இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள் மற்ற பெண்களைப் போன்ற ஒரு பெண்ணா?

ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவர்கள் வழங்கிய பதிலும்

 


எல்லாவற்றுக்கும் முதலில் இம்ரானின் குடும்பத்தினரைச் சேர்ந்த அந்தப் பெண்மணி (மரியாளின் தாயார்) என்ன பிரார்த்தனை செய்தார் என்பதனை நாம் புரிந்து கொண்டு, அந்த பேர் சொல்லப்படாத அந்த பெண்மணி இறைவனிடம் செய்த அந்த பிரார்த்தனையில் உள்ள வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் உற்று கவனிக்க வேண்டும்.

(அன்னை மரியாளை கருவுற்றிருந்த போது) அவர்கள் (இறைவனிடம்) கூறினார்கள் மா ஃபீ பத்னீ என்னுடைய வயிற்றில் எது இருந்தாலும் அதனை நான் உனக்கு அர்ப்பணம் செய்கின்றேன். அவர் தனக்கு ஒரு ஆண்பிள்ளை வேண்டும் என்று கேட்கவே இல்லை ஆனால் அவர் கூறினார் முஹர்ரரன் - அர்ப்பணிப்பாக

இது என்ன கோட்பாட்டின் கீழ் வருகிறது என்றால்; எவர் ஒருவர் இறைவனுக்காக அர்ப்பணம் செய்யப்படுகின்றாரோ அவர் உலக தொடர்புகளில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் விடுதலை ஆகி விடுகின்றார். எவராயினும் இறைவனுக்காக வழங்கப்பட்டு விட்டால் அவர் இறைவனுடையவராகி விடுகின்றார். அவர் மீது பெற்றோர்கள், மனைவிக்கான எந்த கடமையும் இருப்பதில்லை. இவ்வாறுதான் மிகச் சரியாக யூத மக்களும் யூத வணக்கஸ்தலங்களிலும் புரிந்து வைத்திருந்தார்கள்.

எவர் வணக்கஸ்தலத்திற்காக வழங்கப்பட்டு விட்டாரோ; அவர் அந்த பள்ளிவாயிலை சேர்ந்தவர் ஆகி விடுகின்றார். உண்மையில் அவர் எடுத்துக் கொள்ளப்படுவார். அவர்களின் கீழே தான் அந்த பிள்ளை வளரும். அந்த பிள்ளைகளுக்கு உலக உறவுகளை பற்றி எந்த கவலையும் இருக்காது. இந்த முஹர்ரரன் என்றால் உலக பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் என்பது பொருள்.

ஆனால் அன்னார் மனதில் ஒரு ஆண் குழந்தையை நினைத்து வைத்திருந்தார். அது அவர்கள் செய்த இந்த பிரார்த்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் யூத வழிமுறைகளின் படி அவர்கள் எந்த பெண்ணையும் யூத கோயில்களுக்கு அர்ப்பணம் செய்வதை ஏற்றுக்கொண்டதில்லை. அவர்கள் எப்பொழுதும் ஆண்களையும், ஆண் பிள்ளைகளையுமே அனுமதித்தார்கள்

இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று இம்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்மணியும் புரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அதனை அவர்கள்  கேட்கவில்லை. இது இறைவனுடைய ஒரு விசேஷமான திட்டமாக இருந்தது. அதனாலேயே அவர்கள் ஒரு ஆண் குழந்தையைப் பற்றி கேட்பதை மறந்து விட்டார்கள். 

இறைவன் அந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். சரி; இது உங்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. நான் உனது வயிற்றில் எது இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கின்றேன் உனது கருவறையில் எது இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கின்றேன் என்றான்.

சரியா?

அந்தப் பெண்மணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த போது அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

அல்லாஹ்வே நான் உன்னிடம் ஒரு ஆண்குழந்தையை கேட்டேன் ஆனால் இப்போது பார்! ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது!

அதற்கு பதிலாக இறைவன் கூறியது மிகவும் முக்கியமானதாகும் இதனை மிகவும் கவனமாக கேட்டு புரிந்து கொள்ள வேண்டும்.

(ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதுதொடர்பான திருக்குர்ஆன் வசனத்தை (3:37) ஓதுகிறார்கள்.)

رَبِّ اِنِّیۡ وَضَعۡتُہَاۤ اُنۡثٰی ؕ وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا وَضَعَتۡ

என் இறைவா நான் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கின்றேன். அவள் பெற்றெடுத்தது பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் ஆக இருக்கிறான்.

முதல் ஆச்சரியமான விஷயத்தை இறைவனுடைய இந்த பதிலில் நாம் பார்க்கின்றோம். 

அவர் பெற்றெடுத்தது பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் ஆக இருக்கிறான். இறைவன் இந்த கேள்வியை ஏன் எழுப்ப வேண்டும்? 

அது பெண் குழந்தையாக இருந்தால் இறைவன் ஆமாம் எனக்கு தெரியும் அது பெண் குழந்தைதான் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் இறைவன் அது பெண் குழந்தை என்று கூறவில்லை. அவன் கூறினான் இந்தக் குழந்தையின் இயற்கையான பண்பு என்ன என்பதை இறைவன் அதிகம் அறிந்தவன். அது என்னவாக இருந்தாலும் சரி.

என் வயிற்றில் என்ன இருக்கிறதோ என்று அந்தப் பெண்மணி துஆ கேட்டதும்; அவள் எதனை பெற்றெடுத்தாளோ என்று இறைவன் கூறியதும் ஒன்றாக பொருந்தி செல்கின்றது. 

எனவே அல்லாஹ் கூறுகின்றான் அது என்ன என்று எனக்கே அதிகம் தெரியும்.

அதற்குப் பிறகு இந்த ஆச்சரியத்திற்குரிய வாக்கியம் வருகின்றது. 

தக்கர் அதாவது ஆண் ஒரு போதும் உன்ஸா அதாவது பெண்ணை போன்றது கிடையாது.

அவை இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் ஆகும். எனவே இந்த குழந்தை ஆணும் அல்ல பெண்ணும் அல்ல. ஒருவகையில் பேசும்பொழுது இது ஒரு வித்தியாசமான வகையைச் சேர்ந்த குழந்தையாக இருக்கிறது. 

அவள் யார் என்று அல்லாஹ் மிகவும் அறிந்தவன். இதன் பொருள் அல்லாஹ் மிகவும் அற்புதமான முறையில் அந்தக் குழந்தைக்கு மக்களால் புரிந்து கொள்ள முடியாத முறையில் இரண்டு பண்புகளையும் கொடுத்திருக்கிறான்.

ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதால் எந்த நோக்கம் நிறைவேறுமோ அது இந்த பெண் குழந்தையின் மூலம் நிறைவேறும். இதன் பொருள் இயேசு கிறிஸ்து அதாவது ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குறித்த முன்னறிவிப்பும் இந்த இம்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு வழங்கப்பட்டுவிட்டது. 

அந்தப் பெண்மணி புரிந்து வைத்துள்ளதற்கு ஏற்ப இந்த குழந்தை ஒரு பெண் என்பதை இறைவன் ஏற்க மறுத்துவிட்டான். அவளுடைய புரிதலின்படி பெண் எப்படிப்பட்டவள் என்றால் அந்தப் பெண்ணால் ஒரு ஆணின் துணையின்றி ஒரு குழந்தையை பெற முடியாது.

ஆனால் இங்கு வேறு ஒரு விஷயம் இருக்கிறது. இந்தப் பெண் குழந்தை யார் என்றால் இவரால் சுயமே ஒரு குழந்தையை ஈன்றெடுக்க முடியும்.  

அப்படி பெறப்படக்கூடிய அந்த குழந்தை அதாவது ஈஸா அலைஹிஸ்ஸலாம் இன்னமும் தன்னுடைய பாட்டியுடன் தொடர்புடையதாகவே இருப்பார். ஏனென்றால் வேறொரு நபர் அதாவது ஆண் இந்த ஈஸா என்னும் குழந்தையுடன் சம்பந்தப்படவில்லை. 

ஹஸ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய குழந்தை என்ன ரத்தத்தை கொண்டிருக்குமோ என்ன மரபணுக்களை கொண்டிருக்குமோ அவை அனைத்தும் அவளுடைய தாயாராகிய அந்த இம்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்தே பெறப்படுகின்றது. 

எனவே இது தான் இந்த புதிருக்கு விடையாக இருக்கின்றது. 

இறைவன் அந்த இம்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணிடம் கூறினான்: நீ என்ன கூறுகிறாய் என்று எனக்கு புரிகிறது. நான் அதனை மறுக்கவில்லை. ஆனால் நீ இந்த இடைப்பட்ட விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. 

எந்தக் குழந்தையை எந்த வகையைச் சேர்ந்த குழந்தையை நீ விரும்பினாயோ அது மிகவும் மகத்தான ஒரு குழந்தையாகும். நான் அதனை உனக்கு வழங்குவேன் ஆனால் அதற்கான சரியான நேரத்தில்.  

இப்பொழுது நீ பெற்றெடுத்து இருக்கின்ற இந்த பெண் குழந்தை உனக்கும் அந்த வாக்களிக்கப்பட்ட ஆண் குழந்தை அதாவது இயேசு கிறிஸ்துவுக்கும் இடையில் ஒரு இடைப்பட்ட நபராக இருக்கிறது.  

இந்த இரண்டு பெண்களுமே அதாவது ஈஸா (அலை) அவர்களுடைய தாயாரும், பாட்டியும் இம்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களாக இருக்கிறார்கள்.

ஆக அந்த ஆண் குழந்தை (அதாவது இயேசு கிறிஸ்து) இரண்டாவது கட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் வழங்கப்படவில்லை. ஆனால் முதல் கட்டத்தில் வழங்கப்பட்ட அந்த பெண் குழந்தை (அதாவது அன்னை மரியாளும்) கூட ஒரு சாதாரண பெண் குழந்தை மட்டுமே அல்ல. ஏனென்றால் ஒரு பெண்ணால் ஒரு குழந்தையை தானாகவே பெற்றெடுக்க முடியாது.  புரிந்ததா??

[லிக்கா மஅல் அரபு – அரபு மக்களுடனான சந்திப்பு – 18 பிப்ரவரி 1997]

வீடியோ லிங்க்: https://www.youtube.com/watch?v=cM9Tte-JXmg&t=198s

மேலும் படிக்க: https://www.alislam.org/book/christianity-journey-facts-fiction/

மொழியாக்கம்: இப்னு மைமூன் | சென்னை

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.