மர்யதின் மகன் ஈஸா வானத்திலிருந்து வரப்போவதில்லை! ஆனால் ஈஸா நபியின் இரண்டாவது வருகை நிறைவேறிவிட்டது!

"மிகவும் விளக்கமாக, ஆணித்தரமாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள், எவரும் வானத்திலிருந்து இறங்கி இவ்வுலகத்திற்கு வரப்போவதில்லை. எதிர்ப்பார்ப்பவர்களின் சந்ததியினரும் அவர்களது சந்ததியினரும் மரணித்து விடுவார்கள். ஆனால் அவர்களில் எவரும் மர்யத்தின் மகன் ஈஸா வானத்திலிருந்து இறங்கி வருவதை காணப்போவதில்லை. அதன் பிறகு அல்லாஹ் அவர்களை நிம்மதி இழக்க செய்து விடுவான். அந்த சமயத்தில் உலகத்திலிருந்து சிலுவையின் ஆதிக்கம் படிப்படியாக நழுவுவதை காணலாம். அதன் பிறகு ஒரு புதிய சகாப்தம், புதிய நிலை, உலகில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டு விடும். அதன் பிறகும் மர்யத்தின் மகன் ஈஸா வானத்திலிருந்து வரப்போவதில்லை. அக்கால மக்கள் தங்களுடைய அறிவு வளர்ச்சியால் இத்தகைய மூட நம்பிக்கைகளை வெறுப்புடன் நோக்குவார்கள். அந்த காலத்தில் மூன்று நூற்றாண்டுகள் முடிவு பெற்றிருக்காது. எவெரெல்லாம் ஈஸாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்களோ அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தனது மூட நம்பிக்கையினால் நிராசையடைந்து, பரிதாபத்திற்குரிய நிலையில் வேறு வழியின்றி அக்கொள்கையை கைவிட்டு விடுவார்கள். ஒரு தலைமையின் கீழ் உலகம் இயங்கும். அதற்கு விதையிடவே நான் வந்திருக்கிறேன். அதற்கான பணிகளுக்காகவே எனது கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த விதைகள் வளர்ந்து பல்கிப் பெருகும். அவை பூக்களாக மலர்ந்து பழங்களை தரும் அதனை உலகில் எவராலும் தடுத்து நிறுத்திட முடியாது." (தத்கிறதுஷ் ஷஹாததைன் பக்கம் 64-69)
நான் மிக உரிமையுடனும், உறுதியுடனும் கூறுகிறேன், நான் உண்மையாளன். இறையருளால் இவ்வரங்கில் வெற்றி எனக்கே. இயன்ற அளவு தொலைநோக்குடன் பார்க்கும் போது முழு உலகையும் என் உண்மையின் காலடியில் காண்கிறேன். மிக விரைவில் நான் சிறப்பு மிக்க வெற்றி ஒன்றினை அடைவேன். ஏனென்றால் என் நாவிற்கு துணையாக மற்றொரு நாவு பேசுகிறது. என் கையை வலுவூட்ட இன்னொரு கை செயல்படுகிறது. அதை உலகு காண்பதில்லை. ஆனால் நான் காண்கிறேன். என் உள்ளத்தில் விண்ணுலகைச் சேர்ந்த ஆவியொன்று பேசுகிறது. அது என் சொல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வாக்கிற்கும் உயிரூட்டுகிறது. விண்ணில் ஒரு துடிப்பும் கொதிப்பும் எழுந்துள்ளது. அது இந்த ஒரு பிடி மண்ணை பொம்மை போன்று எழுப்பியுள்ளது. எவர் மீது தவ்பாவின் வாயில் மூடப்படவில்லையோ அவர் நான் சுயமாக எதையும் செய்யவில்லை என்பதை மிக விரைவில் கண்டு கொள்வார். உண்மையாளரைப் பிரித்தறிய முடியாத கண்கள் ஒளியுடையனவா? வானத்தின் இந்த சப்தத்தை உணராதவன் உயிருள்ளவானா? (இசாலே அவ்ஹாம் பாகம் 2)
உறுதியாக அறிந்து கொள்ளுங்கள், இது இறைவன் கையால் நாட்டப்பட்ட செடியாகும். இறைவன் ஒரு போதும் இதை வீணாக்கமாட்டான். இதை முழுமை பெறச் செய்யாத வரை அவன் திருப்தி அடைய மாட்டான். அவன் அதற்கு நீர் ஊற்றுவான். வேலியமைப்பான். வியத்தகு வெற்றிகளை வழங்குவான்.  நீங்கள் என்னை எதிர்ப்பதில் குறை எதுவும் செய்தீர்களா? எனவே இது மனிதனின் வேலையாக இருந்திருப்பின் என்றோ வெட்டப்பட்டிருக்கும். அதன் பேரும் அடையாளமும் எஞ்சியிருக்காது. (அஞ்சாமே ஆத்தம்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.