இறுதி நபித்துவம்

இறுதி நபித்துவம்

லா' மற்றும் 'பஃதி' - தவறான புரிதல்களும் விளக்கங்களும்

மேலும் படிக்க
ஈஸா அலை அவர்கள் மரணம்

ஈஸா அலை அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள்

ஈசா (அலை) அவர்கள், தமக்கு முன் சென்ற அனைத்துத் தூதர்களைப் போல இறந்துவிட்டார்

மேலும் படிக்க
இமாம் மஹ்தி அலை

இமாம் மஹ்தி அலை தோன்றிவிட்டார்கள்

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் உண்மையை திருக்குர்ஆனை கொண்டு நிரூபித்தல்-பகுதி 1

மேலும் படிக்க

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் என்பது காதியானைச் சேர்ந்த ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலைஹிஸ்ஸலாம்) (1835–1908) அவர்களை வாக்களிக்கப்பட்ட மசீஹாக நம்புகின்ற முஸ்லிம்களின் ஜமாஅத் ஆகும். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் 1889ஆம் ஆண்டு இஸ்லாத்திற்குள் ஒரு சீர்திருத்த இயக்கமாக அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை நிறுவினார்கள். இது அமைதி, அன்பு, நீதி மற்றும் உயிரின் புனிதத்தன்மை ஆகிய இஸ்லாத்தின் அடிப்படையான போதனைகளை வலியுறுத்துகிறது. இன்று, அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத், இறைவனால் நியமிக்கப்பட்ட ஒரே தலைவரான ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் (அல்லாஹ் அவருக்கு உதவியாக இருப்பானாக) (பி. 1950) அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய ஜமாஅத்தாக விளங்குகிறது. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது; அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கைத் தாண்டியுள்ளது.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் அலை) அவர்கள் ஈஸா மஸீஹ் அவர்களின் உருவகமான இரண்டாம் வருகையாகவும், இமாம் மஹ்தியாகவும் தாம் வந்திருப்பதாகக் கூறினார்கள். இவரது வருகையை பற்றி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முன்னறிவித்தார்கள். மதப் போர்களுக்கு முடிவுகட்டவும், இரத்தம் சிந்தப்படுவதைக் கண்டிக்கவும், ஒழுக்கம், நீதி மற்றும் அமைதியை மீண்டும் நிலைநாட்டவும் இறைவன் மிர்ஸா குலாம் அஹ்மத் அவர்களை அனுப்பினான் என்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் நம்புகிறது. இஸ்லாத்தின் உண்மையான போதனைகளை வலிமையாக எடுத்துரைத்ததன் மூலம், மூடத்தனமான நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளிலிருந்து முஸ்லிம்களை அன்னார் சீர்திருத்தினார்கள். மேலும், ஸரதுஷ்ட்ரர், ஆபிரகாம், மோசஸ், ஈஸா, கிருஷ்ணர், புத்தர், கன்பூசியஸ், லாவோ த்ஸு மற்றும் குரு நானக் உள்ளிட்ட மாபெரும் சமய நிறுவனர்கள் மற்றும் மகான்களின் உயர்ந்த போதனைகளை அன்னார் அங்கீகரித்தார்கள். மேலும், அவர்களின் ஆரம்பகால போதனைகள் எவ்வாறு உண்மையான இஸ்லாத்துடன் ஒன்றிணைகின்றன என்பதையும் அன்னார் விளக்கினார்கள்.

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத், பயங்கரவாதத்தை திட்டவட்டமாக நிராகரிக்கும் முன்னணி இஸ்லாமிய அமைப்பாகும். நூற்றாண்டுக்கு முன்பே, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள், இஸ்லாத்தில் “வாளால் செய்யப்படும் ஜிஹாத்” என்பதற்கு எந்த இடமும் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார்கள். அதற்குப் பதிலாக, முஸ்லிம்கள் திருக்குர்ஆனையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியையும் பின்பற்றி, இரத்தம் சிந்தாத அறிவார்ந்த “எழுத்தின் மூலம் ஜிஹாத்” செய்வதன் மூலம் இஸ்லாத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அன்னார் போதித்தார்கள். 

இதன் அடிப்படையில், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியதோடு, பல்லாயிரக்கணக்கான கடிதங்களையும் எழுதினார்கள்; நூற்றுக்கணக்கான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்; மேலும் ஏராளமான பொது விவாதங்களில் பங்கேற்றார்கள். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத், கல்வியின் மூலம் முஸ்லிம்களை அமைதியான முறையில் சீர்திருத்துவதையும், உலகெங்கிலும் இஸ்லாத்தைப் புத்துயிரூட்டுவதையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள், கிலாஃபத் (நபித்துவத்திற்குப் பிந்தைய ஆன்மிக வாரிசுத் தலைமை அமைப்பு) மூலம் இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக இறைவன் அளித்துள்ள வாக்குறுதியை முஸ்லிம்களுக்கு நினைவூட்டினார்கள். மனிதகுலத்தை அமைதியான முறையில் ஒன்றிணைக்கக்கூடியது இஸ்லாமிய கிலாஃபத் மட்டுமே என்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் நம்புகிறது. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஐந்து கலீஃபாக்கள் அவர்களின் வாரிசுகளாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

தற்போதைய கலீஃபாவான ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வருகிறார்கள்; மேலும் ஜமாஅத்தின் ஆன்மிக மற்றும் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றுகிறார்கள். கிலாஃபத்தின் தலைமையின் கீழ், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் உலகளவில் சுமார் 16,000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களையும், 600 பாடசாலைகளையும், 30 மருத்துவமனைகளையும் கட்டியுள்ளது. மேலும் திருக்குர்ஆனை 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் 24 மணி நேர செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனலான (MTA), இணையதளம் (www.alislam.org) மற்றும் அச்சு வெளியீடுகள் (இஸ்லாம் இன்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ்) ஆகியவற்றின் மூலம் இஸ்லாத்தின் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை குறித்த உண்மையான போதனைகளைப் பரப்புகிறது. ஹியூமனிட்டி ஃபர்ஸ்ட் என்ற இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தின் மூலம், உலகெங்கிலும் பேரிடர் நிவாரணப் பணிகளில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது.

மத நிறுவனங்களும் அரசாங்கமும் தனித்தனியாகச் செயல்பட வேண்டும் என்பதை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஆதரிக்கிறது.. பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளில் கடுமையான மத அடிப்படையிலான துன்புறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் அனைத்து மதச் சிறுபான்மையினருக்கும் மற்றும் பிற வகையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கும் உலகளாவிய மனித உரிமைகளை ஆதரிப்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதேபோன்று, பெண்களின் சமத்துவம், கல்வி மற்றும் அதிகாரமளித்தல் திட்டங்களிலும் அது பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. அதன் உறுப்பினர்கள் உலகில் சட்டத்தை மிகவும் மதித்து நடக்கும், கல்வியறிவு பெற்ற மற்றும் சமூகப் பொறுப்புடன் ஈடுபடும் முஸ்லிம்களில் அடங்குகின்றனர்.

மேலும் காண்க: அஹ்மதிய்யா முஸ்லிம் சமூகம் குறித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

Blogger இயக்குவது.