ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) தொடர்பாக 52 முன்னறிவிப்புகள்

 

ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா பி நஸ்ரிஹில் அஸீஸ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்விடமிருந்து செய்தி பெற்று வாக்களிக்கப்பட்ட மகன்‌ தொடர்பாக ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்வூது (அலை) அவர்கள்‌ கூறியுள்ள அந்த அடையாளங்கள்‌ அல்லது சிறப்பு அம்சங்கள்‌ பற்றி நான்‌ கூறவுள்ளேன்‌.

ஹஸ்ரத்‌ முஸ்லிஹ்‌ மவ்ஊது (ரலி) அவர்கள்‌ எந்த வருடத்தில்‌ இறைவனிடமிருந்து செய்தியைப்‌ பெற்று வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதி நான்தான்‌ என்று அறிவித்தார்களோ அந்த வருடத்தில்‌ ஆண்டு மாநாட்டில்‌ சொற்பொழிவு நிகழ்த்தும்போதுஅவை 52 அடையாளங்களாகும்‌ என்று கூறியுள்ளார்கள்‌. அந்த அடையாளங்களை நான்‌ இப்போது கூறுகின்றேன்‌.

ஹஸ்ரத்‌ முஸ்லிஹ்‌ மவ்ஊது (ரலி) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌:

இந்த முன்னறிவிப்பை கவனமாகப்‌ படித்தால்‌ அதில்‌ தோன்றவிருக்கும்‌ வாக்களிக்கப்பட்ட சீர்திருத்தவாதிக்கான இந்த அடையாளங்கள்‌ கூறப்பட்டுள்ளன.

  1. முதல்‌ அடையாளம்‌ - அவர்‌ இறைவனின்‌ வல்லமையின்‌ அடையாளமாக இருப்பார்‌.
  2. அவர்‌ கருணையின்‌ அடையாளமாக இருப்பார்‌.
  3. இறை நெருக்கத்தின்‌ அடையாளமாக இருப்பார்‌.
  4. அவர்‌ அருளின்‌ அடையாளமாக இருப்பார்‌.
  5. அவர்‌ இறைவனின்‌ பேருபகாரத்தின்‌ அடையாளமாக இருப்பார்‌.
  6. அவர்‌ ஆற்றல்மிக்கவராக இருப்பார்‌.
  7. அவர்‌ மகிமைக்குரியவராக இருப்பார்‌.
  8. அவர்‌ செல்வம்‌ நிறைந்தவராக இருப்பார்‌.
  9. அவர்‌ மஸீஹின்‌ நஃப்ஸைக்‌ கொண்டவராக இருப்பார்‌.
  10. உண்மையான ஆன்மாவின்‌ பரக்கத்தால்‌ பலரையும்‌ நோய்களிலிருந்து குணப்படுத்துவார்‌.
  11. அவர்‌ இறைவனின்‌ வார்த்தையாக இருப்பார்‌.
  12. இறைவனின்‌ கருணையும்‌ தன்மான உணர்வும்‌ அவரை தனது மகிமைமிக்க வார்த்தைகளுடன்‌ அனுப்பும்‌.
  13. அவர்‌ மிகுந்த புத்திக்கூர்மை உள்ளவராக இருப்பார்‌.
  14. அவர்‌ மிகுந்த புரியும்‌ திறன்‌ கொண்டவராக இருப்பார்‌.
  15. அவர்‌ மென்மையான உள்ளம்‌ கொண்டவராக இருப்பார்‌.
  16. அவர்‌ வெளிப்படையான அறிவுகளால்‌ நிரப்பப்படுவார்‌.
  17. அவர்‌ அந்தரங்க அறிவுகளால்‌ நிரப்பப்படுவார்‌.
  18. அவர்‌ மூன்றை நான்காக்குபவராக இருப்பார்‌.
  19. திங்கட்கிழமையுடன்‌ அவருக்கு குறிப்பான தொடர்பு இருக்கும்‌.
  20. அவர்‌ பாசமிக்க புதல்வராக இருப்பார்‌.
  21. கண்ணியத்திற்குரியவராகவும்‌மேன்மைக்குரியவராகவும்‌ இருப்பார்‌.
  22. அவர்‌ ஆரம்பத்தை வெளிப்படுத்தக்‌ கூடியவாக இருப்பார்‌.
  23. அவர்‌ இறுதியை வெளிப்படுத்தக்‌ கூடியவராக இருப்பார்‌.
  24. அவர்‌ உண்மையை வெளிப்படுத்தக்‌ கூடியவராக இருப்பார்‌.
  25. அவர்‌ உயர்வை வெளிப்படுத்தக்‌ கூடியவராக இருப்பார்‌.
  26. அல்லாஹ்‌ வானத்திலிருந்து இறங்கியது போல்‌ என்ற கூற்றுக்குப்‌ பொருத்தமானவராக அவர்‌ இருப்பார்‌.
  27. அவரது வருகை மிகவும்‌ அருளுக்குரியதாக இருக்கும்‌.
  28. அவரது வருகை இறைவனின்‌ கம்பீரம்‌ வெளிப்படுவதற்குக்‌ காரணமாக அமையும்‌.
  29. அவர்‌ ஒளியாக இருப்பார்‌.
  30. அவர்‌ இறை திருப்தியின்‌ நறுமணத்தால்‌ நறுமணம்‌ கமழும்படி செய்யப்பட்டிருப்பார்‌.
  31. 'இறைவன்‌ தனது ஆவியை அவர்‌ மீது இடுவான்‌.
  32. இறைவனது நிழல்‌ அவரது தலைமேல்‌ இருக்கும்‌.
  33. அவர்‌ மிக விரைவாக வளர்வார்‌.
  34. அவர்‌ கைதிகளின்‌ விடுதலைக்குக்‌ காரணமாக இருப்பார்‌.
  35. அவர்‌ பூமியின்‌ எல்லை வரை பிரசித்தீப்‌ பெற்று விடுவார்‌.
  36. சமுதாயங்கள்‌ அவரிடமிருந்து அருள்களைப்‌ பெறும்‌.
  37. அவர்‌ தனது இறுதி நோக்கத்தை அடைந்து விண்ணின்‌ பக்கம்‌ உயர்த்தப்படுவார்‌.
  38. அவர்‌ காலதாமதமாக வருபவராக இருப்பார்‌.
  39. அவர்‌ தொலைவிலிருந்து வருபவராக இருப்பார்‌.
  40. தூதர்களின்‌ பெருமையாக அவர்‌ திகழ்வார்‌.
  41. அவரது வெளிப்படையான அருள்கள்‌ பூமி முழுவதும்‌ பரவிவிடும்‌.
  42. அவரது அந்தரங்கமான அருள்கள்‌ பூமி முழுவதும்‌ பரவிவிடும்‌.
  43. யூசுபைப்‌ போன்று அவரது மூத்த சகோதரர்கள்‌ அவர்களை எதிர்பார்ப்பார்கள்‌.
  44. அவர்‌ பஷீருத்‌ தவ்லாவாக ஆட்சி தொடர்பான நற்செய்திகளைக்‌ கூறுபவராக இருப்பார்‌.
  45. அவர்‌ திருமணங்கள்‌ முடிப்பவராக இருப்பார்‌.
  46. அவர்‌ ஆலமே கவ்வாப்‌ ஆக இருப்பார்‌.
  47. அவர்‌ அழகிலும்‌நன்மைகள்‌ செய்வதிலும்‌ ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவ்ஊது (அலை) அவர்களுக்கு இணை ஆனவராக இருப்பார்‌.
  48. அவர்‌ கலிமத்துல்‌ அஸீஸ்‌ - பிரியமான வார்த்தையாக இருப்பார்‌.
  49. அவர்‌ கலிமத்துல்லாஹ்‌ கான் - இறைவார்த்தைகளைக்‌ கொண்டவராக இருப்பார்‌.
  50. அவர்‌ மார்க்கத்தின்‌ உதவியாளராக இருப்பார்‌.
  51. அவர்‌ மார்க்கத்தை வெற்றி பெறச்‌ செய்யக்கூடியவராக இருப்பார்‌.
  52. அவர்‌ இரண்டாவது பஷீராக இருப்பார்‌.

இந்த அடையாளங்களில்‌ ஒவ்வொன்றையும்‌ ஒரு சொற்பொழிவின்‌ தலைப்பாக அமைக்கலாம்‌. அவற்றை விரிவாகக்‌ கூற நேரமில்லை. ஹஸ்ரத் முஸ்லிஹ்‌ மவ்ஊது (ரலி) அவர்களின்‌ 52 வருடகால கிலாஃபத்தைப்‌ பார்த்தால்‌ இந்த ஒவ்வொரு அடையாளமும்‌ அவர்களிடம்‌ காணப்படுகிறது. அதை விரிவாக கூற நேரமில்லை...

(ஹஸ்ரத் ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா பி நஸ்ரிஹில் அஸீஸ்) அவர்கள் 18.02.2011 அன்று ஆற்றிய ஜுமுஆ சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டது)

முழு குத்பாவையும் வாசிக்க: குத்பா ஜுமுஆ 18.02.2011

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.