வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
மார்க்கத்தின் குறிக்கோள் என்னவெனில் மனிதன் அவனது இச்சைகளிலிருந்து விடுதலை பெறுவதும் இறைவனின் இருப்பின் மீதும் அவனது முழுமையான பண்புகள் மீதும் உறுதியான நம்பிக்கை கொள்வதன் மூலமாக எல்லாம் வல்ல இறைவனுடன் ஒரு தனிப்பட்ட அன்பை உருவாக்கிகொள்வதும் ஆகும். ஒரு மார்க்கத்தை கடைபிடிப்பதன் உண்மையான நோக்கம் என்னவெனில், இரட்சிப்பின் ஊற்றாகிய இறைவனை குறித்து ஒருவர் தனது கண்களாலேயே அவனை காண்பது போன்ற அளவிற்கான நிச்சய உறுதியை பெற்றுக்கொள்வதாகும். பாவத்தின் தீய ஆன்மா மனிதனை அழித்துவிட முனைகிறது. குறைபாடுகளற்ற உயிருள்ள இறைவன் மீது முழு நிச்சய உறுதியுடன் நம்பிக்கை கொள்ளாத வரையிலும், குற்றவாளியை தண்டிப்பவனும், இறையச்சமுடையவருக்கு முடிவிலா மகிழ்ச்சி அளிப்பவனுமாகிய இறைவன் இருக்கின்றான் என்பதை ஒரு முழு உறுதியுடன் அறியாத வரையிலும் மரணத்தை விளைவிக்கும் பாவத்தின் விஷத்திலிருந்து ஒருவர் தப்பித்து கொள்ள முடியாது. ஒன்றை உபயோகிப்பதால் மரணமே சம்பவிக்கும் என்பதை நம்புகிற ஒருவர் அதனை பயன்படுத்துவதில்லை என்பது பொதுவான அனுபவமாகும். உதாரணமாக எவரும் அறிந்து கொண்டே விஷத்தை விழுங்குவதில்லை. எவரும் வேண்டுமென்றே ஒருவர் புலியின் முன் சென்று நிற்பதில்லை. எவரும் வேண்டுமென்றே ஒரு பாம்பு புற்றினுள் தன் கையை நுழைப்பதில்லை. அப்படியிருக்க, ஒருவர் வேண்டுமென்றே பாவம் செய்வது ஏன்?... காரணம் என்னவெனில் நாம் கூறியுள்ள மற்ற விஷயங்களில் அவர் கொண்டுள்ள நிச்சய உறுதி இந்த விஷயத்தில் அவரிடம் இல்லை. எனவே இறைஇருப்பின் மீதான நிச்சய உறுதியை பெற்றுக்கொள்வதே ஒருவரது தலையாய கடமையாகும். அவர் ஒரு மார்க்கத்தை பின்பற்ற வேண்டும். அதன் மூலமாக அவர் இறைவனுக்கு அஞ்சி பாவத்தை விட்டு விலகுவதற்கு ஏதுவான நிச்சய உறுதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய நிச்சய உறுதியை எவ்வாறு பெற்று கொள்ள முடியம்? வெறும் கதைகளால் இதைப் பெற்றுக்கொள்ள முடியாது. வெறும் வாதங்களால் இதனைப் பெற்றுக் கொள்ள முடியாது. நிச்சய உறுதியை பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி மீண்டும் மீண்டும் அவனுடன் உரையாடும் அனுபத்தை பெறுவது அல்லது அவனது அசாதாரணமான அடையாளங்களை காண்பது அல்லது இத்தகைய அனுபவம் பெற்ற ஒருவரின் அண்மையை பெறுவதே ஆகும்.
(நஸீமே தாவத், ரூஹானி கஸாயின் தொகுதி 19 பக்கம் 447- 448)

டேய் முர்தத்துகளா ??
பதிலளிநீக்குஏண்டா இப்படி பன்றிங்க...
நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டீர்கள்....
தயவுசெய்து கலிமா சொல்லி இஸ்லாத்திள்குள் வாருங்கள்...
வழிகேடன் மிர்சாகுலம் என்பவனை தூக்கி எறியுங்கள்