“ஸூரா ஆலு இம்ரானின் 29-வது வசனத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அதை கவனமாக வாசித்தால், உங்கள் கேள்விக்கான விடையை அதிலேயே கண்டடைவீர்கள்:
لَا یَتَّخِذِ الۡمُؤۡمِنُوۡنَ الۡکٰفِرِیۡنَ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِیۡنَ
‘இறைநம்பிக்கையாளர்கள், மற்ற இறைநம்பிக்கையாளர்களைத் தவிர்த்துவிட்டு, இறைமறுப்பாளர்களைத் தங்களின் நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம்.’
இதன் பொருள், இறைநம்பிக்கையாளர்களின் நலன்களுக்கு எதிராக இறைமறுப்பாளர்களை உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என்பதாகும். இந்தக் கட்டளையானது குறிப்பாக இஸ்லாத்தின் கடும் எதிரிகளாக இருந்தவர்கள், முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராகத் தொடர்ந்து போரிட்டு வந்தவர்கள் மற்றும் பெருமானார் (ஸல்) அவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதிலேயே குறியாக இருந்தவர்கள் போன்ற இறைமறுப்பாளர்களைப் பற்றியதாகும். இத்தகைய சத்தியத்தின் எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்ளாமல், அதற்குப் பதிலாக இறைநம்பிக்கையாளர்களையே நண்பர்களாக்கிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.
எனவே, இந்த வசனத்தில், முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் உறவு கொள்வது தடைசெய்யப்படவில்லை; மாறாக, அவர்கள் 'நட்பு' என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதற்காக இஸ்லாத்தின் எதிரிகளான காஃபிர்களுடன் நெருங்கிய நட்பை உருவாக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None