அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் எதிரிகள் மற்றும் நடுநிலையோடு சிந்திப்பவர்களின் சிந்தனைக்கு.....!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்.....நான் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை சார்ந்தவன்.நான் இந்த இயக்கத்தை பற்றி சுருக்கமாக இங்கு கமாண்ட் படிக்கும் வாசகர்களின் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன். ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் தனக்கென ஒரு தனி மதத்தையோ, வழியையோ உருவாக்கிக் கொல்லவில்லை. மாறாக அவர்கள் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி வந்த மசீஹும், இமாம் மஹ்தியும் ஆவார்கள்.இவர்கள் மற்றும் இவர்கள் மூலமாக அல்லாஹ் உருவாக்கிய இந்த அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் கொள்கை லா இலாஹா இல்லல்லாஹு முகம்மதுர் ரசூலுல்லாஹி, என்பதாகும் மட்டுமல்லாமல் இந்த வானத்தின் கீழ் ஒரு உயிருள்ள இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் அல்லாஹ் ஒருவனே. அதே போல் ஒரு உயிருள்ள மதம் ஒன்று இருக்கிறது என்றால் அது இஸ்லாம் ஒன்றே. அதே போல் ஒரு உயிருள்ள ஒரு வேதம் இருக்கிறது என்றால் அது திரு குர் ஆன் ஒன்றே. அதே போல் ஒரு உயிருள்ள தூதர்
இருக்கிறார் என்றால் அது எம்பெருமானர் நபிகள் நாயகம் காதமுன் நபிய்யீன்,அஹ்மது முஜ்தபா முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்கள் ஒருவர் மட்டுமே. இதுதான் இமாம் மஹ்தியாக, காலத்தின் இமாமாக தோன்றிய ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் மற்றும் அவர்களின் ஜமாஅத்தின் கொள்கையும் ஆகும். இதுதான் இந்த ஜமாஅத்தின் சாராம்ஸமும் ஆகும். உயிரும் ஆகும். இது அல்லாமல் இந்த ஜமாஅத் இல்லை. என்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே. அவர்கள் எதையும் புதியதாக உருவாக்கவில்லை. அதே போல் இந்த ஜமாத்துக்கென ஒரு தனி வேதமும் ஒன்றும் இல்லை. திருக் குர் ஆன் ஒன்றே இந்த இறை ஜமாஅத்தின் வேதமும் உயிருமாகும். இதைத்தான் இந்த ஜமாஅத் பிடித்துக் கொண்டு இஸ்லாத்தை பரப்பி கொண்டு வருகிறது. இதுதான் உண்மை. அல்லாமல் எங்களுக்கென தனி வேதம் உண்டு அது என்று கூறுவது நல்உள்ளம் படைத்த மக்களை வழி கெடுப்பதாகும். இன்று இவர்கள் மீது எதிரிகள் ஆட்சேபனை வைக்கிறார்கள் என்றால் அதுக்கு ஒரே ஒரு காரணம் அந்த எதிரிகளின் காழ்புணர்ச்சி ஆகும். கோபம் ஆகும். காரணம் அவர்கள் ஹஸ்ரத் காதமுன் நபிய்யீன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு பிறகு தன்னை நபி என வாதிட்டார் என்பதற்காக, நான்தான் ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்னறிவித்த மசீஹ் ஈசப்னு மர்யம் என்று வாதிட்டதற்காக...இதுதான் எதிரிகள் இவர்களை எதிர்பதற்கு முழு காரணம் ஆகும். நாம் இவர்கள் வைத்த வாதம் அனைத்தும் சரியானதே என்பதை திருக் குர் ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நிரூபித்துக் கொண்டும் இருக்கிறோம், நிரூபித்தும் வருகிறோம், ஆனால் எதிரிகள் நாம் வைத்த, வைக்கின்ற வாததுக்கு சரியான பதிலை திருக் குர் ஆனிலிருந்து தர முடியாதனால் கோபம் கொண்டு ஆத்திரம் கொண்டு, தன்னை இறைவன் புறமிருந்து வந்த இறைத்தூதர் நான் என்ற வாதிட்டவரின் மேல் அப்பட்டமாக பொய்யை கூறி அவர்களை இழிவு படுத்தி நல் உள்ளம் படைத்த மக்களின் கண்முன் உண்மை தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பொய் மூட்டை என்ற திரையை இட்டுள்ளார்கள். நாமும் பல முறை திருக் குர் ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் அவர்களை பொய் படுத்த முன் வாருங்கள் என்று அழைத்திருந்தும், அவர்கள் அதன் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள், எங்களுக்கு ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களின் நூல் ஒன்றே போதும் அவர்களை பொய் படுத்த என்று கூறி வருகின்றார்கள். திருக் குர் ஆன் தேவையில்லை, ஹதீஸ் தேவையில்லை என்பதுதான் இவர்களின் வாதம். சரி நாம் கேட்கிறோம், அவர்கள் எழுதிய நூல் பல்வேறு நூல்கள் இருக்கின்றன, அது ஒவ்வொன்றும் உருது மொழி, மற்றும் அரபி பொழியை சார்ந்து இருக்கிறது. இவர்கள் எந்த நூலிலிருந்து ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மெது ஆட்சேபனை வைக்கிறார்களோ அவர்கள் அந்த நூலைக்கூட முழுவதுமாக படித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இப்படி ஒருவர் எழுதிய நூலிருந்து அதனை முழுவதுமாக படிக்காமல் இடையிலிருந்து ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு, ஒரு சில வார்த்தைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் மீது ஆட்சேபனை செய்வது சரியாகுமா? இது எவ்வாறு இருக்கிறது என்றால், ஒரு இஸ்லாமிய போதனையை சரியாக அறியாதவன். திருக் குர் ஆணை அரை குறையாக வாதித்தவன் முன் பின் உள்ள வார்த்தையை பார்க்காமல் "அல்லாஹ் தொழுகையின் பக்கம் நெருங்காதீர்கள்" (குர் ஆனில் வருவது நீங்கள் மயக்க
நிலையில் இருக்கும் போது தொழுகையின் பக்கம் நெருங்காதீர்கள் என்று வருகிறது) என்று சொல்லிவிட்டான் அதனால் நான் தொழாமல் இருப்பதில் என்ன குற்றம் என்று சொன்னால் அது சரியாகுமா? நடுநிலையோடு சிந்திப்பவர்கள் அல்லாஹ்வுக்காக சற்று இவ்விடம் நின்று சிந்தியுங்கள்.....எதிரிகள் வைக்கும் ஒவ்வொரு ஆட்சேபனைகளுக்கும் பதில் நாம் கூறி இருந்தும் இவர்கள் வேனுக்கேன்றே இப்படி நாங்கள் எழுதிய பதிலை படிக்காமல் அவர்கள் மீது ஆட்சேபனை செய்து வருகிறார் என்றால் (அதுவும் அசிங்கமாக, நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தி எழுதுகிறார்கள் ஆட்சேபனை செய்கிறார்கள்) இவர்களின் உள்ளம் எந்த அளவுக்கு மாசு படிந்ததாக இருக்கும். மக்களின் கவனத்தை திருப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக, மக்களின் உள்ளம் இந்த ஜமாஅத்தின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்துக்கா இவர்கள் இந்த இழிவான செயலை செய்து வருகிறார்கள். இவர்கள் இந்த ஆட்சேபனையை இதில் உள்ள கருத்து என்ன? உண்மை என்ன என்பதை தெரிய விரும்பி இருந்தால் இவ்வளவு அசிங்கமாக, அநாகரீகமாக ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களின் நூலினை படித்து இவ்வாறு ஆட்சேபனை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர்களின் நிலையோ நான் முன்பு கூறியது போன்று இவர்களை நல்உள்ளம் படைத்த மக்கள் முன் இழிவு படுத்திக் காட்ட வேண்டும், இவர்கள் பக்கம் நல்உள்ளம் படைத்த மக்கள் சாய்ந்து விடக்கூடாது என்பதையும் சார்ந்திருக்கிறது. இவர்கள் செய்யக் கூடிய இந்த செயல் ஒன்றும் புதிதல்ல இது ஆதம் நபி காலத்திலிருந்தே தொண்டுதொட்டு வருகிறது, அல்லாஹ் கூறுகிறான்," எனினும் அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை."(15:11), அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை." (36:30) இவ்வாறு ஒரு தூதர் வந்தால் அவர்களுடன் எதிர்களின் செயல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை பல வசனங்கள் மூலமாக நமக்கு தெரிவித்திருக்கிறான். அந்த வகையில்தான் இவர்களும் எதிர்த்து மக்கள் மத்தியில் பரிகாசம் செய்து வருகின்றனர். இந்த பரிகாசத்தை இறைவன் இவர்கள் பக்கமே திருப்புகிறான் என்பதை இவர்களால் பார்க்க
முடியவில்லை.. அல்லாஹ் கூறுகிறான் " எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன் அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச்
சூழ்ந்து கொண்டது." (39:48). ஆகவே நாங்கள் இவர்கள் செய்கின்ற இந்த ஆட்சேபனை மூலம் ஒன்றும் கவலை படப் போவதுமில்லை, அதே போன்று ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களுக்கும் ஒன்றும் ஆகப் போவதுமில்லை. மாறாக அல்லாஹ்வின் செயல் எவ்வாறு வெளிப்படும் என்பதை அவனே தெரிவித்து விட்டான். அவன் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறான். இதனை கண் இருப்பவர்கள் காண்பார்கள்....அல்லாஹ் தான் அனுப்பிய தனது அடியானுக்கு, தூதருக்கு சாதகமாக கூறுவதை பாருங்கள், அவன் கூறுகின்றான், " "நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்" என்று அல்லாஹ் விதித்துள்ளான்" (58:21) அல்லாஹ்வின் தூதர்கள் எப்போதெல்லாம் இந்த
பூமிக்கு அவனது தூதை எடுத்து வருவார்களோ அப்போதெல்லாம் அல்லாஹ் அவர்களோடு துணை இருந்து அவர்களுக்கு உதவி புரிகிறான், மட்டுமல்லாமல் அவர்களுக்கு வெற்றியும் தருகிறான். (இந்த இடத்தில்
அல்லாஹ் தனது தூதருக்கு தரும் வெற்றி என்றால் என்ன?என்பதை சிந்திக்க வேண்டும்) இது அல்லாஹ் விதித்த விதி. இந்த விதியை யாராலும் மாற்ற முடியுமா? அதே சமயம் நான் அல்லாஹ் புறமிருந்து வந்திருக்கிறேன் எனக்கு இன்னென்ன தூதுச் செய்தியை அவன் அறிவித்து உள்ளான் என்று பொய் கூறினார் என்றால் அவனோடு அல்லாஹ் எவ்வாறு செயல் பாடுகிறான் என்பதையும் அவனே குர் ஆனில் கூறுகின்றான், அவன் கூறுகின்றான்," அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக்
கூறியிருப்பாரானால் அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்."(69: 43-47) இந்த வசனத்தில் இருந்து அல்லாஹ் நமக்கு கூறும் உபதேசத்தை பாருங்கள், ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களை குறிப்பிட்டு கூறுகின்றான் அவர் நான் சொன்னதாக ஒன்றை உங்களிடம் இட்டுக் கட்டி கூறினார் என்றால் அவரது வலக் கையை பிடித்து (அதாவது அவருக்கு உதவாமல், அவருக்கு அவரது குறிக்கோளில் வெற்றியை வழங்காமல்) அவருடய நாடி நரம்பை தரித்திருப்போம் ( அதாவது அவரது
குறிக்கோளில் அவருக்கு வெற்றியை வழங்காமல் உடனே அவருக்கு மரணத்தை கொடுத்திருப்போம், அவரின் குறிக்கோளை தோல்வியுரச் செய்திருப்போம்) என்று கூறுகிறான். இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை
குறிப்பிட்டுக் கூறிய வசனம். ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களை சொல்லவா வேண்டும்...! நடுநிலையோடு சிந்திப்பவர்களே, எதிரிகளே...! சற்று நிலையோடு இவ்விடம் சிந்திக்க முன் வாருங்கள், ஒரு பக்கம் அல்லாஹ் கூறிய இந்த வசனங்களை வையுங்கள், மறு பக்கம் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களை வைத்து எடை போட்டு பாருங்கள்....இன்று அவர்களின் ஜமாத்துக்கு வளர்ச்சி மேல் வளர்ச்சியை வழங்கி கொண்டே செல்கிறான் என்றால் அது அல்லாஹ் 58:21 வசனத்தின் படி அவன் தனது தூதருக்கு வெற்றியை வழங்கி கொண்டே செல்கிறான் என்று கருதாமல் வேறென்ன கருத முடியும்? (இவ்விடம் சிலர் கூறுகிறார்கள் கிறிஸ்துவர்களும் மிகைத்து போய்தான் இருக்கிறார்கள் அவர்கள் உண்மையாளர்களா? அவர்களுக்கு அல்லாஹ் உதவி புரிந்து கொண்டிருக்கிறான் என்று சொல்ல வருகிறீர்களா? என்று கேள்வியை எழுப்புகிறார்கள். கேள்வி எழுப்புவர்கள், மற்றும் இந்த கேள்வி நியாயமான கேள்வி என்று கருதுபவர்கள் சிந்திக்க வேண்டும், அதாவது அந்த கிருஸ்துவர்களில் (இன்று) எவர் நான் அல்லாஹ்வின் புறமிருந்து வந்திருக்கிறேன், எனக்கு இறைவன் இவ்வாறு கூறி இருக்கிறான் என்று இட்டுக் கட்டி கூறியவர் எவரேனும் உண்டா? இல்லை. அடுத்து அல்லாஹ் கூறுவதோ எனது தூதருக்கு வளர்ச்சி மேல் வளர்ச்சியை கொடுத்துக் கொண்டே செல்வோம் என்பதாகும். ஆனால் இன்று கிருஸ்துவ மதம் அழிந்து கொண்டே செல்கிறது. அவர்கள் எங்கே வளர்க்கிறார்கள்? வளரவில்லை. ஆகவே எதிரிகளின் இந்த கேள்வி சரியானதாக இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆக ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களின் இந்த ஜமாஅத் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது என்பதை ஒப்புக் கொள்ளாமல், ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்களை எதிரிப்பவர்கள் ஒன்று நான் கூறிய அல்லாஹ்வின் வசனங்களை மறுக்க வேண்டும், இல்லை என்றால்
இமாம் மஹ்தியை எந்த ஒரு ஈகோவும் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இல்லை என்றால் அல்லாஹ் கூறிய அந்த வசனம் உண்மைதான் என்று கூறினால் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் அல்லாஹ் கூறிய அந்த வசனங்களுக்கு பொருந்த மாட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும். இதுவும் இல்லை என்றால் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் எழுதிய நூலினை அனைத்தையும் படித்துவிட்டு எதிரிகள் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் மீது ஆட்சேபனை செய்ய வேண்டும்....ஆக இந்த நான்கு ஆப்ஷன்ஸ் எதிரிகளின் முன்பு நாம் வைக்கிறோம். எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அல்லாஹ் என்றும் நல் உள்ளம் படைத்த மக்களுக்கு நேர்வழியினை வழங்க கூடியவனாக இருக்கிறான்....
ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் எழுதிய நூலினை அனைத்தையும் படித்துவிட்டு எதிரிகள் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் மீது ஆட்சேபனை செய்ய வேண்டும்....//
பதிலளிநீக்குசகோ உங்கள் அபிமானத்துக் குறியவரின் நூல்கள் அனைத்தும் தமிழில் உள்ளதா அதை எங்கு வாங்குவது நான் இருப்பது சென்னை தேணம்பேட்டையில் kaleelsms@gmail.com என்னும் முகவரிக்கு செய்தி அனுப்பவும் இல்லை என்றால் இங்கே செய்தியை பகிரவும்