உண்மையான தவ்பா-விற்கு மூன்று நிபந்தனைகள்‌

  


வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:  

தவ்பா-விற்கு மூன்று நிபந்தனைகள்‌ உள்ளன என்ற விஷயத்தையும்‌ நினைவிற்‌கொள்ள வேண்டும்‌. அவை முழுமையடையாமல்‌ தவ்பத்துன்‌ நஸுஹ்‌ எனும்‌ உண்மையான தவ்பா-வை பெற முடியாது. 

இந்த மூன்று நிபந்தனைகளில்‌ முதல்‌ நிபந்தனையான, அரபி மொழியில்‌ கூறப்படும்‌ இக்லாஃ என்பதை அதாவது தீய இயல்பை தூண்டக்‌ கூடிய குழப்பமான எண்ணங்களை அகற்ற வேண்டும்‌.

அசல்‌ விஷயம்‌ என்னவெனில்‌ கற்பனையினால்‌ மிகப் பெரிய தாக்கம் ஏற்படுகின்றது. ஏனெனில்‌ செயல்‌ வடிவம்‌ ஏற்படும்‌ முன்பு ஒவ்வொரு செயலும்‌ கற்பனை வடிவத்தை கொண்டதாக‌ இருக்கும்‌. ஆகவே தவ்பா-வின்‌ முதல்‌ நிபந்தனை என்னவனில்‌; அந்த குழப்பமான எண்ணங்களையும்‌, தீய கற்பனைகளையும்‌ விட்டுவிட வேண்டும்‌...

கற்பனைகளின்‌ தாக்கம் மிகப்‌பரும்‌ தாக்கமாகும்‌. மேலும்‌ நான்‌ சூஃபிகளின்‌ புத்தகங்களில்‌ படித்துள்ளேன்‌. அவர்கள்‌ கற்பனையை எங்கு வரை சென்றடைய வைத்துள்ளார்கள்‌ எனில்‌ மனிதனை குரங்கு அல்லது பன்றியின்‌ வடிவில்‌ பார்த்துள்ளனர்‌. சுருங்கக்கூறின்‌, ஒருவர்‌ எவ்வாறு கற்பனை செய்வாரோ அவ்வாறான தோற்றமே நிகழ்கின்றது. எனவே எந்த எண்ணங்களை‌ தீய இன்பங்களுக்கு காரணமாக கருதப்பட்டு வந்ததோ அவற்றை அகற்ற வேண்டும்‌. இது முதல்‌ நீபந்தனையாகும்‌.

இரண்டாவது நிபந்தனை வெட்கப்படுதல்‌ ஆகும்‌. அதாவது வெட்க உணர்வை வெளிப்படுத்துதல்‌. ஒவ்வொரு மனிதனின்‌ உள்ளுணர்வுகள், தனக்குள்‌ இருக்கும் ஒவ்வொரு தீமையையும்‌ எச்சரிக்கும்‌ ஆற்றலை கொண்டுள்ளது. எனினும்‌ துரதிஷ்டவசமான மனிதன்‌ அதனை செயலிழந்து போக விட்டுவிடுகின்றான்‌. எனவே பாவம்‌ மற்றும்‌ தீமையை செய்வதற்கு வெட்கப்பட வேண்டும்‌. மேலும்‌ இந்த இன்பங்கள்‌ தற்காலிகமானது மற்றும்‌ சில நாட்களே கிடைக்கக்கூடியது என கருத வேண்டும்‌... எனவே அவற்றை பெறுவதால்‌ என்ன கிடைத்துவிடப்‌ போகின்றது? (என்றும் கருத வேண்டும்) தவ்பாவின்‌ பக்கம்‌ திரும்புபவரும், மேலும்‌ எவரிடம்‌ முதலில் இக்லாஃவிற்கான எண்ணம்‌ தோன்றுமோ அதாவது குழப்பமான எண்ணங்கள்‌ மற்றும்‌ வீணான கற்பனைகள் அதனை அழித்து, அசிங்கங்கள்‌ மற்றும்‌ அசுத்தங்கள்‌ நீங்கிய பிறகு மனம் திருந்தி தாம் செய்த செயல்களுக்கு வெட்கப்படுவாரோ அவரும் பெரும் பாக்கியசாலி ஆவர்.

மூன்றாவது நிபந்தனை உறுதிமனப்பான்மையாகும்‌. அதாவது இனி இந்தத்‌ தீமைகளின்‌ பக்கம்‌ திரும்ப மாட்டேன்‌ என உறுதியாக எண்ணங்கொள்ள வேண்டும்‌. மேலும்‌ அவர்‌ தொடர்ந்து இதில்‌ நிலைபெறும்போது உண்மையான தவ்பாவிற்கு வாய்ப்பை இறைவன்‌ வழங்குவான்‌. எந்த அளவிற்கு எனில்‌ அவரிடமிருந்து தீமைகள்‌ முற்றிலும்‌ அழிந்து; நல்லொழுக்கங்களும்‌, போற்றத்தக்க செயல்களும்‌ அந்த இடங்களை நிரப்பிவிடும்‌. மேலும்‌ இது நல்லொழுக்கத்திற்கான‌ வெற்றியாகும்‌. இதற்கான ஆற்றலும்‌, சக்தியும்‌ வழங்குவது இறைவனின்‌ பணியாகும்‌. ஏனெனில்‌ அனைத்து ஆற்றல்கள்‌ மற்றும்‌ சக்திகளின்‌ எஜமானன் அவனே ஆவான்‌.

(மல்‌ஃபூஸாத்‌ பாகம்‌ 1, பக்கம்‌ 87-88 எடிசன் 1988)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.