ஜமாஅத் என்றால் என்ன?, இதற்கான விடை திருக்குர்ஆனின் தூய உபதேசத்திலிருந்து நமக்கு இவ்வாறு கிடைக்கிறது:
وَ اعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰہِ جَمِیۡعًا وَّ لَا تَفَرَّقُوۡا
மேலும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிக் கொள்ளுங்கள், பிளவுபடாதீர்கள். (3:104)
அல்லாஹ்வின் கயிற்றை கூட்டாகப் பிடித்துக் கொள்ளுங்கள். ஜமாஅத்துக்குள் நுழைந்து ஜமாஅத்தின் தேவைகளை நிறைவேற்றி ஜமாஅத்துடன் உறுதியாக இணைந்திருங்கள். இவ்வாறு அல்லாஹ்வின் கயிற்றோடு (தம்மை) பிணைத்துக்கொள்பவர்களே ஜமாஅத் ஆகிறார்கள் என்பதும், அல்லாஹ்வின் கயிற்றில் இருந்து பிரிந்தவர்களை ஜமாஅத் என்று கூற முடியாது என்பதும் திருக்குர்ஆனின் தூய உபதேசத்திலிருந்து தெரியவருகிறது. அல்லாஹ்வின் கயிற்றில் கைவைத்து இந்த பிணைப்பை வலுப்படுத்தும் ஜமாஅத்தில் பிளவு ஏற்படவே முடியாது. அத்தகையவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
فَقَدِ اسۡتَمۡسَکَ بِالۡعُرۡوَۃِ الۡوُثۡقٰی لَا انۡفِصَامَ لَہَا
எனவே நிச்சயமாக அவர் உடைக்க முடியாத ஒரு வலுவான சங்கிலியைப் பிடித்தார். (2:257)
எனவே, உடைக்க முடியாத வலுவான சங்கிலியில் கை மாட்டிக் கொள்வது போல் அல்லாஹ்வின் கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும் இறைவனின் ஜமாஅத் என்பதே இந்த வசனத்திற்கு பொருள்படுகிறது.
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா...) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஜமாஅத் அமைப்பின் வெற்றியும், முன்னேற்றமும் அந்த அமைப்பைச் சேர்ந்த மக்களையும், அவர்கள் அந்த அமைப்பின் சட்டதிட்டங்களை முழுமையாகப் பின்பற்றுவதிலும் இருக்கிறது. பாருங்கள். முன்னேற்றமடைந்த நாடுகளில் சட்டங்களைப் பின்பற்றுவதில் உள்ள உறுதிப்பாடு, மூன்றாம் நாடுகளை விட அல்லது முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நாடுகளை விட மிக அதிகமாகும். அந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய காரணம், பொதுவாக பெரிய ஆளாக இருந்தாலும் சிறிய ஆளாக இருந்தாலும் அல்லது மேலதிகாரியாக இருந்தாலும், ஒருமுறை அவருடைய தவறு வெளிப்பட்டு விட்டால், அதிக கூச்சல் கிளம்புகின்றன. அதனால் அந்த தவற்றின் விளைவை அவர் சந்திக்க வேண்டியது வருகிறது. ஏழை நாடுகளில் அல்லது இன்றைய சொல் வழக்கில் மூன்றாம் உலக நாடுகளில் ஏதாவது தவறு ஏற்பட்டு விட்டால், வெட்க உணர்வே இல்லாமற் போய் விடும் அளவுக்கு அதை மூடி மறைக்க முயற்சி செய்யப்படுகிறது. பிறகு அதன் விளைவாக அத்தகைய விஷயங்களே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகி விடுகின்றன. உலக அமைப்பில் சட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த அளவுக்கு, இவ்வளவு கடுமையாக தேவை இருக்கிறதென்றால் அல்லாஹ்வின் புறமிருந்து இறங்கிய ஆன்மீக அமைப்பில் அதன் சட்டதிட்டங்களைப் பேணுவது எந்த அளவுக்கு தேவை இருக்கும்! மார்க்க, ஆன்மீக அமைப்பு அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களின் மூலமாக உலகில் நிலை பெறுகின்றன. எனவே நபிமார்களின் மூலமாக இறைவன் நமக்குக் கூறிய வழிமுறைகளின்படியே நாம் செல்ல வேண்டியது வரும். இஸ்லாத்தில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை இந்த அமைப்பு நமக்குக் கிடைத்துள்ளது. அல்லாஹ் அஹ்மதிகளின் மீது மாபெரும் அருள் செய்துள்ளான். நமக்கு முழுமையான வழிகாட்டி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் இணையும் நல்வாய்ப்பை இறைவன் வழங்கியது மட்டுமல்லாமல், இக்காலத்தின் வாக்களிக்கப்பட்ட மஸீஹ், மஹ்தியின் ஜமாஅத்தில் இணையும் நல்வாய்ப்பையும் இறைவன் நமக்கு வழங்கியுள்ளான். இங்கு ஓர் அமைப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. கிலாஃபத் அமைப்பு இருக்கிறது. உங்களின் கையில் உறுதியான ஒரு வளையம் உள்ளது. அது ஒருபோதும் முறியாது. ஆனால், ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். இந்த வளையம் உடையாதுதான். ஆனால் நீங்கள் உங்கள் கையை, கொஞ்சம் தொய்வாக விட்டாலும் நீங்கள் உடைந்து போகும் சாத்தியம் உருவாகி விடலாம். அல்லாஹ் ஒவ்வொருவரையும் இதிலிருந்து காப்பாற்றுவானாக! எனவே இந்தக் கட்டளையை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஜமாஅத் அமைப்புடன் எப்பொழுதும் சேர்ந்திருங்கள். ஏனெனில் அது இல்லாமல் நீங்கள் எஞ்சியிருக்க முடியாது. வழியில் ஷைத்தான் அமர்ந்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்போதும் அவன் உங்களை வழிகெடுத்துக் கொண்டே இருப்பான். ஆனால் இவ்வசனத்தை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் கூறுகின்றான்:
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا ادۡخُلُوۡا فِی السِّلۡمِ کَآفَّۃً ۪ وَ لَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் எல்லாரும் முழுமையான கீழ்ப்படிதலுக்குள் வந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றிச் செல்லாதீர்கள். அவன் உண்மையிலேயே உங்களுக்கு (மிகவும்) பகிரங்கமான பகைவனாவான். (2:209) (குத்பா ஜுமுஆ 22 ஆகஸ்டு 2003)
ஒரு அறிவிப்பில் இவ்வாறு வருகின்றது ஹஸ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ் தஆலா எனது உம்மத்தை வழிகேடு மற்றும் இருளில் ஒன்று சேர விட மாட்டான். அல்லாஹ் தஆலாவின் உதவி ஜமாஅத்தோடு இருந்து வருகிறது.
مَنْ شَذَّ شُذَّ اِلَی النَّارِ
ஜமாஅத்தை விட்டு விலகின்ற ஒருவர் நெருப்பில் தூக்கி வீசப்பட்டவராக ஆகின்றார். (திர்மிதி கிதாபுல் ஃபித்ன் பாப் ஃபிஸ் சவ்மில் ஜமாஅத்)
ஹப்லுல்லாஹ் (இறைக் கயிறு) என்றால் என்ன?
இது குறித்து ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் அன்னாரின் கலீஃபாமார்களின் எண்ணற்ற கூற்றுகள் கிடைக்கின்றன. அதிலிருது வெளிப்படுவது என்னவென்றால் ஹப்லுல்லாஹ் என்பதன் பொருள்; இறைவன் புறமிருந்து அனுப்பட்ட அவனது தூதர் மற்றும் ரசூலின் கட்டுப்படுதலில் நுழைந்து விடுதல், அவரது பைஅத்தில் நுழைந்து விடுதல், அவரின் அடிமைத்தனத்தில் புகழ் பாடுவது, மேலும் அவருக்கு கட்டுப்படுவதிலிருந்து வெளியே செல்லாமல் இருப்பதற்கு முயற்சி செய்வது என்பதாகும். இந்த ஹப்லுல்லாஹ்வை குறித்துதான் திருக்குர்ஆனில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஹப்லுல்லாஹ் நபிமார்களின் மரணத்திற்கு பிறகும் நிலைத்திருக்கின்றன. மேலும் உயர்ந்த வடிவில் அது நபித்துவத்திற்குப் பிறகு கிலாஃபத் வடிவத்தில் காணப்படுகிறது. அந்த வகையில், கலீஃபாக்களுடன் வலுவான உறவைப் நிலை நிறுத்தி வைப்பது ஜமாஅத் வாழ்க்கைக்கு மிக மிக அவசியமாகும். இப்பற்றுக்கிடையில் வேறு எந்த தொடர்பும் கூறப்படவில்லை.
மேலும் வாழ்க்கை நடைமுறையிலும் வேறு எந்த தொடர்பும் நமக்கு தென்படுவதில்லை என்பது உண்மையான ஒன்றாகும். காலத்தின் கலீஃபா மற்றும் அஹ்மதிகளுக்கிடையில் ஓர் அன்பிற்கான நேரடி தொடர்பு இருக்கிறது. அதில் ஜமாஅத் அமைப்பு அல்லது ஜமாஅத் அமைப்பின் பிரதிநிதியோ குறுக்கே நிற்க முடியாது. இந்த ஒரு தொடர்பைத்தான் முதன் முதலில் நபி தம்மை பின்பற்றுபவர்களுக்கிடையில் நிலைபெறச் செய்கின்றார். மேலும் இதை தொடரச் செய்வதற்காக கிலாஃபத் என்ற அமைப்பு உள்ளது. இது ஓர் ஆன்மீக பந்தம் ஆகும். இந்த நேரடி உறவைக் காட்டிலும் இக்கருத்தை புரிந்துகொண்டு, இந்த உறவைப் பாதுகாத்தால், பல ஆபத்துகளிலிருந்து நாம் பாதுகாப்பாக இருப்போம்.
ஆகவே, ஹப்ல் (கயிறு) தன்னகத்தே எவ்வித அந்தஸ்தையும் கொண்டதில்லை என்பது அறியமுடிகிறது. ஹப்ல் அதாவது கயிறு ஏதேனும் இடத்தில் கட்டப்பட்டுகிறது. மேலும் எந்த பொருளை கொண்டு அது கட்டப்படுகிறதோ அந்த பொருள் அந்த கயிற்றில் சில பண்புகளை உருவாக்க வேண்டும். ஹப்லுல்லாஹ் என்று கூறி மனிதனுக்கு நுபுவ்வத்தோடு உள்ள தொடர்பின் தத்துவத்தை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. உண்மையில் அல்லாஹ்வுடனான தொடர்பு அல்லாஹ்வின் பொருட்டு நுபுவ்வத்தோடு இருக்கிறது. இந்த தொடர்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால் எவருக்கு நுபுவ்வத்தின் காரணமாக இறைவனோடு தொடர்பு உள்ளதோ அவர் எப்போதும் பாதிப்பின் இடத்தில் இருப்பார். ஆகவே நுபுவ்வத்தோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால், பிறகு அல்லாஹ்வுடான தொடர்புக்கு முன்னுரிமை கொடுங்கள். அல்லாஹ்வுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் தீர்வாக நுபுவ்வத்தை நேசியுங்கள். பிறகு இதே விஷயம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக கிலாஃபத்தில் தொடரும். பின்னர் அது ஜமாஅத் அமைப்பின் விவகாரங்களை இயக்க நியமிக்கப்படும் கிலாஃபத்தின் பிரதிநிதிகளில் தொடர்கிறது.
கீழ்ப்படிதலில் இருந்து முகம் திருப்பிக் கொள்வதின் உந்துதல்கள்
கீழ்ப்படிய மறுப்பதினால் எவ்வித உந்துதல்கள் வெளிப்படுகின்றனவோ அதன் விளைவாக குழப்பங்கள் தோன்றுகின்றன. இதன் ஆழமான இரகசியத்தை திருக்குர்ஆன் நமக்கு விளக்கியுள்ளது. அது கூறுகின்றது:
قَالَ یٰۤاِبۡلِیۡسُ مَا مَنَعَکَ اَنۡ تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِیَدَیَّ ؕ اَسۡتَکۡبَرۡتَ اَمۡ کُنۡتَ مِنَ الۡعَالِیۡنَ ۔قَالَ اَنَا خَیۡرٌ مِّنۡہُؕ خَلَقۡتَنِیۡ مِنۡ نَّارٍ وَّ خَلَقۡتَہٗ مِنۡ طِیۡنٍ
இறைவன் கூறினான்: இப்லீஸே! நான் என் இரு கைகளால் படைத்ததற்கு நீ கீழ்ப்படியாமல் உன்னைத் தடுத்தது யாது? நீ கர்வம் கொண்டவனாகி விட்டாயா? அல்லது உயர்பதவிக்கு உரிமை கொண்டாடுபவர்களைச் சேர்ந்தவனாகி விட்டாயா?
அவன் கூறினான்: நான் அவரை விடச் சிறந்தவன். நீ என்னை நெருப்பால் படைத்துள்ளாய். அவரையோ களிமண்ணால் படைத்துள்ளாய். (38:76-77)
கீழ்ப்படிய மறுப்பதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை பற்றிய ஆழமான இரகசியத்தை எல்லாம் வல்ல இறைவன் நமக்கு புரிய வைத்து விட்டான். இப்லீஸ் கர்வத்துடன் செயல்பட்டான். அவனது கர்வம் அவனது மறுப்பு; உண்மையில் அவனது நான் என்ற அகம்பாவத்தின் மடியில் வளர்ந்ததாகும். முதலில் அவன் தன்னை பெரியவனாக கருதிக் கொண்டான். ஆனால் இறைவனை விட பெரியவன் இல்லை. இறைவன் நியமித்த பிரநிதியை விட பெரியவனாக கருதினான். அவரை விட தன்னை சிறந்தவனாக கருதினான். இறைவா! நான் உன்னை ஏற்கவில்லை என்றோ அல்லது நான் உனது வல்லமையை மறுப்பவன் ஆவேன் என்றோ அவன் கூறவில்லை. மாறாக யாரை நீ உனது பிரதிநிதியாக நியமித்துள்ளாயோ அவர் என்னை விட சிறியவர் மற்றும் தகுதியற்றவர் ஆவார். எனக்கெதிரில் இவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறினான். எந்த அளவுக்கு மிக ஆழிய விஷயம் இங்கு கூறப்பட்டுள்ளது! ஆயிரக் கணக்கான வருடங்கள் கழிந்து விட்டன. மதம் தோன்றியதிலிருந்து இதுவே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்குர்ஆனின் ஒளியிலிருந்து பலன் பெற முடியாத, பார்வையில் குறைபாடுள்ள மனிதன் இவ்விடத்தில் தடுமாற்றம் அடைகின்றான்.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் இடையே வேற்றுமை பாராட்டுவது என்பதன் பொருள்
திருக்குர்ஆன் ஓரிடத்தில் இவ்விஷயத்தை கூறியுள்ளது அதாவது எவரொருவர் அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்கு இடையில் வேற்றுமை பாராட்டுகிறார்களோ; அவர்களின் அனைத்து செயல்களும் வீணாகி விட்டன. அச்செயல்களுக்கு எவ்வித அந்தஸ்தும் இருக்காது.
اِنَّ الَّذِیۡنَ یَکۡفُرُوۡنَ بِاللّٰہِ وَ رُسُلِہٖ وَ یُرِیۡدُوۡنَ اَنۡ یُّفَرِّقُوۡا بَیۡنَ اللّٰہِ وَ رُسُلِہٖ وَ یَقُوۡلُوۡنَ نُؤۡمِنُ بِبَعۡضٍ وَّ نَکۡفُرُ بِبَعۡضٍ ۙ وَّ یُرِیۡدُوۡنَ اَنۡ یَّتَّخِذُوۡا بَیۡنَ ذٰلِکَ سَبِیۡلًا۔اُولٰٓئِکَ ہُمُ الۡکٰفِرُوۡنَ حَقًّا ۚ وَ اَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا مُّہِیۡنًا
அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்குமிடையில் வேற்றுமை பாராட்ட எண்ணி மேலும் (தூதர்களுள்) சிலரை நாங்கள் எர்ருக்கொள்வோம் மற்றுஞ்சிலரை நிராகரிப்போம் எனவும் கூறி, இதற்கிடையில் எதேனுமொரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள்.
உண்மையில் இவர்களே முற்றிலும் நிராகரிப்பவர்களாவர். நிராகரிப்பவர்களுக்கு இழிவு படுத்தக் கூடிய ஆக்கினையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். (4:151-152)
நாம் ஜமாஅத்தின் கட்டமைப்புக்கு கீழ்படியாதவர்களை குறித்து ஆராயும்போது, திருக்குர்ஆனின் இக்கூற்றை நம்மால் புரிய முடிகிறது. எவரொருவர் நான் கலீஃபாவுக்கு கீழ்படிகிறேன் என்று வாதம் செய்கிறாரோ மேலும் அன்பை வெளிப்படுத்தியவாறு காலத்தின் கலீஃபா மீது எங்களது உயிர் சமர்ப்பணம் என்று கூறுகின்றாரோ அவர்களுக்கு நேர் எதிராக நமது பார்வையில் இதற்கு தகுதியற்ற பிரதிநிதிகளை எவ்வாறு ஒரு பொருட்டாக கருத முடியும்? ஆக, இறைவன் மற்றும் தூதருக்கிடையில் வேற்றுமை எவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றால் நஊதுபில்லாஹ், தூதரின் ஒரு கூற்றின் மீது வெறுப்பு கொண்டு; இறைவனின் விஷயம் தனியானது ஆனால் தூதரின் அனைத்து விஷயங்களுக்கும் கட்டுப்படுவதென்பது சாத்தியமற்றது என்று கூறுவதாகும். இதுதான் ஷைத்தானின் தீய எண்ணங்கள் ஆகும். இவை பிறகு கீழ் தரத்தில் மாற்றம் அடைந்து கொண்டே செல்லும். அதாவது சில தடவை அமீருக்கு கீழ். பிறகு அமீரை நாங்கள் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் அவர்களின் இன்ன பொறுப்பாளர் சரியில்லை என்று கூறப்படுகிறது. அவர் அவ்வாறு சரியில்லை என்றால் அதற்கான தகுதியுடையவர் இல்லை என்றால் பிறகு எந்தவொரு புகாராக இருந்தாலும் அதனை அதற்குமேல் உள்ள பொறுப்பாளகளிடமோ அல்லது அதற்குமேல் உள்ள ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடத்திலோ எழுதுங்கள். இந்த முயற்சியை மேற்கொள்ளாமலே மறுப்பின் தீர்ப்பை தமது கையில் எடுத்துக் கொள்வதென்பது மற்றும் கீழ்படிதிலிருந்து வெளியேறுவது என்பது இப்லீசை சார்ந்த செயல் ஆகும். இதை குறித்து திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது அன்பிற்குரிய இமாம் ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹு...) அவர்கள் கூறுகின்றாகள்:
"இது அமீருக்கும் ஜமாஅத்தின் அமைப்புக்கும் கட்டுப்படுவது தொடர்பான கட்டளையாகும். நாங்கள் காலத்தின் கலீஃபாவின் குரலுக்குக் கட்டுப்படுவதிலிருந்தும் வெளியில் இல்லை. முழுமையாக அவருக்கு கட்டுப்படுகிறோம். ஒவ்வொரு கட்டளையையும் ஏற்கத் தயாராக இருக்கின்றோம். ஆனால், இந்த பொறுப்பாளரிடம் இந்த அமீரிடம் இன்னென்ன குறைபாடுகள் உள்ளன. எனவே, அவருக்கு நாங்கள் கட்டுப்படமாட்டோம் என்று மக்கள் கூறிவிடுகின்றார்கள். ஜமாஅத்தின் அமைப்பைச் சார்ந்த ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் கட்டுப்பட்டால்தான் காலத்தின் கலீஃபாவிற்கும் நீங்கள் கட்டுப்பட்டவர்களாவீர்கள். அப்போதுதான் அல்லாஹ்வின் தூதருக்கும் அல்லாஹ்வுக்கும் நீங்கள் கட்டுப்பட்டவர்களாவீர்கள்." (குத்பா ஜுமுஆ 31 டிசம்பர் 2004)
நிபந்தனையற்ற கீழ்படிதலின் கட்டளை
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَ اَطِیۡعُوا الرَّسُوۡلَ وَ اُولِی الۡاَمۡرِ مِنۡکُمۡ ۚ فَاِنۡ تَنَازَعۡتُمۡ فِیۡ شَیۡءٍ فَرُدُّوۡہُ اِلَی اللّٰہِ وَ الرَّسُوۡلِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَ الۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ ذٰلِکَ خَیۡرٌ وَّ اَحۡسَنُ تَاۡوِیۡلًا
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடங்கள், இத்தூதருக்கும், உங்கள் அதிகாரிகளுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். பின்னர் உங்களுக்குள் ஏதாவது ஒன்றில் தர்க்கம் ஏற்பட்டால் நீங்கள் அல்லாஹ்விடத்தும், இறுதி நாளிடத்தும் நம்பிக்கை கொண்டவர்களாயின் இத்தூதரிடம் கொண்டு செல்லுங்கள். (அவர்களின் கட்டளையின் அடிப்படையில் பிரச்சனைக்கு முடிவு காணுங்கள்) இ(வ்வாறு செய்வ)து சிறந்ததும், மிக்க நல்ல முடிவைத் தருகின்றதுமாக இருக்கும். (4:60)
ஓர் அறிவிப்பில் இவ்வாறு வருகிறது, "உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்ற நிபந்தனைக்குட்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம். (முஸ்லிம் ஹதீஸ் நம்பர் 3754)
ஹுஸூர் (அய்யதஹுல்லாஹு....) கூறுகின்றார்கள்:
"முதல் விஷயம் இதுவாகும், அதாவது பைஅத் செய்த பிறகு எவ்வித கட்டளையாக இருந்தாலும் அதற்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும். எமது திருப்திக்கேற்ப தீர்ப்பு வந்தால் நாம் கட்டுப்படுவோம், எங்களை போன்று கீழ்படிபவர்கள் எவரும் இருக்க முடியாது என்றும், ஒரு தீர்ப்பு நமக்கு எதிராக இருந்தாலும் அதனால் நமக்கு இன்னல் ஏற்பட்டாலும் அதற்கு கீழ்படிவதிலிருந்து வெளியேறி ஜமாஅத் அமைப்புக்கு எதிராக பேசுவதென்பது இருக்கக்கூடாது. மாறாக எந்நிலையிலும் கூறினார்கள்: இன்னலாக இருந்தாலும் எளியதாக இருந்தாலும் நாம் ஜமாஅத்தின் அமைப்பின் தீர்ப்புக்கு முழுமையாக கட்டுப்படுவோம், அமைப்போடு பிணைந்திருப்போம் என்று இருக்க வேண்டும்.
ஹஸ்ரத் வாக்களிக்கபோப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களும் கீழ்படிதலுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பைஅத் வாங்கினார்கள். மேலும் இது தற்போது வரை பைஅத்தின் நிபந்தனைகளில் இருந்து வருகின்றன. ஆகவே இந்த பைஅத்திற்கான உறுதிமொழி நபி (ஸல்) அவர்களுடன் இருந்தது தற்போது இல்லை அல்லது தற்போது இதை முறித்தாலும் எந்த பாவமும் இல்லை என்ற சிந்தனையை உங்கள் மனதிலிருந்து அகற்றி விடுங்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புக்கு ஏற்பவே இந்த ஜமாஅத் நிலைத்திருக்கிறது. ஆகவே இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எனவே, அந்த தொடர்ச்சிதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே கூறினார்கள், இன்பம் ஏற்பட்டாலும், துன்பம் ஏற்பட்டாலும் எவர் அமீராக இருந்தாலும் அவருடன் சண்டையிடக் கூடாது. அவரின் தீர்ப்பை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த விஷயம் என்னவென்றால், உண்மையில் நிலைத்திருப்போம் என்பதாகும். நாம் உண்மையில் இருக்கிறோம் ஆகவே நாங்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற பொருளை இதிலிருந்து எடுத்து கொள்ள வேண்டாம். மாறாக கூறினார்கள், "நீங்கள் எப்போதும் உண்மையை எடுத்துரைத்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை எப்போதும் கொண்டவராக இருங்கள். உலகத்தின் எந்தவொரு அழுத்தமோ அல்லது எந்தவொரு பேராசையும் உங்களை உண்மையை கூறுவதிருந்து தடுக்க வேண்டாம். பிறகு இதுவும் கூட, அதாவது உங்கள் விஷயம் வரும்போது நீங்கள் உண்மையை கூற வேண்டும். உண்மையான சாட்சி கூற வேண்டும். பொய் கூறி ஜமாஅத் அமைப்புடன் அல்லது வேறொரு நபருடன் சண்டையிட முயற்சிக்க வேண்டாம். நாம் ஜமாஅத் அமைப்புக்கு கட்டுப்பட்டு விட்டால், தமது சகோதரருடன் சமாதானம் மேற்கொண்டால், உண்மையாளனாக இருந்து பொய்யாரைப் போல் அவமானத்தை மேற்கொண்டால் உலகம் என்ன சொல்லும் என்ற எண்ணம் ஒருபோதும் வர வேண்டாம்.
உங்கள் குறிக்கோள், உங்கள் வாழ்க்கையின் நோக்கம் எல்லாம் வல்ல இறைவனைப் பிரியப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இதுதான் அல்லாஹ் தஆலா, அவனது ரசூல் மற்றும் அவனது ஜமாஅத் அமைப்பின் கட்டளைகள், சட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் ஆகும். இந்த விஷயத்தில் உங்கள் கீழ்படிதலில் எந்தவொரு மாற்றத்தையும் வர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்." (குத்பா ஜுமுஆ 27 ஆகஸ்டு 2004)
ஜமாஅத் அமைப்புக்கு கட்டுப்படாதவர்களுக்கு எச்சரிக்கை
அமீருக்கு கட்டுப்படுதலை பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு கூற்றுகள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு ஹதீஸ் உள்ளத்தில் கடும் அச்சத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது. அமீருக்கு கீழ்படிவது என்பது எத்துனை அவசியமான ஒன்றாகும் என்பதை ஒவ்வொரு அஹ்மதியும் எப்போதும் தமது கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், "ஹஸ்ரத் ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார். எனக்கு மாறுசெய்தவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவர் ஆவார். எனது அமீருக்கு கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவர் ஆவார்; எனது அமீருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறு செய்தவர் ஆவார்." (முஸ்லிம், ஹதீஸ் நம்பர் 3745)
ஓர் அறிவிப்பில் இவ்வாறு வருகின்றது, ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், "ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "தம் தலைவரிடம் எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்." (முஸ்லிம், ஹதீஸ் நம்பர் 3768)
இந்த ஹதீஸிற்கு விளக்கம் அளித்தவாறு ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹு...) அவர்கள் கூறுகின்றார்கள்:
"சிலர் மக்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு, ஜமாஅத் அமைப்பு இன்னாருக்கு சாதகமாகவோ அல்லது எதிராகவோ தீர்ப்பு வழங்கியிருந்தாலும் நான் பொறுமையை கடைப்பிடித்தேன். ஆனால் எவ்வாறு இருந்த போதிலும் தீர்ப்பு தவறானது. நான் கட்டுப்பட்டுவிட்டேன். ஆனாலும் தீர்ப்பு தவறானது என்று கூறிவிடுகிறார்கள். இவ்வாறு மக்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு விஷயத்தை சுற்றி வளைத்து எடுத்துக் கூறி பேசுவதென்பது பொறுமையாகாது. மாறாக அமைதி காத்து, தமது கோரிக்கையை அல்லாஹ்வுக்கு முன்பு எடுத்து வைப்பதுதான் பொறுமையாகும். எவ்விடத்தில் இவ்வாறான விஷயங்கள் பேசப்படுமோ அவ்விஷயத்தை மற்ற மக்கள் மத்தியில் பரப்பி பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் எண்ணங்களை கொண்டவர்களும் அவ்விடத்தில் இருக்கக்கூடும். இவ்வாறு ஜமாஅத் அமைப்பை பற்றி தவறான தாக்கங்கள் உருவாகக் கூடும். இதனால் சில நேரம் குழப்ப நிலையும் உருவாகிவிடுகின்றது. மேலும் எவர் இக்குழப்பத்தில் அகப்பட்டு விடுவாரோ அவரைக் குறித்தே (மேற்காணும் ஹதீஸில்) அவர் அறியாமை கால மரணத்தை அடைவார் என்று கூறப்பட்டுள்ளது.
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) நம்மீது என்ன எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தார்கள். இதை பற்றி அன்னார் (அலை) கூறுகின்றார்கள்:
"கீழ்படிதல் என்பது ஓர் எளிய விஷயமா! எவரொருவர் முழுமையான முறையில் கட்டுப்பட மாட்டாரோ அவர் இந்த ஜமாஅத்தை இழிவுபடுத்துகிறார். கட்டளை என்பது ஒன்று அல்ல. மாறாக எவ்வாறு சுவர்க்கத்திற்கு பல்வேறு கதவுகள் இருக்கின்றனவோ அவ்வாறு கட்டளை என்பதோ பல இருக்கின்றன. சிலர் சில கதவு வழியாக நுழைகிறார் மற்றும் சிலர் சில கதவு வழியாக நுழைகிறார். இவ்வாறே நரகத்திற்கும் பல்வேறு கதவுகள் இருக்கின்றன. நீங்கள் நரகத்தின் ஒரு கதவை மூடி மற்றதை திறப்பவர்களாக இருக்க வேண்டாம்." (மல்ஃபூஸாத் பாகம் 2 பக்கம் 411) (குத்பா ஜுமுஆ 27 ஆகஸ்டு 2004)
ஹுஸூர் அவர்கள் ஜமாஅத் அமைப்புக்கு கட்டுப்படுதல் குறித்து இவ்வாறு கூறுகின்றார்கள்:
"ஆகவே எப்போதும் இதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது, அருள் எப்போதும் ஜமாஅத் அமைப்புக்கு கட்டுப்பட்டு அதனோடு இணைந்து இருப்பதினால்தான் இருக்கிறது. எனவே எப்போதாவது சிலருக்கு எதிராக தீர்ப்பு வழங்குப்பட்டு விட்டால் பிறகு நான் முன்பு கூறியது போன்று பொறுமையை வெளிப்படுத்த வேண்டும். பொறுமையின்மையை வெளிப்படுத்தக் கூடாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் புரிதல் இருக்கின்றது. நீதித்துறை ஒரு முடிவு எடுத்தால் அது ஒரு தரப்பின் பார்வையில் சரியில்லை என்றாலும் கூட அதை நடைமுறை படுத்த வேண்டும். மேலும் நீதித்துறைக்கு அல்லாஹ் தஆலா சரியான தீர்ப்பை வழங்குவதற்கான தவ்ஃபீக்கை வழங்குவானாக என்று துஆ செய்ய வேண்டும். நீதிபதிக்கும் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எந்நிலையிலும் கட்டுப்படுதல் என்பது முதன்மை வாய்ந்ததாக இருக்கிறது. சிலர் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள், சில முடிவுகளால் அவர்கள் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களின் ஜமாஅத்தை சார்ந்து இருப்பதையே மறுப்பவர்களாக ஆகிவிடுகின்றார்கள். இது துரதிஷ்டவசமானதாகும். நான் முன்பு கூறியது போன்று அவர்கள் தம்மை தாமே நெருப்பில் போடுபவர்களாக ஆகிவிடுகின்றார்கள். உலகின் சில நாணயங்களுக்காக தங்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள். ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களின் ஜமாத்தில் இணைந்திருக்கிறார்கள். ஒருவரின் தவறினால் தமது ஈமானை இழக்கும் அளவுக்கு ஒரு பொறுப்பாளரின் ஜமாஅத்தில் அவர்கள் இணையவில்லையே! எவ்வாறு இருந்த போதிலும் பொறுப்பாளர்களும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பலகீனமான ஈமானை கொண்டவர்களுக்கு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது." (குத்பா ஜுமுஆ 27 ஆகஸ்டு 2004)
கீழ்ப்படிதலுடன் மரியாதையும் அவசியம் ஆகும்
பிறகு இன்னொரு விஷயம் திருக்குர்ஆனிலிருந்து தெரியவருகின்றது அதாவது கீழ்படிதலுடன் மரியாதையும் அவசியம் ஆகும். கீழ்படிதல் மட்டும் போதுமானதல்ல. அல்லாஹ் தஆலா கூறுகின்றான்:
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَرۡفَعُوۡۤا اَصۡوَاتَکُمۡ فَوۡقَ صَوۡتِ النَّبِیِّ وَ لَا تَجۡہَرُوۡا لَہٗ بِالۡقَوۡلِ کَجَہۡرِ بَعۡضِکُمۡ لِبَعۡضٍ اَنۡ تَحۡبَطَ اَعۡمَالُکُمۡ وَ اَنۡتُمۡ لَا تَشۡعُرُوۡنَ
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நபியினுடைய குரலுக்கு மேல் உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்.நீங்கள் ஒருவர், ஒருவரை நோக்கி உரக்கப் பேசுவது போன்று அவரை நோக்கி உரக்கப் பேசாதீர்கள். அதனால் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் செயல்கள் வீணாகி விடலாம். (49:3)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இதை பற்றி கூறுகின்றாகள், "உங்கள் குரலை உயர்த்தாதீர்கள். எவரொருவர் இவ்வாறு குரலை உயர்த்தி பேசுகிறாரோ அவருக்கு ஈமான் என்றால் என்ன என்பதே தெரிவதில்லை. அவர்கள் தமது ஈமானை இழந்து விடுகிறார்கள். ஆக இதன் பொருள் என்னவென்றால், உண்மையான கீழ்படிதல் என்பது மரியாதையை தவிர்த்து சாத்தியமல்ல. பெயர்தாங்கிய கீழ்படிதல் எந்த தரத்தையும் கொண்டதில்லை. அது கீழ்படிபவர்களுக்கு எப்போதும் ஆபத்தாக இருந்து வருகிறது. எனவே ஜமாஅத் அமைப்பின் பிரதிநிதிகளோடு அன்பு மற்றும் மரியாதையின் தொடர்பை நிலை நாட்டுவது அவசியமாகும். நாம் ஒருவேளை இந்த பொறுப்பாளரை அல்லது அமீரை தம்மை விட தாழ்ந்தவராக கருதி வெளிப்படையாக கட்டுப்பட்டு வந்தாலும் ஆபத்து இருக்கும். இதை பற்றி தெளிவுபடுத்தியவாறு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு கூறினார்கள்:
"அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “(உங்களுக்குத் தலைவராக் கப்படுபவர்) உலர்ந்த திராட்சை போன்ற தலையுடைய அபிசீனியராயிருப்பினும், அவருக்கு நீங்கள் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள்” என்று சொன்னார்கள். (புகாரி, ஹதீஸ் நம்பர் 696)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பாருங்கள், உங்களுக்கு மேல் ஹப்ஷி (அபிசீனியரை சார்ந்த) ஒருவர் அமீராக நியமிக்கப்பட்டாலும்; அதாவது அரபியர்களுக்கு தமது குலத்தின் மீது ஒரு பெருமை இருந்து வந்தது. அவர்கள் ஒரு ஹப்ஷியை குறித்து அவர் வந்து தங்களின் ஆட்சி அதிகாரியாக ஆகுவார் என்று எண்ணிக் கூட பார்க்க முடியாதவர்களாக இருந்தார்கள். ஹப்ஷி அல்லது ஓர் அடிமைக்கு அரபியர்கள் கட்டுப்படுவதென்பது எண்ணி பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. பிறகு தமது அதிகாரபலம் மற்றும் அறிவாற்றல் மீது பெருமை கொண்டவர்களாக இருந்தார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் (அப்படிபட்ட மக்களுக்கு) கூறினார்கள்: அவரின் தலை உலர்ந்த திராட்சை போன்று இருந்தாலும் அதாவது காய்ந்து போன கிஷ்மிஷின் விதை போன்று தலை இருந்தாலும் அதாவது அந்த அளவுக்கு அறிவற்றவராக இருந்தாலும் அவ்வாறான ஒரு நபர் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டால் அவருக்கு கட்டுப்படுதல் என்பது உங்களுக்கு கடமை ஆகும்.
இதுதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நன்கு தெளிவுப்படுத்தி கூறிய கீழ்படிதலின் சாராம்சம் ஆகும்.
ஒரு ஹதீஸில் இவ்வாறு வருகின்றது ஹஸ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், "கேட்பதும் கட்டுப்படுவதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அது அவருக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவருக்கு பாவம் பற்றி கட்டளையிடப்படாத வரை. பாவத்தைப் பற்றிக் கட்டளையிட்டால் கட்டுப்படவோ, கீழ்ப்படியவோ வேண்டாம் என்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி கிதாபுல் அஹ்காம் பாப் அஸ்ஸம்உ வத் தாஅத்து லி இமாம்...)
இந்த ஹதீஸிற்கு விளக்கம் அளித்தவாறு ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹு...) அவர்கள் கூறுகின்றார்கள்:
"நான் ஏற்கனவே கூறியது போன்று, ஷரீஅத்தின் தெளிவான கட்டளைகளுக்கு மாறு பட்டதாக இருந்தால் மட்டுமே கட்டுப்படுவது கூடாது. இல்லையெனில் எந்நிலையிலும் கட்டுப்படுவது அவசியமாகும். இங்கு இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்துவது அவசியமாகும். இந்தக் கட்டளை, ஷரீஅத்திற்கு மாறுபட்டது; இந்தக் கட்டளை ஷரீஅத்திற்கு மாறுபட்டதன்று என நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டே முடிவெடுத்து விடக் கூடாது. நீங்கள் எந்த விஷயத்தை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அது அப்படி இல்லாமலும் இருக்கலாம். ஏனெனில் பாவம் செய்ய கட்டளையிட்டால் என வருகிறது. அல்லாஹ்வின் அருளால் ஜமாஅத் அமைப்பு எவ்வளவு உறுதியாகி விட்டதென்றால், பாவத்திற்கான கட்டளையிடும் அளவுக்கு கீழே விழுந்து விடும் எவரும் பொறுப்பாளராகவே முடியாது. அவருடைய கட்டளையை புரிவதிலும் அதன் விளக்கத்திலும் தான் விஷயம் இருக்கிறது. எனவே முதலில் பொறுப்பாளருக்கு கவனமூட்டுங்கள். அவர் ஏற்கவில்லையென்றால் அவருடைய மேலதிகாரிவரை, அமீர் வரை விஷயத்தை கொண்டு செல்லுங்கள். பிறகு காலத்தின் கலீஃபா வரை கொண்டு செல்லுங்கள். ஆனால் (முறையீட்டை உரிய முறையில் கொண்டு செல்லும்) இது உங்கள் பார்வையில் தீமை என்றால் பிறகு வெளியே அது பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. ஏனெனில் தீமையை அங்கேயே தடுக்குமாறு கட்டளை உள்ளது. இப்போது அதை மேல்மட்டத்திற்கு கொண்டு சென்று அதன் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது உங்கள் கடமையாகும்." (குத்பா ஜுமுஆ 22 ஆகஸ்டு 2003)
ஜமாஅத்தின் அமைப்பு கிலாஃபத் அமைப்பை சுற்றி வருகிறது
நமது அன்பிற்குரிய இமாம் ஐந்தாவது கலீஃபத்துல் மசீஹ் (அய்யதஹுல்லாஹ்...) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்களுக்குப் பிறகு ஜமாஅத்தில் கிலாஃபத் அமைப்பை தொடரச் செய்தது அல்லாஹ்வின் மிகப்பெரிய அருளாகும். ஒரு சிறு பகுதியில் இருக்கும் சிறிய ஜமாஅத் முதல் அல்லது சிறு சிறு கிராமங்களில் சிறிய அளவில் செயல்படும் ஜமாஅத் முதல் நகரம் மற்றும் நாட்டின் அளவிலுள்ள எல்லா ஜமாஅத்துகளும், இந்த கிலாஃபத் அமைப்பையே சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதாவது சிறு சிறு ஜமாஅத்துகளிலுள்ள தலைவர்களிலிருந்து நாட்டின் அமீர் வரையில் நேரடியாகவோ அல்லது வேறு ஊடகங்கள் மூலமாகவோ காலத்தின் கலீஃபாவுடன் தொடர்பு கொண்டுள்ளனர். பிறகு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும் கலீஃபாவுடன் தொடர்பு கொள்ள முடியும். ஆனால், ஜமாஅத்திலுள்ள எந்தவொரு பொறுப்பாளர் தொடர்பாகவும் ஏதாவது முறையீடுகள் உங்களுக்கு இருந்து அதனை நீங்கள் காலத்தின் கலீஃபாவுக்கு எட்டவைப்பதாக இருந்தால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள முடியும் என்றாலும் அவரது இந்த முறையீடுகள் அமீர் மூலமாகவே எட்டவைக்கப்பட வேண்டும். நாட்டின் அமீர் அப்படிப்பட்ட முறையீடுகளை அது அவருக்கே எதிராக செய்யப்பட்டிருந்தாலும்கூட அதனை அவர் கலீஃபாவுக்கு அனுப்ப வேண்டும். எதையாவது தெளிவுபடுத்த வேண்டுமென்றால் அதனை அவர் தெளிவாக குறிப்பிடலாம். அதன் காரணமாக மேலும் கடிதங்கள் எழுதுவதில் நேரம் வீணாகாது. ஆனால், முறையீடுகள் செய்பவர்களும் தனது சொந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எந்தவொரு பொறுப்பாளருக்கு எதிராகவும் முறையீடு செய்துவிட்டு அதற்கு ஜமாஅத்தின் நிறத்தை தரக்கூடாது. தக்வாவுடன் செயல்பட வேண்டும். சில நேரங்களில் குறைந்த அறிவுடைய சிலர் அல்லது பெளத்க உலகின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் சிலர் ஜமாஅத்தின் கண்ணியத்திற்கும், மரபுகளுக்கும் மாற்றமான விஷயங்களைப் பேசி விடுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட பலவீனமானவர்களுக்கு அல்லது குறைந்த அறிவுடையவர்களுக்கு புரிய வைப்பதற்காக இப்படிப்பட்ட விஷயங்களிலிருந்து அவர்கள் விலக வேண்டும் என நான் அறிவுறுத்துகின்றேன்.
பொதுவாக பொறுப்பாளர்களை நீங்கள் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக் கின்றீர்கள். சில கட்டங்களில் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக (தேர்தல் இல்லாமல்) பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். அவ்வாறு நியமிக்கப் படுவதும்கூட தலைமையகம் அல்லது கலீஃபாவின் அனுமதியுடன்தான் நடக்கின்றது. எவ்வாறிருப்பினும், பெரும்பான்மையினரின் கருத்திற்கேற்ப இந்த தேர்தல் நடந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு யார் ஓட்டளிக்கவில்லையோ அவர் அந்த பொறுப்பாளர்களுக்கு முழுமையாக கீழ்ப்படிவதுடன் அவர்களுடன் இணைந்திருப்பது அவசியமாகும். பிறகு முழு ஜமாஅத்தும் இவ்வாறு இருந்தால் உருக்கப்பட்ட ஈயத்தால் இணைக்கப்பட்ட உறுதி வாய்ந்த கட்டடத்தைப் போல அது அமையும். எங்கிருந்தோ கிளர்ச்சியின் வாடை வருகிறது என்பதாலோ அல்லது எங்கோ பிரச்சினை எழுந்துள்ள காரணத்தாலோ இந்த எல்லா விஷயங்களையும் நான் கூறவில்லை. மாறாக, சில உலகவாதிகள் தங்களது குறைவான அறிவு, முட்டாள்தனம் அல்லது உலகத்தில் மூழ்கியிருப்பதன் காரணமாக இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுகின்றபோது சில நேரங்களில் ஜமாஅத்தில் புதிதாக இணைகின்றவர்களுக்கு இதனால் தீய பாதிப்பு ஏற்படுகின்றது. இதைத்தவிர புதிதாக பைஅத் செய்தவர்களின் தர்பிய்யத்திற்காக அவர்களுக்கு ஜமாஅத்தின் அமைப்பைப் பற்றியும் பொறுப்பாளர்களின் கடமை பற்றியும் கூறவேண்டியதுள்ளது. ஏனென்றால், புதிதாக வருபவர்களின் எண்ணங்களில் இது தொடர்பான கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கும்.
எவ்வாறிருப்பினும் இறைவனின் வாக்குறுதிக்கேற்ப ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்களின் ஜமாஅத்தில் இந்த அமைப்பு கிலாஃபத் அமைப்புடன் நிலைநிற்க வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் அருளால் உறுதியான அடித்தளத்தின்மீது அது நிலைநாட்டப்பட்டு விட்டது. எந்தவொரு எதிரியாலும் இதற்கு எவ்வித இழப்பையும் ஏற்படுத்த முடியாது - இன்ஷா அல்லாஹ். ஆனால், சில விஷயங்களை நமது எண்ணங்களில் புதுப்பித்து வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது நினைவூட்ட வேண்டியதுள்ளது. இதன் மூலமாக பழைய அஹ்மதிகளின் எண்ணங்களிலும் இவ்விஷயங்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் பதிய வேண்டும். அத்துடன் புதிதாக பைஅத் செய்தவர்களும் இதன் மூலமாக பயன்பெறுவார்கள். மேலும் எவருடைய எண்ணங்களிலும் எவ்வித அமைதியின்மையும் ஒருபோதும் உருவாகக் கூடாது." (குத்பா ஜுமுஆ 31 டிசம்பர் 2004)
ஷைத்தானை விட்டு தவிர்ந்திருக்க ஒரே வழி; ஜமாஅத்தோடு இணைந்திருங்கள்
நமது அன்பிற்குரிய இமாம் ஐந்தாவது கலீஃபத்துல் மசீஹ் (அய்யதஹுல்லாஹ்...) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ஒரு அறிவிப்பில் இவ்வாறு வருகின்றது, "நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆடுகளுக்கு ஓநாய் எதிரி என்பது போலவும், தனது மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகளை எளிதில் வேட்டையாடுவது போலவும், ஷைத்தான் மனிதனின் ஓநாயாக இருக்கிறான். ஜமாஅத்தோடு இல்லாவிடில், இவன் அவர்களை மிக எளிதாக வேட்டையாடி விடக்கூடும். கூறினார்கள்: மக்களே! அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், மாறாக நீங்கள் ஜமாஅத் மற்றும் ஆமத்துல் முஸ்லிமீன்களுடன் (பொது முஸ்லிம்களுடன்) இருப்பது அவசியம் ஆகும். எனவே கூறினார்கள், ஷைத்தானிடமிருந்து விலகி இருக்க ஒரே வழி ஜமாஅத்தோடு இணைந்திருப்பதே. இக்காலத்தில் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களின் ஜமாஅத் மட்டுமே இறை ஜமாஅத் ஆகும். அது உலகில் அல்லாஹ் தஆலாவின் திருப்திக்காக கலப்படமற்ற இறைத்தூதை எட்ட வைத்து கொண்டிருக்கிறது. வேறு ஏதேனும் ஒரு ஜமாஅத்; ஜமாஅத் என்று அழைக்கப்படுகிறது என்றால் அப்படிப்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாக அரசியல் குறிக்கோள்கள் இருக்கின்றன.
ஆகவே (நீங்கள்) இந்த பாதுகாப்பு வேலிக்குள் வந்து விட்டீர்கள் என்றால் பிறகு இதற்குள் உறுதியாக நிலைத்திருங்கள். மேலும் கட்டுப்பட்டு நடங்கள். இல்லை என்றால் நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று ஓநாய் ஒவ்வொருவராக அனைவரையும் தின்றுவிடும். மேலும் தின்றும் வருகிறது. நமது முன்பு அனுதினமும் இவ்வாறான காட்சி தென்பட்டு கொண்டிருக்கிறது. இங்கு மற்றுமொரு விஷயத்துக்கான தீர்வும் கிடைக்கிறது அதாவது ஜமாஅத்தில் இணைந்துள்ள மக்களே ஆமத்துல் முஸ்லிமீன் ஆவார்கள். அதாவது எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமுள்ளவர்களை ஆமத்துல் முஸ்லிமீன் என்று அழைக்க முடியாது. எனவே, ஜமாஅத்தில் இணைந்துள்ள நீங்களே பாக்கியவான்கள் ஆவீர்கள். மேலும் ஆமத்துல் முஸ்லிமீன் என்பதற்கு உரிமை கொண்டவர்கள் நீங்களே. ஆகவே தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் நான் முன்பு கூறியது போன்று முழுமையான முறையில் பொறுமை மற்றும் விசுவாசத்துடன் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருங்கள்.
ஒரு அறிவிப்பில் இவ்வாறு வருகிறது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "சுவர்க்கத்தின் வளாகத்தில் எவரொருவர் தமது வீட்டை கட்ட விரும்புகிராரோ அவர் ஜமாஅத்தோடு ஒன்றிணைந்து இருக்க வேண்டும். ஏன் என்றால் ஷைத்தான் ஒரு மனிதனோடு இருக்கிறான். மனிதன் தூர விலகி விட்டால் அவனும் தூர விலகிவிடுவான். அதாவது ஷைத்தான் அவனை விட்டு விடுவான். உள்ளத்தில் விரிசலை ஏற்படுத்துவதே அவனின் குறிக்கோளாக இருக்கிறது. ஆகவே ஜமாஅத்தில்தான் பரகத் (அருள்) இருக்கிறது. மேலும் ஜமாஅத்தின் அமைப்புக்கு கட்டுப்படுவதிலே பரகத் இருக்கிறது." (குத்பா ஜுமுஆ 27 ஆகஸ்டு 2004)
அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் இப்போதனைக்கேற்ப அமல் செய்வதற்கான தவ்ஃபீக்கை தந்தருள்வானாக. எப்போதும் ஜமாஅத்தோடு இணைந்திருந்து ஜமாஅத்தின் அமைப்புக்கு கட்டுப்பட்டு மற்றவர்களின் உரிமையை கருத்தில் கொண்டு; அல்லாஹ் தஆலா ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களுக்கு வாக்களித்த அருட்களுக்கு வாரிசாகுவதற்கான பாக்கியத்தை தந்தருள்வானாக. ஆமீன்!
நன்றி: அல்-ஃபஸ்ல் இன்டர்நேஷனல் பத்திரிகை
மொழியாக்கம்: முரப்பி அப்துல்லாஹ்-காதியான்
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None