ஹோமியோபதி மருத்துவம் மூலமாக ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் ஆற்றிய மாபெரும் தொண்டுகள்

(ஃபலாஹுத்தீன் கமர்- முரப்பி ஸில்ஸிலா)

அன்பர்களே! இறைவன் மனிதர்களை மிகச் சிறந்த சமுதாயமாக படைத்துள்ளான்.அதாவது அவனது படைப்பில் சமத்துவத்தை வைத்துள்ளான்.மேலும் அவனுக்கு ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறான்.ஆனால் மனிதன் தனது நிலையற்ற தன்மையின் காரணத்தால் இவ்வுயரிய அருளை தொலைத்து விடுகிறான். ஆனால் கருணையாளனாகிய இறைவன் மனித உடல் நிலை சீர்பெறும் வழி வகைகளையும் உருவாக்கியிருக்கிறான். அல்லஹ் தாஆலா திருக்குர்ஆனில் கூறுகிறான்:
வ இதா மரிள்து ஃபஹுவ யஷ்ஃபீன் (அஷ்ஷு`ரா;81)

அதாவதுநான் நோயுறும் போது என்னை குணமடைய செய்பவன் நீயே என்று பொருள். இதே போன்று நபிமொழியில் வருகிறது; "லிகுல்லி தாயின் தவாவுன் இல்லல் மௌத்"அதாவது அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது.

ஹதீஸில் வருகிறதுஇமாம் ஷாஃபீ (ரஹ்) கூறுகின்றார்கள்,
"அல்இல்மு இல்மான்.இல்முல் அப்தானி வ இல்முல் அத்யான்"


அதாவது ஞானம் இரு வகைப்படும்.ஒன்று உடல் பற்றிய ஞானம் அதாவது மருத்துவ ஞானம்.மற்றொன்று மார்க்கம் பற்றிய ஞானம்.இக்காலத்தில் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாயிலாக இவ்விரு ஞானத்தின் ஆறும் பெருக்கெடுத்து ஓடுகின்றது.ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலகை எவ்வாறு மார்க்க ஞானத்தால் செழிப்புறச் செய்தார்களோ அவ்வாறே அன்னாரது ஆன்மீக வாரிசு மற்றும் நான்காவது கலீஃபா அவர்கள்  ஹோமியோபதி மருத்துவம் வாயிலாக இறை படைப்பினங் களுக்கு ஒப்பற்ற தொண்டாற்றினார்கள்.அன்னார் ஹோமியோபதி மருத்துவம் மூலமாக ஆற்றிய மனித தொண்டுகளைப் பற்றி  நான் சிறிது எடுத்துரைப்பேன்.

மதிப்பிற்குரிய தாயாரின் விருப்பமும் அதன் நிறைவேற்றலும்

அன்னார் டாக்டராக ஆக வேண்டும் என்பது அன்னாரது தாயாரின் விருப்பமாக இருந்தது. இது பற்றி அன்னார் கூறுகின்றார்கள்;"நான் டாக்டர் ஆக வேண்டும் என்பதே எனது தாயாரின் விருப்பமாக இருந்தது.எல்லா நேரமும் என்னிடம் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்றே கூறி வந்தார்கள்".

ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் அவர்களே கூறியது போன்று அன்னார் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் எந்த கவனமும் செலுத்தவில்லை.பாட திட்டத்தில் உள்ள புத்தகங்களை படித்து தேர்ச்சி பெற்றவாறு வகுப்புகளை கடந்து வந்திருந்தாலும் இத்தேர்ச்சியானது மருத்துவக் கல்லூரியில் இடம் பெற போதுமானதாக இருக்கவில்லை.எனவேதான் அன்னார் தனது கல்விக்காலத்தில் இதன்பால் கவனம் செலுத்தவில்லை.அல்லாஹ்வின் நடைமுறையாவது: அவன் தனது நெருக்கத்திற்குரியவர்களின் இச்சைகளை நிறைவேற்றவில்லையெனில்அவர்களது இச்சைகளை ஏற்றுக்கொள்ளப்படும் துஆக்களாக மாற்றி தனது நுட்ப ஞானத்தின் அடிப்படையில் மேன்மைவாய்ந்த வேறு வழிகளில் ஏற்றுக் கொள்கிறான். ஹஸ்ரத் உம்மே தாஹிர்(ரலி)அவர்கள் அதிகமாக துஆ கேட்பவராகவும், அவரது துஆக்கள் ஏற்றுக் கொள்ளப் படுபவையாகவும் இருந்தது.அல்லாஹ் தஆலா அவர்களது துஆக்களை எவ்வகையில் ஏற்றுக்கொண்டான் என்பதை எடுத்துரைத்தவாறு ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் கூறுகின்றார்கள்; "அல்லாஹ் தஆலா என்னை இவ்வாறே ஹோமியோபதி டாக்டராக ஆக்கி விட்டான். உலகம் முழுவதிலும் தொண்டாற்றுகின்றேன்.நூலை எழுதியுள்ளேன்.மக்களுக்கு மருந்துகளை அனுப்புகிறேன். ஆக என் தாயின் விருப்பமும் நிறைவேறி விட்டது.எனக்கும் தொண்டாற்றும் வாய்ப்பு கிடைத்து விட்டது.ஒருவேளை நான் டாக்டராக இருந்திருந்தால் என்னிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள இப்போதைய பணிகள் கடினமாகியிருக்கும்."
(அல்ஃபஸ்ல் 29 ஜனவரி 2001)

ஹுஸூரின் மூலமாக ஹோமியோபதியின் புழக்கம்

கிலாஃபத்திற்கும் முன்பே ஹோமியோபதி மற்றும் அதன் மூலமாக இலவச சிகிச்சை செய்வதன் ஆர்வம் அன்னாரிடம் அதிகமாக இருந்தது. 1960ம் ஆண்டிலிருந்தே அன்னார் வீட்டிலிருந்து மருந்துகள் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள் .பிறகு 1968 ம்  ஆண்டு வக்ஃபே ஜதீத் திட்டத்தில் இலவச ஹோமியோபதி டிஸ்பென்ஸரியினை துவக்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்கள். அன்னார் 1994ம் ஆண்டு மார்ச் 23ம் தேதியிலிருந்து எம் டி ஏ வில் ஹோமியோபதி வகுப்புகளை ஆரம்பித்து மிக விரிவாக பல்வேறு நோய்கள் மற்றும் மருந்துகளின் தன்மை மற்றும் நிவாரணம் பற்றிய வியப்பு மிகு சம்பவங்களை எடுத்துரைத்தார்கள். ஏறக்குறைய 170 வகுப்புகளின் ரெக்கார்டிங்கிற்குப் பிறகு அவை புத்தக வடிவில் இனமுறை மருத்துவம் அதாவது ஹோமியோபதி என்ற பெயரில் வெளியிடப்பட்டது. தற்போதுவரை அதன் பல மறு பதிப்புகள் வெளிவந்து விட்டன.

ஹுஸூர் அவர்கள் அதிகமதிகமாக இலவச ஹோமியோபதி டிஸ்பென்ஸரிகளை நிறுவி அதன் மூலம் இலவச சிகிச்சை செய்து மக்களிடம் அதனை தெரியப்படுத்தும் திட்டத்தையும்  தீட்டினார்கள்.இவ்வாறாக இங்கிலாந்து முதற்கொண்டு உலகின் பல நாடுகளில் இது போன்ற டிஸ்பென்ஸரிகள் நிறுவப்பட்டுவிட்டன. அங்கிருந்து அஹ்மதிகள் மற்றும் அஹ்மதியல்லாத வர்களும் மருந்துகளைப் பெற்று வருகின்றனர்.ஹுஸூர் அவர்களின் சொற்பொழிவுகள் மற்றும் நூல்களின் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் பொதுவான நோய்களின் ஆரம்ப சிகிச்சை வழங்கத் தகுதி படைத்த சிறு சிறு ஹோமியோபதி மருத்துவர்கள் உருவாகி விட்டனர். மேலும் ஹோமியோபதி மருத்துவத்தில் கை தேர்ந்த மருத்துவர்களும் கூட ஹுஸூர் அவர்களின் அனுபவம் மற்றும் மேன்மையினை போற்றுபவர்களாக உள்ளனர்.

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒருமுறை "இன்தீ முஆலிஜாத்" என்ற இல்ஹாம் இறங்கியது. மேலும் அக்டோபர் 18, 1902 ம் ஆண்டு ஹஸ்ரத் அம்மா ஜான் அவர்கள் கனவில் ஷேக் ரஹ்மதுல்லாஹ் ஸாஹிபின் தரப்பிலிருந்து  மருந்துகள்  நிறைந்த பெட்டி வருவதாக கண்டார்கள். அதில் சிறிய குப்பிகளும்,கண்ணாடி குப்பிகளும் இருந்தன. இக்கனவானது ஹுஸூர் அவர்களது காலத்தில் ஹோமியோபதியின் புழக்கம் மற்றும் மருந்துகள் நிறைந்த பெட்டி உலகம் முழுவதும் அனுப்பப் பட்ட போது நிறைவேறியது.
(அல்ஃபஸ்ல் 16/8/1999,பக்கம் 2,அல்ஃபஸ்ல் தினசரி-ஸய்யிதுனா தாஹிர் நம்பர், 27/12/2003 பக்கம் 35)

சந்தேகமின்றி இவ்வகை மருத்துவத்தை கண்டுபிடித்தவர் ஜெர்மனியின் டாக்டர் ஹனிமன் சாமுவேல் ஆவார்.ஆனால் இதனை ஓர் உலகளாவிய மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜமாஅத்தின் மூலமாக உலகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில்,எண்ணற்ற நோயாளிகள் சிகிச்சை பெற சர்வதேச அளவில் ஒரு அமைப்பை நிறுவிய பெருமை நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது(ரஹ்)அவர்களையே சாரும்.அன்னாரது தூய உள்ளம் ஒவ்வொரு நொடியும் துன்பத்திற்காளான மனிதர்களுக்காகவே துடித்தது.அவர்களுக்காகவே வேதனை கொண்டிருந்தது.
(அல்ஃபஸ்ல் தினசரி-ஸய்யிதுனா தாஹிர் நம்பர்,27/12/2003 பக்கம் 23).

ஹுஸூர் அவர்கள் ஹோமியோபதிக்கு செய்த பேருபகாரம்

ஹோமியோபதி மருத்துவத்தோடு அதன் சரியான கோட்பாடும் மறக்கடிக்கப்பட்டிருந்தது. மேலும் ஹோமியோபதி மருத்துவர்களே அந்த சரியான கோட்பாட்டினை அறிந்திடாம லிருந்தனர் அல்லது வேண்டுமென்றே அவற்றை மறந்திருந்தனர். அத்தோடு ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை எந்த கோட்பாடுகளில் இருந்ததோ அவற்றை தன்வசப்படுத்தா மல் இவ்வகை சிகிச்சை முறையிலிருந்து முழுவதும் பயன் பெறவே முடியாது. ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹின் மற்றுமொரு பேருபகாரம்  அன்னார்  ஹோமியோ பதியின் சரியான கோட்பாட்டின் பால் கவனமூட்டினார்கள்.மேலும் ஹோமியோபதியின் சரியான வழிமுறைகளுக்கேற்ப பயிற்சி செய்வதன்பால் கவனமூட்டினார்கள். மேலும் பணத்திற்காகவும்,வியாபார நோக்கத்திற்காகவும் ஹோமியோபதியின் வடிவத்தை சீர் குலைப்பதை தடுத்தார்கள்.

அன்னார்  ஹோமியோபதியின் தனிமனிதத்துவக் கோட்பாடு அதாவது individualization-ன் பால் கவனமூட்டினார்கள்.ஒவ்வொரு நோயாளியின் உடற்கூறும் வெவ்வேறாகிவிடுகின்றன. மேலும் வெவ்வேறு நோயாளிகளை பரிசோதித்து மருந்தினை கொடுக்க வேண்டும்.மேலும் நோயாளியின் பெயரைக் கருத்தில் கொண்டு மருந்து கொடுக்காமல் நோயாளியின் உடற்கூற்றைக் கருத்தில் கொண்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று கவனமூட்டினார்கள்.

எனவே கூறினார்கள்; "ஹோமியோபதியில் எந்தவொரு கை தேர்ந்தவரின் மருத்துவமும் எடுபடாது. எல்லாவற்றிலும் முக்கியமானதுசிறிது நேரம் நோயினை மறந்து நோயாளியைப் பார்த்து அவரது உடற்கூற்றினை அடிப்படையாகக் கொள்ளவும். கோடை மற்றும் குளிர்கால மருந்துகளை சிந்தனையில் வகைப்படுத்த வேண்டும்.அதற்கு அதிக பயன்கள் உள்ளன. ஒருவேளை நோயாளியின் உடல் சூடானது என்றால் அவருக்கு குளிர்ந்த மருந்துகளை கொடுப்பது குணத்திற்கு பதிலாக இழப்பினை ஏற்படுத்தும்..எந்த நோயாளிக்கு வெப்பம் இழப்பை ஏற்படுத்தும்.எந்த நோயாளிக்கு குளிர்ச்சியினால் வேதனை அதிகமாகின்றது. அல்லது நோயாளியின்  அசைவினால் பாதிப்பு உண்டாகின்றது,ஓய்வினால் வேதனை அதிகமாகின்றது என்று நோயாளியின் இயல்பை நன்றாக கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை இவ்விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டால்,நோயாளியுடன் பேசும்போதே நோயாளியிடம் இல்லாமல் நோயின் பால் கவனம் செலுத்த முடியும்.
(அல் ஃபஸ்ல் தினசரி, 15/4/1995).

அஹ்மதிய உலகில் அன்னார்  ஹோமியோபதி வழி சிகிச்சையினால் ஒரு நேசத்தையும் அன்பையும் உருவாக்கிவிட்டார்கள். மேலும் ஒவ்வொரு வீட்டிலும்,ஒவ்வொரு கிராமத்திலும்,ஒவ்வொரு நகரத்திலும் ஹோமியோபதி டிஸ்பென்ஸரியை திறப்பதன் முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்கள். MTA வில் அன்னாரது சொற்பொழிவைக் கேட்டும் அதே போன்று 1996-ம் ஆண்டு வெளியான அன்னாரது "ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்"-எனும் நூலிலிருந்து பயனடைந்தவாறு ஒவ்வொறு வீட்டிலும் ஹோமியோபதி மருத்துவர்கள் உருவாகினர்.மனிதர்களை இவ்வழி மருத்துவத்தினால் பயனடையச் செய்ததில் அன்னாரது ஈடிணையற்ற முயற்சி உள்ளது.  ஒரு மாபெரும் ஆன்மீக வழிகாட்டியாக இருந்தும்,உடல் நலனிலும், மருத்துவத்திலும் அன்னாருக்கு  மேன்மை கிடைத்தது. ஏனெனில் அல்லாஹ்வின் ஒத்துழைப்பும் உதவியும் அன்னாரோடு இருந்தது.பல நூறு குணப்படுத்த முடியாத நோயாளிகள் அன்னாரது மருந்தினாலும் சிகிச்சையினாலும் புதியதொரு வாழ்வினைப் பெற்றார்கள்.

ஹுஸூர் அவர்களது ஹோமியோபதி வகுப்புகளும் சொற்பொழிவுகளும்

ஹுஸூர் அவர்களது பேருபகாரம் யாதெனில் அன்னார் ஹோமியோபதி முறை மருத்துவத்தை மக்கள் அனைவருக்கும் எட்ட வைத்தார்கள். MTA வில் உலகம் முழுவதிலும் ஹோமியோபதியின் இவ்வழி சிகிச்சையினை பிரசித்தியடையச் செய்தார்கள்.சிறிது ஆண்டுகளிலேயே ஆயிரக்கணக்கானோர் இஞ்ஞானத்தில் திறம்படைத்தவர்களாக ஆகிவிட்டனர்.மேலும் உலகின் மூலை முடுக்குகளில் இவ்வழி மருத்துவத்தினால் பயன்பெறத் தொடங்கினர்.அன்னார் 1994ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி ஹோமியோபதி வகுப்புகளை ஆரம்பித்தார்கள். இவ்வகுப்புகளில் அன்னார் ஹோமியோபதி தொடர்பான உரைகளை நிகழ்த்தி பலதரப்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் பெற மருந்துகளை எடுத்துரைப்பார்கள்.நோய்களை கண்டறிந்து அதற்கு உகந்த மருந்துகளின் பயன்பாட்டைப் பற்றியும் முழு விளக்கம் அளிப்பார்கள். நாளடைவில் அன்னரது இந்த பாடங்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

ஒரு மருத்துவராக ஹுஸூர் அவர்களின் மருத்துவத் தொண்டு

ஹுஸூர் அவர்கள் ஒரு வெற்றிகரமான மிகச் சிறந்த ஹோமியோபதி மருத்துவராக இருந்தார்கள். வெளிப்படையில் ஹுஸூர் அவர்களிடம் எந்தவொரு டிகிரியும் இருக்கவில்லை. எந்தவொரு மெடிக்கல் காலேஜிலும் சேரவில்லை. ஆனால் இறைவன் தனது பேரருளால் ஹுஸூர் அவர்களுக்கு இஞ்ஞானத்தை அருளியிருந்தான். மேலும் வெற்றிகரமான சிகிச்சை நிபுனராக இவ்வுலகின் முன் கொண்டு வந்தான். ஹுஸூர் அவர்களது தொண்டானது உலகளாவிய தொண்டாக இருந்தது. பல்வேறு விதமான நோய்களுக்கு ஹுஸூர் அவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.மேலும் அன்னாரால் பூரண சுகம் பெற்ற பல வியத்தகு உதாரணங்கள் உலகம் முழுவதிலும் உள்ளன.

ஹுஸூர் அவர்கள் தன் மீது செய்து கொண்ட சோதனைகள்

ஹுஸூர்  அவர்கள் முதலில் தன் மீதும், உறவினர்கள்,நண்பர்கள் மீதும் எண்ணற்ற சோதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். அவற்றுள் சில உதாரணங்களை எடுத்துரைக்கிறேன். ஹுஸூர் அவர்கள் கூறுகின்றார்கள்; "இந்திய பாகப் பிரிவினைக்குப் பிறகு  பாகிஸ்தான் உருவான ஆரம்ப நாட்களில் எனக்கு மைக்ரைன் எனப்படும் கடுமையான தலைவலி இருந்தது. அவ்வலியுடன் ஒவ்வாமை, வாந்தி, களைப்பு மற்றும் அமைதியின்மை இருந்து வந்தது. பல நாட்கள் நான் இவ்வேதனையில் இருந்திருக்கிறேன்.மருந்தாக அஸ்பிரினை பயன்படுத்தி வந்தேன். இதனால் குடல் மற்றும் சிறு நீரகத்தில் தீயவிளைவு ஏற்பட்டது. இதயத்துடிப்பு அதிகரித்தது . மர்ஹூமாகிய என் தந்தையார் எப்போதும் ஒரு அலோபதி மருந்துப் பெட்டி ஒன்றை தன்னுடன் வைத்திருந்தார்கள். இந்திய பிரிவினைக்கு பிறகு இந்த  மருந்துகள் கிடைக்காமல் போய்விட்டிருந்தன. மாறாக கொல்கத்தாவிலிருந்து வரவழைக்க வேண்டியிருந்தது.ஒரு முறை எனக்கு கடுமையான தலை வலி ஏற்பட்டது. அச்சமயம் என் தந்தையிடம் அந்த மருந்து பெட்டி இருக்கவில்லை.அதற்கு பதிலாக அன்னார் எனக்கு ஒரு ஹோமியோபதி மருந்தை அனுப்பி வைத்தார்கள்.அச்சமயம் எனக்கு ஹோமியோபதி மருந்தில் நம்பிக்கை இல்லாமலிருந்தது.ஆயினும் பரகத்திற்காக நான் அந்த மருந்தை உட்கொண்டேன். திடீரென்று வலி முற்றிலும் தொலைந்து போனதை உணர்ந்தேன். மேலும் நான் கண்களை மூடி படுத்திருக்கிறேன்.இதற்கு முன் எந்த ஒரு மருந்தும் இத்தகைய வழக்கத்திற்கு மாறான,வலுவான தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியதில்லை.
(நூல் :ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்முன்னுரை)

அதே போன்று மற்றுமொரு இடத்தில் கூறுகின்றார்கள்;எனக்கு 1960 அல்லது1962 ல் முதன்முறையாக குடல் வால் பாதிப்பு ஏற்பட்டது. நான் இந்த மருந்தை(ஆர்னிகா) உட்கொண்டதனால்அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் குணமடைந்தது.அதற்குப் பிறகு எப்போதாவது வலி ஏற்படும்.அது இதே மருந்துகளாலேயே சரியாகி விட்டன. அறுவை சிகிச்சைக்கான அவசியம் ஏற்படவில்லை.அது தவிர 1972 ல் பயணத்தின் போது இந்நோய் கடுமையாக தாக்கியது. நான் காரையும் ஓட்டிக் கொண்டிருந்தேன்.குழந்தைகளும் என்னுடனிருந்தனர். காய்ச்சல் குறையவே இல்லை.நான் தொடர்ந்து மருந்தினை சாப்பிட்டுக் கொண்டே இருந்தேன்.மேலும் நானூறு மைல் பயணம் மேற் கொண்டு கராச்சி சென்றடைந்தேன்.டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தபோது குடல்வால் வெடித்து ஆங்காங்கே துளை ஏற்பட்டு சலம் வடிந்து காய்ந்து போய் விட்டிருந்ததைக் கண்டு வியப்புற்றனர். அவர்கள் கருத்துப்படி இவ்வாறான நோயாளி சில மணி நேரத்திலேயே இறந்திருக்க வேண்டும். ஆனால் அம்மருந்து அந்த அபாயகரமான சூழ்நிலையிலும் என்னை தாங்கி நின்றது.

( நூல்:ஹோமியோபதி_இனமுறை மருத்துவம்,பக்கம் 118)

ஹுஸூர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்ட,  அற்புதமான முறையில் பொது மக்கள் குணம் பெற்ற சம்பவங்கள். ஹுஸூர் அவர்கள் தன் மீதும் தனக்கு நெருங்கியவர்கள் மீதும் வெற்றிகரமாக நிகழ்த்திய சோதனைகளுக்குப் பிறகு பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் அருளால் லட்சக்கணக்கானவர்கள் ஹுஸூர் அவர்களின் சிகிச்சையினால் குணமடைந்துள்ளார்கள். வலிப்பிற்கான சிகிச்சைப் பற்றி எடுத்துரைத்தவாறு ஹுஸூர் கூறுகின்றார்கள்தினசரி சிகிச்சையின் போது நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் யாதெனில் நீண்ட நெடு நாள் நோயினால் பீடிக்கப் பட்டிருக்கின்ற நோயாளிகளுக்கு உதாரணமாக இளப்பு,வலிப்பு போன்ற நோய்களுடயவர்களூக்கு பொதுவான மருந்துகளை கொடுப்பது உகந்ததல்ல. மாறாக நேரம் எடுத்துக் கொண்டு அந்நோயாளிகளிடம் விரிவான நேர்காணல் காண வேண்டும். மேலும் நோய் பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து அவற்றின் தன்மையை பொருத்து மருந்தளிக்க வேண்டும்.வலிப்பிற்கான மருந்துகளுள் சில மருந்துகள் இடம்பெற்றிருக்காது.  உதாரணமாகஒரு நோயாளி தலையில் கூச்சலை உணர்பவராக இருந்தார்.கூச்சலினால் காயம் ஏற்பட்டு அதனால் வெறி உண்டாகி தூக்கம் வராமலிருந்தது. தலையும் இதயமும் கவ்வப்பட்டிருப்பதாக உணர்ந்தார். அவருக்கு நான் கேக்டஸ்(cactus) கொடுத்தேன். அதன் திசையே மாறி விட்டது.அவர் நிம்மதியாக உறங்கினார்.மேலும் அவருக்கு வலிப்பிலிருந்து விடுதலை கிடைத்தது.இத்தனைக்கும் வலிப்பின் மருந்துகளில் கேக்டஸ் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்புதிய பதிப்பு,பாகம் 1,2.முன்னுரை பக்கம்:XI).

சிறு நீரக வலிக்கான சிகிச்சை பற்றி எடுத்துரைத்தவாறு கூறுகின்றார்கள்;
விடாத நோய்கள் தொடர்பாக நோயாளியை அவசியம் நேரில் அமர வைத்து அது குறித்து விரிவாக ஆராய வேண்டும்.எனக்கும் ஒருமுறை ஒரு சிறு நீரக நோயாளி பற்றிய அனுபவம் இருக்கின்றது.நான் அவருக்கு நோயின் தாக்கத்தை உடனடியாக நிறுத்துவதற்காக அகோனைட்டம் (aconitum) மற்றும் பெல்லடோனா(belladonna)போன்ற பிரசித்தி பெற்ற மருந்துகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்க வில்லை.அப்போது என் சிந்தனையில் நான் அவருக்கு வெப்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்குளிரில் பயனளிக்கும் மருந்துகளைக் கொடுக்கிறேன் என்று தோன்றியது. அந்த நோயாளிக்கு குளிர்ந்த நீரில் குளிப்பதில் மிகவும் வேதனை ஏற்பட்டிருந்தது. நான் இவ்விஷயத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு மேக்னீஷியம் ஃபாஸ்(mag phos) மற்றும் கோலோஸின்த்(colocynthis)சேர்த்துக் கொடுத்ததால் சிறிது நாட்களிலேயே சரியாகி விட்டார்-"
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்,புதிய பதிப்பு,பாகம் 1,2-முன்னுரை -பக்கம் XI).

கேங்க்ரைன்(அழுகுதல்) போன்ற உயிர்கொல்லி நோயிலிருந்து நலம் பெற்ற சம்பவங்களைப் பற்றி எடுத்துரைத்தவாறு கூறுகின்றார்கள்;
"ஒரு இளைஞனின் கை இயந்திரத்தில் மாட்டி சீர்குலைந்தது.அவருடைய காயம் ஆறவில்லை. அது சீர்குலைந்து அழுகியது.டாக்டர்கள் கவலையடைந்து முதலில் கட்டை விரலையும் பிறகு கையையும் வெட்டி எடுக்க ஆலோசனை வழங்கினர்.நான் அவருக்கு ஆர்ஸனிக்(arsenic)CM கொடுக்க ஆலோசனை வழங்கினேன்.மேலும் ஒரு வாரம்,பத்து நாட்கள் தொடரும்படி கூறியிருந்தேன்.சில வாரங்களுக்குப் பிறகு அவர் வலி இருக்கத்தான் செய்கிறது ஆனால் கருமை நிறம் மெது மெதுவாக சிவப்பாக மாறி வருகிறது என்று எனக்கு எழுதியிருந்தார். சில நாட்களிலேயே அல்லாஹ்வின் அருளால் முற்றிலும் சரியாகிவிட்டது.கையை வெட்டுவது ஒருபுறமிருக்கட்டும்.விரல்களை வெட்டவும் கூட அவசியம் ஏற்படவில்லை.
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்,புதிய பதிப்பு,பாகம் 1,2-முன்னுரை –பக்கம் 96)

கேன்ஸர் போன்ற மோசமான நோயிலிருந்து அற்புதமான முறையில் குணமடைந்ததை எடுத்துக் கூறியவாறு கூறுகின்றார்கள்:
ஒருவேளை ப்ராஸ்டட்  க்லேண்ட்ஸ் ,சிறு நீரகம் மற்றும் சிறு நீரகப் பை நோய்களில் ஆர்ஸெனிக்கின் அறிகுறி இருந்து,ஆர்ஸெனிக் மட்டுமே போதுமானதாக இல்லையென்றால் பாஸ்பரஸ் அதற்கான சிறந்த மருந்தாக அமையும்.இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக கொடுப்பதும் எனது அனுபவத்தின் அடிப்படையில் மிக பயனுள்ளதாக இருக்கும்.இதே மருந்து கேன்ஸரையும் குறைக்கக் கூடியதாக இருக்கும்.இம்மருந்தை டாக்டர்களால் ஒரு வாரத்திற்கும் அதிகமாக இருக்கமாட்டார் என்று கூறப்பட்ட நோயாளிக்கும் கொடுக்கப் பட்டு அவருக்கு அந்த நோயிலிருந்து நல்ல முன்னேற்றமும் ஏற்பட்டது.இறைவனருளால் அவர் அதற்குப் பிறகு ஒரு வருட காலம் எந்த வேதனையுமின்றி வாழ்ந்தார்."-
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்,புதிய பதிப்பு,பாகம் 1,2-பக்கம் 97)

போலியோ சிகிச்சை பற்றி கூறினார்கள்;
"ஒரு பையனது கால்கள் போலியோவின் பாதிப்பால் கோணலாகியிருந்தது. அவனுக்கு ஸல்ஃபர் (sulpher) மற்றும் பரைட்டா கார்ப்(baryta carb)கொடுக்கப் பட்டது. அதனால் அவன் வழக்கமான வாழ்வினை கழிக்கிறான். முழுமையாக குணம் பெறவில்லை யென்றாலும் நடக்கிறான். இத்தனைக்கும் மருத்துவர்கள் அவன் வளர வளர அவனது வலியும் வளர்ந்து கொண்டே செல்லும் என்று கூறினார்கள்"-
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்,புதிய பதிப்பு,பாகம் 1,2 -பக்கம் 131)

நுரையீரலின் துளை அடைபட்ட அற்புத சிகிச்சை பற்றி கூறினார்கள்;
"ஒரு பெண்மணியின் நுரையீரலில் காச நோய் காரணமாக துளை ஏற்பட்டுவிட்டது. டாக்டர்களை பொறுத்த வரை அவருக்கு எந்தவொரு சிகிச்சையும் செய்ய இயலாது என்று கூறி விட்டனர்.அவருக்கு ஹோமியோபதி முறையில் merc sol 200,மற்றும் kali carb 30 ஆகிய மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு சில மாதங்களிலேயே பரிபூரண குணமடைந்து விட்டார்.மருத்துவமனையில் டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்த போது துளையின் சுவடே இல்லாமலிருந்தது.அவர்கள் அதே நோயாளிதான் என்று நம்புவதற்கும் தயாராகவில்லை."
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்,புதிய பதிப்பு,பாகம் 1,2 -பக்கம் 164)

ஆஸ்துமாவின் கவலைக்கிடமான சூழ்நிலை பற்றி எடுத்துரைத்த வாறு கூறுகின்றார்கள்;
"ஒருமுறை ஒரு ஆஸ்துமா நோயாளி அந்த நிலையிலேயே(மார்பில் சளி அதிகரித்த நிலையில்)துன்பமுற்றிருந்தார்.மேலும் நிலைமை மிக கவலைக் கிடமானதாக இருந்தது. நான் அவருக்கு கார்போ வெஜ் (carbo veg)கொடுத்தேன்.அதனால் உடனடியாக அவரது உடல் சக்தி பெற்றது.சளி வெளியேறியது.தடை பட்டிருந்த மூச்சை சுலபமாக மறுபடியும் விட முடிந்தது.அதற்குப் பிறகுஆஸ்துமாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த நோயாளி குணமடைந்தார்.கார்போ வெஜ் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பயன் தரக் கூடிய மருந்தாகும்.ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறி யாதெனில் குளிர்ந்த வியர்வை உருவாகி நோயாளியின் உடல் நனைந்து போய் விடும்.ஆயினும் அது காற்றை நாடும்.எனவேதான் சில நேரங்களில் அவரது முகத்தில் விசிறிவிட வேண்டியுள்ளது.
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்,புதிய பதிப்பு,பாகம் 1,2 -பக்கம் 242 லிருந்து243வரை))

தாடை எலும்பின் கேன்ஸர் பற்றி கூறுகின்றார்கள்;
ஒரு பெண் இந்த நோயினால் மிகுந்த அவதியுற்றிருந்தார்.முகத்தின் ஒரு புறம் மிகவும் வீங்கியிருந்தது.கண்களிலும் அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.மேலும் கத்தும் அளவு வலி இருந்தது.பல நாட்கள் ஒரு சிறந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.ஆயினும் டாக்டர்களின் எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. இறுதியில் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி மருத்துவ மனையிலிருந்து அனுப்பி விட்டார்கள்.நான் அவருக்கு ஸ்ல்ஃபர்(sulpher CM) ஒரு வேளை கொடுத்தேன். அதனால் அவரது வலி குறைந்தது. இரு வாரங்களிலேயே வீக்கம் வெகுவாக குறைந்து விட்டது.பிறகு நான் அவருக்கு ஸைலிஷியா(silicia) CM ஒரு வேளைக்குக் கொடுத்தேன்.அதனால் தடைபட்டிருந்திருந்த குணம் பெறும் வேகம் சீர் பெற்றது.அதற்கு சில நாட்கள் கழித்து ஸல்ஃபர் CM மறுபடியும் கொடுத்ததால் நோய் சென்ற இடம் தெரியவில்லை.இது நடந்தேறி பல அண்டுகள் ஆகி விட்டன.இன்றும் அந்த பெண் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளார்."
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்,புதிய பதிப்பு,பாகம் 1,2 -பக்கம் 427 லிருந்து428வரை)

குடல் வால் நோயிருந்து அற்புதமான முறையில் நிவாரணம்;
நான் ஐரிஸ் டெனக்ஸ்(iris tenax) ஐ ஆர்னிகா(arnica)மற்றும் பிரயோனியா (bryonia) வோடு சேர்த்து 200ன் ஆற்றலில் கலந்து குடல் வால் வலியின் போது அடிக்கடி உபயோகித்திருக் கிறேன் .மேலும் இது மிக பயனுள்ள மருந்தாக,வியக்கத் தக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்தாக நிரூபணமாகியுள்ளது.ஒருவேளை இறுக்கத்தின் அறிகுறி வெளிப்படையாக இருந்தால் பிரயோனியாவிற்கு பதிலாக பெல்லடோனா வை பயன் படுத்த வேண்டும். சில நேரங்களில் குடல்வாலின் காரணத்தால் மிக அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.மேலும் இவ்வேதனை கடுமையானதாகி விடுகிறது. இம்மூன்று மருந்துகளும் சேர்ந்து அந்நிலையை சீர் செய்து விடுகிறது..
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்,புதிய பதிப்பு,பாகம் 1,2-பக்கம் 480 லிருந்து481வரை)

மதுப்பழக்கத்திலிருந்து விடுதலை

ஒரு மனிதர் குடிப்பழக்கத்தைக் கொண்டிருந்தார்.அவர் எந்த அளவுக்கு மது
மயக்கத்தின் பழக்கமுடையவராக இருந்தார் என்றால் ஒரு மணி நேரம் கூட அவரால்
மதுவின்றி இருக்க முடியாமலிருந்தது.ஆனால் இந்த சாபத்திலிருந்து மீள நினைத்தார்.ஆனால் எந்த சிகிச்சையாலும் அவருக்கு பலன் கிடைக்கவில்லை.நான் அவருக்கு ஸல்ஃபோரிக் ஆஸிட்டின் ஒரு துளியை ஒரு தம்ளர் நீரில் கலந்து ஒரு நாளில் மூன்று முறை பயன்படுத்த ஆலோசனை கொடுத்தேன். இரண்டுமூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் முற்றிலும் குணமடைந்து விட்டார் என்று எனக்கு தகவல் கிடைத்தது.உண்மையில் சிறிது நாட்களுக்குள்ளாகவே அவரால் மதுவை வெறுத்து விட்டார்.
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்;பக்கம்;797)

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் ஹுஸூரின் சிகிச்சையால் குணமடைந்தனர்: கீழே நான் மருத்துவர்களால் கைவிடப்பட்ட அல்லது அறுவை சிகிச்சையே தீர்வு என்று கூறப்பட்ட நோயாளிகளை குணப்படுத்திய சில சம்பவங்களை கூறவுள்ளேன். ஹுஸூர் அவர்கள் varicose veins பற்றிய சம்பவத்தைக் கூறுகிறார்கள்:
சில நேரங்களில் காலின் நீல நரம்புகள் வீங்கி முடிச்சு போன்று ஆகி விடும். இதனை varicose veins வெரிகோஸ் வெய்ன்ஸ் என்று கூறுவர். பெண்களூக்கு இந்த வேதனை அதிகம் ஏற்படும்.நரம்புகளில் ரத்தம் அடர்த்தியாகி உறையத் தொடங்குகிறது. ஆங்கில மருத்துவத் தில் அறுவை சிகிச்சை வாயிலாகவே இதற்கு சிகிச்சை அளிக்க முடியும்.ஆனால் ஹோமியோ பதியில் இந்த நரம்புகளை சீர் செய்யும் பல மருந்துகள் உள்ளன. அம்மருந்துகளில் ஒன்று ஸல்ஃபர் ஆகும்.
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்;பக்கம்;801,802)

ஹுஸூர் அவர்கள் கல்லீரல் புற்றுநோய் பற்றி கூறுகிறார்கள்:
சில நோயாளிகளுக்கு கல்லீரல் புற்று நோய் என்று மருத்துவர்கள் திட்டவட்டமாக முடிவெடுத்து அனைத்து விதமான கதிர்வீச்சுக்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்திய பிறகு கைவிடப்பட்ட  நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கான விருந்தாளிகள் என்று மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்தால் (ஸல்ஃபர்+பிரயோனியா 30+கார்டோஸ் மர்யான்ஸ் மதர் டின்க்சர் 200) சிகிச்சை அளிக்கப்பட்டு மூன்று நாட்களில் இறக்க வேண்டியவர்களை மூன்று நாட்களில் குணமடையும் அறிகுறிகள் தென்பட்டன.
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்;பக்கம்;190)

அவர் வக்ஃபே ஜதீதில் பணியாற்றிய மதிப்பிற்குரிய உஸ்மான் அஹ்மது என்ற நண்பர் ஆவார்.மேலும் 14 வருடங்கள் உயிர் வாழ்ந்தார். ஹுஸூர் அவர்கள் சூரிய கிரகணத்தால் குருடரான ஒருவரைப் பற்றி கூறுகிறார்கள்; "சூரிய கிரகணத்தின் போது சூரியனை பார்ப்பதனால் விழித்திரையில் அதிக தாக்கம் ஏற்படுகிறது.பல வருடங்கள் கழிந்து மெது மெதுவாக அதன் தாக்கம் வெளிப்படுகிறது. ஆங்காங்கே கரும்புள்ளி தென்பட ஆரம்பிக்கிறது. சில நேரம் வலக் கண்ணின் பார்வைத்திறன் குறைகிறது.சில நேரம் இடக் கண். மேலும் அப்படிப்பட்ட நோயாளி சிறிது சிறிதாக முற்றிலும் குருடராகி விடுகிறார். மேலும் அப்படிப்பட்ட குருட்டுத் தன்மைக்கு மருத்துவமே இல்லை. இன்றைய நாட்களில் கதிர்வீச்சின் மூலம் சிகிச்சை அளிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அதனால் தற்காலிக பயன் தான் ஏற்படுகிறது. இந்நோய்க்கு மெர்க் கார்(merc cor) மிகச் சிறந்த மருந்தாகும்.ஒரு லட்சம் ஆற்றலில் மாதமொரு முறை உட்கொள்வதனால் அல்லாஹ்வின் அருளால் சிறந்த பயனைத் தருகிறது."
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்;பக்கம்;556)

ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லாத நோய்கள் பற்றிய ஹுஸூர் அவர்களது ஆராய்ச்சிகள்

மருத்துவ உலகில் குறிப்பாக புதிய புதிய நோய்களை தடுப்பதற்கான மருந்துகளைக் கண்டு பிடிப்பது மற்றும் புதிய சிகிச்சை முறைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்ற விஷயத்திலேயே  மருத்துவர்களது முழுக்கவனமும் உள்ளது. ஆகவே இன்றைய கால நோய்களுக்காக ஹுஸூர் அவர்கள் கண்டுபிடித்த மருந்துகளைப் பற்றி கீழே குறிப்பிடப் பட்டுள்ளது.
(1) எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சைஇன்றைய கால கட்டத்தில் ஆங்கில மருத்துவம் கண்டுபிடிக்க முடியாமல் மிக அபாயகரமான பிரச்சினையாக உலகெங்கிலும் உருவெடுத் துள்ளது எய்ட்ஸ் நோய்தான்.ஆனால் ஹுஸூர் அவர்கள் MTA வில் இந்நோய்க்கான ஹோமியோபதி மருந்துகளை அறிவித்துள்ளார்கள். இந்நோய்க்கான மருந்தாக சைலீஷியாவை (silicea CM)முன் மொழிந்துள்ளார்கள். மேலும் ஹுஸூர் அவர்கள் இம்மருந்தின் உபயோகத்தால் அல்லாஹ் தனது அருளால் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸி லிருந்து ரட்சிப்பு பெற்ற சில உதாரணங்களையும் கூறியுள்ளார்கள்.
இம்மகத்துவமிக்க நிவாரணத்தை எடுத்துக் கூறியவாறு ஹுஸூர் அவர்கள் கூறுகிறார்கள்;"எய்ட்ஸும் கேன்ஸரைப் போன்று ஒரு மருந்தில்லா நோயாக கருதப்படுகிறது. பல்வேறு நாடுகளில் எனது மேற்பார்வையில் எய்ட்ஸ் நோய்க்கு சைலீஷியாCM(silicea)வின் சோதனை செய்யப்பட்டது.பல நோயாளிகளிடம் சைலீஷியா வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது."
(ஹோமியோபதி-இனமுறை மருத்துவம்பக்கம்;257).

(2)அணுக்கதிர்வீச்சின் அழிவிலிருந்து பாதுகாப்புஉலகம் தற்சமயம் அணுக்கதிர்வீச்சின் அழிவின் அச்சதால் நடுக்கத்துடனும்,ஏக்கத்துடனும் உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணுகுண்டை சோதித்துப் பார்த்ததோ அப்போதே குறிப்பாக துணைக் கண்டத்தின் மக்களுக்காகவும்,உலக மக்களுக்காக பொதுவாகவும் ஹுஸூர் அவர்கள் அணுகுண்டின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக மருந்துகளின் ஆலோசனைக் கூறியுள்ளார்கள்.இம்மருந்துகள் இனிவரும் காலங்களிலும் இவ்விதமான ஆபத்துகளின் போது பயனளிக்கலாம்.எனவே அன்னார் கார்ஸினோஸின் (carcinosinCM)அதாவது 100000 ஆற்றலிலும் ரேடியம் ப்ரோமைட் (radium bromide CM) 100000 ஆற்றலிலும் எடுத்துக் கொள்ள ஆலோசனை கூறியுள்ளார்கள். இம்மருந்துகள் அதிக அளவில் உபயோகப்படுத்தப்பட்டன.

(3)அலுமினியத்தின் நச்சுத்தன்மையிலிருந்து பாதுகாப்புஆரம்ப காலத்திலிருந்தே அலுமினிய பாத்திரங்களின் உபயோகம் இருந்து வருகிறது. ஆனால் உண்மை யாதெனில் அலுமினியத்தின் நச்சுத்தன்மை மனித உடலில் மெது மெதுவாக தீய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.மேலும் அதனால் பல கொடிய வியாதிகளும் உருவாகின்றன. ஹுஸூர் அவர்கள் இவ்வகை பாத்திரங்களின் தீய தாக்கங்களைப் பற்றி கவனமூட்டியதோடு அப்பாத்திரங்களின் பயன்பாட்டையும் விட்டுவிட அறிவுறுத்தி மனித   நேயத்தின் இந்த நன்மையையும் செய்தார்கள். அன்னார் இந்த நச்சுத்தன்மையின் தீய தாக்கங்களிலிருந்து தப்பிக்க அலுமினா ஆயிரத்தில்(alumina 1000)எடுத்துக் கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.
(அல்ஃபஸ்ல் தினசரி,டிசம்பர் 27,2003ம் ஆண்டு,பக்கம்-66)

(4)அவ்வாறே கேன்ஸர் கட்டிக்கான சிகிச்சை; "விரைவில் வெளிப்பட்டு விடுகின்ற கேன்ஸர் கட்டிகளுக்கு கோனியம் மிக பயனுள்ளதாகும்.ஏனெனில் ஆரம்ப கட்டதிலேயே கேன்ஸர் அறியப் பட்டு விடுகிறது. அவ்வாறான கட்டிகள் புண்ணாகினால் சுத்தமான தேனைத் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.எங்கு எந்தவொரு களிம்பும் வேலை செய்யவில்லையோ அங்கு தேன் வியக்கத்தக்க பலனளிக்கக் கூடியதாக இருக்கும்."
(அல்ஃபஸ்ல் இன்டர்நேஷனல்-2000மார்ச் 31,பக்கம்-10).

கானாவைச் சார்ந்த மதிப்பிற்குரிய மௌலவி அப்துல் கரீம் காலித் ஸாஹிப் அவர்கள் கேன்ஸர் நோயினால் பீடிக்கப் பட்டிருந்தார்கள்.அவர்களுடைய சிகிச்சை தொடர்பாக ஹுஸூர் அவர்களிடம் துஆவிற்காக விண்ணப்பிக்கப் பட்டிருந்தது. ஹுஸூர் அவர்கள் அவருடைய மருத்துவ ஆய்வறிக்கையை அனுப்பும்படிக் கூறினார்கள்.மேலும் லண்டனில் அஹ்மதி மருத்துவர்களின் ஒரு குழுவை அமைத்து அவ்வாய்வறிக்கையின் ஒளியில் ஆலோசனைகளை வழங்க அறிவுறுத்தினார்கள். அந்நோய்க்கு அலோபதி சிகிச்சை இல்லாத பட்சத்தில் ஹுஸூர் அவர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் ஹோமியோபதி வழிமுறை சிகிச்சை செய்ய வழிகாட்டினார்கள். மேலும் துஆவும் செய்தார்கள். அச்சமயம் நிலைமை எவ்வாறிருந்ததெனில் ஒவ்வொரு வாரமும் புதிய ரத்தம் வழங்கப்பட்டது. மேலும் ப்ளட் லெவல் மிகவும் குறைவாக இருந்தது. அவர் அக்ராவின் ஒரு சிறந்த மருத்துவ மனையில் ப்ரொஃபஸர் ஸகி அவர்களது கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.பின் அவருக்கு ஹோமியோபதி சிகிச்சையும் ஆரம்பிக்கப் பட்டது.ஹுஸூர் அவர்களது சிறப்பான் மற்றும்  வேதனை மிகு துஆக்களின் அருளினால் இறைவனின் அருளால் மௌலவி ஸாஹிபின் நோயில் அற்புதமான முறையில் விளைவுகள் தென்பட ஆரம்பித்தது. சில வாரங்களுக்குள்ளேயே அவர் தேறினார்.இவ்வாறு எப்படி நடக்க முடியும் என்று வியந்தனர். இறுதியில் டாக்டர்கள் சோத்திதுவிட்டு அவரை குணமடைந்தவராகக் கருதி வீட்டிற்கு திரும்ப அனுப்பினார்கள்.அச்சந்தர்ப்பத்தில்
(ஹகீகத்துல் வஹி,பக்கம் 480-481ல் இடபெற்றுள்ளது).

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் அலை அவர்கள் காலத்தில் வெறி நாயால் கடிக்கப் பட்ட "அப்துல் கரீம்" நினைவுக்கு வந்துவிடுகிறார்.அவரைப் பற்றி மருத்துவர்கள் "nothing can be done for abdul karim" கூறியும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் அவர்களின் துஆக்களின் அருளினால் இறப்பிலிருந்து மீட்டு ஒரு புதிய வாழ்வை அல்லாஹ் வழங்கினான். இவ்வாறாக மௌலவி அப்துல் கரீம் காலித் ஸாஹிப் உடல் நலம் பெற்று மறுபடியும் ப்ராங்க் அஹாஃபூ சென்றடைந்து முபல்லிகாக தனது பொறுப்பினை நிறைவேற்ற ஆரம்பித்தார்கள்.
(நூல்:ஹஸ்ரத் மிர்ஸா தாஹிரி வாழ்க்கை வரலாறு, தொகுதி-ஒரு வெற்றிகரமான ஹோமியோபதி மருத்துவர்).

நிறைவுரை

ஹுஸூர் ரஹிமஹுல்லஹ் அவர்கள் ஹோமியோபத்ய் வழி சிகிச்சையை ஜமாஅத்தில் அறிமுகம் செய்து வைத்து அதன் வாயிலாக பொதுவான இலவச சிகிச்சை செய்து மனித நேயத்திற்கு மாபெரும் தொண்டாற்றியுள்ளார்கள்.மேலு எவ்வித ஐயமுமின்றி லட்சக் கணக்கான அஹ்மதிகள் தற்போது தினசரி பிரச்சனைகளுக்கு ஹோமியோபதி மருந்துகள் மூலம் தாமாகவே சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இவ்வாறாக அவர்களது உடல் மட்டுமே நன்றாக ஆகிவிடவில்லை.மாறாக டாக்டர்களுக்கான பெரும் கட்டணம்,மருத்துவ மனைக் கான அலைச்சல்மருந்துகளுக்கான பெரிய செலவு எஞ்சி விடுகிறது.மேலும் தத்தமது பகுதிகளில் அவர்கள் ஹோமியோபதியின் மூலமாக மற்றவர்களுக்கும் இலவச சிகிச்சை செய்து மனித நேயத் தொண்டில் மூழ்கியுள்ளனர். நமது தற்போதைய இமாம் ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது அய்யதஹுல்லாஹுத்தஆல பினஸ்ரிஹில் அஸீஸ் அவர்கள் மருத்துவர்கள்,ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அறிவுரை வழங்கியவாறு கூறுகிறார்கள்."ஒவ்வொரு அஹ்மதி மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது நோயாளிகளுக்காக மனித நேய உணர்வுடன் தொண்டு செய்ய வேண்டும்.அல்லாஹ்வின் அருளால் நமது மருத்துவர்கள் (ரப்வாவிலும் சரி,ஆஃப்ரிகாவிலும் சரி) தங்களது ஆலோசனைச் சீட்டில் ஹுவஷ் ஷாஃபி என்று எழுதுகிறார்கள். ஒருவேளை உலகின் ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரிடத்திலும் இவ்வாறு எழுதி அதன் பொருளையும் எழுதிவிட்டால் அதுவும் மற்றவர்களிடத்தில் ஒரு தூய தாக்கத்தை ஏற்படுத்தி விடும் விஷயமுமாகி விடும். அல்லாஹ் தஆலாவின் அருளையும் ஈர்ப்பதாகிவிடும்.மேலும் இதன் காரணத்தால் அல்லாஹ் தஆலா அவர்கள் கையில் நிவாரணத்தையும் அதிகப்படுத்திவிடுவான்.அதே போன்று நோயாளிகள் தனக்கு அந்த மருத்துவர் சிகிச்சை செய்யதால் குணமாகிவிடும்,அல்லது அந்த மருத்துவமனை மிகச் சிறந்தது அங்கு சென்றால் சரியாகி விடுவேன் என்று சிந்திக்கக் கூடாது. சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்தான்.ஆனால் முழுவதுமாக அதனை சார்ந்திருக்கக் முடியாது,மாராக எப்போதும் குணமளிப்பவன்(ஷாஃபி) அல்லாஹ்தான் என்றெண்ண வேண்டும்.
(ஜுமுஆ உரை,2008, 19 டிசம்பர்,2008...)

அல்லாஹ் தஆலா நமக்கு ஹுஸூர் அவர்களின் வழிகாட்டலின் ஒளியில் ஹோமியோபதி வழி சிகிச்சையை புரிந்து அதனால் பயன்பெறும் நல்வாய்ப்பை வழங்குவானாக.மேலும் அல்லாஹ் தஆலா அனைத்து அஹ்மதிகளுக்கும் ஆன்மீக, பௌதீக பூரண சுகத்தை வழங்குவானாக .அனைத்து நோயாளிகளுக்கும் சுகத்தினை வழங்குவானாக. மேலும் துன்பத்திலிருக்கின்ற மனிதர்களுக்கு நிறைவான ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் தொண்டாற்றும் நற்பாக்கியத்தை வழங்குவானாக.. ஆமீன்.


(தமிழ் மொழியாக்கம் | மௌலவி சுல்தான் முஹய்யுத்தீன் சாஹிப் | திருச்சி)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.