முதலில், மக்கள் இறைவனை தமது நண்பனாக்கிக் கொண்டால் வாழ்வில் ஒருபோதும் அவநம்பிக்கை அடைய மாட்டார்கள்.
ரமலான்
இறைவனை நண்பனாக்குவதற்கும், அவனது விருப்பத்தை
பெற்றுக்கொள்வதற்கும் சிறந்த மாதமாகும். ரமழான் ஓர் ஆன்மீக வசந்த காலமாகும்.
ரமலானில்
இஸ்திக்ஃபார், ஸலவாத் மற்றும் துஆக்கள்
அதிகமாக செய்ய வேண்டும். மார்க்க சேவை மற்றும் படைப்பின சேவையில் அனைவரும் தத்தமது
செல்வத்தையும், நேரத்தையும் செலவிட வேண்டும்.
ரமலானின்
போது இறைவணக்கத்தில் இடையூறு ஏற்படாத வண்ணம் உங்கள் உலக வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஹஸ்ரத்
மஸீஹ் மவூத் (அலை) கூறியுள்ளார்கள்:-
"சூஃபிமார்கள் எழுதியுள்ளதாவது, இந்த மாதம் (ரமழான்) உள்ளத்தை பிரகாசப்படுத்த சிறந்த மாதமாகும்.
இம்மாதத்தில் மிகுதியாக கஷ்ஃப் ஏற்படும்.
தொழுகை
உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகின்றது. நோன்பு மனதை ஒளியூட்டுகின்றது. தூய்மைப் படுத்துவைத்துவது
என்பதன் பொருள்,... தீமையை தூண்டும்
ஆன்மாவின் இச்சைகளிலிருந்து தொலைவு உண்டாகும்; மனம் ஒளியூட்டப்படுதல் என்பதன் பொருள் கஷ்ஃப்-ன் வாயில் திறக்கப்பட்டு
இறைவனைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதாகும்."
(மல்ஃபூஸாத் பாகம் 2, பக்கம் 561 - 562)
ரமலான்
மாதம் கணக்கிலடங்காத பரக்கத்துக்களின் மாதமாகும். 1400 வருடங்களாக லட்சக்கணக்கான ஸாலிஹீன்கள், இறைநேசர்கள் அந்த பரக்கத்துக்களை பார்த்து பயன் அடைந்துள்ளனர்.
இந்த பரக்கத்தான நாட்களில் நல்லியல்பு கொண்ட நோன்பாளிகளின் துஆக்கள் ஒப்புக்கொள்ளப்
படுகின்றன. அவர்கள் மீது ஒளிகளின் வாசல்கள்
திறக்கப் படுகின்றன.
எப்போதும்
இறைதியானம், துஆக்கள், அதிகமாக நஃபில்கள் பக்கம் நோன்பாளி தமது கவனத்தை வைத்திருக்க
வேண்டும். அனைத்து வகையான வீணானவற்றிலிருந்தும் தன்னைத் தவிர்த்து வைக்க வேண்டும்.
ரமலானில்
(i) தஹஜ்ஜுத்
(ii) தராவீஹ்
(iii) குர்ஆன் திலாவத்
(iv) குர்ஆன் தர்ஸ்
(v) இஃதிகாஃப்
(vi) லைலத்துல் கத்ர்-ஐ பெற முயற்சிகள் போன்றவை முக்கியமான இறை வணக்கங்களாகும்.
ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹ்...) அவர்கள் கூறுகின்றார்கள்:
"ரமலானில்
நாம் நமது இறைவணக்கத்தின் தரத்தை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. நமது செயல்களின் மீது
பார்வை வைத்தவாறு அவற்றை அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஒரு
மாணவன் எவ்வாறு இரவை பகலாக்கிவிடுமளவிற்கு தேர்விற்கு தயாராவதற்கு உழைக்கின்றானோ அவ்வாறு
ஆக வேண்டிய தேவை உள்ளது...இவற்றாலேயே இறைவன் தமது அருட்கொடைகளை கொண்டு நம்மை உபசரிப்பான்.
அவனது நெருக்கம் கிடைக்கும் அளவிற்கு, அவன் நமக்கு இறையச்சத்தை வழங்குவான்." (குத்பா ஜுமுஆ செப்டம்பர்
14, 2007)
ஹஸ்ரத்
ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:- "ரமலானில் முதல் பத்து நாட்கள் ரஹ்மத்.
இரண்டாவது பத்து நாட்கள் மக்ஃபிரத். மூன்றாவது பத்து நாட்கள் நன்றாக நெருப்பிலிருந்து
பாதுகாப்பு."
அல்லாஹ்
நமக்கு இந்த படித்தரங்களை பெற்றிடும் நல்வாய்ப்பை வழங்குவானாக. ஆமீன்.
நன்றி: அன்ஸாருல்லாஹ் மாத இதழ்
தமிழாக்கம்: முஅல்லிம் ஜா.நாஸிர் அஹ்மது சாஹிப்-சங்கரன்கோவில்
கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None