ஜமாஅத்தான தொழுகையின் முக்கியத்துவமும் அதன் பரக்கத்துகளும்


 

اُتۡلُ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ وَ اَقِمِ الصَّلٰوۃَ ؕ اِنَّ الصَّلٰوۃَ تَنۡہٰی عَنِ الۡفَحۡشَآءِ وَ

 الۡمُنۡکَرِ ؕ  وَ لَذِکۡرُ اللّٰہِ اَکۡبَرُ ؕ وَ اللّٰہُ یَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ 

வேதத்திலிருந்து உமக்கு வஹீ அறிவித்ததை ஓதுவீராக, மேலும் தொழுகையினை நிலை நாட்டுவீராக. நிச்சயமாக தொழுகை வெட்கக்கேட்டிலிருந்தும், பகிரங்கமான தீமையிலிருந்தும் தடுக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூருவது பெரிது. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை அறிகின்றான்.” (சூரா அன்கபூத்: 46)

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் இரண்டாவது இகாமுஸ்ஸலாத்து அதாவது தொழுகையை நிலை நாட்டுவதாகும். தொழுகை கட்டாயமாகும் என்று கட்டளையிட்டவாறு திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

اِنَّ الصَّلٰوۃَ کَانَتۡ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ کِتٰبًا مَّوۡقُوۡتًا 

நிச்சயமாக தொழுகை நம்பிக்கை கொண்டவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றவேண்டிய ஒரு கடமையாகும். (சூரா அந்நிஸா : 104)

நபிகள் நாயகம் ஸல் அவர்களும் கூறியிருக்கின்றார்கள்: வேண்டுமென்றே தொழுகையை விட்டு விடுகிறார் என்றால் அவர் குப்ர் செய்தார்

மேலும் அன்னாரின் உண்மை பேரன்பரான ஹஸ்ரத் மஸீஹ் மௌஊத் அலை அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் எவர் ஐவேளை தொழுகையை நிலை நாட்டவில்லையோ அவர் எனது ஜமாஅத்தை சார்ந்தவர் அல்ல.

ஆக இந்த ஆதாரங்களிலிருந்து தொழுகையின் முக்கியத்துவத்தை மிக தெளிவாக புரிந்து கொள்ளலாம். தொழுகை அல்லது இகாமுஸ்ஸலாத்து என்பதன் பொருள் ஜமாஅத்தான தொழுகை ஆகும். திருக்குர்ஆன் எங்கெல்லாம் தொழுகை குறித்து கட்டளையிடுகிறதோ அங்கெல்லாம் ஜமாஅத்தான தொழுகை குறித்து தான் கட்டளையிடுகிறது. அதாவது நாமும் தொழுகையை ஜமாஅத்தாக தொழுக வேண்டும் மற்றவர்களுடைய கவனத்தையும் இதன் பக்கம் ஈர்க்க வேண்டும்.

இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) இகாமுஸ்ஸலாத்து என்பதன் விளக்கவுரையில் இவ்வாறு கூறுகின்றார்கள். இகாமுஸ்ஸலாத்து என்றால் தொழுகையை ஜமாஅத்தாக தொழ வேண்டும். அல்லாஹ் தஆலா திருக்குர்ஆனில் கூறுகிறான்:

وَ اِذَا کُنۡتَ فِیۡہِمۡ فَاَقَمۡتَ لَہُمُ الصَّلٰوۃَ فَلۡتَقُمۡ طَآئِفَۃٌ مِّنۡہُمۡ مَّعَکَ وَ لۡیَاۡخُذُوۡۤا اَسۡلِحَتَہُمۡ 

 அதாவது நீர் முஸ்லிம்களிடம் இருக்கையில் அவர்களுக்கு தொழுகையினை நடத்தி வைக்கும்போது, போரின்போது அனைவரும் ஜமாஅத்தான தொழுகையில் பங்கு பெறாமல் அவர்களுக்குள் ஒரு பகுதியினர் மற்றும் உம்முடன் தமது ஆயுதங்களை எடுத்து உம்முடன் நிற்க வேண்டும். (சூரா நிஸா : 103)

இங்கு அகிமுஸ் ஸலாத்த என்ற சொற்களிலிருந்து இகாமுஸ்ஸலாத என்றால் ஜமாஅத்தான தொழுகை என்பதாகும் என்று தெளிவாக தெரிய வருகிறது. மேலும் அகராதியின் அடிப்படையில் இகாமுஸ்ஸலாது என்பதற்கு மற்றவர்களுக்கும் ஜமாஅத்தான தொழுகையின் பக்கம் கவனமூட்டுதல் என்றும் வருகிறது. ஒரு பொருளை நிலை நாட்டுவதற்கான ஒரு வழிமுறை என்னவென்றால் அதனை பொதுவானதாக ஆக்க வேண்டும்.  மேலும் அதன் பக்கம் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். ஆக யுக்கீமூனஸ்ஸலாத்த என்பதற்கேற்ப செயல்படுகின்றவர்கள் தொழுகை நிலைவாட்டுவது மட்டுமல்லாமல் பிறருக்கும் இதன் பக்கம் கவனமூட்டுவார்கள். இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருக்கிற மக்களை கவனமூட்டி அமல் செய்ய வைப்பார்கள். நமது ஊரிலும் இகாமத் நேரம் ஆகி விட்டது, தொழுகை ஆரம்பித்துள்ளது என்றெல்லாம் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் யுக்கீமூனஸ்ஸலாத்த என்பதன் பொருள் முத்தக்கியானவர்கள் ஜமாஅத்தான தொழுகை தொழுகின்றார்கள் மற்றும் மற்றவர்களையும் தொழ வைக்கின்றார்கள். இந்த பொருளை விளக்கியவாறு திருக்குர்ஆனில் ஒரு வசனம் இவ்வாறு வருகிறது:

وَ اۡمُرۡ اَہۡلَکَ بِالصَّلٰوۃِ وَ اصۡطَبِرۡ عَلَیۡہَا

தொழுதுவருமாறு உம் குடும்பத்தினருக்கு வலியுறுத்தி கூறிக் கொண்டிருப்பீராக. நீரும் அதில் நிலைத்திருப்பீராக.” இந்த கட்டளையை புறக்கணித்து விடாதீர். தொழுகை குறித்து கவனமூட்டுவது மிக முக்கியமான கடமையாகும் என்றும் நினைவில் கொள்வீர். (சூரா தாஹா: 133) (தப்ஸீர் கபீர், பாகம் 1 பக்கம் 105)

ஜமாஅத்தான தொழுகையில் அளவற்ற அருள்கள் இருக்கின்றன. ஜமாஅத்தான தொழுகைக்கு கிடைக்கின்ற நற்கூலி மிக அதிகமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஹஸ்ரத் இப்னு உமர் ரலி அவர்களின் அறிவிப்பாகும். அதாவது தனிப்பட்ட முறையில் தொழுவதை விட ஜமாஅத்தான தொழுகை 27 மடங்கு சிறந்ததாகும். (புகாரி, முஸ்லிம்)

ஹஸ்ரத் முஸ்லிஹ் மௌஊது ரலி இகாமுஸ்ஸலாத் என்பதற்கு விளக்கம் தந்தவாறு கூருகின்றார்கள்:

ஜமாஅத்தான தொழுகையின் முக்கியத்துவத்தை பொதுவாக முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். முஸ்லிம்களின்  பிரிவினைக்கு ஒரு முக்கிய காரணமும் இது தான். அல்லாஹு தஆலா இந்த இபாதத்தில், பல்வேறு தனிப்பட முறையிலானதும் பொதுவனதுமான அருள்களை வைத்திருக்கின்றான். ஆனால் முஸ்லிம்கள் இதை மறந்து விட்டார்கள் என்பது மிக வருத்ததிற்குரியதாகும். திருக்குர்ஆனில் எங்கெல்லாம் தொழுகைக்கான கட்டளை இருக்கிறதோ அங்கெல்லாம் ஜமாஅத்தான தொழுகைக்கான கட்டளை தான் இருக்கிறது. தனியாக தொழுவதற்கான கட்டளை எங்கேயும் இல்லை. இதிலிருந்து தெரியவருகிறது என்னவென்றால் ஜமாஅத்தான தொழுகை மார்க்கத்தின் ஒரு முக்கியமான விஷயமாகும்.  திருக்குர்ஆனில் தொழுகைக்கான கட்டளைகள் உட்பட்ட வசனங்களில் ஜமாஅத்தான தொழுகை என்று தான் கூறப்பட்டுள்ளது. ஆக திருக்குர்ஆனின் பார்வையில்  தொழுகை என்றால் ஜமாஅத்தான தொழுகை தான். நோயாளியாக இருந்தாலோ, அல்லது ஊருக்கு வெளியில் இருந்தாலோ, அல்லது மறந்து விட்டாலோ, அல்லது முஸ்லிம்கள் யாரும் இல்லை என்றால் மட்டுமே தனியாக தொழுவதற்கான அனுமதி இருக்கிறது. அல்லது அவர் தொழுகையை விட்டு விடுவதாக கருதப்படும். (தப்ஸீர் கபீர் பாகம் 1 பக்கம் 105)

இன்னோரிடத்தில் இவ்வாறு கூறுகிறார்கள் : ஒரு மனிதர் ஜமாஅத்தான தொழுகை தொழவில்லை என்றால் அவர் நயவஞ்சகராவார். இவ்வாறு தமது குழந்தைகளை ஜமாஅத்தான தொழுகையின் பக்கம் கவனமூட்டாமல் இருப்பது அவர்களைக் கொலை செய்வதற்கு நிகரானதாகும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஜமாஅத்தான தொழுகையின் பழக்கத்தை உருவாக்கினால், பிறகு ஒருபோதும் அவர்களை சீர்திருத்த முடியாது என்றோ அவர்களுக்கு எந்த  சிகிச்சையும் இல்லை என்றோ கூறுகின்ற அளவிற்கு நிலைமை மோசமகாது. (தப்ஸீர் கபீர் பாகம் 7 பக்கம் 642)

நமது நேசத்திற்குரிய ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் அய்யதஹுல்லாஹ் மீண்டும் மீண்டும்  ஜமாஅத்தான தொழுகையின் பக்கம் நமது கவனத்தை ஈர்க்கின்றார்கள். மேலும் இதனை இஸ்லாம் அஹ்மதியத்தின் வெற்றியின் காரணியாக கூறுகிறார்கள்.

அன்னார் கூறுகின்றார்கள்:

இஸ்லாம் அஹ்மதியத்தின் வெற்றியானது பள்ளிவாயில்களை நிரப்புவதுடன் தொடர்புடையதாகும். ஆக அஹ்மதிகளே! எழுந்து பள்ளிவாயிலின் பக்கம் ஓடுங்கள். அவைகளை நிரப்புங்கள். இதனால் நாம் இறைவனின் வாக்குறுதிக்கேற்ப இஸ்லாம் அஹ்மதியத்தின் வெற்றியின் நாட்களை பார்க்கலாம். அல்லாஹ் தஆலா நமக்கு அதற்கான நல்வாய்ப்பை நல்குவானாக. வெற்றியின் நாட்களை பார்க்க தௌபீக்கை நல்குவானாக.

அல்லாஹ் தஆலா ஜமாஅத்தின் ஒவ்வொருவரையும் ஜமாஅத்தான தொழுகையை தொழுக்கூடியவர்களாக ஆக்குவானாக. ஆமீன்

நன்றி: மஜ்லிஸ் அன்ஸாருல்லாஹ் பாரத்

மொழியாக்கம்: முரப்பி அப்துல் மௌலானா-காதியான்

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.