ஏப்ரல் ஃபூலை பற்றி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) கூறுகின்றார்கள்:
திருக் குர்ஆன் பொய்யர்கள் மீது சாபம் இட்டுள்ளது. மேலும் பொய்யர்கள் ஷெய்த்தானின் நண்பனாக இருக்கின்றார்கள் என்றும், பொய்யர்கள் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றார்கள் என்றும், பொய்யர்கள் மீது ஷெய்த்தான் இறங்குகின்றான் என்றும் கூறுகிறது. மட்டுமல்லாமல், நீங்கள் பொய் பேசாதீர்கள் என்றும், நீங்கள் பொய்யர்களை சார்ந்து இருப்பதை விட்டுவிடுங்கள், அவர்களை நண்பனாக்கி கொள்ளாதீர்கள், இறைவனுக்கு அஞ்சுங்கள், உண்மையாளர்களுடன் இருங்கள் என்றும் (திருக் குர்ஆன்) கூறுகிறது. மேலும் ஓரிடத்தில் இவ்வாறும் கூறுகிறது அதாவது, நீங்கள் ஏதாவது பேசினால் உங்களின் அந்த பேச்சு உண்மையை சார்ந்து இருக்க வேண்டும். அதில் கேலி கிண்டலுக்காக கூட பொய் கலந்து இருக்கக்கூடாது. இப்போது கூறுங்கள், இந்த போதனை பைபிளில் எங்கு காணப்படுகிறது? இவ்வாறான போதனை இருந்திருந்தால் கிறிஸ்துவர்கள் மத்தியில் ஏப்ரல் ஃபூல் போன்ற கெட்ட பண்பாடு இன்று வரை ஏன் நிலைத்திருக்கிறது? ஏப்ரல் ஃபூல் எந்த அளவிற்கான தீய பழக்கம் என்பதை பாருங்கள்! பொய் சொல்வது ஒரு நல்ல பண்பாடாக பார்க்கப்படுகிறது. இது கிறிஸ்துவர்களின் பண்பாடு மற்றும் பைபிளின் போதனையாக இருக்கிறது. இந்த கிறிஸ்துவர்கள் பொய்யை அதிகமாக நேசிப்பார்கள் போலும் என்பது தெரிய வருகிறது. ஏனென்றால் இவர்களின் செயல் இதற்கு சாட்சி பகரக்கூடியதாக இருக்கின்றது. (ரூஹானி கஸாயீன், பாகம் 9)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None