கிலாஃபத்தின் அவசியமும்
முக்கியத்துவமும் முஸ்லிம் உம்மத்தில்
ஏற்றுக்கொள்ளப்ப்ட்டு வருகிறது.
(நபிகள் நாயகம் ஸல் அவர்கள்)
கூறினார்கள். எனக்குப் பிறகு கிலாஃபத் வரும் பிறகு மன்னராட்சி பிறகு கொடுங்கோல்
மன்னராட்சி பிறகு நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் நிலைபெறும். இந்த முன்னறிவிப்பின்
அடிப்படையில் கிலாஃபத் ராஷிதாவுக்கு பிறகு அப்பாஸிய மற்றும் உஸ்மானிய ஆட்சி காலம்
வந்தது. இது மன்னராட்சியாகதான் இருந்தது. ஆனால் அப்பாஸிய கிலாஃபத் உஸ்மானிய
கிலாஃபத் என்று அழைக்கப்பட்டது.
கிலாஃபத் உஸ்மானியா தன்னுடைய இறுதி
காலகட்டத்தில் மிகவும் பலவீனமாகி விட்டபோது கொடுமை, அநியாயம் உச்சத்தை அடைந்திருந்தது. அப்போதும் முஸ்லிம்கள்
கிலாஃபத் தான் உள்ளதே! என எண்ணினார்கள். மேலும் அதனை நிலைபெற்று நிற்க முயற்சிகள்
மேற்கொண்டார்கள். இதில் அலி சகோதரர்களின் இயக்கம்
முன்னிலை வகிக்கிறது. ஜனாப் முஹம்மது அலி ஜவஹர் மற்றும் ஜனாப் சௌகத் அலி
கோகர் உடைய முயற்சிகளினால் கூட இந்த கிலாஃபத் நிலைபெற்று நிற்க இயலவில்லை. அலி
சகோதரார் இயக்கத்தில் பங்கு எடுத்து இருந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள்
கிலாஃபத்தை உயிர்ப்பிக்க தனித்து
முயற்சிகளை மேற்கொண்டார். பிறகு உலகம் முழுவதும் குறிப்பாக ஆசியா மத்திய கிழக்கு
பகுதியில் கிலாஃபத்தின் தேவையை எண்ணியவாறு அதனை உயிர்ப்பிக்க கிட்டதட்ட 18 இயக்கங்கள் புதிதாக தோன்றின. கான்ஃபிரன்ஸ்
நடந்தது. அமர்வுகளுக்கான (Meetings)
ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள லாகூர்
முதன்மையாக இருந்தது. அங்கு ஹிஸ்புத் தஹ்ரீர், டாக்டர் இஸ்ரார்,
சௌதரி ரஹ்மத் அலி போன்ற இயக்கங்கள் செயல்பட்டு வந்தன.
உம்மத் எந்த வேதனையான காலத்தை
கடந்து செல்கிறது என்றால் எல்லா புறமும் கொலை கொள்ளை படுகொலைகள் மிகுதியாக
காணப்படுகின்றன. கொள்ளையர்களின் ஆட்சி,
மேலும் முஸ்லிம்களின் ரத்தம் மிகவும் மலிவானதாகி விட்டது. இந்த அனைத்து
நிலைகளையும் பார்த்து கிலாஃபத்தின் முக்கியத்துவம் அதனின் அவசியமும்
வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் உம்மத்தின் அனுதாபிகள் இந்த விஷயத்தை ஏற்றுக் கொண்டனர்.
- கிலாஃபத்தை நீக்கியதன் தண்டனையாக கருத்துவேறுபாடுகள் கொண்டு சிதறுண்டு இந்த உம்மத் இருக்கிறது. (அப்துல் மஜீத் தரியா ஆபாதி)
- கிலாஃபத்தை இழந்ததற்கான நஷ்டஈட்டை முஸ்லிம்கள் பல்வேறு வடிவத்தில் கொடுத்து வருகிறார்கள். ( செய்யது அபுல் ஹஸன் நத்வி)
- கிலாஃபத்தின் அவசியம்
- உம்மத் ஒரு தலைமை இல்லாது போனதால் சீர் கெட்டுக் கொண்டே சென்றது. (சௌதரி ரஹ்மது அலி)
- வீட்டைப் போன்று ஜமாஅத்திற்கும் ஒரு வழிகாட்டி மற்றும் தலைவர் இருக்க வேண்டும். (மௌலானா அபுல் கலாம் ஆசாத்)
- எவ்வாறு ஆன்மா இல்லாமல் உடல் இல்லையோ அவ்வாறு கிலாஃபத் இல்லாமல் உயிருள்ள உம்மத்திற்கு இடமே இல்லை. (செய்யத் அத்தீக்கு ர்ரஹ்மான் கிலானி-எடிட்டர் ஸரபே ஹக் கராச்சி)
- நோயுற்ற சமுதாயம் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமர்ந்து ஆஸ்பத்திரியை நோக்கி செல்கின்றது மேலும் (அந்த) ஆம்புலன்ஸ் ரோட்டோரத்தில் பழுதாகி நின்று ஒரு கிளினிக்கிற்காக காத்திருக்கின்றது. (ஆஃபதாப் இக்பால்-தஜ்ஸியா நிகார்)
- சரக்கு இரயிலிற்கு ஓர் இன்ஜின் இருக்கும். அதே போன்று மனித குழுவிற்கும் ஓர் இன்ஜின் தேவைப்படுகிறது. (அல்-ஜமீயத்து தஹ்லி)
- மழை தொழுகையை போன்று முஸ்லிம்களுக்கு தலைமை மற்றும் நம்பிக்கை தொழுகையும் நிறை வெற்ற வேண்டும். (நவாயே வக்த்)
- நாம் செம்மறி ஆடாக இருக்கிறோம் நாம் உயிருள்ள கூட்டம் ஆவோம் ஆனால் ஜமாஅத்தாக இல்லை. இவ்வாறான தலைப்பில் ஒவ்வொரு நாளும் கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. இதிலிருந்து தெளிவாகுவது என்னவென்றால், உம்மத்திற்கு கலீஃபாவின் தேவை இருக்கிறது. இப்போதைய காலத்திற்கு கிலாஃபத் அவசியமாகும். ஆகவேதான் அவர்கள் பல அமர்வுகளை கூட்டுகிறார்கள், கான்ஃப்ரசிற்காக்கான அழைப்பை விடுக்கிறார்கள். பேனர் கட்டுகிறார்கள். மட்டுமல்லாமல் தற்போது இந்டெர்னெட்டையும் இதற்காக உபயோகிக்க துவங்கிவிட்டார்கள். மேலும் கூற துவங்கிவிட்டார்கள்;
- எங்களது கஷ்டங்களின் தீர்வு கிலாஃபத் ஆகும்.
- இறைவன் வழியில் அழைத்தல் மற்றும் தொழுகையை நிலைநாட்டுதல் கிலாஃபத்தை தவிர்த்து சாத்தியமில்லை.
கிலாஃபத்தின் அருட்களை பொருத்தவரை
யாரும் அதை மறுக்கவில்லை. காதியானில் ஒரு மனிதனுடைய
முழக்கத்தை அடக்கி விடுவோம் என்ற வாதத்துடன் எழுந்தவர்கள், மேலும்
காதியானின் ஒரு செங்கல் விடாமல் அனைத்தையும் தவிர்தெறிந்து, மினாரத்துல்
மஸீஹின் செங்கல்களை பியாஸ் நதியில் கரைத்து விடுவோம் என்று முழக்கம் செய்தவர்கள்
எங்கே? (காதியானிலிருந்து
எழுந்த) அந்த ஒரு முழக்கம் இப்பொழுது 30 கோடி முழக்கமாக மாறிவிட்டது. 60 கோடி
கண்கள் அந்த ஒரு நபரின் முன்பு பணிவுடன் குனிந்துள்ளது. (அவருக்கு) அர்ப்பணமாக
ஆயத்தமாக உள்ளார்கள். இதனின் காட்சியை தினமும் MTA மூலம் நாம் காண்கின்றோம்.
தற்போது இஸ்லாத்தின் துயரங்களை
எடுத்து எழுதுவதில் நம்மைச் சார்ந்தவர்களும் கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டு
உள்ளார்கள்.
“முஸ்லிமாகிய நம்முடைய துரதிஷ்டம்
என்னவென்றால் அபூஜஹல் நம்மில் உயிர் பெற்றுவிட்டான். ஆனால் பிலால் ஹப்ஷி (ரலி)
அவர்கள் நம்மில் உயிர் பெறவில்லை. இப்னு முல்ஜம்
நம்மில் உயிர் பெற்று விட்டான். ஆனால் உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் உயிர்
பெறவில்லை. யஸித் நம்மில் உயிர் பெற்று விட்டான். ஆனால் ஹுசைன் (ரலி) அவர்கள்
நம்மில் உயிர் பெறவில்லை. நம்மில் இறையடியார்கள் அதிகமாக உள்ளனர். நம்மில்
சத்தியத்தின் பல எதிரிகள் உள்ளனர். நம்மில் அநியாயத்தின் நண்பர்கள் பலர் உள்ளனர்.
(அல்ஃபஸல் காதியான் 27 செப்டம்பர் 1920)
ஆனால் இந்த கிலாஃபத்தின் அருளினால்
பிலால் (ரலி) போன்ற தியாக மனிதர்கள் எங்களிடம் உள்ளனர். எம்மில் உமர் ஃபாரூக்
(ரலி) போன்ற கட்டுப்படுகின்ற பற்றுக்கொண்ட மேலும் நல்லியல்பு உணர்வு கொண்டவர்கள்
உள்ளனர். ஹுசைன் போன்ற தம்முடைய
உயிரையே அற்பணிக்க கூடியவர்கள் உள்ளனர். தற்போதும் ஷஹாதத் அந்தஸ்தை பெறுவதற்கான
விருப்பத்தை கொண்டுள்ளனர் என்பதை நாம் உரக்க முழத்துடன் அறிவிக்கிறோம். சஹாபா (ரலி) போன்று தம்மை மாய்த்துக் கொள்ளுதல்
மற்றும் கிலாஃபத்தின் பற்றுணர்வுக்காக எமது முயற்சிகளை மேலும் கிலாஃபத்தின்
அருளினால் ஜமாஅத்தின் முன்னேற்றத்தை (கண்டு) மற்றவர்களும் பாராட்டுகிறார்கள்.
கிலாஃபத்தின் தேவையை இப்பொழுதும் வெளிப்படுத்துகின்றார்கள். அதாவது;
- கிலாஃபத்தின்றி ஜிஹாத் சாத்தியமற்றதாகும்.
- கிலாஃபத்தின் மூலமாகவே நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
- துஆக்கள் அதிகமாக செய்யப்படுகிறது ஆனால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை ஏன்?
இந்த மக்கள் கிலாஃபத்திற்கான ஆசையை கொண்டு
அமர்ந்திருக்கிறார்கள். அதை உயிர்ப்பிக்க
முயற்சிகள் செய்கின்றார்கள். ஆனால் கிலாஃபத் வேண்டுவதினால் கிடைப்பதில்லை மாறாக
இது இறைவனுடைய அன்பளிப்பாகும் என்று இவர்கள் அறிவதில்லை. (கிலாஃபத்) அவனுடைய ஓர் அருளாகும் எவரக்கு
விரும்புகிறானோ அவருக்கு இந்த அருளை அவன் வழங்குகிறான். முன்னறிவிப்பின்
அடிப்படையில் நாங்கள் கிலாஃபத் என்ற அருளைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள் ஆவோம்.
அல்ஹம்துலில்லாஹ் அலா தாலிக்
ஆக்கம்: அபூ சயீத்
மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன் சாஹிப்-ஈரோடு
நன்றி: அல்-ஃபஸ்ல் பத்திரிக்கை
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None