எவரையும் உங்கள் சொந்த பகைவராக கருதாதீர்கள்

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் இமாம் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

எவரையும் உங்களது சொந்த பகைவராக ஒருபோதும் கருதாதீர்கள். காழ்புணர்ச்சியுடன் செயல்படும் இந்த பழக்கத்தை முற்றிலுமாக விட்டு விடுங்கள். இறைவன் உங்களுடன் இருந்து நீங்களும் இறைவனுக்காக ஆகி விட்டால் அவன் எதிரிகளைக் கூட உங்களது தொண்டர்களை சார்ந்தவர்களாக ஆக்கி விட முடியும். ஆனால், நீங்கள் இறைவனுடன் உள்ள தொடர்பையே முறித்துக் கொள்வீர்கள் என்றால், மேலும் அத்துடன் அவனுடன் உள்ள நட்புறவில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்றால் அவனது விருப்பத்திற்கு மாற்றமாக பிறகு இறைவனை விட உங்களுக்கு பெரிய எதிரி வெறு யார் இருக்க முடியும்? படைப்பினங்களின் பகைமையிலுருந்து மனிதனால் தப்பிக்க முடியும். ஆனால், இறைவன் உங்கள் எதிரியாகி விட்டால் பிறகு எல்லா படைப்பினங்களும் சேர்ந்து உங்களுக்கு நண்பர்களாக இருந்தாலும் அதனால் எதுவும் நடக்க முடியாது. எனவே, உங்களது வழிமுறை நபிமார்கள் அலைஹிமுஸ்ஸலாம் கடைபிடித்தது போன்ற வழிமுறையாக இருக்க வேண்டும். எந்த சொந்த பகையும் இருக்கக் கூடாது என்பதே இறைவனின் விருப்பமாக இருக்கின்றது.
(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள் 3-2-17 அன்று ஆற்றிய ஜுமுஆ சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டது)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.