2 வது மண்டல மாநாடு
(அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தமிழ் நாடு தென்மண்டலம்)
(அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தமிழ் நாடு தென்மண்டலம்)
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் அருளால் 5.2.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மேலப்பாளையம் சார்பாக மேலப்பாளையம் மாநகராட்சி திருமண மண்டபத்தில் இரண்டாவது தமிழ் நாடு தென்மண்டல மாநாடு நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சி தமிழக தென்மண்டல அமீர் (தலைவர்) மதிப்பிற்குரிய ஆ.பீ.யூ.அப்துல் காதிர் சாஹிப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஜமாஅத்தின் சகோ. அன்வர் சாஹிப் அவர்களின் கிராஅத்தை அடுத்து அமீர் சாஹிப் அவர்கள் கிலாஃபத் உடன்படிக்கை எடுத்தார்கள். பின்னர் ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் எழுதிய உருது கவிதையை (நஸம்) மாணவர் ஆசிப் அஹ்மது (களியக்காவிளை) பாடினார். அதனை மதுரை (பி பி குளம்) ஜமாஅத்தின் கொள்கைப் பிரச்சாரகர் மவ்லவி ஜனாப் அபுல் ஹஸன் சாஹிப் அவர்கள் மொழியாக்கம் செய்தார்கள்.
தூத்துக்குடி ஜமாஅத்தின் சகோ. அன்வர் சாஹிப் அவர்களின் கிராஅத்தை அடுத்து அமீர் சாஹிப் அவர்கள் கிலாஃபத் உடன்படிக்கை எடுத்தார்கள். பின்னர் ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹ்) அவர்கள் எழுதிய உருது கவிதையை (நஸம்) மாணவர் ஆசிப் அஹ்மது (களியக்காவிளை) பாடினார். அதனை மதுரை (பி பி குளம்) ஜமாஅத்தின் கொள்கைப் பிரச்சாரகர் மவ்லவி ஜனாப் அபுல் ஹஸன் சாஹிப் அவர்கள் மொழியாக்கம் செய்தார்கள்.
அடுத்து அமீர் சாஹிபின் தலைமை உரைக்குப் பின்னர் தூத்துக்குடி ஜமாஅத்தின் தலைவர் ஜனாப் லெப்பை சாஹிப் அவர்கள் உலக அமைதிக்கு கிலாபத்தே தீர்வு என்ற தலைப்பிலும், சங்கரன் கோயில் ஜமாஅத்தின் கொள்கைப் பிரச்சாரகர் ஜனாப் முஅல்லிம் நிஜாமுத்தின் சாஹிப் அவர்கள் இமாம்களின் சிறப்பும் இமாம் மஹ்தி பற்றிய அவர்களின் முன்னறிவிப்புகளும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். பின்னர் மேலப்பாளயம் ஜமாஅத்தின் கொள்கைப் பிரச்சாரகர் ஜனாப் மவ்லவி அப்துல் காதிர் சாஹிப் அவர்கள் தமது உரையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலுருந்து இறைவன் மீது அவர்கள் கொண்டிருந்த நேசத்தை குறித்து கூறினார்கள். பின்னர் கோட்டார் ஜமாஅத்தின் கொள்கை பிரச்சாரகர் ஜனாப் மவ்லவி ரஃபீக் அஹ்மது சாஹிப் H.A அவர்கள் இறுதி நபித்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பிற்பகல் அமர்வில் விருதுநகர் ஜமாஅத்தின் கொள்கைப் பிரச்சாரகர் ஜனாப் முஅல்லிம் நாஸிர் அஹ்மத் சாஹிப் அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறி உரையாற்றினார்கள்.
பின்னர் மாலை 3.30 மணியளவில் பங்களாதேஷ் மாநாட்டிற்காக ஹீஸீர் அவர்கள் ஆற்றிய நிறைவு உரை MTA (Muslim Television Ahmadiyya) வில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஹுஸூர் அவர்களின் உரையை தமிழில் மொழியாக்கமும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இறுதியாக ஹீஸீர் அவர்களின் துஆ-வுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
இந்த மாநாட்டிற்கு தென் தமிழகத்திலுருந்து (மேலப்பாளயம், கோட்டார், களியக்காவிளை, தூத்துக்குடி, சங்கரன் கோயில், மதுரை உட்பட) ஏறக்குறைய 17 ஜமாஅத்துகளிலுருந்து ஆண்கள், பெண்கள் உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டார்கள். வட மண்டலத்தின் கோயம்புத்தூர் ஜமாஅத்திலுருந்தும் பல சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அல்லாஹ் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் நற்கூலியை வழங்குவானாக. ஆமின்



அல்ஹம்துலில்லாஹ்
பதிலளிநீக்கு