காதியானில் 123 வது ஆன்மீக மாநாடு

மனித குலத்தின் நேர்வழிக்காக அல்லாஹ் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இந்த பூமிக்கு அனுப்பினான். இறைவன் தந்த முத்துக்கள் நிறைந்த திருமறை திருக் குர்ஆன் மூலமும் , தனது  இனிய போதனைகள் மற்றும் நன்னடத்தைகளாலும் இறைவனின் இருப்பையும், அவனின் மகத்துவத்தையும், நேர்வழி எது தீய வழி எது என்பதையும் மக்கள் மத்தியில் எடுத்து கூறினார்கள். அவர்களை தொடர்ந்து அவர்களின் கலீஃபாக்கள் (ரலி)இந்த இறை பணியை செய்து வந்தார்கள்.
  காலம் கடந்தது மக்களின் நிலை பரிதாபத்திற்குரிய நிலையாக மாறியது. ஷெய்தானின் செயல்பாடு உச்சகட்டத்தில் இருந்தது. அந்த நிலையில் அல்லாஹ் தனது வாக்குறுதிற்கேற்பவும், ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பிற்கேற்பவும் தனது நபியை , சீர்திருத்தவாதியை, மஹ்தியை காலத்தின் இமாமாக அனுப்பினான். அவர்களின் மூலமாக அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எனும் ஒரு ஜமாத்தை தோற்றுவித்து சீர்கெட்டு போன, வழி கேட்டில் இருந்த மக்களை மீண்டும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த வழியில் மீட்டு கொண்டு வந்தான். இவ்வாறு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்த "ஒரு காலத்தில் ஈமான் கார்த்திகை நட்சத்திரம் வரை அடைந்து (காணாமல் போய்) விடும். அப்போது (சல்மான் ஃபார்ஸி வம்ஸா வழியிலிருந்து) ஒருவர் தோன்றி அல்லது பலர் அந்த ஈமானை மீண்டும் மீட்டு கொண்டு வருவார்." முன்னறிவிப்பு இனிதே நிறை வெறியது. இவ்வாறு அந்த மாபெரும் பணியை செய்ய மாபெரும் மனிதராக ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் அவதரித்தார்கள்.

 அண்ணார் (அலை) மக்களின் நல்வழிக்காக பல்வேறு இனிய காரியங்கள் செய்து வந்த போதிலும் ஒவ்வொரு வருடமும் பிரத்தியேகமான முறையில் இறைவனின் கட்டளைக்கேற்ப ஓர் ஆன்மீக மாநாட்டை துவக்கி வைத்தார்கள். இவ்வாறு அன்னாரின் காலத்தில் துவங்கிய முதல் மாநாட்டில் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர்.
அண்ணாரை தொடர்ந்து அவர்களின் காலத்திற்கு பிறகு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்த "நுபுவ்வத் வழியில் கிலாஃபத் தோன்றும்" என்ற முன்னறிவிப்பிற்கேற்ப இந்த உலகத்தில் கிலாஃபத் ஆட்சி மூமீன்களை, நல் உள்ளம் படைத்தோர்களை ஆட்சி புரிய துவங்கியது.

 இந்த வரிசையில் முதல் கலீஃபா துவங்கி தற்போது ஐந்தாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதகுல்லாஹு...) அவர்களின் தலமையில் இந்த ஆண்டு மாநாடு சீறும் சிறப்புமாக இறை விருப்பத்திற்கிணங்க நடந்து கொண்டு வருகின்றது. இந்த மாநாடு உலகத்தில் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டு வருகின்றது என்ற போதிலும் இம்மாநாடு காதியானில் இறை அடியார் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள்  தோன்றிய இந்த புனித ஊரில் நடப்பது ஒரு தனி சிறப்பை பெற்றதாக இருக்கிறது.
 இதை தொடர்ந்து இவ்வருடமும் காதியானில் 123 வது ஆண்டு மாநாடு கடந்த 26, 27, 28 டிசம்பர் மாதம் சிறப்பாக துவங்கி இனிதே நிறைவடைந்தது. இந்த மாநாட்டை பற்றி மாநாட்டில் கலந்து கொள்வோர்களைப் பற்றி அல்லாஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பல்வேறு முன்னறிவிப்புகளை அறிவித்துள்ளான். இதில் ஒன்று:

یَأتِیْکَ مِنْ کُلِّ فَّجٍّ عَمِیْقِ

وَ یَأتُوْنَ مِنْ کُلِّ فَجٍّ عَمِیْقِ

பொருள்:  "உம்மிடம் பல்வேறு தூரத்திலிருந்து  பலரும் வருவர், அவர்கள் பல்வேறு தொலைவிலிருந்து வருவார்கள்." (தத்கிரா பக்கம்: 7 , 2007 ஆம் ஆண்டு பதிப்பு)
இந்த முன்னறிவிப்பின் அடிப்படையில் இன்று பலரும் பல சமுதாயத்தை சார்ந்த மக்கள் இந்த காதியான் என்ற சிறு கிராமத்திற்கு அல்லாஹ்வின் அருளை பெற வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த உலகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருகின்றார்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், டிசம்பர் மாதம் குளிர் மாதம் ஆகும்.  இதை அறிந்தும் மக்கள் அதுவும் குளிர் பகுதியில் வாழாத மக்கள் பல தியாகங்களை செய்த வண்ணம் இந்த ஆன்மீக மாநாடுக்கு வருகை தருகின்றார்கள்.  இதில் கலந்து கொள்ளும் நபர்களுக்காக ஹஸ்ரத் அஹ்மத் (அலை)தனது வாழ் நாள்னிலே துஆ செய்திருக்கின்றார்கள். இவ்வாறு இந்த ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் அவர்களது அந்த துஆவிற்கு வாரிசாகின்றனர்.
18 ஆம் நூற்றாண்டில் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் வாழ்ந்து வந்த  இந்த காதியான் எனும் சிறு கிராமம்  யாருமே அறியாத ஒரு கிராமமாக இருந்தது. இன்று இந்த புனித சிறு நகரம்  இறை நாட்டத்திற்கிணங்க முழு உலகமும் வந்து பார்க்கும் வண்ணம் அமைந்துவிட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"பாருங்கள்! இறைவன் ஒரு உலகத்தையே என் பக்கம் குனியவைத்து விட்டான்; எவராலும் அறியப்படாமல் இருந்த என்னை முழு உலகிலும் புகழ் பெற்றவனாக ஆக்கிவிட்டான்;

எனது விருப்பங்கள் அனைத்தையும் அவன் (இறைவன் )நிறைவேற்றி விட்டான் ; நானோ ஏழையாக இருந்தேன் அ(இறை)வனே எனக்கு அளவற்ற செல்வங்களை வழங்கினான்.

என்னை அளிப்பதற்காக அனைவரும் ஒன்று திரண்டனர்; நானோ தீயவனாக கருதப்பட்டு அவர்கள் (எதிரிகள் )அனைவரும் நல்லவர்களாக கருதப்பட்டார்கள் .

அ(இறை)வனது அருளின் ஒரு துளி பெரும் நிதிகளை உருவாக்கிவிட்டது; நான் மண்ணாக இருந்தேன் அவனோ என்னை கார்த்திகை நட்சத்திரம் வரை  உயர்த்தி விட்டான் .

நான் ஏழையாகவும்,சக்தியற்றவனாகவும் ,யாராலும் அறியப்படாதவனாகவும் இருந்தேன்; காதியான் எங்கு உள்ளது என்று கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இப்போது ஓரு உலகமே என் பக்கம் எவ்வாறு திரும்பிக்கொண்டிருக்கின்றது என்பதை பாருங்கள் ,
மக்கள் மீண்டும் மீண்டும் ஒன்று கூடக்கூடிய இடமாக காதியான் ஆகிவிட்டது
.(கவிதை: ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை)
வாக்களிக்கப்பட்ட மஸீஹ் & மஹ்தி)

ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபதுல் மசீஹ் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் (அய்யதகுல்லாஹு...) அவர்கள் இந்த மாநாட்டில் வருகை தந்துள்ள மக்களுக்கு இலண்டலிருந்து MTA  (முஸ்லிம் டெலிவிஷன் அஹ்மதிய்யா) மூலம் நேரடியாக நல்லுபதேசம் அளித்த வண்ணம் உலகத்தில் அமைதி நிலைபெறுவது நமது மூலமே என்று அறிவித்த வண்ணம் மக்களின் இன்றய உலக அமைதியை நிலை நாட்டுவதில் நமது பங்கு என்ன என்பதை உணர்த்தினார்கள். இறுதியில் இந்த மாநாடு துஆவுடன் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ் அலா தாலிக்...
http://youtu.be/a-hPEMSRqg0

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.