ஹஸ்ரத் ஜந்தாவது கலீபாத்துல் மஸிஹ் அய்யதஹுல்லாஹு தாலா அவர்கள் அல் இஸ்லாம் வெப்சைட் குழுவின் மூலமாக தயாரிக்கப்பட்ட திருக்குர்ஆன் Search Engine புதிய தளத்தை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு தன்னுடைய அருளுக்குரிய கரங்களினால் துவக்கி வைத்தார்கள்.
முதல் பக்கத்தில் வெறும் ஒரு தேடல் பட்டியை கொண்ட எளிய ஆனால் கடின உழைப்பிற்கு பிறகு தயாரிக்கப்பட்ட Search Engine மூலம்; அரபி வார்த்தைகள், சொற்கள், மற்றும் மூலச் சொற்களுக்கு ஏற்ப குர்ஆனிய வசனங்களை தேட முடியும்.
அனைத்து குர்ஆன் வசனங்களின் 4 உருது மற்றும் 7 ஆங்கில மொழிபெயர்ப்புகள் மற்றும் 2 ஆங்கில மற்றும் 1 உருது விளக்கவுரைக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அனைத்து வசனங்களின் குறுக்கு குறிப்புகளும் மற்றும் பிற தகவல்களுக்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அல் இஸ்லாம் வெப்சைட்டின் மேனேஜிங் டைரக்டர் மஸ்ஊத் அஹ்மத் நாஸிர் சாஹிப் அவர்கள் இந்த வெப்சைட் பற்றி கூறியவாறு கூறுகின்றார்கள், 'இதற்கு முன்பும் குர்ஆன் Search Engine துவக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதை உபயோகிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆகையால் இந்த முறை இந்த வெப்சைட்டை சுலபமாக உபயோகம்படும் வகையில் அமைத்துள்ளோம். இந்த வளைய தளமானது குர்ஆன் Search Engine திட்டத்தின் முதல் கட்டத்தின் முடிவில் இந்த வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வருகின்ற 2021 பர்த்தானியாவின் ஆண்டு மாநாடு வரை இதில் பல மொழிகளில் மொழிபெயர்ப்பும், விளக்கவுரைகளும் இணைக்கப்படும். மேலும் இதில் அனேக மொழிகளில் search செய்யும் ஆப்ஷனை வைக்க வேண்டும் என்று முயற்சி செய்கின்றோம். இந்த Search Engine தயாரிப்பில் அமெரிக்கா கனடா மற்றும் பர்த்தானியாவை சேர்ந்த சேவகர்கள் இறைவனுக்காக மட்டுமே சேவைகளை நிறைவேற்றி தந்துள்ளார்கள். இறைவன் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக இந்த வலைத்தளம் மூலம் திருக்குர்ஆனுடைய வசனங்கள் மற்றும் மொழிபெயர்ப்பை படிப்பது மட்டுமல்லாமல் அதனுடைய எழுத்து படிவத்தை Copy செய்யவும் இயலும். மேலும் வசதிக்காக இதில் பிஸ்மில்லாஹ்வை சேர்த்து மற்றும் பிஸ்மில்லாஹ்வை சேர்க்காமல் வசன எண் அறிய ஆப்ஷன் வைக்கப்பட்டுள்ளது.'
மேலும் கூறுகின்றார்கள்: 'அல் இஸ்லாம் குழுவின் மூலமாக தயாரிக்கப்பட்டிருந்த குர்ஆனின் readquran.ap application யையும் update செய்யப்பட்டுள்ளது.'
ஐந்தாவது கலிஃத்துல் மஸிஹ் அவர்கள் தன்னுடைய குத்பா ஜுமுஆ 9 ஏப்ரல் 2021 இல் இந்த வலைத்தளத்தைப் பற்றி கூறுகின்றார்கள்:
"அல் இஸ்லாம் (குழுமத்தினர்) Quran Serach இன் புதிய வலைத்தளத்தின் முதல் வெர்ஷனை தயார் செய்து உள்ளார்கள். holyquran.io
இந்த வலைத்தளத்தை அல்இஸ்லாமை தவிர்த்து தனியாக பார்க்கலாம். எந்த ஒரு சூரா, வசனம்,சொல், அல்லது கருத்துக்களை நவீன Search Engine மூலம் அரபி, ஆங்கிலம், அல்லது உருது மொழியில் தேட முடியும். மேலும் தேடல் முடிவுகளை அஹ்மதி மற்றும் அஹ்மதி அல்லாத மொழிபெயர்ப்புகளுடனும் காணலாம்.
ஒவ்வொரு வசனத்துடன் அதனுடைய விளக்கவுரை, கட்டுரைகள் மற்றும் (அதனுடன்) சம்பந்தப்பட்ட வசனங்களை பார்க்க இயலும். அதிகப்படியாக அநேக விஷயங்களை (அதில் கொண்டு வரும்) பணிகளும் நடந்து வருகின்றன. அடுத்த பகுதி இன்ஷா அல்லாஹ் வருகின்ற 2021 யூகே வின் ஆண்டு மாநாடு வரை தயாராகிவிடும்.
இதைத்தவிர alislam வலைதளத்திலும் திருக்குர்ஆன் படித்தல், கேட்டல் மற்றும் readquran என்ற Search தளத்தையும் புதுப் பொலிவு Version ஆக தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆங்கில விளக்கவுரையுடன், தஃப்சீர் சகீர் இன் குறிப்பு, ஆங்கிலத்தில் வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம், கட்டுரைகளின் பொருளடக்கம் மற்றும் தினம்தோறும் திருக்குர்ஆன் ஓதி வரும்போது மேலதிகமாக தேவைப்படும் விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இறைவனிடத்தில் துஆ என்னவென்றால், இந்த project திருக்குர்ஆனின் அழகிய போதனையை உலகில் பரப்புவதற்கு காரணமாக அமைய வேண்டும். மேலும் ஜமாஅத் சகோதரர்களும் இதன்மூலம் முழுமையாக பயன் பெறுபவர்களாக ஆக வேண்டும். ஆமீன்
நன்றி: அல் ஃபஸ்ல் பத்திரிக்கை
மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன் சாஹிப்-ஈரோடு
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None