இயேசு எப்போது பிறந்தார்.....? கிருஸ்தவர்கள் கிருஸ்மஸ் கொண்டாடுவது சரிதானா......?

பெரும்பாலான கிறிஸ்தவ ஆலயங்கள் டிசம்பர் 25 ஆம் தேதியை கிறிஸ்து பிறந்த தினமாக கிறிஸ்துமஸாக கொண்டாடி வருகின்றனர். உண்மையில் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 ல் பிறக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். இதனை பற்றி சில கிறிஸ்தவ அறிஞர்களின் கருத்துகளை கீழே காணலாம்.

டிசம்பர் 25 ல் தான் இயேசு கிறிஸ்து பிறந்த தினம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை…. நம்முடைய கிறிஸ்துமஸ் தினம் கி.பி 300 ஆம் வருடம் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிஷப்பார்ன்ஸ் "ரைஸ் ஆஃப் கிறிஸ்டியானிடி" எனும் நூலில், இயேசு பிறந்த மாதம் , தேதி குறித்த சரியான தகவல்கள் இல்லை. வருடம் பற்றிய குழப்பம் கூட இருக்கிறது. ஏப்ரல் அல்லது மே மாதம் இயேசு பிறந்திருக்கலாம் என்று கூறும் கணிப்புகளை அலெக்ஸாண்ட்ரியாவை சார்ந்த புனிதர் கிலமன்ஸ் சுட்டி காட்டுகிறார்." (சேம்பர்ஸ் கலைக்களஞ்சியம்)

"கிறிஸ்மஸ் ஆரம்பகால கிறிஸ்துவர்களின் பண்டிகையாக இருந்ததில்லை. கிறிஸ்மஸ் எந்த தினம்? என்பதில் கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை ஒருமைப்பாடு ஏற்படவில்லை. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தினமும், வருடமும் திருப்திகரமாக தீர்மானிக்கப் படவில்லை." (பிரிட்டானியா கலைக்களஞ்சியம்) 

திருக் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

திருக் குர்ஆனின் கூற்றுப்படி பேரீத்தப்பழங்கள் கனிந்திருக்கும் காலத்திலேயே இயேசு கிறிஸ்து பிறந்தார் அவர் பிறந்த உடன் ஒரு மலக்கு (வானவர்) அவருடைய தாயார் மரியாளை அழைத்து இவ்வாரு கூறினார்.

ஈச்ச மரத்தின் கிளைகளை உம்பக்கம் இழுப்பீராக, அது உன்மீது கனிந்த பேரீத்தப்பழங்களை உதிர்க்கும். (திருக் குர்ஆன் 19:26)

யூதேயா நாட்டில் பேரீச்சம்பழம் கோடைக்காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே கிடைக்கும். டாக்டர் டி, டேவிஸ் என்பவர் தம்து “டிக்‌ஷனரி ஆஃப் தி பைபிள்” என்னும் நூலில் ‘ஆண்டு’ என்ற தலைப்பின் கீழ் பேரீச்சம்பழம் யூத மாதமான ‘எலுல்’ மாதத்திலேயே கிடைக்கும். எனக் கூறியுள்ளார். பீக் என்பவரின் ”கமெண்டரி ஆன் தி பைபிள்” என்ற நூலில் 117 ஆம் பக்கத்தில் யூத மாதமான எலுல் ஆகஸ்ட், செப்டம்பரில் தான் வரும் எனக் கூறியுள்ளார். இவற்றிலிருந்து திருக் குர்ஆன் கூறுவது போன்று பேரீச்சம்பழம் கிடைக்கும் கோடைக்காலமான ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே இயேசு பிறந்திருக்க வேண்டும் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.

பிரசவ வேதனையினால், பலவீனமான, ஒரு பெண்ணின் அசைத்தலின் கூட விழுந்து விடக்கூடிய, கனிந்த நிலையில் அந்த கனிகள் இருந்துள்ளன. இது நிச்சயமாக குளிர் காலமாக இருக்க முடியாது என்பது நிருபணமாகிறது.

பைபிள் கூறுகிறது:

7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். (லூக்கா 2:7)

இங்கே, மரியாள் இயேசுவை (அலை) திறந்த வெளியில் பெற்றெடுக்க வேண்டியிருந்தது என்பது தெரிகிறது. ஏனென்றால் அவளுக்கு விருந்தினர் அறை எதுவும் கிடைக்கவில்லை. அவள் புதிதாகப் பிறந்த இயேசுவை (அலை) ஒரு வெளிப்புறத் தொட்டியில் ஒரு தற்காலிக தொட்டிலாக வைத்தாள். டிசம்பரின் பிற்பகுதியில் பெத்லஹேமில் சராசரி குறைந்த வெப்பநிலை 4-6 டிகிரி செல்சியஸ் மற்றும் டிசம்பரில் சராசரியாக 11 நாட்கள் மழை பெய்கிறது (அக்குவெதர்). மழை பெய்யும் போது, ​​உறைபனியுடன் கூடிய வானிலையில் ஒரு பெண் வெளியில் பிரசவிப்பது சாத்தியமா? இத்தகைய கடுமையான வானிலை நிலைகளில் புதிதாகப் பிறந்த குழந்தை உயிர்வாழ முடியுமா? இது மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது.

பிறகு, மேலே குறிப்பிடப்பதை போன்று குளிர்கால நிலை மிக மோசமாக இருக்கும் அச்சமயத்தில் யாரும் வெளியே செல்வார்கள் என்பது அரிதான ஒரு விஷயமாகும். அதுவும் நடை பயணம் மூலமாக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வதேன்பது முடியாத ஒன்றாகும். உயிர் போற விஷயமாகும்.

நாசரேத்திலிருந்து பெத்லகேமிற்கு இடைப்பட்ட தூரம் கிட்டதட்ட 145 கிலோ மீட்டர் ஆகின்றது. நாசரேத்திலிருந்து நடை பயணமாக பெத்லகேம் சென்றால் கிட்டதட்ட 30 மணி நேரமாகிறது.

அப்படிபட்ட குளிர் கால நிலையில் அன்னை மரியா அவர்கள் நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றார்கள் என்று சொன்னால் அவர்கள் மரணித்த நிலையில்தான் அங்கு சென்றிருக்க வேண்டும். அப்படிபட்ட குளிர் கால நிலையில் அவர்கள் சென்றிருக்கவும் மாட்டார்கள். அதுவும் கற்பமுற்ற நிலையில். ஆகவே அவர்கள் சென்ற காலம் குளிர்காலம் அல்ல மாறாக வெப்ப காலமாகவே இருந்திருக்கும் என உறுதியாகிறது என்பதை இங்கு சிந்திக்க வேண்டும். ஒன்று 

இரண்டாவது, மேய்ப்பர்கள் ஆடுகளை மேய்க்கவில்லை மாறாக அதனை காவல் காத்து வந்தனர் என்று சிலர் கூறுகின்றனர்.

அதாவது, அவர்கள் அப்படிப்பட்ட குளிர் காலத்தில் தமது வீட்டிலே அடங்கி இருந்து அங்கு தமது மந்தைகளை வைத்து காவல் காத்திருந்தால் ஓரளவு அவர்கள் சொல்வதை சரி என்று கூறலாம். ஆனால் பைபிளில் அந்த மேய்ப்பர்கள் மரியாள் பிரசவித்த நேரத்தில் வயல் வெளியில் அதுவும் இரவு நேரத்தில் தமது ஆட்டு மந்தைகளை காவல் காத்து கொண்டிருந்தனர் என்றல்லவா குறிப்பிடப்பட்டுள்ளது. பைபிளில் வருகிறது:

8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். (லூக்கா 2:7-8)

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், அவர்கள் தமது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த நிலையில் இரவு நேரம் ஆனதும் தமது வயல் வெளியிலேயே தங்கி தமது ஆட்டு மந்தைகளை காத்து வந்தனர்.

டிசம்பர் மாத குளிர் காலத்தில் இப்படி மேய்ப்பர்கள் வயல் வெளியில் தமது ஆடுகளை காத்து வந்திருக்க முடியுமா? முடியாது. 

ஆகவே இயேசுவின் பிறகு குளிர் காலத்தில் நிகழவில்லை மாறாக கோடை காலத்தில்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதும், கிருத்தவர்கள் இயேசு பிறந்த மாதமாக டிசம்பர் மாதம் என்று கருதி கிருஸ்மஸ் கொண்டாடுவது தவறே என்பதும் தெளிவாக நிரூபணமாகிறது. 

மேற்கோள்:

http://www.alislam.org/topics/jesus/

 

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.