அருளுக்குரிய ரமலானின் நன்மைகளும், இறையச்சத்தில் முன்னேறுவதற்கான வழிகளும்

 


அல்லாஹ்வின்‌ இறுதி மற்றும்‌ முழுமையான வேதநூல்‌ இறங்கிய மாதம்‌ தான்‌ ரமலான்‌ மாதமாகும்‌. ஒரு முஸ்லிமிற்கு நமது ஆன்மீக, நல்லொழுக்க மற்றும்‌ இதர பலஹீனங்களை அகற்றுவதற்கு மிக முக்கியமான தருணம்‌ ரமலான்‌ ஆகும்‌. மேலும்‌ கருணை, பாவமன்னிப்பு, இரட்சிப்பு பெறுவதற்கு பொன்னான நேரமாகும்‌.

ரமலானின்‌ நோக்கத்தை எடுத்துரைத்தவாறு அல்லாஹ்‌ திருக்குர்‌ஆனில்‌ கூறுகின்றான:

மக்களே, நோன்பு உங்களுக்கு முன்னிருந்தோருக்கு கடமையாக்கப்‌ பட்டுள்ளதைப்‌ போன்று உங்கள்‌ மீதும்‌ கடமையாக்கப்பட்டுள்ளது. (2:184)

இந்த வசனத்தை விளக்கியவாறு ஹஸ்ரத்‌ ஐந்தாவது கலீ.”.பத்துல்‌ மஸீஹ்‌ (அய்யதஹுல்லாஹ்‌) அவர்கள் கூறுகின்றார்கள்‌:

“உங்கள்‌ மீது கடமையாக்கப்பட்டுள்ள நோன்பு ஆன்மீக முன்னேற்றம்‌ மற்றும்‌ தக்வாவில்‌ முன்னேற மிகவும்‌ அவசியமாகும்‌ என அல்லாஹ்‌ கூறுகின்றான்‌. உலகில்‌ கடந்த காலத்திலும்‌ நபிமார்களை ஒப்புக்கொள்பவர்களின்‌ ஆன்மீக முன்னேற்றத்திற்காக அவர்களை மனத்‌ தூய்மையடையச்‌ செய்வதற்காக அவர்களுக்கு இறைநெருக்கத்தைப்‌ பெற்றுத்தர நோன்பு கடமையாக்கப்பட்டது. எனவே இது ஒரு‌ முக்கியமான கட்டளையாகும்‌. இதை கடைபிடிப்பதே நமது தக்வாவின்‌ தரத்தை உயர்த்தக்‌ கூடியதாக அமையும்‌.” (குத்பா ஜுமுஆ செப்டம்பர்‌ 14, 2007)

ஹஸ்ரத்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளாளர்கள்‌:

صُوْمُوْاتَصِحُّوْا

“நோன்பு வையுங்கள்‌; ஆரோக்கியமாக ஆகி விடுவீர்கள்‌”.

ஹஸ்ரத்‌ அபூஹுரைரா (லி) அவர்கள்‌ அறிவிக்கின்றார்கள்‌. ஹஸ்ரத்‌ ரஸுலுல்லாஹ் ‌(ஹல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌: அல்லாஹ்‌ கூறியுள்ளான்‌. ஆதமின்‌ ஒவ்வொரு செயலும்‌ அவனுக்குரியதாகும்‌ நோன்பைத்‌ தவிர! எனவே நோன்பு எனக்காக வைக்கப்படுகின்றது. மற்றும்‌ நானே இதற்கு நற்கூலி அளிக்கின்றேன்‌. மேலும்‌ நோன்பு கேடயமாகும்‌. உங்களில்‌ எவராவது நோன்பு நோற்றிருந்தால்‌ தீய விஷயங்களும்‌, ஏசிப்‌ பேசவும்‌ வேண்டாம்‌. மேலும்‌ ஒருவேளை எவராவது அவரை திட்டினால்‌ அவரிடம்‌ சண்டையிட்டால்‌ “நான்‌ நோன்பாளி” என மட்டும்‌ அவர்‌ பதிலளிக்கவேண்டும்‌. (புகாரி கிதாபுஸ்‌ ஸவ்ம்‌)

اِذَا جَآءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الْجَنَّۃِوَغُلِّقَت اَبْوَابُ النَّارِوَصُفِّدَتِ الشَّیَاطِیْنُ

ஹஸ்ரத்‌ அபூஹுரைரா (ரலி) அவர்கள்‌ அறிவிக்கின்றர்கள்‌. ஹஸ்ரத்‌ ரஸுலுல்லாஹ் ‌(ஸல்‌) கூறினார்கள்‌: “ரமலான்‌ ஆரம்பித்தால்‌ சொர்க்கத்தின்‌ வாசல்கள்‌ திறக்கப்படுகின்றன. நரகத்தின்‌ வாசல்கள்‌ அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள்‌ பிணைக்கப்படுகின்றனர்‌. (ஸஹீஹ்‌ முஸ்லிம்‌ கிதாபுஸ்ஸியாம்‌, பாபுன்‌.'.பஸ்லு ஷஹ்ரி ரமலான்‌)

ஹஸ்ரத்‌ வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ‌(அலை) அவர்கள்‌ கூறியுள்ளார்கள:

“நோன்பின்‌ உண்மைநிலை பற்றியும்‌ மக்கள்‌ அறியாதவர்களாக உள்ளனர்‌. நோன்பு என்றால்‌ பசி மற்றும்‌ தாகத்துடன்‌ இருத்தல்‌ என்பது மட்டுமல்ல. மாறாக இதன்‌ உண்மைத்துவம்‌ மற்றும்‌ விளைவு அனுபவத்தாலேயே தெரியவருகின்றது. மனிதன்‌ எந்த அளவிற்கு குறைவாக உண்பானோ அந்த அளவிற்கே மனம்‌ தூய்மையடைகின்றது; கஷ்ஃபின்‌ ஆற்றல்‌ அதிகரிக்கின்றது என்பது மனித இயல்பாகும்‌. ஒரு உணவை குறைத்துக்கொண்டு மற்றொரு உணவை அதிகம்‌ எடுக்கவேண்டும்‌ என்பதே இதன்‌ (நோன்பின்)‌ நோக்கமாகும்‌; இறைவனின்‌ விருப்பமாகும்‌. பசியோடு இருக்கவேண்டும்‌ என்பது மட்டுமே நோக்கமில்லை என்பதை நோன்பாளி கருத்திற்கொள்ள வேண்டும்‌. மாறாக அவர்‌ அல்லாஹ்வின்‌ ஸிக்ரில் (நினைவில்)‌ மும்முரமாக இருக்கவேண்டும்‌. அப்போதுதான்‌ இறைநெருக்கமும்‌, இறைவனின்‌ நேசமும்‌ கிடைக்கும்‌. ஆகவே உடலை வளர்க்கும்‌ உணவை விட்டுவிட்டு ஆன்மாவின்‌ நிம்மதிக்கும்‌, வளர்ச்சிக்கும்‌ காரணமான இன்னொரு உணவை பெறவேண்டும்‌ என்பதே மையக்‌ கருத்தாகும்‌. மேலும்‌ எந்த மக்கள்‌ இறைவனுக்காக நோன்பு வைக்கின்றார்களோ, பகட்டிற்க்காக வைக்கவில்லையோ, அந்த மக்கள்‌ இறைவனை புகழ்தல்‌, அவனது தூய்மையை எடுத்துரைத்தல்‌, அவனது ஓரிறைக்கொள்கையை கூறுதல்‌ போன்றவற்றில்‌ ஈடுபட்டிருக்க வேண்டும்‌. இதைக்‌ கொண்டு அவர்களுக்கு இன்னொரு உணவு கிடைத்துவிடும்‌. (அல் ஹகம் பாகம் 11, நம்பர் 2, தேதி 17 ஜனவரி 1907 பக்கம் 9))

ஹஸ்ரத்‌ மிர்ஸா பஷீர் அஹ்மத்‌ (ரலி) அவர்கள்‌ தமது ஒரு கட்டுரையில்‌ எழுதுகின்றார்கள்‌:

“ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊத்‌ (அலை) அவர்கள் கூறுவதுண்டு, “தீமைகளை விட்டுவிடுவதற்கு ஓர்‌ குறிப்பான சுற்றுசூழல்‌ ஏற்படுகின்றது. அந்த சுற்றுசூழல்‌ ரமலான்‌ மாதத்தில்‌ மிக உயர்ந்த, முழுமையான நிலையில்‌ கிடைக்கின்றது. எனவே மக்கள்‌ ரமலான்‌ மாதத்தில்‌ தமது மனதை சுய பரிசோதனை செய்து தமது ஏதேனும்‌ ஒரு தீமையை விட்டுவிடுவதற்கு உறுதிமொழி எடுக்கவேண்டும்‌.” (அல் ஃபஸ்ல் 27 ஏப்ரல் 1988)

நபிமொழியில்‌ ரமலானின்‌ மேன்மையை விளக்கியவாறு இவ்வாறு வருகின்றது:

ரமலான்‌ மாதம்‌ எவ்வாறான பரக்கத்தான மாதம்‌ எனில்‌ இதன்‌ துவக்கத்தில்‌

ரஹ்மத்‌, நடுமாதத்தில்‌ மக்‌ஃபிரத்‌, இறுதியில்‌ நெருப்பிலிருந்து இரட்சிப்பு உள்ளது”. (மிஹ்காத்‌ கிதாபுஸ்‌ ஸவம்‌)

சுருக்கமாக கூறுவதென்றால்‌, அல்லாஹ்‌ ரமலானின்‌ ஒவ்வொரு நாளையும்‌

நமது மகிழ்ச்சிக்கும்‌, மன நிம்மதிக்கும்‌, இறையச்சத்தில்‌ முன்னேறவும்‌ மூலதனமாக ஆக்கியுள்ளான்‌. ரமலானின்‌ இறுதி பத்து நாட்களை ரஹ்மத்‌ மற்றும்‌ மக்‌ஃபிரத்தை பெற்றுவிடுவதால்‌ நரகத்திலிருந்து விடுதலை பெறக்கூடிய வாயிலாக அல்லாஹ்‌ ஆக்கியுள்ளான்‌.

இந்த நாட்களில்‌ இறைவன்‌ அசாதாரணமான முறையில்‌ துஆக்களை ஒப்புக்கொள்கிறான்‌. இறைவணக்கத்திற்கான வாய்ப்பு இந்த நாட்களில்‌ மற்ற மாதத்தைவிட மிக அதிகமாக கிடைக்கின்றது. எனினும்‌ ஒரு விஷயம்‌ எப்போதும்‌ நினைவில்‌ இருக்கவேண்டும்‌ அதாவது இறைவணக்கங்களை இந்த மாதத்தோடு நிறுத்திவிடக்‌ கூடாது. மாறாக ரமலானில்‌ பேணிய நற்செயல்கள் முழு ஆண்டும்‌ தொடரவேண்டும்‌...

அல்லாஹ்‌ நமக்கு, இந்த ரமலானை நினைவில்‌ நிறுத்தக்கூடிய ரமலானாக ஆக்க வாய்ப்பளிப்பானாக இரவில்‌ எழுந்து தொழக்கூடியவர்களாக இருப்போமாக. காலத்தின்‌ கலீஃபா-வின்‌ நீண்ட வாழ்க்கைக்காக, இறைவழியில்‌ கைது செய்யப்பட்டவர்களின்‌ விடுதலைக்காக துஆச்‌ செய்பவர்களாக இருப்போமாக. ஜமாஅத்தின்‌ மீது வரக்கூடிய சோதனைகள்‌ நீங்க துஆச்‌ செய்வோமாக. திருக்குர்‌ஆனின்‌ ஞானங்களை புரிபவர்களாகவும்‌ இறையச்சங்களை மேற்கொள்பவர்களாகவும்‌ இருப்போமாக. எதிரிகளுடைய ஒவ்வொரு தீங்கிலிருந்தும்‌ அல்லாஹ்‌ இஸ்லாத்தையும்‌, இஸ்லாமிய சமுதாயத்தையும்‌ பாதுகாப்பானாக. மேலும்‌ இந்த ரமலானால்‌ முழு வருடமும்‌ ரமலானாக அமைவதற்கு அல்லாஹ்‌ வாய்ப்பளிப்பானாக. ஆமீன்‌.

நன்றி: அல்ஃபஸ்ல் பத்திரிக்கை

தமிழாக்கம்: முஅல்லிம் J.J.நாஸிர் அஹ்மது-சங்கரன்கோவில் 

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.