுள்ளது.

   #     இவ்வாண்டு 116 நாடுகளின் 309 சமுதாயங்களைச் சார்ந்த 5 இலட்சத்து 40 ஆயிரத்து 782 நபர்கள் அஹ்மதிய்ய ஜமாஅத்தில்                                     இணைந்துள்ளனர்.

  #   உலகின் 71 மொழிகளில் திருக்குர் ஆனின் முழுமையான மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
# இவ்வாண்டு பள்ளிகளின் எண்ணிக்கையில் 394 பள்ளிகள் அதிகரித்துள்ளன.  136 பள்ளிவாயில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. 258                        பள்ளிகள் கட்டப்பட்ட  நிலையில் கிடைத்துள்ளன.

  # இங்கிலாந்து ஆண்டு மாநாட்டில் உலகின் 89 நாடுகளிலிருந்து 31,205 அஹ்மதி ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: மௌலவி சுல்தான் முஹிய்யுத்தீன் சாஹிப்
 
*******************





                                                                      

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.