பைஅயத் வாங்காததைப்
பற்றி அன்னாருடைய ஒரு கூற்று உள்ளது. (அன்னார் கூறுகின்றார்கள்)
"கண்ணியத்திற்குரிய இறைவனிடமிருந்து பைஅத்தைப் பற்றி இப்போதுவரை எந்த செய்தியும் கிடைக்கவில்லை. ஆகையால் சிரமம் மேற்கொள்வது அவசியமில்லை.
لَعَلَّ
اللّٰہ یُحْدِثُ بَعْدَ ذٰلِکَ اَمْرًا
அன்னார் 1
டிசம்பர் 1888(ஆம் ஆண்டு) முதல் முறையாக பைஅத் வாங்குவதைப் பற்றி தப்லீக் என்ற பெயரில்
ஒரு பிரசுரத்தை வெளியிட்டார்கள். அதில் இறைவனுடைய கட்டளைக்கேற்ப பைஅத்தின் செய்தியை
அறிவித்தார்கள். இதனை குறித்து தனக்கு அரபி மொழியில் வந்த இல்ஹாமை குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் அன்னார், 'உண்மையை தேடுகின்றவர்கள், அவர்களின் உண்மையான ஈமான், உண்மையான ஈமானின்
தூய்மை மற்றும் இறை நேசத்தின் வழியை கற்றுக் கொள்வதற்காக மேலும் இழிவு, சோம்பேறி மற்றும் துரோக வாழ்க்கையை கைவிட என்னிடம் பைஅத் செய்யுங்கள்
என எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது என்று பொதுவாக இறை படைபினங்களுக்கும் குறிப்பாக என்னுடைய
முஸ்லிம் சகோதரர்களுக்கும் இவ்விடத்தில் நான் தெரிவிக்கின்றேன்' எனக் கூறுகின்றார்கள்.
இதற்கு பிறகு 12 ஜனவரி 1889 ஆம் ஆண்டு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊது (ரலி) அவர்கள் பிறந்தநாள் அன்றே ஒரு பிரசுரத்தை வெளியிட்டார்கள். அதில் 1 டிசம்பரின் பிரசுரத்தை முன்வைத்து பத்து பைஅத்தின் நிபந்தனைகளை எழுதி இருந்தார்கள். மேலும் அன்னார் அந்த அறிக்கையில் சுன்னத்தான இஸ்திகாராவிற்கு பிறகு பைஅத்திற்காக வருகை தாருங்கள் என்ற அறிவுரை வழங்கி இருந்தார்கள்.
அதன் பிறகு
அன்னார் காதியானிலிருந்து லூதியானா சென்றார்கள். மேலும் 4 மார்ச் 1889 ஆம் ஆண்டு பைஅத் செய்ய ஆயத்தமாக இருக்கின்ற அவர்களிடம் முக்கிய
வேண்டுகோள் என்ற பெயரில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார்கள். அதில் பைஅத்தின் உடைய குறிக்கோள்
மற்றும் நோக்கத்தை கூறியவாறு, 25 மார்ச் வரை லூதியானாவில்
அன்னார் தங்கியிருப்பதாகவும் மேலும் எவர்கள் பைஅத் செய்ய விரும்புகின்றார்களோ
அவர்கள் 20ஆம் தேதிக்கு பிறகு வாருங்கள் என்று கூறி இருந்தார்கள்.
ஹஸ்ரத் மியா(ன்)
அப்துல்லாஹ் சாஹிப் சனோரி அவர்களின் அறிவிப்பின் அடிப்படையில், 23 மார்ச் 1889 ஆம் ஆண்டு ஹஸ்ரத் அலைஹிஸ்ஸலாம் முதல் பைஅத் வாங்கிய சமயத்தில் அன்னார் ஓர் அறையில் அமர்ந்து
கொண்டு ஷேக் ஹாமித் அலி அவர்களிடம் கூறினார்கள், 'எவரை நான் அழைக்கின்றேனோ அவரை அறையினுள் அழையுங்கள் என்று கூறினார்கள்.' ஆக முதன் முதலில் ஹஸ்ரத்
மௌலவி ஹக்கீம் நூருத்தீன் அவர்களை உள்ளே அழைத்து முதலில் பைஅத் வாங்கினார்கள். இவ்வாறே
ஒவ்வொருவராக உள்ளே அழைத்து அவர்களிடம் பைஅத் வாங்கிக் கொண்டே சென்றார்கள்.
அப்போது இருந்த
பைஅத்தின் வார்த்தைகள் கீழ்வருமாறு!
இன்று நான்
அஹ்மத்(அலை) அவர்களின் கையில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்த அனைத்து பாவங்களிலிருந்தும்
மற்றும் தவறான பழக்கங்களிலிருந்தும் தவ்பா செய்கின்றேன். மேலும் உண்மை மனதுடனும், உறுதியான முடிவுடனும் என்னால் முடிந்தவரை என்னுடைய வாழ்நாளின்
இறுதிவரை அனைத்து பாவங்களிலிருந்தும் விலகியிருப்பேன் என வாக்குறுதி அளிக்கின்றேன்.
மேலும் உலக சுகங்கள் மற்றும் மன இன்பங்களை விட மார்க்கத்திற்கு முன்னுரிமை வழங்குவேன். மேலும் 12 ஜனவரியின்
பத்து பைஅத் நிபந்தனைகளின்படி முடிந்தவரை பேணி நடப்பேன். இப்பொழுதும் இறைவனிடம் தன்னுடைய
கடந்த பாவங்களுக்காக பாவமன்னிப்புக் கோருகின்றேன்اَسْتَغْفِرُاللّٰہَ
…رَبِّ اِنِّیْ
ظَلَمْتُ
பைஅத்தின் அவசியங்கள் மற்றும் குறிக்கோள்கள்
ஹஸ்ரத் மஸிஹ் மவ்ஊது (அலை) அவர்கள் பைஅத்தின் அவசியங்கள் மற்றும் குறிக்கோள்களை விளக்கியவாறு கூறுகின்றார்கள்;
"இந்த
பைஅத் இறையச்சம் கொண்ட ஜமாஅத்தை ஒன்று சேர்ப்பதற்காகவும், அத்தகைய இறையச்சம் கொண்டவர்களின் ஒரு பெரிய கூட்டம் உலகத்தின்
மீது தனது நல்ல விளைவை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும்
இவர்களின் ஒற்றுமை இஸ்லாத்தின் அருளுக்கும் மகிமைக்கும் நல்விளைவிற்கும் காரணமாக அமைய
வேண்டும். மேலும் அவர்கள் ஒரே கலிமாவின் ஒன்றுபட்டு இருக்கின்ற பரக்கத்தினால் இஸ்லாத்தின்
தூய பரிசுத்தமான சேவைகளில் விரைவில் செயல் பட வேண்டும். மேலும் சோம்பேறி, கருமித்தனம் கொண்ட மற்றும் பயனற்ற முஸ்லிமாக இருக்கக் கூடாது.
எவர்கள் தமது பிரிவினை மற்றும் ஒற்றுமையின்மை காரணத்தினால் இஸ்லாத்திற்கு நஷ்டம் இழைத்தார்களோ, அதனின் அழகிய முகத்தை தனது தீய நிலைகளை கொண்டு களங்கமாக்கினார்களோ
அந்த தகுதியற்றவர்களை போன்று ஆகிவிடாதீர்கள். அவ்வாறே இஸ்லாமிய தேவைகளைப் பற்றி கொஞ்சமும்
அறியாத கவனம் மற்றவர்களாக மூலையில் அமர்ந்திருப்பவர்களைப் போன்றும் ஆகி விடாதீர்கள்.
தமது சகோதரர்களின் மீது கொஞ்சமும் கவலைப் படாதவர்களாகவும், மனித குலத்தின் நன்மைக்காக எந்த ஆர்வமும் காட்டாதவர்களாகவும்
அவர்கள் இருக்கக்கூடாது. மாறாக ஏழைகளுக்கு அடைக்கலம் வழங்கும் ஒரு சமுதாயத்தின் அனுதாபிகளாக
மாற வேண்டும், அனாதைகளின் தந்தையாகவும் ஆகிவிட வேண்டும்.
மேலும் இஸ்லாமிய பணிகளை நிறைவேற்ற தம்மை அர்ப்பணிப்பதற்கு தயாராக வேண்டும். அவர்களின்
பொதுவான அருள்கள் உலகில் பரவ முழுமையாக முயற்சி செய்யவேண்டும். மேலும் இறை நேசம் மற்றும்
இறையடியார்களுடன் அனுதாபத்துடன் நடந்து கொள்ளுதல் என்ற தூய நீர் ஊற்று ஒவ்வொருவரின்
உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு அவை ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து ஒரு நதியாக ஓடுவது தென்பட
வேண்டும்."
ஒரு மகத்துவம் வாய்ந்த முன்னறிவிப்பு
அதற்கு பிறகு
இதேபிரசுரத்தில் மிக மகத்துவம் வாய்ந்த ஒரு
முன்னறிவிப்பை குறிப்பிட்டிருந்தார்கள். அது கீழ்வருமாறு;
"ஆக இந்தக்
கூட்டம் அவனுடைய ஒரு சிறப்பான கூட்டமாக இருக்கும். மேலும் அவன் சுயமே அவர்களுக்கு ஆற்றலே
வழங்குவான். மேலும் அசுத்ததிலிருந்து அவர்களை தூய்மைப் படுத்துவான். அவர்களின் வாழ்க்கையை
ஒரு பரிசுத்தமான வாழ்க்கையாக மாற்றுவான். மேலும்
அவன் தனது தூய்மையான முன்னறிவிப்பில் வாக்குறுதி அளித்திருந்தான் அதாவது இக்கூட்டத்தை மிக அதிகமாக பெருகச் செய்வான் ஆயிரக்கணக்கான
உண்மையாளர்கள் இதில் நுழைவார்கள்.
அவர்களுடைய
மிகுதி மற்றும் அருள்கள் கண்களை வியப்படையச் செய்யும் அளவிற்கு அவன் சுயமே இதற்கான
தண்ணீரை பாய்ச்சி இதனை வளரச் செய்வான். மேலும் அவர்கள் உயர்ந்த இடத்தில் வைக்கப்படுகின்ற
விளக்கைப் போன்று உலகிற்கு நாலாபுறமும் தன்னுடைய ஒளியை பரப்புவார்கள். மார்க்க பரக்கத்திற்காக
ஒரு நன்முன்மாதிரியாக திகழ்வார்கள். அவன் இந்த ஜமாத்தை முழுமையாக பின்பற்றுபவர்களுக்கு
எல்லாவகையான அருள்களிலிலும் மற்றவர்கள் மீது வெற்றியை வழங்குவான். மேலும் கியாமத் வரை இதில் துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்ற
மற்றும் உதவி புரியபடுகின்ற மக்கள்கள் இதில் எப்போதும் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.
கம்பீரமான அந்த இறைவன் இதையே விரும்புகின்றான். அவன் வல்லமை பெற்றவன் விரும்புகின்றதை
செய்கின்றவன். எல்லா ஆற்றலும், வல்லமையும் அவனையே
சாரும்.
ஆக இன்று அஹ்மதிய்யா
ஜமாஅத் தோன்றி மற்றும் இந்த முன்னறிவிப்பு வெளிவந்து 125 ஆண்டுகளை விட மேல் ஆகிவிட்டன.
எந்த அளவிற்கு இன்று வரை நாம் இந்த முன்னறிவிப்பின் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறி வருவதை காண்கின்றோம்
என்பதற்கு அஹ்மதியா ஜமாத்தினுடைய வரலாறு சாட்சி
பகர்கின்றது. இன்றைய தினம் உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் அஹ்மதிய்யா ஜமாஅத் உள்ளது.
இன்று உலகின்
ஒவ்வொரு மூலையிலுமுள்ள அஹ்மதிய்யா ஜமாஅத்தின் மக்கள் தம்முடைய கலிஃபா மற்றும் இமாம் செய்யதினா ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் அய்யதஹுல்லாஹுத்தஆலா
அவர்களின் வழிகாட்டல்படி உலகில் மார்க்கத்தை
வெற்றி பெறச் செய்கின்ற இறை பணியில் துடிப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக்
கட்டுரையின் இறுதியில் 10 பைஅத்தின் நிபந்தனைகளை எழுதியவாறு துஆ செய்வது என்னவென்றால்
இறைவன் என்னையும் ஜமாஅத்தின் எல்லா மக்களையும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்ஊது (அலை) அவர்களின்
விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பிற்கிணங்க பைஅத்தின் நிபந்தனைகளின் படி அமல் செய்தவாறு
நமது வாழ்க்கையை சிறந்ததாக்குவதற்கான நற்பாக்கியத்தை வழங்குவானாக. மேலும் ஹஸ்ரத் மஸீஹ்
மவ்ஊது (அலை) அவர்கள் ஜமாஅத்திற்காக செய்த
துஆக்களுக்கு இறைவன் நம்மை எப்போதும் வாரிசாக்குவானாக. ஆமீன்...!
பைஅத்தின் பத்து நிபந்தனைகள்
1.நான் மரணமடைகின்றவரை ஷிர்க் எனும் இறைவனுக்கு இணைவைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வேன்.
2. பொய், விபச்சாரம், தீயப்பார்வை, கட்டுபடாமை, தீமை, அநீதி இழைத்தல்,
நம்பிக்கைத் துரோகம் செய்தல், குழப்பம் விளைவித்தல்,
கிளர்ச்சி செய்தல் ஆகியவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வேன். மன உணர்ச்சிகள்
எந்த அளவு தீவிரமடைந்தாலும் அவற்றை மேலோங்கவிடாது அடக்கிகொள்வேன்.
3.இறைவனின்
கட்டளையின்படியும், அவனுடைய தூதரின் கட்டளையின்
படியும் ஐந்துவேளை தொழுகைகளை விடாமல் நிறைவேற்றி வருவேன். என்னால் இயன்றவரை தஹஜ்ஜுத்
எனும் நடுஇரவுத் தொழுகை, முஹம்மத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின்
மீது ஸலவாத் ஓதுதுல், தினமும் எனது பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்புகேட்டல் ஆகியவற்றில் தொடர்ந்து
ஈடுபடுவேன். இறைவனின் பேருதவிகளை நெஞ்சாரநினைவில் கொண்டு அவனை தினமும் புகழ்ந்து வருவேன்.
4. அல்லாஹ்வின்
அனைத்து படைப்பினங்களுக்கு பொதுவாகவும், முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் எனது மன உணர்ச்சியின்
காரணமாக நாவினாலோ,
கைகளினாலோ வேறு வகையாலோ எவ்விதமான தகாத தொல்லையும் கொடுக்கமாட்டேன்.
5. துக்கம், மகிழ்ச்சி, பணக்கஷ்டம், பணவசதி, இறைவனிடமிருந்து கிடைக்கும் அருள், அவனால் தரப்படும் சோதனை ஆகிய எந்த நிலையிலும் மனங்கோணாமல் பற்றுள்ளவனாக இருப்பேன். இறைவனின் தீர்ப்பை எந்தநிலையிலும் உள்ப்பூர்வமாக
ஏற்றுக்கொள்வேன். அவன் வழியில் எல்லா வகையான இழிவையும், இன்னல்களையும் ஏற்க தயாராக இருப்பேன். எத்தகைய தொல்லைகளுக்கு ஆளானாலும் முகம் சுளிக்காமல்
முன்னேறிச் செல்வேன்.
6. சடங்கு, சம்பிரதாயங்களிலிருந்தும் மனதின் சொந்தவிருப்பங்களை பின்பற்றுவதிலிருந்தும்
தவிர்ந்து கொள்வேன். திருக்குர்ஆனின் ஆட்சிக்கு
முழுமையாககட்டுப்பட்டு, இறைவனின் போதனைப்படியும் அவன் தூதரின் போதனைப்படியும் நடப்பதையே எல்லா நிலையிலும்
எனது நடைமுறையாக ஆக்கிக் கொள்வேன்.
7. தற்பெருமையையும், அகம்பாவத்தையும் முற்றாக விட்டு விடுவேன். பணிவு, தன்னடக்கம், இனியகுணம், சகிப்புத்தன்மை,
எளிமை, இவற்றையே மேற்கொண்டு வாழ்க்கை நடத்துவேன்.
8. மார்க்கம், அதன்கண்ணியம், இஸ்லாத்திற்கு தொண்டு செய்தல்
ஆகியவற்றை எனது உயிர், பொருள், கண்ணியம்,
குழந்தைகள், உறவினர்கள், ஆகிய எல்லவற்றையும் விட மிகவும் உயர்வாக கருதுவேன்.
9. அல்லாஹ்வின்
படைப்புகளாகிய எல்லாருக்கும் தொண்டு செய்வதில் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இறைவனுக்காகவே தொடர்ந்து ஈடுபட்டிருப்பேன்.
அவனால் எனக்கு வழங்கப்பட்ட ஆற்றல்களாலும், அருள்களாலும் என்னால் முடிந்தவரை
மனிதகுலம் பயன்பெரும் வகையில் பணியாற்றுவேன்.
10. அல்லாஹ்வுக்காக, நல்ல விஷயங்களில் நான்
கட்டுப்படுவேன் என இந்த எளியவனிடம் (இமாம் மஹ்தி (அலை) அவர்களிடம்) நான் செய்து கொள்ளும்
இந்த சகோதர உடன்படிக்கையில் மரணமடையும் வரை நிலைத்திருப்பேன் என்றும்மற்றெல்லா உலகத்தொடர்புகளை
விடவும் இந்தசகோதர உடன்படிக்கை மிகவும் உயர்ந்ததாக இருக்கும் என்றும் உறுதிக் கூறுகின்றேன்.
(இஷ்திஹார் தக்மீலே தப்லீக் – 12 ஜனவரி 1889)
நன்றி : அல்-ஃபஸ்ல் ஆன்லைன் தினப்பத்திரிக்கை
மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன் சாஹிப்-ஈரோடு
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None