அல்லாஹ் தஆலா கலீஃபாவை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றான்? பாகம்-3

 


இரண்டாவது பாகத்தை படிக்க: அல்லாஹ் தஆலா கலீஃபாவை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றான்? பாகம்-2

மூன்றாவது கேள்வி

இறைவன் எவரை கலிஃபாவாக தேர்ந்தெடுக்கிறான். மேலும் அவரிடம் வெளிப்படையாக எந்த பண்புகள்   காணப்படுகின்றன?

இந்த கேள்விக்கான பதிலும்  திருக்குர்ஆனில் உள்ளது. நாம்   இறைவனிடம் எங்கள் மனைவிகளையும் எங்கள் குழந்தைகளையும் எங்களின் கண்ணுக்கு குளிர்ச்சி அழிக்ககூடியவர்களாக ஆக்குவாயாக! என்று துஆ செய்யுமாறு நமக்கு அல்லாஹ் தஆலா கட்டளை பிறப்பித்துள்ளான். மேலும்;

وَاجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا

மேலும் எங்களை இறையச்சம் உடையவர்களுக்கு இமாமாக (முதன்மையானவராக) ஆக்குவாயாக! (25:75)

எங்களுக்காக இறையச்சம் உடையவர்களை இமாமாக ஆக்குவாயாக. அல்லது எங்களிலிருந்து இறையச்சம் உடையவர்களுக்கு இமாமாக ஆக்குவாயாக என்பதே இதன் பொருளாகும்.

இங்கு இறைவன் இந்த துஆவை கேட்பதில்லையா? அல்லது இதை ஏற்றுக் கொள்வதில்லையா? என்ற வினா எழுகின்றது. நிச்சயமாக அவன் கேட்கவும் செய்கின்றான் நிறைவேற்றவும் செய்கின்றான். ஆனால் நிபந்தனை என்னவென்றால் துஆ செய்பவர்கள் நம்பிக்கையாளராகவும் கிலாஃபத்திற்கு கட்டுப்பட கூடியவராகவும் இருக்க வேண்டும்.

கலிஃபாவின் மரணத்திற்குப் பிறகு நம்பிக்கையாளர் ஜமாத்திற்கு மிகப் பெரிய துக்கம் ஏற்படுகின்றது. அச்சம் அவர்களை சூழ்ந்து விடுகின்றது. எவ்வாறு ஒரு குடும்பத்தின் தந்தையார் மரணித்த பிறகு அவர்களுக்கு பெரிய துக்கம் ஏற்படுகின்றதோ அதேபோன்று நம்பிக்கையாளரின் ஜமாஅத்தின் ஆன்மீக தந்தையான கலிஃபாவின் மரணத்திற்கு பிறகு மிகப் பெரிய துக்கம் மற்றும் துயரம் வந்தடைகிறது. அச்சம் மற்றும் கவலை அனைவரையும் சூழ்ந்து விடுகின்றது. இறைவன் கலிஃபாவை தேர்ந்தெடுத்து அவர்கள் மீது தன்னுடைய அருளை தொடர செய்வானா? என்ற கேள்வி அவர்களின் மனதில் எழுகின்றது. இந்த கவலையும் துயரமும் அவர்களை  கொல்கின்றது. அவர்கள், உண்மையான இறைவனிடம் சேர்ந்த அந்த கலிஃபாவுக்கு கட்டுப்பட்டோமா அல்லது  கட்டுப்படவில்லையா அல்லது அவருடைய கட்டளைக்கு கீழ்படியவில்லையா? என்ற கேள்வியை தன்னிடமே கேட்பார்கள். அவர்கள் அனைவரும் இறைவன் முன் கவனம் செலுத்தி உருக்கமான இதயத்துடனும், துக்கமான உள்ளத்துடனும் அவனிடம் துஆ செய்வார்கள். தன்னுடைய அனைத்து கீழ்படியாமை மற்றும் பாவங்கள் அனைத்திற்கும் பாவமன்னிப்பு கோருவார்கள். இறைவனிடம்  தன்னுடைய அனைத்து தவறுகளையும் மன்னிக்க கோருவார்கள். மேலும் நேர்வழியை வேண்டுவார்கள். மேலும் அவனிடம் நீ எவரை விரும்புகிறாயோ  அவரையே எங்களுக்கு கலிஃபாவாக தேர்ந்தெடுப்பாயாக என்று துஆ செய்வார்கள்.

எனவே, இவ்வாறு கிலாஃபத்தை நிறுவுவது மனித செயல் அல்ல, மாறாக அது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் செயலாகும்.  இதில் மனிதனுடைய தகுதி வெறும் காரணியாகவே இருக்கின்றது. அதன் மூலமாக இறைவன் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்துகின்றான். ஒரு விவசாயி போல மண்ணில் விதைகளை விதைப்பது மட்டுமே மனிதனின் வேலை, ஆனால் அதை வளர வைப்பவன் அல்லாஹ் ஒருவனே ஆவான்.  இது மக்காவை சார்ந்த இணை வைப்பவர்களை முஸ்லிம்கள் கொன்றார்களே அது போன்றதாகும். ஆனால் நம்பிக்கையாளரின் கரங்களின் மூலம் அந்த இணைவைப்பாளர்களுக்கு இறைவனே தண்டனை வழங்கினான்.

மார்க்கத்தின்  குறிக்கோள்

இறைவா (கலிஃபாவை) தேர்ந்தெடுக்கும் பணியில் கலந்து கொள்கின்ற நபர்களுக்கு;  நீ எவரை அவர்களுக்காக கலிஃப்பாவாக தேர்ந்தெடுக்க விரும்புகிறாயோ அவருக்கே ஓட்டு அளிக்கும் நல்வாய்ப்பை  வழங்குவாயாக என்று நம்பிக்கையாளர்கள் இறைவனிடத்தில் துஆ செய்வார்கள். இங்கு மார்க்கத்தின் குறிக்கோள் என்ன? என்ற வினா எழுகின்றது.

மனிதன் செல்வந்தனாகவோ நல்ல வாழ்வை கழிப்பதோ நல்ல சூழ்நிலையில் இருப்பதோ மார்க்கத்தின் குறிக்கோள் அல்ல. மாறாக மனிதன் இறைவனுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே மார்க்கத்தின் அடிப்படை குறிக்கோளாக இருக்கின்றது. இந்த குறிக்கோளை ஒரு மார்க்கம் நிறைவேற்றவில்லை என்றால், அப்படிபட்ட மார்க்கத்தின் தேவை மனிதனுக்கு இல்லை. நிச்சயமாக கடவுளுக்கும் படைப்பிணங்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்தாத மதம் இறந்ததாகவும், மதிப்பற்றதாகவும் இருக்கிறது. இறைவனுடன் படைப்பினங்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்த முடியும் என்ற விஷயத்தில் இஸ்லாமே தனிச் சிறப்பை பெற்றதாக இருக்கிறது. இந்த உறவானது எதை நாடுகிறது என்றால்; மனிதன் துக்கம்  துயரத்தில் மற்றும்  மனஉளைச்சலில் இருக்கும்போது அவனுக்கு மிகப் பெரிய துன்பம் வந்தடையும் போது அவனுக்கு நேர்வழியின் தேவை இருக்கும்போது இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டும், இறைவன் அவனுடைய துஆவை கேட்டு அவனுக்கு நேர்வழி காட்ட வேண்டும் என்பதே. உதாரணத்திற்கு 'துன்பத்தில் உதவுபவனே நண்பன் ஆவான்' என்று கூறுவதுண்டு. இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்

اَللّٰہُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا

இறைவன் நம்பிக்கை கொண்டவர்களுக்கு  நண்பன் ஆவான். (2:285)

 

கலிஃபாவின் அதாவது இறையச்சம் உடையவர்களின் தலைவரின் மரணத்தை விட ஒரு வருத்தத்திற்குரிய விஷயம் நம்பிக்கையாளர்களுக்கு இருக்க முடியாது. நம்பிக்கையாளர் கூட்டத்தில் அனைவரையும் விட இறையச்சம் உடையவரும், நேர்மையான மனிதரும் இல்லையென்றால்; தலையற்ற உடலைப் போன்று அந்த ஜமாஅத் ஆகிவிடுகின்றது. அப்பொழுது நம்பிக்கையாளர்கள் என்ன செய்வார்கள்?  மகத்துவமிக்க அந்த இறைவனின் சந்நிதியில் விழுந்து விடுவார்கள். மேலும் இறைவா! எங்களுக்கு உதவி புரிவாயாக. எங்களின் மன்றாடுதலுக்கு பதில் அளிப்பாயாக. மேலும் நீ எவரை கலிஃபாவாக தேர்ந்தெடுக்க விரும்புகிறாயோ அவருக்கே ஓட்டளிக்க செய்வாயாக! என்று அவனிடம் மன்றாடுவார்கள். அப்போது இறைவன் தன்னுடைய ரஹீமிய்யத் (மேன்மேலும் கருணை காட்டுவான் என்ற) பண்பை வெளிப்படுத்துகின்றான். மேலும் அவன் வாக்குறுதியளித்த அந்த கிலாஃபத்தை மீண்டும் ஒருமுறை நிறுவச் செய்கின்றான். அதன் மூலம் அவன் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழி வழங்குகின்றான். மேலும் அவன் தேர்ந்தெடுக்க விரும்புகின்ற அந்த மனிதனைப் பற்றி தெரிவிக்கின்றான். இறைவன் கலிஃபாவாக தேர்ந்தெடுக்க விரும்புகின்ற அந்த மனிதனுக்கு ஓட்டளிப்பது மட்டுமே நம்பிக்கையாளர்களின் பணியாகும். அவர் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

நன்றி: அல்-ஃபஸ்ல் இன்டர்நேஷனல் பத்திரிகை  

மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன்-ஈரோடு

 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.