அல்லாஹ் தஆலா ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு தமது உம்மத்தில் நிலவக்கூடிய சம்பவங்களில் பல்வேறு சம்பவங்களை கூறியுள்ளான். அதில் ஒன்று, "முஸ்லிம்களின் உள்ளத்திலிருந்து ஈமான் அகன்று விடும் மேலும் முஸ்லிம் என்று அழைக்கப்பட்ட போதிலும் ஈமானின் ஒளியை விட்டு நீங்கியவர்களாக இருப்பர்." ஆகும். ஒரு முறை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஈமான் கார்த்திகை நட்சத்திரம் வரை சென்றடைந்துவிடும். அப்போது ஃபாரசீக வம்சத்தை சார்ந்த ஒருவர் அதனை மீட்டுவார்." (ஸஹீஹ் புகாரி கிதாபுத் தஃப்சீர் சூரா ஜுமுஆ)மேலும் பிறிதொரு இடத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள், "இஸ்லாமின் பெயரும், குர்ஆனின் எழுத்து மட்டுமே எஞ்சிவிடும். மஸ்ஜித் வெளிப்படையாக நிரம்பிய வண்ணம் தென்படும் ஆனால் நேர்வழி எனும் ஒளியிலிருந்து காலியாக இருக்கும். முஸ்லிம்களின் உலமா மிகக் கேடுகெட்ட ஜந்துகளாக இருப்பர்." (மிஷ்காத் - கிதாபுல் இல்ம்)
இன்று உலகத்தில் இருக்கும் இஸ்லாத்தின் லீடர் மற்றும் சிந்தனையாளர்கள் "ஈமான் அழிந்துவிட்ட காலம் இதுதான். இன்று உண்மையான முஸ்லிமை பார்க்க முடிவதில்லை. நமக்கு தற்போது இறைவன் புறமிருந்து ஒருவர் வர வேண்டும்." என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

பிரசித்துப்பெற்ற சூஃபி க்வாஜா முஹம்மத் சுலைமான் துவன்ஸ்வி இவ்வாறு கூறுகின்றார்கள்:
"தற்போதைய காலத்தில் ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்களின் தோழர்கள் இருக்கின்றார்கள் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொண்டாலும், இன்றய காலத்து மக்களை காஃபிர் என்று கூறியிருப்பார்கள். ஏனென்றால், இன்றய காலத்து மக்கள் ஷரிஅத்தை பின்பற்றுவதை கைவிட்டு விட்டார்கள்." (நாஃபியுஸ்-ஸாக்கீன் பக்கம்-57)
இஹ்ராரின் சிந்தனையாளர் சௌத்ரி அஃப்ஸல் ஹக் சாஹிப் இவ்வாறு கூறுகிறார்:
"ஹிஜ்ரியின் முதல் நூற்றாண்டின் முஸ்லிம்கள் எவ்வகையிலாவது உயிருடன் இருந்து தற்போது இருக்கும் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தால் உடனே அவர்கள் "இங்குள்ள முஸ்லிம்களில் 80 சதவிகீதம் காஃபிராகா இருக்கிறார்கள்" என்று உரக்க கூறியிருப்பார்கள். இவர்கள் (இன்றய காலத்து முஸ்லிம்கள்) அரசியல் குறிக்கோளை பெறுவதற்காக மட்டுமே தம்மை தாமே முஸ்லிம் என்று கூறிக் கொள்ள துவங்கியுள்ளனர்." (பாகிஸ்தான் அவ்ர் அச்சோத், பக்கம்-19)
சிந்தனையாளராகவும், எழுத்தாளராகாவும் திகழ்ந்த அபுல் கலாம் ஆஸாத் சாஹிப் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"இன்று உலகம் மீண்டும் இருளாக மாறிவிட்டது. ஒளிக்காக தவித்து கொண்டிருக்கிறது.......எதற்காக மீண்டும் மீண்டும் அவர்கள் தேடினார்களோ அதனை அவர்கள் மறந்துவிட்டனர். எந்த துக்கத்தின் மருந்திற்காக இறை தூதர்கள் ஏங்கினார்களோ அதன் பலனாக கி.பி ஆறாவது நூற்றாண்டில் அல்லாஹ் தஆலாவின் கரங்கள் மூலமாக இறுதி மருந்து கிடைத்தது. கி.பி ஆறாவது நூற்றாண்டில் அறிவின்மை எந்த இருளை பரப்பியதோ அந்த துன்பம் நிறைந்த காலம் இன்று மீண்டும் உருவெடுத்துவிட்டது. அப்போதுதான் இஸ்லாம் மலர்ந்தது. அப்போது இருந்த அதே இருள் நிறைந்த காலம் இன்று நாகரீகம், பண்பாடு என்ற பெயரில் பரவியுள்ளது. தற்போது இஸ்லாம் தனது முதல் வறுமையில் இருக்கிறது." (அல்-ஹிலால் பாகம்-4, பக்கம்-102)
பிரசித்துப்பெற்ற கவிஞர் அல்லாமா டாக்டர் முஹம்மத் இக்பால் அவர்கள் தனது கவிதையில் இன்றய முஸ்லிம்களின் நிலையை பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார்;
"நீங்கள் (முஸ்லிம்கள்) வடிவமைப்பில் யூதனாக இருக்கின்றீர்கள், நாகரீகத்தில் ஹிந்துவாக இருக்கின்றீர்கள்;
இவ்வாறான முஸ்லிம்களை கண்டு யூதன் கூட கண்டு வெட்கப்படுகிறான்;
(நீங்கள்) ஒரு பக்கம் செய்யதாகவும், மிர்ஸாவாகவும், ஆஃப்கானாகவும் இருக்கின்றீர்கள்;
நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெயரில் இருக்கின்றீர்கள் ஆனாலும் முஸ்லிம்களாக இருக்கின்றீர்கள் என்பதை கூற (உங்களால்) முடியுமா?;
மவ்லான ஹாலி (இவரும் ஒரு மாபெரும் கவிஞர் ஆவார்) அவர்கள் இவ்வாறு தமது கவிதையில் எழுதுகின்றார்:
"மார்க்கமும் எஞ்சவில்லை, ஈமானும் எஞ்சவில்லை;
(ஆனால்) இஸ்லாம் என்ற பெயர் மட்டுமே (தற்போது) எஞ்சிவிட்டது;
அரபி கவிஞரும் மார்க்க அறிஞருமாகிய முஹம்மத் ரஸா ஷபீபி அவர்கள் தமது மிகவும் சிந்தனைக்குரிய கவிதையை
"ரூஹே பைகம்பர்" என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகின்றார்கள்: (மொழியாக்கம்)
"அஹ்மதே முஜ்தபா (ஸல்) அவர்களின் ரூஹ் (ஆன்மா) அருளுக்குரிய மேலுலகத்திலிருந்து நம்மிடம் வருகை தந்தால்,
அல்லது சற்று எட்டி (நம்மை) பார்த்தாலும் நம்மை கண்டு என்ன கூறுவார்கள் என்பதை நாம் அறிவதில்லை. (அதாவது என்னக் கூறுவார்கள் என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது) இன்று முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் வந்தாலும் அன்று மக்கத்து காஃபிர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை எவ்வாறு துன்புறுத்தினார்களோ அவ்வாறே இன்று நமது சமுதாயம் துன்புறுத்திவிடுவார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எந்த ஒளியை கொண்டு இந்த உலகத்திற்கு வருகை தந்தார்களோ அந்த ஒளியிலிருந்து எவ்வாறு குறைஷி மக்கா முகம் திருப்பி வழிகேட்டின் குழியில் சென்று விழுந்தார்களோ அவ்வாறே நாமும் அந்த உண்மையான ஒளியிலிருந்து முகம் திருப்பிவிட்டோம். மேலும் (அவர்கள் வருகை தந்தால்) இன்றய மக்கள் செல்லும் வழி நாம் கூறிய வழி அல்ல, இறுதி காலத்திலுள்ள மக்கள் எந்த மதத்தின் சங்கிலியை தமது கழுத்தில் போட்டுள்ளார்களோ அது எமது மதமாக இருக்காது என்று நிச்சயமாக கூறியிருப்பார்கள்." (தீவானுஷ் ஷபீபி, பக்கம்-107)
பாலஸ்தீனத்தின் கவிஞர் நஸார் குபானி அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: அவர்கள் அல்-ஃபத்ஹ் பாட்டின் வரிசையில் இவ்வாறு எழுதுகின்றார்:
" ஏ ஃபத்ஹ்...! நாம் கடந்த காலத்தின் மக்காவில் இருக்கிறோம். மேலும் மிகுந்த ஏக்கத்துடன் ஒரு நபியின் பிறப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்." (ஜதீத் இல்மே கலாம் கே ஆலமி தஅஸுராத், பக்கம்-45)
அஹ்லே ஹதீஸ் லீடர் ஜனாப் நூருல் ஹஸன் கான் சாஹிப் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"தற்போது இஸ்லாம் வெறும் பெயரளவிலும், குர்ஆன் வடிவளவிலும் எஞ்சிவிட்டது. மஸ்ஜிதில் வெளிப்படையாக பார்க்கும்போது நிரம்பியதாகத்தான் தெரிகிறது. ஆனால் நேர்வழி இல்லாமல் காலியாக இருக்கிறது. உலமாக்கள் மிக கேடுகெட்ட ஜந்துகளாக இருக்கின்றார்கள். இவர்களிலிருந்தே குழப்பங்கள் கிளம்புகின்றன இவர்களின் பக்கமே திரும்பி செல்கின்றன. (இக்திராபஸ் ஸாஅஹ், பக்கம்-96)
ஜமாத்தே இஸ்லாமியாவின் தோற்றுனர் ஜனாப் அபுல் அ ஃலா மவ்தூதி சாஹிப் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:
இன்றய முஸ்லிம்களில் ஆயிரத்தில் 999 பேர் இஸ்லாத்தை பற்றிய அறிவு இல்லை மட்டுமல்லாமல் உண்மை எது பொய் எது என்பதை பிறத்தறியக்கூடிய தன்மையும் இல்லை.........கேரக்டரை பொறுத்தவரை எந்த அளவுக்கு காஃபிர்களில் மக்கள் இருப்பார்களோ அந்த அளவுக்கு இந்த சமுதாயத்திலும் மக்கள் இருக்கின்றனர்." (முசல்மானானே ஹிந்த் கி ஸியாசி கஷ்மகஷ், பக்கம்-130)
முஸ்லிம் ஸ்காலர் ஜனாப் அஹ்மத் தீதாத் அவர்கள் கூறியதை பாக்கிஸ்தானில் வெளியிடப்படும் ஒரு பத்திரிக்கையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
"மதங்களை பொறுத்தவரை உலக அளவில் பிரசித்துபெற்ற முஸ்லிம் ஸ்காலர் அஹ்மத் தீதத் அவர்கள் ஓர் விஷயத்தில் மிகவும் துன்பத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்திய வண்ணம் இவ்வாறு கூறினார்கள், "இன்றைய முஸ்லிம்கள் தான் சுயமாகவும் இஸ்லாத்தின் படி அமல் செய்வதில்லை, இதனை பிரச்சாரம் மூலம் பரப்பி முஸ்லிம் அல்லாதவர்களையும் இந்த அருளிலிருந்து அவநம்பிக்கை கொள்ள செய்கின்றார்கள். இவர்களின் உதாரணம் ஓர் காவலாளி போன்றது எந்த கஜானாவின் அருகில் அவன் அமர்ந்திருக்கின்றானோ அந்த கஜானா யாருக்கும் எந்த பலனும் தராததாக இருக்கிறது." (ஜங்க் 12 அக்டோபர் 1987)
செய்யது காசிம் மஹ்மூத் சாஹிப் இஸ்லாமி டாயிஜிஸ்ட் ஆசிரியர் இவ்வாறு கூறுகின்றார்கள்:
"இன்று முழு உலக இஸ்லாமும் எந்த சமூகம், பொருளாதார மற்றும் உளவியல் நிலையில் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறதோ இவ்வாறு முந்தைய காலத்தில் அநேகமாக இருந்ததில்லை." (இஸ்லாமி டாயிஜிஸ்ட், ஜனவரி, பிப்ரவரி 1993 பக்கம்-19)
தஹ்ரீகே மின்ஹாஜுல் குர்ஆன் இன் தலைவர் தாஹிருல் காதிரி சாஹிப் அவர்கள் கூறுகின்றார்கள்:
"கடந்த இரண்டரை நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் அவநிலை சிறிய அளவிலே இருந்தது. அரசியல், சமத்துவம் மற்றும் சமூக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நடைமுறை, ஆன்மீகம், மதத்துவம், சிந்தனைகள், கல்வி போன்ற மற்ற அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. தற்போது ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது சிறு அளவிலானது இல்லை மாறாக ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும். இத்தகைய வீழ்ச்சியை அகற்றுவது என்பது முழுமையான மற்றும் பரந்த அளவிலான ஓர் புரட்சியை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் சாத்தியமாகும். (கவ்மி டாயிஜிஸ்ட், நவம்பர் 86 பக்கம்-30)

****தற்போதைய காலம் மசீஹாவின் காலமாக இருக்கிறது****
குர்ஆன் செய்கையாகவும் ஹதீஸ் தெளிவாகவும் மஸீஹ் மற்றும் மஹ்தி பற்றிய செய்தியை எடுத்து கூறுகிறது. ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் அவரை (மஸீஹை) ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு சலாம் கூறுவதற்கான உயிலையும் கூறியுள்ளார்கள்.
பெரும் அவசியமான இந்த காலகட்டத்தில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் ஸ்தாபகர் அல்லாஹ் தஆலாவிடமிருந்து செய்தியை பெற்று வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி நானே ஆவேன் என்று வாதம் செய்தார்கள். 1894 இல் வானில் சந்திரன் மற்றும் சூரியனுக்கு கிரகணத்தை ஏற்படுத்தி அன்னாரின் உண்மைத்துவதிற்கு சாட்சியாக அமைத்துவிட்டான்.
இன்று அன்னாரின் ஐந்தாவது கலீஃபா அவர்கள் முழு உலகிலும் உண்மையான ஏகத்துவத்தின் பக்கம் அழைக்கின்றார்கள். இறைவனின் அழைப்பை ஏற்பவர்கள் எவரேனும் உண்டா....?
(www.alislam.org இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது)
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None