மவ்லானா மவ்தூதியின் திருக்குர்ஆன் தமிழாக்கம் விளக்கவுரை ஓர் ஆய்வு
மவ்லானா செய்யது அபுல் ஆலா மவ்தூதி அவர்கள் உருது மொழியில் யெழுதிய திருக்குர்ஆன் விளக்கவுரையை I.F.T நிறுவனம் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளது. அதனை நாம் ஆய்வு செய்ததில் திருக்குர்ஆனுக்கும் நம்பத்தகுந்த நபிமொழிகளுக்கும் மாற்றமான பலகருத்துக்களை அதில் இடம் பெற்றுள்ளன. அவைகளைக் திருக்குஆன் மீது பற்று கொண்டோருக்காக வழங்குகிறோம்.
மவ்லானா மவ்தூதி அவர்கள் சூரா பகராவின் முதல் வசனமாகிய அலிப் லாம் மீம் என்ற தனி எழுத்துக்களுக்கு விளக்கமளிக்குமுகமாக கீழ் கண்டவாறு அவரது விரிவுரை அடிக்குறிப்பு 1 ல் இவ்வாறு கூறுகிறார்………….
இந்தத் தனி எழுத்துக்கள் (ஹீருஃபுல் முகத்த ஆத் ) திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. திருமறை விரிவுரையாளர்கள் இவற்றுக்குப் பல்வேறு பொருட்களை கூறியுள்ளனர். எனினும் இவற்றில் எந்த ஒரு பொருள் குறித்தும் அவர்களிடையே கருத்தொற்றுமை காணப்படவில்லை. குர்ஆனிலிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதில் ஏதாவது குறை ஏற்படும் என்ற நிலை இல்லை. ஆகவே குர்ஆனிலிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதற்கு இவற்றின் பொருளை அறிந்து தான் ஆக வேண்டும் என்ற தேவையும் இல்லை.” என வரைகிறார்.
நம் கேள்வி என்ன வென்றால் இறைவன் அலீப் லாம் மீம் போன்ற சுறுக்கெழுத்துக்களை ஏறக்குறைய 14 எழுத்துக்களை 29 அதிகாரங்களில் பயன்படுத்துயுள்ளான் தனி எழுத்துக்களின் பொருளை அறிய வேண்டிய தேவை இல்லை என்றால் இறைவன் அதனை ஏன் கூறியுள்ளான் ? இறைவன் வீணான செயலைச் செய்திருப்பான் என மவ்லானா ……தூதி கருதுகிறாரா? திருக்குர்ஆனிலிருந்து அதன் வழிகாட்டுதலைப் பெருவதற்கு அதன் பொருளை அறிய வேண்டிய தேவை இல்லை என்றால் வல்ல இறைவன் அதனைக் திருத்திருக்கலாமே ! ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதனை எடுத்துச் சொல்லாமல் விட்டிருக்கலாமே
நபித் தோழர்களும், திருக்குர்ஆனை தொகுத்தவர்களும் கூட அதனைப் புறக்கணித்திருக்கலாமே ! அவர்கள் அதனை ஏன் செய்யவில்லை ?
உலகில் பல்வேறு மொழிகளில் இது போன்ற சுறுக்கெழுத்துக்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான சுருக்கெழுத்துக்கள் உள்ளன. இதைப் போன்ற சுருக்கெழுத்தைத்தான் திருக்குர்ஆனும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் உண்மை நிலையை அறியமுற்படுவதை விட்டு விட்டு அல்லது தனது அறியாமையை ஒப்புக் கொள்வதை விட்டு விட்டுதிருக்குர்ஆனின் வழிகாட்டுதலைப் பெறுவதற்குத் தனி எழுத்துக்களின்  பொருளை அறிய வேண்டிய தேவை இல்லை என கூறுவது அல்லாஹ்வின் வசனங்களின் மீது களங்கம் கற்பிக்கும் செயலாகும்.

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.