ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் தன்னை பின்பற்றியவர்கள் செய்த ஷிர்க்கைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் முக்கியமான வசனம் பின்வருமாறு:
وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِنْ دُونِ اللَّهِ ۖ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ ۚ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ ۚ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ ۚ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ ١١٧ مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ ۖ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنْتَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ ١١٨
“மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம், அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லாஹ் கேட்ட போது,43 அவர் "நீ தூயவன் எனக்குத் தகாததை நான் கூறியதில்லை. நான் அவ்வாறு கூறியிருப்பின், நிச்சயமாக நீ அதனைத் தெரிந்திருப்பாய். என் உள்ளத்திலுள்ளதை நீ அறிவாய்; உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியேன். நிச்சயமாக நீ மறைவானவற்றை (யெல்லாம்) நான்கு அறிந்தவனாவாய்" என்று கூறினார்.
நீ எனக்குக் கட்டளையிட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை, அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ எனக்கு மரணத்தை தந்தபின், நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய்; மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய்." (அத்தியாயம் 5, வசனங்கள் 117–118)
இந்த வசனங்கள் மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் ஈஸா (அலை) அவர்களுக்கும் இடையே நடைபெறும் ஓர் உரையாடலைக் குறிப்பிடுகின்றன. அல்லாஹ், ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களிடம், அவருடைய சிந்தனையும் போதனையும் காரணமாகத்தான் மக்கள் அவரையும் அவருடைய தாயாரையும் கடவுள்களாக எடுத்துக்கொண்டார்களா என்றும், தம்மை பின்பற்றியவர்களிடம் தன்னையும் தமது தாயையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுமாறு கற்றுக்கொடுத்தது அவர்தானா என்றும் கேட்கிறான்.
இதற்கு ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள்: “நான் அவர்களிடையே இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்” என்று பதிலளிக்கிறார்கள்.
இந்தக் கூற்று, ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் தமது மக்களுக்குப் பொறுப்பாளராகவும் அவர்களைக் கண்காணிப்பவராகவும் இருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் மக்களுடன் இருந்த காலமெல்லாம், மக்கள் நேரான பாதையில் இருந்ததாகவும், ஷிர்க்கைச் செய்யாமல் ஒரே இறைவனையே வணங்கியதாகவும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
அதற்கடுத்ததாக ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் கூறும் கூற்று, அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்த பின்னர் மக்கள் செய்த செயல்களுக்கும் அவர்கள் பின்பற்றிய வழிதவறலுக்கும் தம்மைக் குற்றம் சாட்டவோ பொறுப்பாக்கவோ முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஏனெனில், அதன்பின்னர் அவர்கள் மக்களிடையே இருந்து அவர்களுக்கு வழிகாட்டவில்லை.
ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இதை அடுத்த கூற்றில் விளக்குகிறார்கள்: “ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பின்னர், நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ ஒவ்வொரு பொருளுக்கும் சாட்சியாக இருக்கிறாய்.”
மேலும், இது ஸூரா யூனுஸிலும் நிரூபிக்கப்படுகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاؤُكُمْ ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ ۖ وَقَالَ شُرَكَاؤُهُمْ مَا كُنْتُمْ إِيَّانَا تَعْبُدُونَ ٢٩ فَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا بَيْنَنَا وَبَيْنَكُمْ إِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغَافِلِينَ ٣٠
“(மக்களே! ஒரு நாளை நினைத்துப் பாருங்கள்.) அந்த நாளில் அவர்களெல்லாரையும் நாம் ஒன்று திரட்டுவோம். பின்னர் இணைவைத்தவர்களிடம்: நீங்களும் உங்களால் இணையாக்கப்பட்டவர்களும் (அப்பால் சென்று) உங்கள் இடத்தில் நில்லுங்கள் என்று கூறுவோம். பின்னர் நாம் அவர்களை ஒருவரை விட்டு ஒருவரைப் பிரித்து(ம்) விடுவோம். அவர்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்கள்: நீங்கள் எங்களை (ஒருபோதும்) வணங்கியதில்லை என்று கூறுவார்கள்.
உங்களுக்கும் எங்களுக்குமிடையில் சாட்சியாக அல்லாஹ்(வே) போதுமானவன். நாங்கள் உங்கள் வணக்கத்தைப் பற்றி முற்றிலும் தெரியாதவர்களாகவே இருந்தோம் (என்றும் கூறுவர்).” (அத்தியாயம் 10, வசனங்கள் 29–30)
இந்த வசனங்களில், மறுமை நாளில் கடவுளாக வணங்கப்பட்ட அனைவரும், தங்களை வணங்கியதாகக் கூறியவர்களிடமிருந்து பிரிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகிறது. பின்னர், வணங்கப்பட்டவர்கள், “நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் அறியாதவர்களாகவே இருந்தோம்” என்று தெளிவாகக் கூறுவார்கள்.
இதுவும் மறுமை நாளில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் தன்னை பின்பற்றியவர்கள் தம்மை வணங்கியதைப் பற்றி முற்றிலும் அறியாதவர்களாக இருப்பார்கள் என்பதைக் காட்டுகிறது. இதன்மூலம், அவர்கள் மீண்டும் பூமிக்கு வந்திருக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.
ஹஸ்ரத் மிர்சா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“இந்த வசனம், மக்களால் அல்லாஹ்வுக்கு இணைகளாக ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த ‘இணைகள்’ குறித்து பேசுகிறது. அவர்கள் தங்களை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஆக்கிக் கொள்ளும்படி மக்களுக்கு அறிவுறுத்தவோ, விரும்பவோ, அதற்கு அனுமதி வழங்கவோ இல்லை. உதாரணமாக, வானவர்கள், நபிமார்கள் அல்லது ராமர், ஈஸா போன்ற புனிதர்களை மக்கள் அவ்வாறு ஆக்கினர். அடுத்த வசனம் இந்தக் கருத்தை ஆதரிக்கிறது. அதில், இந்த ‘இணைகள்’ தங்களை அல்லாஹ்வுக்கு இணைகளாகவோ அல்லது அவனுடன் கூட்டாளிகளாகவோ ஆக்கியது குறித்து தாங்கள் முற்றிலும் அறியாதவர்களாக இருந்ததாக அல்லாஹ்வையே சாட்சியாகக் கொண்டு கூறுவார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த கால நபிமார்களும் புனிதர்களும் தங்களைத் தெய்வங்களாக்குவதை ஆதரித்தார்கள் என்பதற்கு சிலைவணங்கிகளிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் இந்த வசனம் மேலும் சுட்டிக்காட்டுகிறது.”
(Five Volume Commentary, அத்தியாயம் 10, வசனங்கள் 29–30)
%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.png)