இப்படியும் ஒரு அற்புதம் நடந்திருக்கிறது நம்ப முடிகிறதா ? 80 களில் பாகிஸ்தானில் அஹ்மதிகளுக்கு எதிராக கொடுங்கோல் ஆட்சி செய்த சர்வாதிகாரி ஜெனரல் ஜியாவுல் ஹக் விமான விபத்தில் அகால மரணமடைந்தது அனைவரும் அறிந்த உண்மை. அதில் மற்றொரு உண்மையும் மறைந்திருக்கிறது அது, அப்பாவி அஹ்மதிகளை , முல்லாக்களின் தூண்டுதல்களால் கொலை, சித்திரவதைகளுக்கு ஆளாக்கிய அதிபருக்கு அப்போதைய அஹ்மதிய்யா ஜமாத்தின் கலீஃபா அவர்கள் "நீ அல்லாஹ்வின் ஜமாத்தோடு மோதுகிறாய் ! நீ அல்லாஹ்வுக்கு பயந்து திருந்திக்கொள் இல்லையென்றால் நீ தூள் தூளாகி விடுவாய்" என எச்சரிக்கை செய்தார்கள. ஆனால் மனிதாபமானமற்ற அவரை அல்லாஹ் வானத்தில் சிதற வைத்தான் அவருடைய உடலின் அடையாளமாக கிடைத்த அவரது தங்கப் பல்லை மட்டும் வைத்து அடக்கம் செய்யப்பட்டது . இதில் இன்னொரு உண்மையும் மறைந்திருந்தது .அது இந்த ஜமாத்தின் ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸாகுலாம் அஹமத் (அலை )அவர்கள் தனக்குப் பின்னால் ஒரு எதிரியின் அழிவைப்பற்றி 1893ம் வருடம் ஓர் இறைஅறிவிப்பை வெளியிட்டார்கள் அது இதுவாகும் ___________________________ "எட்டை எட்டுமுன் மரணமடைவார் " ____________________________இந்த இல்ஹாம் ஜியாவுல் ஹக்கிற்கு பொருந்துவதைப் பாருங்கள் : ஸியாவின் பிறப்பு : 12.8.24 1+2+8+2+4=17(1+7=8) பாக்.பொதுத் தேர்தல் 16.11.1988 1+6+1+1+1+9+8+8=35 (3+5=8) ஸியா பூட்டோவை சிறை பிடித்த நாள்:5.7.77 5+7+7+7=26 (2+6=8) ஸியா விமான விபத்து: 17.8.1988 நாள்17... 1+7=8 மாதம் =8 வருடம் :1988 1+9+8+8=26 (2+6= மரண நேரம் :4.40 (4+4+0= மரணத்தின்போது வயது :64 (8 * 8= 64 ) மரண செய்தி ஒலிபரப்பு : காலை 8 மணி "உண்மை வந்து விட்டது .பொய் அழிந்தே தீரும்" சூரா :17 (1+7=8)
எனது ஜமாஅத்தை உலக முழுவதும் பரவச் செய்வான்
-
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தனது ஜமாஅத்தாகிய *அஹ்மதிய்யா
முஸ்லிம் ஜமாஅத்தை* குறித்தும் அதிலுள்ள மக்களை குறித்தும் இவ்வாறு
கூறுகிறார்கள்:...
6 ஆண்டுகள் முன்பு
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None