மொரீஷியஸ் இரட்டை போலி யூத பல்ஆம்களின் கதை

இறுதி காலத்தின் இமாம் மற்றும் இறுதி ஆயிரம் ஆண்டுகளின் முஜத்தித் ஆகிய ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி (அலை) அவர்களின் கலீஃபாவுடன் மோத நினைத்து இழிவடைந்து போன

மொரீஷியஸ் இரட்டை போலி யூத பல்ஆம்களின் கதை

அத்துடன், மொரீஷியஸ் இரட்டை பல்ஆம்களின் சீடர் ஒருவரின், ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) மீதான பகிரங்கமான இட்டுக்கட்டும், நபி பெருமானாரையும் (ஸல்), அன்னாரது ஆருயிர்த் தோழர்களையும் இழிவுபடுத்தி, மட்டப்படுத்திய கண்டனத்திற்குரிய கொடுஞ்செயலும் !!!

ஓர் எளிய(வனின்) ஆய்வும், நியாயமான கேள்விகளும் !!! 

اَفَرَءَیۡتَ مَنِ اتَّخَذَ اِلٰـہَہٗ ہَوٰٮہُ وَاَضَلَّہُ اللّٰہُ عَلٰی عِلۡمٍ وَّخَتَمَ عَلٰی سَمۡعِہٖ وَقَلۡبِہٖ وَجَعَلَ عَلٰی بَصَرِہٖ غِشٰوَۃً ؕ فَمَنۡ یَّہۡدِیۡہِ مِنۡۢ بَعۡدِ اللّٰہِ ؕ اَفَلَا تَذَکَّرُوۡنَ

தனது மன இச்சைகளை தனது கடவுளாக ஆக்கிக் கொண்டவனை நீர் பார்த்தீரா? மேலும் அல்லாஹ் தனது ஞானத்தின் அடிப்படையில் அவனை வழிதவறியவன் என்று தீர்மானித்து, அவனது காதுகளிலும், அவனது உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது கண்களில் திரையிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வு(டைய இச் செயலு)க்குப் பின்னர் அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யார்? நீங்கள் அறிவுரையினைப் பெற்றுக் கொள்வதில்லையா? ( திருக்குர்ஆன் 45: 24 )

கிலாஃபத்திற்கு எதிராக கூட்டணி

மொரீஷியஸில் தங்களுக்கும் வஹீ வருகின்றது என்று கூறி, காலத்தின் கலீஃபாவிற்கு
எதிராக
மோதிய, மோதிக்கொண்டிருக்கின்ற இரண்டு போலி பல்ஆம்களே முனீர் அஸீம் ஸாஹிபும், ஜஃபருல்லாஹ் டோமன் ஸாஹிபும். முனீர் அஸீமும், ஜஃபருல்லாஹ் டோமனும் (உலக வரலாற்றிலேயே, வஹி வருகின்றதென்று இரட்டை வாதம் செய்து, இரண்டே வருடங்களில் அடித்துக் கொண்டு பிரிந்தவர்கள்!!! இப்பொழுது ஒருவர் இன்னொருவரை பார்த்து காரூன், இப்லீஸ், நயவஞ்சகர் என்றெல்லாம் வசை மாரி பொழிகின்றார்கள், எங்கள் மீது வஹி மாரி பொழிகிறது என்று முன்னர் வாதிட்ட இந்த புண்ணியவான்கள் !!

இவர்கள் இருவரும், எங்களை இறைவன் இரண்டு கலீலுல்லாஹ்க்களாக (ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் பதவி), அமீருல் முஃமினீன்களாக, முல்ஹிம்களாக (வஹி பெறுபவர்) நியமித்து ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் பணியை தொடர்வதற்காக அனுப்பியுள்ளான் என்று வாதித்தார்கள். மேலும் தாங்கள் ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி) அவர்களுக்கு இது குறித்து எழுதியதாகவும், உங்கள் முடிவு அச்சத்திற்குரியதாக இருக்கும் என்று அன்னார் எச்சரித்ததாகவும் கூறுகிறார் டோமன் !!

அதனை தங்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் இணைய தளத்தில் அறிவித்தார்கள். (பார்க்க படம்: ஜஃபருல்லாஹ் டோமனின் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியிட்ட வாக்குமூலம்.)


இந்த வாக்குமூலத்தின் இறுதியில் டோமன் கையெழுத்திட்டு, அதன் கீழே, முனீரும் தன்னைப் பற்றி டோமன் கூறியது உண்மை என்று அத்தாட்சிப் படுத்தியுள்ளார்.

இந்த வாக்குமூலத்தில் எங்குமே இவர்கள் தங்களைக் குறித்து நபி, ரஸூல் என்று வாதிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

அலைஹிஸ்ஸலாம் என்று கூறுவதில் கூட தடுமாற்றம்

இன்று வரையிலும் கூட இவர்களுடைய் வெப்சைட்டில் முனீர் அஸீமுடைய பெயருக்குப் பின், கலீஃபத்துல் மஸீஹிற்கு நாம் உபயோகிப்பது போல் ABA-அய்யதுஹுல்லாஹ் ......என்ற துஆவே சேர்க்கப்பட்டுள்ளது. கீழே உள்ளது , சமீபத்தில் (ஜுன் 2022) உள்ள பதிவு.



ஆனால், நமது லோக்கல் முனீர் சிஷ்யப் புள்ளைகள், வாய்க்கு வாய் முனீர் (அலைஹிஸ்ஸலாம்) என்று தான் கூறுகிறார்கள், குருவுக்கு வராத, குருவுடைய நெருங்கிய சீடர்களுக்கும் வராத வஹி, தமிழ் பேசும் சிஷ்யக் குட்டிகளுக்கு வந்ததோ ??

இறைவனின் கட்டளை (!?)

முனீர் கூட ஒரு பேட்டியில் தான் தன்னையும், டோமனையும் சேர்த்து இரட்டை தூதர்களாக, நற்செய்தி கூறுபவர்களாக, எச்சரிக்கை செய்பவர்களாக இறைவன் அனுப்பியதாக கூறுகிறார். மேலும் இது இறைவனின் கட்டளை என்றும் , அவன் தான் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற தன்னுடைய அமைப்பை இஸ்லாத்தின் சீர்திருத்தத்திற்காக நியமித்துள்ளான் என்றும் கூறுகிறார்.

Ahmadiyya News என்ற பத்திரிகை பேட்டியின் ஒரு பகுதி


 

குடுமிப்பிடி சண்டையும், வசை மாரிகளும் 

இவ்வாறு டாம்பீகமாக, அறிவித்த இரண்டே ஆண்டுகளில், குடுமிப்பிடி சண்டை வந்துவிட்டது !! பிறகு ஒருஇப்ராஹீம் - முனீர் இன்னொருஇப்ராஹீம் - டோமனை பார்த்து (நவூதுபில்லாஹ்) பல்ஆம் (மூஸா(அலை) காலத்தில் வஹி பெற்றிருந்த ஒரு வலி, மூஸாவுடன் மோதியதால் அழிக்கப்பட்டார்) என்றும்

2)   காரூன் (மூஸா(அலை) காலத்தில் மண்ணுக்குள் புதைந்து போன செல்வந்தன்) என்றும்

3)   இப்லீஸ் என்றும்

4)   நயவஞ்சகர் என்றும்

5)   ஒருவர் பார்வையில் இன்னொருவர்ஆகக் கேடு கெட்ட படைப்பு என்றும்

வசை மாரி பொழிந்துக் கொண்டனர்.

1)    டோமனின் பார்வையில் முனீர் கேடுகெட்ட படைப்பு ஆகிவிட்டாராம் ! (Spiritual Reflections: Zafrullah Domun Sahib: Shifting Views)

ஆதாரம்:

2)  டோமன் ஒரு இப்லீஸ், நயவஞ்சகர் !! (Biography: Hazrat Amir'ul Momeneen Muhyi-ud-Din Munir Ahmad Azim)

ஆதாரம்:


3)  டோமன் ஒரு பல்ஆம் !! (Spiritual Reflections: Zafrullah Domun Sahib: Shifting Views)

ஆதாரம்:

4)  டோமன் ஒரு காரூன் !! (Spiritual Reflections: Zafrullah Domun Sahib: Shifting Views)

ஆதாரம்:

5)  டோமனும் அவருடைய ஜமாஅத்துல் முஸ்லிமீன் ஆட்களும் முனீரின் அந்தரங்க விஷயங்களை துருவ ஆரம்பித்துவிட்டார்கள் !! (Spiritual Reflections: Zafrullah Domun Sahib: Shifting Views)

ஆதாரம்:

டோமனிகள், அஜீமின்அந்தரங்கவிஷயத்தை தொண்டி, துருவ ஆரம்பித்த பொழுது, கீழ்க்காணும் திருமறை வசனத்தின் அடிப்படையில் முனீர் அஜீம் என்ன சொல்லி இருக்க வேண்டும்?

فَقَدۡ لَبِثۡتُ فِیۡکُمۡ عُمُرًا مِّنۡ قَبۡلِہٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ 

நான் இதற்கு முன்னர் உங்களிடையே ஒரு நீண்ட வாழ்நாளை கழித்திருக்கின்றேனே? இதன் பிறகும் நீங்கள் ஏன் உணர்வதில்லை? (திருக்குர்ஆன் 10:17)

அது மட்டுமா? இவர் இமாமாக ஏற்றுக் கொள்வதாக வாதிக்கும், இறுதி காலத்தின் இமாம், கடைசி ஆயிரம் ஆண்டுகளின் முஜத்தித், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) தன்னுடைய ஒழுக்கத்தைப் பற்றி என்ன கூறினார்கள்?

எனது ஆரம்பகால வாழ்க்கையில் எந்தக் குறையையோ, இட்டுக்கட்டுதலையோ, பொய்யையோ அல்லது வஞ்சகத்தையோ நீங்கள் சுட்டிக்காட்ட முடியாது, அதன் அடிப்படையில் பொய்க்கும், இட்டுக்கட்டுதலுக்கும் ஆளான ஒருவர் தனது கூற்றை பொய்யாக முன்வைத்ததாக நீங்கள் கருதலாம். உங்களில் யாராவது என் வாழ்க்கையில் ஏதேனும் தவறுகளை சுட்டிக்காட்ட முடியுமா? ஆரம்பத்திலிருந்தே அவன் என்னை நல்லலொழுக்கத்தில் உறுதியாக வைத்திருந்தான் என்பது இறைவனின் தூய கிருபையாகும், சிந்திப்பவர்களுக்கு இது ஒரு சான்றாகும். (தத்கிரத்துஸ் ஷஹாதத்தைன், பக். 62)”

ஆனால், முனீர் அஜீமின் பதில் என்ன தெரியுமா? அஜமி அஜீமிகளே ! சிந்திப்பீர் ! முனீர் கூறுகிறார்;அவர்கள் என்னுடைய அந்தரங்கத்தை துருவிப் பார்க்கவும் தயங்கவில்லை. ஆனால், நான் ஒரு போதும், அவர்களுடைய அந்தரங்கம்  குறித்து கேள்வி கேட்டதில்லை

ஆக, உண்மை இறைத்தூதர்களாகிய, எம்பெருமானார் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களும், அவர்களுடைய உண்மை பேரன்பர் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களும், எதிரிகளுக்கு விட்ட சவாலையும், கிலாஃபத்தின் எதிரி அஜீமுடையகெஞ்சலையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள், மேலே சொன்ன திருமறை வசனத்தின் அடிப்படையில்.

இங்கு தூதர் no.2 டோமன் என்ன கூறுகிறார் என்றும் பார்த்து விடுவோம்.

இந்த பக்கத்தில் http://jaam-international.org/eng/dec/newdec.htm , முனீர் ஸாஹிப், அவருடைய சொந்த ஜமாஅத்தினரால், அவருடைய வஹிக்களைப் பற்றியும், அவர் கூறிய சில விஷயங்களைப் பற்றியும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், பிடிவாதமாக இருந்து விட்டார் என்று சொல்கிறார் டோமன். அவருடன் பேச்கவார்த்தைக்கான எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தது என்று கூறுகிறார் டோமன்.

ஜமாஅத்துல் முஸ்லிமீன் பெயர் கூட உருவப்பட்ட அவல நிலை

6)   டோமனும் அவர் ஆட்களும், கோர்ட்டுக்கு போய், சட்டரீதியான மிரட்டல்களினால், முனீர் அஸீம் இனிமேல் ஜமாஅத்துல் முஸ்லிமீன் பெயரையே உபயோகிக்காமல் செய்து விட்டார்கள், அல்லாஹ்வின் கலீஃபாவையே பணிய வைத்து விட்டார்களாம். இறைவன் இறக்கிய பெயரை டோமன் பிடுங்கிக் கொண்டார்!! ஒரு நபியால் தன்னுடைய இயக்கத்தின் பெயரை கூட பயன்படுத்த முடியாத அவல நிலை !! அந்தோ பரிதாபம் !! (Biography: Hazrat Amir'ul Momeneen Muhyi-ud-Din Munir Ahmad Azim)

ஆதாரம்:

7)  மேலே உள்ள படத்தில், தன்னால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்ரஸூல்என்றழைக்கப்பட்ட டோமனுக்கு, இன்னும் மூன்று பட்டங்களை வாரி வழங்கி உள்ளனர் முனீரும் அவர் சீடர்களும். அதாவது டோமன்முர்த்தத்ஆகிவிட்டார், அவரும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் ஆட்களும் ஃபாஸிக்’ , ‘ காஃபிர்ஆகிவிட்டார்கள் – renounced his belief, rebellion, unbelief

இந்த வெட்கங்கெட்ட கூத்துகள் நடக்கும்போது, இரண்டே வருடங்களுக்கு முன் தான் இவர்கள் தங்கள் இருவரையும் கலீலுல்லாஹ்க்கள், தூதர்கள், எச்சரிக்கையாளர்கள், நற்செய்தி கூறுபவர்கள், அமீருல் முஃமினீன்கள், வஹி பெற்றவர்கள் என்று டாம்பீகமாக கூறியதை வசதியாக மறந்தே விட்டார்கள் !!

டோமனும், அஜீமுமே தங்களை பொய்யர்களாக்கிக் கொண்டார்கள்

ஆக இவர்களே, இவர்களின்இரட்டை வாதத்தைபொய்ப்படுத்திக் கொண்டனர். குழந்தையைப் பெற்ற தம்பதியே அதனை கொன்று புதைத்தது போல், இரட்டை வாதம் (தாவா) இரண்டே ஆண்டுகளில் கொல்லப்பட்டு. அடக்கமும் செய்யப்பட்டுவிட்டது. இனி அந்த செத்த பிணத்தை தோண்டி எடுத்து ஆராய்வதற்கு என்னதான் எஞ்சியிருக்கிறது? எவர் வாதித்தாரோ அவரே அதை பொய்ப்படுத்திய பிறகு, நமக்கு என்ன வேலைதான் எஞ்சி உள்ளது? இங்குள்ள சிஷ்ய குட்டிகள் அதை தூக்கி கொண்டு சுமக்கிறார்கள் ! செத்த பிணத்திற்கு உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்கள் !

ஒருவருக்கு இப்ராஹீம் கலீலுல்லாஹ், ரஸூல், நற்செய்தி கூறுபவர், எச்சரிக்கையாளர் என்ற பட்டங்களை வழங்கி அவருடன் சேர்ந்துதான் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது இறைவனின் கட்டளை, அதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம் தான்ஜமாஅத்துல் முஸ்லிமீன்என்ற இயக்கம் என்று வஹியின் அடிப்படையில் சொல்வதாக ஒருவர் வாதிடுகிறார். பின்னர் அவரே இரண்டு ஆண்டுகள் கழித்து, அதே நபரை பார்த்து காரூன், காஃபிர், ஃபாஸிக், முர்த்தத், இப்லீஸ், முனாஃபிக், பல்ஆம் என்று கூறுகிறார் என்றால்நானும் டோமனும் இரண்டு தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம்என்னும் இரட்டை வாதம் அவராலேயே பொய்யாக்கப்பட்டு கொல்லப்பட்டு விட்டது அல்லவா? இரண்டு வருடத்திற்கு முன்னால் சொன்ன வஹியெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட பொய் என்று அவரே நிரூபித்துவிட்டார் அல்லவா?

திருமறை டோமனையும் அஜீமையும் பொய்ப்படுத்துகின்றது

இப்படி டோமன் இவருடைய எதிரி ஆகப்போகிறார், அவர் மீது இவர் வசை மாரி பொழியப் போகிறார் என்பது மறைவான விஷயங்களை அறிந்த இறைவனுக்கு முன்பே தெரியும். பிறகு எப்படி டோமனுடன் சேர்ந்து நீ இஸ்லாத்தை சீர்திருத்த போகிறாய் என்று அந்த இறைவன் கூறுவான்? அவன் மறைவான விஷயங்களை தன்னுடைய தூதர்களுக்கு இறக்குவதாக கூறுகிறானே??

عٰلِمُ الۡغَیۡبِ فَلَا یُظۡہِرُ عَلٰی غَیۡبِہٖۤ اَحَدًا -اِلَّا مَنِ ارۡتَضٰی مِنۡ رَّسُوۡلٍ فَاِنَّہٗ یَسۡلُکُ مِنۡۢ بَیۡنِ یَدَیۡہِ وَمِنۡ خَلۡفِہٖ رَصَدًا 

அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை. அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர; பின்னர் அவன் (பாதுகாப்பளிக்கும் வானவர்களின்) காவற்படை ஒன்றினை அவருக்கு முன்னாலும், அவருக்கு பின்னாலும் செல்லுமாறு செய்கின்றான் (திருக்குர்ஆன் : 72:27,28)

இன்னும் சொல்லப்போனால், இங்கு ஒன்றுக்கு இரண்டு தூதர்கள், இரண்டே வருடங்களில் அடித்துக் கொள்வோம் என்பதை இரண்டு தூதர்களும் கிஞ்சிற்றும் அறியவில்லை என்றால், இந்த வசனம் இவர்களை பொய்படுத்துகின்றதா இல்லையா? மேலும், இவர்களுடைய பிரச்சனையில், ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி) அவர்களின் முன்னறிவிப்பையும் இந்த இரட்டையர் உண்மைப்படுத்தி விட்டார்கள். அது பின்வருமாறு,

நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களுக்கென்று ஒரு தனி ஜமாஅத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் முடிவு அச்சத்திற்குரியதாக இருக்கும் !!”

இதில் இரண்டு விஷயங்கள்,

  • படாடோபமாக, ஆரம்பத்தில் ஒரு ஜமாஅத்தை உருவாக்கினாலும், இன்றைய தினம், ‘ஒரே ஜமாஅத்தில்இருக்க முடியவில்லை. அதுவும் இரட்டையாகிவிட்டது !! ஒருவர் குடுமி இன்னொருவர் கையில் !!
  • அழிந்து போன காரூன், பல்ஆம் போன்ற பட்டங்களை வழங்கிக் கொண்டு, இவர்களே ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி) அவர்களின்உங்கள் முடிவு அச்சத்திற்குரியதாக இருக்கும்என்ற முன்னறிவிப்பையும் உண்மைப்படுத்தி விட்டார்கள்.
திருமறை கூறும் தண்டனை இறங்கிவிட்டது

ஆக, இந்த இரட்டையர்களே இவர்களின் வாதத்தை பொய்ப்படுத்திக் கொண்ட பின், இறைவன் இவர்களை ஏன் சீண்டப் போகின்றான்? அவர் வாதித்து எத்தனை வருடம் ஆகிறது என்று பார்ப்போம்.. என்பதெல்லாம் இங்குள்ள அஜமி அஜீமிகளின் பொய் பித்தலாட்டமே ஆகும். கீழ்க்காணும் வசனத்தின் அடிப்படையில் இறைவன் ஏற்கனவே இவர்களுக்கு தண்டனை அளித்து விட்டான்.

قُلۡ ہُوَ الۡقَادِرُ عَلٰۤی اَنۡ یَّبۡعَثَ عَلَیۡکُمۡ عَذَابًا مِّنۡ فَوۡقِکُمۡ اَوۡ مِنۡ تَحۡتِ اَرۡجُلِکُمۡ اَوۡ یَلۡبِسَکُمۡ شِیَعًا وَّیُذِیۡقَ بَعۡضَکُمۡ بَاۡسَ بَعۡضٍ ؕ اُنۡظُرۡ کَیۡفَ نُصَرِّفُ الۡاٰیٰتِ لَعَلَّہُمۡ یَفۡقَہُوۡنَ

நீர் (அவர்களிடம்) கூறுவீராக: உங்களுக்கு மேலிருந்தும், உங்கள் கால்களுக்கு கீழிருந்தும் தண்டனையை அனுப்புவதற்கோ உங்களைப் பல்வேறு பிரிவுகளாகப் (பிரித்து) சீர்குலைத்து ஒருவருக்கொருவர் செய்யும் கொடுமைகளைச் சுவைக்கச் செய்வதற்கோ அவன் ஆற்றல் பெற்றவனாவான். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் சான்றுகளை எவ்வாறு மீண்டும் மீண்டும் விளக்குகின்றோம் என்பதனை பார்ப்பீராக.( திருக்குர்ஆன் 6: 66 )

அதிலும் இந்த பிரிவும், சண்டையும், தூற்றுதலும் இஸ்லாத்தை சீர்திருத்த நியமிக்கப்பட்டதாக வாதித்த இரண்டு தூதர்களுக்கு நடுவில் என்பதுதான் காலக் கொடுமை !!

ஆனானப்பட்ட ஸலீமுக்கே டோமன் விஷயத்தில் சந்தேகம்

முனீரின் சிஷ்யர், ஆனானப்பட்ட ஸலீமுக்கே டோமன் விஷயத்தில் சந்தேகம் இருந்துள்ளது !! அதை முனீரே தன்னுடைய குத்பாவில் கூறியிருப்பது இன்னும் சிறப்பு !! அது என்ன சந்தேகம் ? என்ன தெளிவு கொடுத்தார் உங்கள் ஃபாஸிக் நபி என்று கேட்டோம், பதில் இன்னமும் வந்த பாடில்லை !!

ஆதாரம்:

20 October 2017 தேதியிட்ட ஜும்ஆ குத்பா


இன்னமும், உங்களுக்கும் ஜஃபருல்லாஹ் டோமன் ஸாஹிபுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து எனக்கு சந்தேகம் இருந்தது. – ஸலீமின் வாக்குமூலம்.

குருவுக்கு மிஞ்சிய சீடரின் இட்டுக்கட்டு

இப்பொழுது, முனீரின் லோக்கல் சிஷ்யக் குட்டியின் (ஸலீம்) விஷயத்திற்கு வருவோம். நம்முடைய ஆத்மீக சகோதரர் ஒருவர், இந்த விஷயங்களை எல்லாம் எடுத்துப் போட்டு, ஸலீமிடம் பதிலை கேட்டால், அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.  


இவர் இந்தஇரட்டை இப்ராஹீம்களில்முனீரின் சிஷ்யபுள்ளை ஆவார்!!

ஸலீமின் பகிரங்கமான இட்டுக்கட்டும், இழிவுபடுத்துதலும்

இவர் கூறுகிறார்: ஜபருல்லா டோமன் (முனீருடன் சண்டை போட்டு) வழி தவறிப் போனது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஏனென்றால் வலிமார்கள் கூட வழிதவறிப் போவார்கள். அதுவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் கூட ஆயிரம் பேர் பல்ஆம்களைப் போல் வழிதவறிச் சென்று உள்ளார்கள் என்று இட்டுக் கட்டி விட்டார். அதுவும் இந்த அபத்தத்தை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள் என்று அவர்களின் பெயரிலேயே இட்டு கட்டியுள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் !!! லஃனத்துல்லாஹி அலல் காதிபீன் !! இங்கு நீங்கள் பின்வரும் விஷயங்களை கவனிக்க வேண்டும்.  

  • ஜபருள்ளா டோமன் ஒன்றும் (ஸலீம் ஸாஹிப் கூறுவது போல்) பல்ஆமை போல வலியுல்லாஹ் என்று வாதம் செய்யவில்லை இவருடைய பொய் பாசிக் நபி முனீரும், இவரும்  சேர்ந்து இரண்டு தூதர்கள் என்று கூறியுள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் இரண்டு இப்ராஹிம் என்று வேறு வாதம் செய்துள்ளார்கள். யூத வலி வழி தவறலாம்.. முஸ்லிம் நபியோ தூதரோ இப்ராஹிமோ வழி தவறுவார்களா? குர்ஆனின் அடிப்படையில் கூறுங்கள் என்று கேள்வியைக் கேட்டால் அதற்கு பதில் இல்லை
  • ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் இவர் கூறக்கூடிய புத்தகத்தில் அவ்வாறு கூறவே இல்லை. அன்னார், ஹஸ்ரத் நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த யூத ஆலிம்களைக் குறித்தே பல்ஆம்என்று குறிப்பிட்டார்கள். அவர்களின் சொற்களின் உருது மூலத்தையும், தமிழ் மொழியாக்கத்தையும் இந்த கட்டுரையின் இறுதியில் நீங்கள் காணலாம்
  • இவர் (முனீர் சிஷ்யர்) நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களை விட மூஸா(அலை) அவர்களை ஆயிரம் மடங்கு மேலானவர் என்று பொய்யாக வாதிட்டு விட்டார். ஏனென்றால், மூஸாவை (அலை) ஏற்றுக்கொண்டவர்களில் ஒரு பல்ஆம், ஆனால் முஹம்மதை (ஸல்) ஏற்றுக்கொண்டவர்களில் ஓராயிரம் பல்ஆம்கள் !! (இன்னாலில்லாஹ்) ஆனால் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுதாயம், ஹஸ்ரத் மூஸா அலைஹிஸ்ஸலாமின் சமுதாயத்தை விட ஆயிரம் மடங்கு மேலானது என்று கூறுகிறார்கள். இவர் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஏற்றுக் கொள்கின்றோம் என்று கூறிக்கொண்டே அன்னாருக்கு எதிராக, அன்னார் கூறிய கருத்துக்கு நேர் எதிரான ஒரு கருத்தை (Diametrically opposite) அன்னாருடைய பெயராலேயே அதபு கெட்ட தனமாக முன் வைக்கின்றார்
  • ஸஹாபா பெருமக்களையும் (ரிஸ்வானுல்லாஹி அலைஹிம்) இழிவுபடுத்தி விட்டார். ஏன் என்றால் அவர்களில் ஆயிரம் பல்ஆம்கள் உருவாகிவிட்டார்கள் என்று பொய்யாகக் கூறி விட்டார்

சகோதரர்கள் ! தாங்களே படித்து பார்ப்பதற்காக, கீழே இவர் சொல்லக்கூடிய வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தரூரத்துல் இமாம் என்ற புத்தகத்தில் எழுதியுள்ள பக்கங்களின் மொழியாக்கம் வழங்கப்பட்டுள்ளது.  நீங்களே படித்துப்பாருங்கள்.

மஸீஹ் (அலை) உண்மையில் கூறியது என்ன?


 


உதாரணத்திற்கு, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றிய போது, ஆயிரக்கணக்கான ரப்பீக்கள் (யூத ஆலிம்கள்) இறை வெளிப்பாடுகள் மற்றும் ஆத்மீகக் காட்சிகளை பெறக் கூடியவர்களாக இருந்தனர். இறுதி காலத்தின் நபியின் வருகை அண்மையில் நடக்க போகின்றது என்ற நற்செய்தியை அவர்கள் தெரிவித்து வந்தார்கள். ஆனால் காத்தமுல் அன்பியாவாக இருந்த காலத்தின் இமாமை அவர்கள் ஏற்காததால் , அவர்கள் இறை கோபத்தின் இடி முழக்கத்தால் அழிக்கப்பட்டனர், மேலும் எல்லாம் வல்ல இறைவனுடனான அவர்களின் உறவுகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. (தரூரத்துல் இமாம், ஆங்கில பதிப்பு, பக்கம் 8)



உதாரணத்திற்கு, ஹஸ்ரத் மூஸா (அலை), அன்னாரது காலத்தின் இமாமாக இருந்தார்கள், மேலும் பல்-ஆம் அவரது காலத்தின் வலி (இறைநேசர்) ஆக இருந்தார். அவர் இறைத்தொடர்பை பெற்றவராக இருந்தார். அவருடைய பிரார்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இருப்பினும், பல்-ஆம், மூஸா (அலை) அவர்களுடன் மோதியபொழுது, ஒரு கூர்மையான வாள் உடலில் இருந்து தலையை உடனடியாக துண்டிப்பது போல, அந்த (மூஸா (அலை) உடனான) போட்டி, பல்-ஆமை அழித்து விட்டது. ஆனால், துர்ப்பாக்கியசாலி பல்-ஆம், எல்லாம் வல்ல இறைவன் ஒருவரிடம் பேசி, அவரைத் தனக்குப் பிரியமானவராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும் அறிவித்தாலும், இறை கிருபையின் நீரில், இன்னும் அதிகமாக மூழ்கிய ஒருவருடன் அவர் மோதினால், அவர் நிச்சயமாக அழிக்கப்படுவார் என்ற தத்துவத்தை அறிந்திருக்கவில்லை.. எந்த இறைவெளிப்பாட்டினாலும் அல்லது அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற உண்மையினாலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இது ஒரு பல்-ஆம் ஆகும், ஆனால் நமது புனித நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பல்-ஆம்கள் அழிந்து போயினர், ஏனென்றால் பெரும்பாலான யூத ரப்பீக்கள் (ஆலிம்கள்), (உண்மை) கிறிஸ்தவத்தின் மறைவுக்குப் பிறகு பல்-ஆமைப் போன்று ஆகிவிட்டனர். (தரூரத்துல் இமாம், ஆங்கில பதிப்பு, பக்கம் 19, 20)

இவ்வளவு வெளிப்படையாக ஒரு விஷயத்தை இட்டுக்கட்டி, அதுவும் இக்காலத்தின் இமாமின் பெயராலேயே இட்டுக்கட்டி, எம் பெருமானார் (ஸல்) அவர்களையும், அன்னாரின் ஆருயிர் தோழர்களையும் (ரலி) இறையச்சமின்றி இழிவுபடுத்தும் விதமாக எழுதி, கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிறகும், ஸலீம் அகங்காரத்துடன், தொடர்ந்து பேசி வருகிறார். இவரை எங்காவது கண்டால், இதே கேள்விகளை அவரிடம் கேளுங்கள். உங்களுக்கு உண்மை மிகத்தெளிவாக தெரிய வரும்.

வஸ்ஸலாமு அலா மனித்தபஅல் ஹுதா

நேர்வழியை பின்பற்றுவோர் மீது சாந்தி உண்டாகட்டுமாக !

இப்படிக்கு,

காலத்தின் கலீஃபா ஸய்யிதுனா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது (அய்யதுஹு..), ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் சிறிய தொண்டன் ஃபயாஸ் அஸ்லம் .

 

 

 

 

 

 

 

 

 

                                               

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.