ரமலான் மற்றும் தொழுகையை பேணுதல்

 


حٰفِظُوۡا عَلَی الصَّلَوٰتِ وَ الصَّلٰوۃِ الۡوُسۡطٰی ٭ وَ قُوۡمُوۡا لِلہِ قٰنِتِیۡنَ

நீங்கள் (எல்லாத்) தொழுகைகளிலும் (சிறப்பாக) நடுத்தோழுகையிலும் (அவற்றை நிலை நாட்ட) முழுக் கவனம் செலுத்துங்கள். அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவுடன் நில்லுங்கள். (திருக்குர்ஆன் 2:239)

நம்பிக்கையாளர்களுக்கு ரமலான் வசந்த காலமாகும். வசந்த காலத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் அதில் எல்லா வகையான செடி கொடி மரங்கள் எதுவரை என்றால் காட்டில் வளரக்கூடிய  மரம் செடி கொடிகளில் கூட பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவ்வாறே ரமலானில் அனைத்து மக்களுக்கும் இறை வணக்கத்தின் பால் ஒரு வகையான ஈர்ப்பு உருவாகின்றது. மேலும் இறை வணக்கத்திற்கான பாக்கியமும் கிடைக்கின்றது. ஆகையால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.

"ஒருவருக்கு ரமலான் கிடைக்கப் பெற்றும் அவர் மன்னிக்கப்பட வில்லை என்றால் அவர் துர்பாக்கியசாலி ஆவார்."

(கன்ஸ்ஸுல் ஆமால் பாகம்7பக்கம்79)

நம்முடைய நேசத்திற்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமுடன் ரமலானுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் பாரிக் லனா ஃபீ ரமலான் என்ற துஆ செய்தார்கள். அதாவது இறைவா இந்த ரமலலானில் எங்கள் மீது அருள்கள் பொழியச் செய்வாயாக. (முஸ்னத் அஹ்மத் கிதாப் வமின் முஸ்னத் பனிஹாஷிம்)

இறைவனும் ரமலானை வரவேற்பதற்காக சொர்க்கத்தை ஆயத்தப்படுத்துகின்றான்.

ஹதீஸில் வருகின்றது உலகத் தலைவரான ஹஸ்ரத்முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

اِنَّ الْجَنَّۃَ لَتُزَیَّنَ مِنَ الْحَوْلِ اِلَی الْحَوْلِ لِشَھْرِ رَمَضَانَ

அதாவது நிச்சயமாக சொர்க்கம் ரமலானை  வரவேற்பதற்காக ஒரு வருடத்தில் இருந்து மற்றொரு வருடம் வரை அலங்கரிக்கப்படுகின்றது. (பஹ்யிகி ஷுபூல் இய்மான் பாப் ஃபீஸ் ஸியாம்)

மிக்க நேசத்திற்குரிய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ரமலானை குறித்து இந்த நற்செய்தியும் வழங்கியுள்ளார்கள்.

أَتَاکُمْ رَمَضَانُ شَھْرٌ مُبَارَکٌ

அதாவது ரமலான் உங்களிடம் வருகின்றது அது மிகவும் பரக்கத்திற்குரிய மாதமாக இருக்கின்றது. (சுனன் நிஸாயி கிதாபுஸ் ஸியாம்)

ரமலானின் இறை வணக்கங்களில் நோன்புடன் தொழுகையை பேணுவது ஒரு நம்பிக்கையாளர் மீது என் நிலையிலும் கட்டாயமாகும். இந்நிலை தவிர்த்து அவர் வெறும் பசி  தாகத்தோடு இருப்பது  ரமலானிலிருந்து எந்த பயனும் பெற முடியாது.

ஹஸ்ரத் நான்காவது கலிஃபத்துல் மஸிஹ் (ரஹ்) அவர்கள் இது தொடர்பாக கூறுகின்றார்கள்:

"இப்பொழுது தொழுகைக்கு நோன்பை விட  சிறப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை பாருங்கள். மேலும் நாம் நோன்பு எல்லாவற்றையும் விட சிறந்தது என்றும் நோன்பிற்கான கூலி இறைவனே ஆவான் என்றும் கூறுகின்றோம். நோன்பிற்கு பகரமாக தான் தொழுகை உள்ளது என தப்பெண்ணம் கொள்ள வேண்டாம். மாறாக நோன்பின் நோக்கமே தொழுகையாகும். மேலும் தொழுகைகளின் நிலைகளை சீர்செய்வதாகும். ஆக நோன்பில் தொழுகைகளை நெறிப்படுத்தபடவில்லை என்றால் அப்படிப்பட்ட நோன்பு பயனற்றதாகும். நோன்பில் தொழுகைகள் நெறிப்படுத்தபட்டுவிட்டால் அப்படிப்பட்ட நோன்பு தொழுகைகான படித்தரமாகவும்  தொழுகைகள் நோன்பிற்கான படி தரமாகவும் அமைகின்றன. ஆக இதில் எந்த ஒரு வேறுபாட்டையும் மேற்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் அதனுடைய கருத்து முற்றிலும் மாறி விடும். உண்மை என்னவென்றால் நோன்பின் காலத்தில் எந்த அளவிற்கு தொழுகைகள் நெறிப்படுத்தபடுகின்றதோ அதே அளவிற்கு நோன்பின் பலனை தாங்கள் பெறுவீர்கள்.  எந்த அளவிற்கு தொழுகைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றால் அதன் மூலம் நீங்கள் இறைவனை காணக்கூடிய மற்றும் இறைவன் தங்களை காணக்கூடிய அந்தஸ்தை பெற வேண்டும். ஆக இந்த நிலைகளேயே உண்மையில் நோன்பின் சிறப்புத் தன்மையாக கருதப்பட வேண்டும். 

(தின பத்திரிகை அல்ஃபஸல்17 செப்டம்பர் 2007)

உண்மையில்  தொழுகை என்பது மார்க்கத்தின் தூணாகும். தொழுகை இல்லாமல் இஸ்லாத்தின் கட்டடம்  நிலைநாட்டபடாது.  தொழுகை மார்க்கத்தின் கனியாகும். தொழுகை இன்றி மார்க்கம் வெறும் (பழத்) தோலாகும். எனவேதான் இறை வணக்கங்களில் வசந்த காலமான ரமலான் மாதத்தில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜமாஅத்தாக தொழுவதிலும் தஹஜ்ஜுத் தொழுவததிலும் சிறப்பான கவனம் செலுத்தி வந்தார்கள். அது மட்டுமல்லாமல் தன்னுடைய வீட்டார்களுக்கும் மற்றும் சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கும் இது தொடர்பாக மிகவும் வலியுறுத்தி கூறி வந்தார்கள்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரவு நேரத் தொழுகை மிகவும் நீண்டதாக இருந்தது. அதில் மிகப்பெரிய சூராக்களை ஓதுவதை அன்னார் விரும்பினார்கள்.

ஹஸ்ரத்த ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தஹஜ்ஜத் தொழுகை பற்றி கேட்கப்பட்ட போது அன்னார் கூறினார்கள்; "நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானிலும் அதைத் தவிர்த்து பிற நாட்களிலும் பதினோரு ரக்அத்துகளை விட அதிகமாக தொழுததில்லை. ஆனால் அந்த தொழுகையானது மிகவும்   நீண்டதாகவும் அழகானதாகவும்  இருந்தது.  அந்தத் தொழுகையின் நீளத்தையும், அழகையும் குறித்து என்னிடம் கேட்காதீர். என்னிடம் அதனின் அழகையும், நீளத்தையும் வர்ணிக்க வார்த்தை இல்லை. ( புகாரி1147)

ஹதீஸிஸ்களில் வருகின்றது; ஹஸ்ரத் நபிகள் நாயகம் அவர்கள் ரமலான் மாதத்தில் ஷய்த்தான் சங்கிலியால் கட்டப்படுகின்றான் என கூறியுள்ளார்கள். (புகாரி)

ஆகையால் இந்த  மாதத்தின் மூலம்  பலன் பெற்றவாரு இறைவனுடைய நிரந்தர பாதுகாப்பில் வருவதற்கு முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். இந்த வலு வாய்ந்த கோட்டைக்குள் நுழைவதற்கான சிறந்த வழிமுறை தொழுகையாகும். ரமலான் மாதத்தில் தொழுகைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமென்றால்,  அதன்மூலம் ஷய்தானை விட்டு நாமும் நம்முடைய  சந்ததிகளும் நிரந்தர பாதுகாப்பில் வரவேண்டும்.

இதுதொடர்பாக நம்முடைய அன்பிற்குரிய இமாமாகிய ஹஸ்ரத் ஜந்தாவது கலிஃபத்துல் மஸிஹ் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:  

"எவ்வாறு இருப்பினும் இங்கு ஒரு அடிப்படை வழிகாட்டல் கூறப்பட்டுள்ளது. அது ஸலாத்துல் வுஸ்தா (நடுத் தொழுகையை) பேணவேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரின் நிலைக்கேற்ப நடுத்தொழுகை என்பது அதில் அவரை உலக வேலைகள் அல்லது சோம்பேறித்தனம் தொழுகையிலிருந்து தடுத்து அவரை கவனமற்றவராக மாற்றும். ஷய்த்தான் அவனுடைய கவனத்தை தொழுகையிலிருந்து அகற்றி வேறு பக்கம் திசை திருப்பி விடுகின்றான்.  இவ்வாறான நிலையில் நாம் ஷய்தானை விட்டு விலகி அவனை நம்மீது ஆதிக்கம் செலுத்த விடாமல் செய்து விட்டால் நாம் நம்முடைய தொழுகைகளை பாதுகாக்க கூடியவர்களாக ஆகி விடுவோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த நிலை ஏற்பட்டுவிட்டால் முன்னர் கூறியது போன்று தொழுகை நம்மை பாதுகாத்து விடும். ஃபர்லை சுன்னத் பாதுகாக்கும். சுன்னத்தை நவாஃபில் (உபரியான தொழுகைகள்) பாதுகாக்கும். இதுவே ஒரு நம்பிக்கையாளரின் அடையாளமாகும். இந்த நிலை ஏற்பட்டுவிட்டால் ஷய்த்தான் மிக தொலைவிலிருந்தும் அறியப்பட மாட்டான். அப்படிப்பட்ட மக்களுக்கு அருகிலும் ஷய்த்தான் நெருங்க முடியாது. 

(குத்பா ஜுமுஆ 24 ஜூன் 2005)

நான்காவது கலீஃபத்துல் மஸிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒவ்வொரு ரமலானும் நமக்கான  ஒரு புதிய பிறப்பை கொண்டு வருகின்றது. ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அந்த நிபந்தனைகளுடன் ரமலானை நாம் கழித்தால், ஒவ்வொரு வருடமும் புதிய ஆன்மீக பிறப்பு ஏற்படும். மேலும் கடந்த கால அனைத்து பாவங்களின் கறைகளும் நீங்கி விடுகின்றன.

(குத்பா ஜும்ஆ 26 ஜனவரி 1996)

இறுதியில் நமது துஆ என்னவென்றால், எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இறை வணக்கங்களின் அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்தவாறு அருளுக்குறிய ரமலானை கழிப்பதற்கும் அதிலிருந்து முழுமையான முறையில் பலன் பெறுவதற்கும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக. (ஆமீன்)

நன்றி: மஜ்லிஸ் அன்ஸாருல்லாஹ் பாரத்

தமிழாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன் சாஹிப்-ஈரோடு

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.