இமாம் மஹ்தியைத் தேடுவதில் இஸ்லாமிய உலகம்

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது உம்மத்திற்கு வரவிருக்கின்ற நிலைமகளைப் பற்றிக் கூறிய செய்திகளில் ஒன்றுமுஸ்லிம்களின் உள்ளங்களிலிருந்து ஈமான் சென்று விடும்; அவரகள் முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்டாலும் ஈமான் எனும் ஒளியை விட்டும் விலகியிருப்பார்கள் என்பதாகும். ஒரு சந்தர்ப்பத்தில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஈமான் கார்த்திகை நட்சத்திரம் வரை சென்று விடும். அப்போது பாரசீக வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் அதனைக் திரும்பக் கொண்டு வருவார்.”                             
                                                                                            (சஹீஹ் புகாரி , கிதாபுத் தஃப்ஸீர் சூரா ஜீமுஆ)

அவ்வாறே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறும் கூறினார்கள்:

இஸ்லாத்தின் பெயரும், திருக்குர்ஆனின் சொற்களுமே எஞ்சியிருக்கும். பள்ளிவாயில்கள் பெளிப்படையில் நிரம்பி காணப்படும்ஆனால் நேர்வழி எனும் ஒளி அதில் இருக்காது. மேலும் முஸ்லிம்களின் ஆலிம்கள் மிக மோசமான படைப்பினங்களாக இருப்பார்கள்.”
                                                                                                                                          ( மிஷ்காத், கிதாபுல் இல்ம் )

இதுதான் ஈமான் இல்லாமற்போய்விட்ட காலமாகும்: இன்று உலகத்தில் உண்மையான முஸ்லிம் கிடைப்பதில்லை: நமக்கு இறைவனால் நியமிக்கப்பட்டவரின் தேவை இருக்கிறது என்பதை இன்று இஸ்லாமிய உலகின் தலைவர்களும், சிந்தனையாளர்களும் ஒப்புக் கொள்கின்றனர் !! அல்லாஹ் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவாறு இக்காலத்தில் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது காதியானி (அலைஅவர்களை வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், காலத்தின் மஹ்தியாகவும்காலத்தின் இமாம் ஆகவும் அனுப்பியிருக்கிறான். அவர்கள் 1891- ஆம் ஆண்டு, அல்லாஹ் என்னை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடிமைத்தனத்திலும், அடிச்சுவட்டைப் பின்பற்றுவதிலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், இமாம் மஹ்தி ஆகவும் அனுப்பியிருக்கின்றான் எனவும், முழு உலகத்தையும் இஸ்லாத்தின் பக்கமும், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் பக்கமும், திருக்குர்ஆனின் பக்கமும் அழைப்பதே எனது தோற்றத்தின் நோக்கம் எனவும் வாதிட்டார்கள்ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

பூமியில் வாழ்கின்ற அனைத்து மக்களே! கிழக்கிலும், மேற்கிலும் குடிபெயர்ந்துள்ள அனைத்து மனித ஆன்மாக்களே! இப்போது பூமியில் உண்மையான மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். உண்மையான இறையன், திருக்குர்ஆன் எடுத்து வைத்திருக்கும் அந்த இறைவந்தான்மேலும் நிரந்தரமான ஆன்மீக வாழ்வைக் கொண்ட நபி, கம்பீரம் மற்றும் பரிசுத்தததின் அரியணையில் அமர்ந்திருப்பவர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களே ஆவார்கள் என்பதன் பக்கம் நான் மிக வலுவாக உங்களை அழைக்கின்றேன்.”
                                                    (தர்யாக்குல் குலூப்ரூஹானி கஸாயின் தொகுதி 15 பக்கம் 141)

அவ்வாறே அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்:

நான் குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தில் திருக்குர்ஆனீன் மேன்மைகளையும் ஹஸ்ரத் ரஸீலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மகத்துவங்களையும் வெளிப்படுத்துவதற்காகவும், இஸ்லாத்தைத் தாக்கிக் கொண்டிருக்கின்ற அந்த எல்லா எதிரிகளுக்கும் எனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற ஒளிகள், அருள்கள், அற்புதங்கள் மற்றும் இறைவன் புறமிருந்து கிடைத்த ஞானங்களின் மூலமாக நான் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இறைவன் என்னை இந்த 14- ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தன் புறமிருந்து நியமித்து உறுதிமிக்க மார்க்கமான இஸ்லாத்தைப் புதுப்பிப்பதற்காகவும்ஆதரவளிப்பதற்காகவும் அனுப்பியுள்ளான்.”
                                       (பரகாத்துத்துஆ ரூஹானி கஸாயின் தொகுதி 6 பக்கம் 34)

எனவே முஸ்லிம் சகோதரர்களே !

அல்லாஹ்வின் புறமிருந்து நியமிக்கப்பட்ட இமாம் வரும் போதெல்லாம் அவர்களை ஏற்றுக் கொள்வதும் நம்பிக்கை கொள்வதும் அவசியமாகும். ஏனெனில் எல்லா அருள்களும் அவர்களுடனேயே தொடர்பு கொண்டவையாக ஆக்கப்பட்டு விடுகின்றன. இறைவனால் நியமிக்கப்படும் அந்த இமாம் இல்லாமல் எல்லாப் புறமும் இருளும், அறியாமையும் தான் இருக்கின்றது.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எவர் (இறைவனால் நியமிக்கப்பட்ட) இமாமை ஒப்புக் கொள்ளாமல் மரணித்து விடுகின்றாரோ அவருடைய மரணம் அறியாமையின் மரணமாகும்.”

அவ்வாறே ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறும் வலியுறுத்திக் கட்டளையிட்டுள்ளார்கள் :

நீங்கள் (இமாம் மஹ்தியாகிய) அவரைக் கண்டால் அவரிடம் கண்டிப்பாக் பைஅத் செய்யுங்கள். பனிமலையை முழங்காலில் கடந்து செல்ல நேர்ந்தாலும் சரியே. ஏனெனில் அவர் அல்லாஹ்வின் கலீஃபாவாகவும் மஹ்தியாகவும் இருப்பார்.”
                                                                              (முஸ்னத் அஹ்மது பின் ஹம்பல்)
 (முஸ்தத்ரிக் ஹாகிம். கிதாபுல் ஃபிதன் வல் மலாஹிம். பாபு குரூஜீல் மஹ்திய்யி)

எனவே முஸ்லிம் சகோதரர்களே ! 

இதுதான் அந்த அருளுக்குரிய  காலமாகும். இதில் சரியாக 14-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தோற்றுனர் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள், நானே இமாம் மஹ்தியும், வாக்களிக்கப்பட்ட மஸீஹீம் ஆவேன் என வாதம் புரிந்தார்கள். மேலும் அன்னாருக்கு சாதகமாக இறைவன் மாபெரும் அடையாளங்களைக் காட்டினான். மேலும் முந்தைய வேதங்களில் உள்ள முன்னறிவிப்புகளை நிறைவேற்றினான்எனவே அன்னாரின் வாதம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கவனத்திற் கொள்ளத் தக்கது. அன்னார், உண்மையிலேயே முழு முஸ்லிம் உம்மத்தும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற அதே இமாம் மஹ்தி என்றால் அவர்களை ஒப்புக் கொள்வதும் ஈமான் கொள்வதும் அவசியமானதாகும்இல்லையென்றால் நீங்கள் இறைவனுக்கு முன்னால் பதில் சொல்ல வேண்டி வரும். எனவெ யோசியுங்கள்; சிந்தியுங்கள். இறைவனிடம் கேளுங்கள். உள்ளத்திற்கு திருப்தி ஏற்பட்டுவிட்டால் இவருக்கு ஹஸ்ரத் ரஸீலுல்லாஹ் (ஸல்) அவர்களின் ஸலாத்தினை எட்டவைத்து விட்டு அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தில் இணையுங்கள். ஏனெனில் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையும், இஸ்லாத்தின் வெற்றி எனும் மகத்தான பணியும் இனி இந்த ஆன்மீக ஜமாஅத்துடனேயே தொடர்புடையதாக இருக்கின்றதுஅல்லாஹ் தனது வாக்குறுதிக்கேற்ப இமாம் மஹ்தியின் மூலமாக இந்த ஜமாஅத்தில் நுபுவ்வத் வழியிலான கிலாஃபத்தின் தொடரை நிலை நாட்டியிருக்கின்றான் என்றால், இதை விட்டும் இன்று எல்லா முஸ்லிம் பிரிவுகளும் இழப்பிற்குரியவையாக இருக்கின்றன. மேலும் அல்லாஹ்வின் அருளால், இந்த அஹ்மதிய்யா கிலாஃபத்தின் ஐந்தாவது கலீஃபா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது அவர்களின் தலைமையில் இஸ்லாத்தைப் பரப்புவதை முழுமைப் படுத்தும் பணி மிகவும் உயர்ந்த அளவில் தொடர்கின்றது. இன்று முஸ்லிம் தொலைக்காட்சி அஹ்மதிய்யா (mta) வின் மூலமாக 24 மணிநேரமாக இஸ்லாமிய போதனைகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக அரபிகளிலிருந்தும் அரபி அல்லாதவர்களிலிருந்தும் ஆயிரக்கண்கான் நற்பேறு பெற்ற ஆன்மாக்கள் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்து கொண்டிருக்கின்றன-

அல்ஹம்து லில்லாஹ்.

அல்லாஹ்வின் அருளினால் உலகின் 200 நாடுகளில் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் உறுதியாக நிலைபெற்று விட்டது. 70 மொழிகளில் திருக்குர்ஆனின் மொழியாக்கங்களைச் செய்து வெளியிடப்பட்டுள்ளனஅது மட்டுமின்றி, Humanity First (மனிதன் முதலில்) என்ற கோட்பாட்டின் கீழ் முழு உலகிலும் மனித குலத்தின் வெற்றிக்கும், வளர்ச்சிக்குமான பணிகள் எவ்வித மத, இன பாகுபாடுமின்றி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கண்க்கான பள்ளிக்கூடங்களும், மருத்துவ நிறுவனங்களும் செயல்படுகின்றன. ஃபல் ஹம்து லில்லாஹி அலா ஸாலிக்கடைசியாக இன்னொன்றையும் தெளிவுபடுத்துவது அவசியமானதாகும். அதாவது இஸ்லாத்தின் ஆலிம்கள் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் மீதும், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தோற்றுனர் மீதும் பாமர முஸ்லிம்களை தப்பெண்ணம் கொள்ள வைப்பதற்காக, இவர்கள் ஹஸரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை காத்தமுன்னபிய்யீன் என ஏற்றுக் கொள்வதில்லை என்றும், ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது காதியானியை கடைசி நபி என்றும் ஏற்றுக் கொள்கின்றனர் என்றும் குற்றம் சுமத்துகின்றனர் (நவூதுபில்லாஹ்இது முற்றிலும் மாபெரும் இட்டுக்கட்டும், மிகவும் வெட்கங்கெட்ட பொய்யுமாகும். ஏனெனில், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தின் தோற்றுநர் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :

நான் காத்தமுல் அன்பியா அவர்களின் நுபுவ்வத்தை ஏற்றுக் கொள்கிறேன். மேலும் எவர் கத்மே நுபுவ்வத்தை மறுப்பவராக இருப்பாரோ அவரை மார்க்கமற்றவராகவும், இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேறியவராகவும் நான் கருதுகிறேன்.”

அவ்வாறே அவர்கள் கூறுகிறார்கள் :

கொள்கை அடிப்படையில் அல்லாஹ் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம், இறைவை ஒருவன் என்றும் முஹம்மது ஸல்லல்லாஹீ அலைகி வஸல்லம் அவனுடைய நபி என்றும் காத்தமுல் அன்பியா என்றும், எல்லாரையும் விட மேலானவர் என்றும் நம்ப வேண்டும் என்பதுதான்.”
தக்ரீர் வாஜிபுல் இஃலான் 23.10.1891)
(கிஷ்தி நூஹ் பக்கம் 15 வெளியீடு 1902)

சகோதரர்களே! சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவெனில்,

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை கத்மே நுபுவ்வத்தை மறுக்கக் கூடியதாக குறிப்பிடுகின்ற ஆலிம்கள்அவர்கள் அஹ்லே சுன்னத்தாக இருந்தாலும், ஷியாவாக இருந்தாலும், தேவ்பந்தியாக இருந்தாலும்பரேலவியாக இருந்தாலும், அஹ்லே ஹதீஸாக இருந்தாலும், அல்லது வேறு எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒரு புறம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கத்மே நுபுவ்வத் பற்றி பேசுகின்றனர். மேலும் லாநபிய்ய பஅதி (எனக்குப் பிறகு நபியில்லைஎன்ற நபிமொழிக்கேற்ப ஹஸரத் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்குப் பிறகு எல்லா விதமான நுபுவ்வத்தின் வாசலும் அடைபட்டு விடுவதாக நம்புகின்றனர். அத்துடன், கடைசி காலத்தில் ஹஸ்ரத் ஈசா (அலைஅவர்கள் முஹம்மதிய்ய உம்மத்தின் சீர்திருத்தத்திற்காக வானத்திலிருந்து இறங்குவார் என்றும் அவர் நபியாக இருப்பார்: உம்மதீ யாகவும் இருப்பார் என்றும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்: அதை வெளிப்படுத்தவும் செய்கின்றனர்: அது பற்றி பாமர மக்களுக்கு அறிவுரையும் கூறுகின்றனர்அப்போது, இந்தக் கொள்கை கத்மே நுபுவ்வத்திற்கு மாற்றமானதாகவும் முரண்பட்டதாகவும் இல்லையா? நிச்சயமாக இருக்கின்றது. ஏனெனில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் எல்லா நபிமார்களையும் போன்று மரணமடைந்து விட்டார்கள். அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: “முஹம்மது (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) தூதராவார்கள். மேலும் அவருக்கு முன்னுள்ள எல்லா தூதர்களும் காலம் சென்று விட்டார்கள்.” இதிலிருந்து ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் மற்ற நபிமார்களைப் போன்று மரணித்து விட்டார்கள் எனத் தெளிவாக் வெளிப்படுகிறதுஆயினும், நபிமொழிகளில் ஈசா இறங்குதல் என்ற சொல்லின் மூலமாக, அவர் வானத்திலிருந்து இறங்குவார் என மக்களுக்கு தவறு ஏற்பட்டுவிட்டது. இன்னும் சொல்லப்போனால் உண்மையில்திருக்குர்ஆனின் சொல்வழக்கைப் புரியாத காரணத்தினால் தவறு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நாம் உங்களுக்கு ஆடையை இறக்கினோம் (7:27) என்றும், அவ்வாறே நாம் இரும்பை இறக்கினோம் (57:26) என்றும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடையும் இரும்பும் வானத்திலிருந்து இறங்குகின்றது என்று இதற்குப் பொறுளன்று. மாறாகநாம் ஆடையையும் இரும்பையும் நாம் படைத்தோம் என்றே பொருளாகும்இந்த பொருளிலேயே ஈசா (அலை) இறங்குதல் என்ற சொல் வழக்கும் இருக்கிறது(திருக்குர்ஆன்

உண்மை என்னவெனில், ஹஸ்ரத் ஈசா (அலை) மற்ற நபிமார்களைப் போன்று மரணமடைந்து விட்டார்கள். மேலும் சிலுவை சம்பவத்திற்குப் பிறகு ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் பாலஸ்தீனதிலிருந்து இடம் பெயர்ந்து சென்று காஷ்மீர் வந்தார்கள். மேலும் Srinagar ல் உள்ள கான்யார் வீதியில் அவருடைய கபர் இருக்கின்றது. அவர் வானத்திற்கு செல்லவே இல்லை என்றால், வானத்திலிருந்து அவர் எப்படி இறங்குவார்இவையெல்லாம் தவறான சிந்தனை முறையின் விளைவாகும்வரவேண்டிய மஸீஹீம் மஹ்தியும் இந்த உம்மத்தையே சேர்ந்த ஒரு நபராவார். அவர் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றியதாலும், அன்னாரின் அடிமையானதினாலும் அன்னார் மீது அளவற்ற அன்பு, நேசம் கொண்டதின் காரணமாகவும் முஹம்மதிய்ய் மஸீஹ் மற்றும் காலத்தின் மஹ்தி என்ற வகையில் உம்மத்தி நபி என்ற உயர்ந்த அந்தஸ்தில் இஸ்லாமிய பணியின் வெற்றி பெறும் படைத் தளபதியாக ஆக்கி அனுப்பப்பட்டிருக்கிறார்அவர்தாம் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது (அலை) ஆவார்கள்கத்மே நுபுவ்வத்தின் முத்திரையை உடைக்காமல் அவர்களுக்கு உம்மத்தி நபி என்ற அந்தஸ்து எப்படிக் கிடைத்தது ? என்பது பற்றி அவர்களே இவ்வாறு கூறுகின்றார்கள் :

எனக்கு இந்தச் சிறப்பு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றியதனாலேயே கிடைத்திருக்கின்றது. நான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தைச் சேர்ந்தவனாக இல்லா விட்டால்அன்னாரைப் பின்பற்றாவிட்டால் உலகத்திலுள்ள எல்லா மலைகளுக்கு சமமாக எனது நற்செயல்கள் இருந்தாலும் இறைவனோடு உரையாடுகின்ற இந்தச் சிறப்பை நான் ஒரு போதும் பெற்றிருக்க மாட்டேன். ஏனெனில் இப்போது முஹம்மதிய்ய நுபுவ்வத்தைத் தவிர எல்லா நுபுவ்வத்துகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஷரீஅத்தைக் கொண்ட நபி எவரும் வர முடியாதுஷரீஅத்தை கொண்டு வராதவரும் நபி (ஸல்) அவர்களின் சீடருமே நபியாக வர முடியும். ஆனால் அவர் முதலில் முஹம்மதிய்ய உம்மத்தாக இருக்க வேண்டும். எனவே இந்த வகையில் நான் உம்மத்தியுமாவேன்நபியுமாவேன்.:(தஜல்லியாத்தே இலாஹிய்யா பக்கம் 24 ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஓர் உருது கவிதையில் என்ன அருமையாக குறிப்பிட்டிருக்கிறார்கள் பாருங்கள் !

காலம் மஸீஹிற்கான காலமாக இருந்தது நான் வராதிருந்தால் வேறு எவராவது வந்திருப்பார்.’’

மேலும் விவரங்களுக்கு

1. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்

ஆசுரா கீழத் தெரு, மேலப்பாளையம், திருநெல்வேலி - 627005

தொலைபேசி : 91 462 2352456

மின் அஞ்சல் : amjsouthzonetn@gmail.com

2. அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்

11, முதல் பிரதான சாலை, யு..காலனி,

கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி : 91 44 24817174

மின் அஞ்சல் : amjchennai@yahoo.in

இலவச அழைப்பு எண் : 1800 425 40000

இணையதளம் : www.alislam.org, www.alislam.org/tamil, www.mta.tv,

www.youtube.com/

user/alislamtamil

MUSLIM TELEVISION AHMADIYYA INTERNATIONAL (MTA)

Sattelite : Asiasat 3S, Degree : 105.5 east, Frequency : 3760 Symbol Rate : 26000 FEC : AUTO

உலகளாவிய அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சார்பாக 24 மணி நேரமும்

ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி சேனல்

Head Quarters : Ahmadiyya Muslim Jama’at, India, Nazarat Dawat Ilallah, Mohalla Ahmadiyya,

Qadian, Districk – Gurdaspur, Punjab – 143516, INDIA.


1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,
    உஙகளின் இந்த மார்க்க பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறோம்.

    ஜஸாகல்லாஹ்
    வஸ்ஸலாம்

    பதிலளிநீக்கு

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.