வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
மார்க்கத்தின் குறிக்கோள் என்னவெனில் மனிதன் அவனது இச்சைகளிலிருந்து விடுதலை பெறுவதும் இறைவனின் இருப்பின் மீதும் அவனது முழுமையான பண்புகள் மீதும் உறுதியான நம்பிக்கை கொள்வதன் மூலமாக எல்லாம் வல்ல இறைவனுடன் ஒரு தனிப்பட்ட அன்பை உருவாக்கிகொள்வதும் ஆகும். இந்த இறை அன்பே மறுமையில் பல்வேறு வடிவங்களில் சுவர்க்கமாக தோற்றமளிக்கிறது. உண்மையான இறைவனை அறியாமல் இருப்பதும், அவனை விட்டு விலகி இருப்பதும், அவனுடன் அன்புக்கொள்ளாமலிருப்பதுமே மறுமையில் பல்வேறு வடிவங்களில் நரகமாக தோற்றமளிக்கிறது. எனவே உண்மையான குறிக்கோள் அவனிடம் முழுமையான நம்பிக்கை கொள்வதாகும். இப்பொது எழும் கேள்வி என்னவெனில் எந்த மார்க்கம், எந்த வேதநூல் இந்த தேவையை நிறைவு செய்கிறது என்பதாகும். இறைவனுடன் உரையாடல் என்னும் கதவு மூடப்பட்டு விட்டதென்றும், நிச்சய உறுதியைப் பெற்றுக் கொள்ளும் வழிகள் முத்திரையிடப்பட்டு விட்டன என்றும் பைபிள் கூறுகிறது. எதுவெல்லாம் நடைபெற வேண்டுமொ அவை முந்தைய காலத்தில் நடைபெற்று விட்டன. எதிர்காலத்தில் எதுவும் நடைபெறாது. மரணித்து விட்ட ஒரு மார்க்கத்தால் என்ன பயன் இருக்க முடியும்? மரணித்து விட்ட ஒரு வேதநூலிருந்து நாம் என்ன பயனை பெற்றுக் கொள்ள முடியும்? மரணித்து விட்ட ஒரு இறைவனால் என்ன அருளை வழங்க முடியம்?
(சஷ்மே மஸீஹ், ரூஹானி கஸாயின் தொகுதி 20 பக்கம் 352-353)

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None