رافعك ثمَّ متوفيك فِي آخر الزَّمَان என்ற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பை குறித்து ஓர் ஆய்வு

 


முதல் விஷயம் என்னவென்றால் குர்ஆன் ஹஸ்ரத் ஈஸா அலை அவர்கள் மரணம் அடைந்துவிட்டார்கள் என்பதை பல்வேறு வசனங்கள் வாயிலாக நமக்கு எடுத்து கூறுகிறது. திருக்குர்ஆனுக்கு அடுத்த நூலாக கருதப்படும் புகாரி ஹதீஸில் கிதாப் தஃப்சீர் சூரா மாயிதா வில் “தவஃப்ஃபைத்தனி” என்ற பதத்திற்கு ஹஸ்ரத் புகாரி (ரஹ்) அவர்கள் ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழங்கும் ஒரு பொருளை தமது ஹதீஸ் கிரந்தத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்கள். அதாவது “முதவஃப்ஃபீக” என்பதற்கு முமீத்துக்க” என்ற பொருள் ஆகும். (புகாரி ஹதீஸ் நம்பர் 4622)

இதிலிருந்து ஹத்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து என்னவென்றால், ஹஸ்ரத் ஈசா (அலை) ஏற்கனவே இறந்துவிட்டார்கள், உடல் ரீதியாக திரும்ப மாட்டார்கள் என்பதாகும்.

அஹ்மதி அல்லாத முஸ்லிம்கள் இந்த வசனத்திற்கும் மேற்கண்ட அறிவிப்பிற்கும் பதிலளிக்க முடியாது என்பதால், அவர்கள் அத்-துர்ருல்-மன்சூரின் விளக்கத்தை மேற்கோள் காட்டுகிறார்கள், இது இப்னு அப்பாஸ் அவர்களுடன் தவறாகத் தொடர்புபடுத்தி கூறப்பட்டுள்ளது.

முதலாவதாக, குர்ஆனால் ஆதரிக்கப்படும் ஒரு வலுவான மற்றும் சரியான குறிப்பை அவர்கள் மறுக்கிரார்கள், நாம் மேலே கூறியிருந்த இப்னு அப்பாஸ் அவர்களின் முதவஃப்ஃபீக என்பதின் பொருள்  குர்ஆனுக்குப் பிறகு மிகவும்  நம்பத்தகுந்த புத்தகமான சஹிஹ் அல் புகாரி என்ற ஹதீஸ் நூலில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. குர்ஆனுக்கு முரணான பலவீனமான மற்றும் அங்கீகரிக்கப்படாத குறிப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஹ்மதி அல்லாதவர்கள் விரும்புகிறார்கள், இதில் எந்த அர்த்தமும் இல்லை. 

அவர்கள் மேற்கோள் காட்டும் துர்ரே மன்ஸூரின் குறிப்பு இவ்வாறு வருகிறது:

وَأخرج اسحق بن بشر وَابْن عَسَاكِر من طَرِيق جَوْهَر عَن الضَّحَّاك عَن ابْن عَبَّاس فِي قَوْله {إِنِّي متوفيك ورافعك} يَعْنِي رافعك ثمَّ متوفيك فِي آخر الزَّمَان

பொருள், ஹத்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூற்றாவது,{இன்னி முதவஃப்ஃபீக்க வ ராஃபியுக} என்றால் “ராஃபியுக சும்ம முதவஃப்ஃபீக்க ஃபி‌ ஆகிருஸ் ஸமான் என்பதாகும் அதாவது “நான் உம்மை உயர்த்துவேன் பிறகு உமக்கு இறுதி நாளில் மரணத்தை வழங்குவேன்.

முதலாவதாக, இந்த குறிப்பு எந்த நம்பகத்தன்மையும் இல்லாமல் உள்ளது, ஏனெனில் இது எந்த நம்பத்தகுந்த புத்தகத்திலும் இல்லை. ஈசா (அலை) அவர்களின் வாழ்க்கையை நியாயப்படுத்த முயற்சிக்கும் பல அறிவிப்புகளை மேற்கோள் காட்டும் தப்சீர் இப்னு ஜரிர் அத்-தபரியில் நாம் அதைக் காணவில்லை, அது தப்சீர் இப்னு கஸீரிலும் இல்லை. இந்த அறிவிப்பை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு புனைகதைக்காக சாஹிஹ் புகாரியின் நம்பத்தகுந்த அறிவிப்பை ஒரு முஸ்லிம் ஏன் நிராகரிப்பார்? மேலும், இந்த குறிப்பில் சித்தரிக்கப்பட்டுள்ள நம்பிக்கை, இது ஹத்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பார்வையை விட அறிவிப்பாளரின் பார்வையாகத் தெரிகிறது. இப்னு அப்பாஸுடன் தொடர்புபடுத்தப்பட்ட எண்ணற்ற குறிப்புகள் உள்ளன, அவை எந்த மதிப்பும் இல்லை

இந்த متوفيك  என்ற சொல்லுக்கு இறுதி காலத்தில் ஏற்படும் மரணம் என்று பொருள் கொண்டால், ஆன்மீக ரஃபஅ இன்னும் நடக்கவில்லை என்பதாகிவிடும். ஏனெனில் متوفيك   என்ற சொல்  رافعك  க்குப் பிறகு வருகிறது. இருப்பினும், இது திருக்குர்ஆனுக்கு எதிரானது, ஏனெனில் யூதர்கள் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் ஒரு சபிக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்க விரும்புவதாகவும், தௌராத்த்தின் கூற்றுப்படி, அவரை சிலுவையில் கொல்வதில் வெற்றிபெறவில்லை என்றும் கூறுகிறது. மாறாக, சூரா அல் நிஸாவில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ் ஈஸாவுக்கு ஆன்மீக உயர்வை கொடுத்தான். அஹ்மதி அல்லாதவர்களின் கருத்தின்படி, குர்ஆனில் கூறப்படுவது போல உயர்வுக்கு முன் மரணம் தவறானது, அதற்கு பதிலாக மரணத்திற்கு முன் உயர்வு என்று இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இந்த எண்ணம் முற்றிலும் முட்டாள்தனமானதாகும்.

துர்ரே மன்ஸூரில் வரும் இந்த அறிவிப்பு நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதற்கு முக்கிய காரணம், இந்த ஹதீஸின் நம்பகத்தன்மையைப் பார்ப்பதற்கு முன்பே, இது திருக்குர்ஆனுக்கும், உண்மையான ஹதீஸ்களின் அறிவிப்புகளுக்கும் தெளிவாக முரண்படுகிறது என்பது தெளிவான ஒன்றாகும்.

அஹ்மதி அல்லாதவர்கள் மேற்கோள் காட்டும்:

وأخرج إسحاق بن بشر ، وابن عساكر ، من طريق جويبر، عن الضحاك ، عن ابن عباس في قوله : إني متوفيك ورافعك . يعني رافعك ثم متوفيك في آخر الزمان

என்ற இந்த அறிவிப்பு உண்மையானது அல்ல. ஏனென்றால், அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜுவைபிர் இப்னு சாயிட் அல்- பல்கி என்பவர் ஒருவர் ஆவார். இவரை அனைத்து அறிஞர்களும் நிராகரித்துள்ளனர்.

இமாம் அன்-நசாயி மற்றும் இமாம் அல்-தாரே குத்னி அவரை பலவீனமானவர் என்றும் நம்பத்தகுந்தவர் அல்ல என்றும் கூறியுள்ளனர். (தக்ரீப் அல் தஹ்ஸீப்-இப்னு ஹஜ்ர்)

قال النسائي وعلي بن الجنيد والدارقطني متروك وقال النسائي في موضع آخر ليس بثقة

அத்-துஆஃபா மற்றும் தாரிகுல் கபீர் அல்-புகாரி ஆகியவற்றில் நாம் காண்கிறோம். அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

جويبر بن سعيد البلخي عن الضحاك، قال علي بن يحيى: كنت أعرف جويبرا بحديثين، ثم أخرج هذه الأحاديث فضعفه

பொருள், “அல்-தஹாக்கின் அடிப்படையில் ஜாவிபர் பின் சயீத் அல்-பல்கி  தொடர்பாக வருகிறது, “அலி பின் யஹ்யா கூறினார்: நான் ஜுவைபிரை இரண்டு மரபுகளால் அறிந்தேன்; ஆனால் அவர் இந்த மரபுகளை விவரித்த பிறகு, அவர் பலவீனமானவராக கருதப்பட்டார்.”

இப்னுல் ஜவ்ஸி தனது அல்-மவ்துஆத்தில் இவ்வாறு கூறி யுள்ளார்கள்:

 وابن الجوزي في (الموضوعات): «وأما جويبر فأجمعوا على تركه. قال أحمد: لا يشتغل بحديثه

பொருள், "அவரை விட்டு விடுவதில் அனைவரும் ஒருமித்திருக்கின்றனர். ஹஸ்ரத் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறுகிறார்கள் :-" அவர் அறிவிப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டியது இல்லை."

அல்-மீஸானில் ஜுவைபிர் பற்றி இமாம் அல்-தஹபி அவர்களும் கூறியுள்ளார்கள்,

وفي (الميزان) «قال ابن معين: ليس بشيء، وقال الجوزجاني: لا يشتغل به، وقال النسائي والدار قطني وغيرهما: «متروك الحديث»

பொருள், “இப்னு முயீன் அவர்கள் கூறினார்கள், “ஜுவைபிரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதிவில்லை” அல்-ஜவ்ஸ்ஜானி அவர்கள் கூறுகிறார்கள்: “அவருக்கு எந்தவிதமான கவனமும் செலுத்தப்படுவதில்லை.”(முன்னர் குறிப்பிடப்பட்ட தகவல் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது) இமாம் அன் நாசாய், இமாம் அத்-தாரே குத்னி மற்றும் பலர் அவரது அறிவிப்புகள் கைவிடப்பட்டதாக கூறியுள்ளனர்.

அறிஞர்கள் அவரைக் கைவிட்டதாக இமாம் அத்-தஹாபி அல்-காஷிப்பிலும் கூறியுள்ளார்கள்.

وفي (الكاشف): «تركوه»

மேலும், துர் அல்-மன்ஸூரின் அறிக்கையாவது, அவர் منقطع அதாவது துண்டிக்கப்பட்டவர் ஆவார்  என்பதாகும்.

அக்மதி அல்லாதவர்கள் குறிப்பிடும் இப்னு அப்பாஸ் அவர்களின் இந்த ஹதீஸில் அத் தஹாக் என்பவர் ஹஸ்ரத் இப்னு அப்பாஸிடமிருந்து அறிவிப்பை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் ஹத்ரத் இப்னு அப்பாஸை (ரலி) சந்தித்ததில்லை என்பது பல அறிஞர்களின் கூற்றாகும்.

இமாம் அல்-தஹபியின் மிசான் அல்-இஃத்ததாலின் ஒரு குறிப்பு கீழே உள்ளது, அதில் யஹ்யா இப்னு சயீத் அல் கத்தான் என்பவர் கூறியுள்ளார்கள்:

"அல்-தஹாக் இப்னு அப்பாஸை (ரலி) சந்தித்ததை திட்டவட்டமாக  ஷுஃபா மறுக்கிறார்"

ஷுஃபா முஷாஷிடம் கேட்டார்: அல்-தஹாக் இப்னு அப்பாஸிடமிருந்து (ரலி) ஏதேனும் செவியுற்றாரா?, அதற்கு அவர் அவரை ஒருபோதும் பார்த்ததில்லை என்று பதிலளித்தார்

எங்களைப் பொறுத்தவரை அத் தஹாக் பலவீனமானவர் என்று யஹ்யா இப்னு சயீத் கூறினார்.


இப்னு ஹஜ்ர் தக்ரீப் அல் தஹ்தீபில் அவர் நேர்மையாளர், ஆனால் நிறைய ارسال (இர்ஸால்க)களைக் கொண்டிருந்தார், அதாவது இர்ஸால் என்றால் வாரிசுக்கும் நபிக்கும் இடையில் தொடர்பு இல்லாததை குறிக்கும். தக்ரீப் அல் தஹ்ஸீபில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

الضحاك بن مزاحم الهلالي أبو القاسم أو أبو محمد الخراساني صدوق كثير الإرسال من الخامسة مات بعد المائة

அஹ்மதிகள் அல்லாத சிலர் இமாம் அல் ராஸியின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார்கள். அவர்கள் கூறியதாவது:

والمعنى : أني رافعك إليّ ومطهرك من الذين كفروا ومتوفيك بعد إنزالي إياك في الدنيا ، ومثله من التقديم والتأخير كثير في القرآن

பொருள்; நான் உன்னை என்னிடம் எழுப்புவேன், காஃபிர்களிடமிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துவேன், நான் உன்னை உலகத்தில் இறக்கிய பின் உன்னை இறக்கச் செய்வேன். குர்ஆனில் தக்தீம் மற்றும் தஃகீருக்கான (தக்தீம் மற்றும் தஃகீர் என்றால் சொற்களை முன்னே பின்னே மாற்றுவது) உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.”  (தஃப்சீர் அல்-கபீர் 4/227 திருக்குர்ஆன் 3:55)

இமாம் அல்-ராசியின் கூற்றுப்படி, தவாஃபாவுக்குப் பிறகு ரஃபா நடக்க வேண்டும் என்று அஹ்மதிகள் அல்லாதவர்கள் கூற முயற்சிக்கின்றனர். உண்மையில் இந்த கூற்று, அஹ்மதி முஸ்லிம்களை ஆதரிக்கிறது. முதவஃப்ஃபீக்க  என்றால் மரணம் என்று இமாம் ராசி தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இந்த வசனத்தில் வரும் 'ரஃபஅ'வின் தஃப்ஸீர் குறித்து இமாம் ராசி, இது உடல் ரீதியாக வானத்திற்கு உயர்த்தப்படுவதை விட, இது அந்தஸ்த்தின் ரஃபா (rafa of rank) ஆகும் என்று கூறினார்கள்கள். இமாம் ரஸியின் தக்தீம் மற்றும் தஃகீரின் முடிவு இந்த விதியின் சொந்த அளவுகோல்களுக்கு எதிரானது இருக்கிறது. குர்ஆனின் மற்றொரு வசனம், ஒழுங்கை மாற்றுவதை தெளிவாக ஆதரித்தால் மட்டுமே இது பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார். தவாஃபா என்றால் மரணம் என்பதை அறிந்திருந்தாலும், வசனத்தின் உண்மையான அர்த்தத்தை அவர் அறிந்திருக்கவில்லை என்பதால் இது அறிஞரின் தவறான புரிதல் மட்டுமே. மேலும், நான் உன்னை வானத்திற்கு உயர்த்துவேன், பின்னர் உங்களை இந்த உலகத்திற்கு திருப்பி அனுப்புவேன் என்று அல்லாஹ் எளிதில் குறிப்பிட்டிருக்க முடியும், ஆனால் இதுபோன்ற எதுவும் குர்ஆன் அல்லது உண்மையான எந்த ஹதீஸ்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இப்போது குர்ஆன் கூறும் வரிசை என்னவென்று பார்த்தால், மரணம் முதலில் நிகழும், அதன் பிறகு ரஃபஅ ஏற்படும். இதன் பின்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதும், கடைசியாக ஈஸாவைப் பின்பற்றுபவர்களின் எதிரிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஆகும் என்று தெரியவருகிறது.

ஒருவர் இதனின் இந்த வரிசையை மாற்றுவதாக இருந்தால், பிறகு அவர் முதவஃப்ஃபீக்க எனும் சொல்லை எங்கு வைப்பார்? ரஃபஅ அதாவது உயர்த்தப்படுவதற்கும் முதஹ்ஹிருக்க அதாவது குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கும் இடையில் வைப்பாரா? இது முற்றிலும் அடிப்படையற்றது, ஏனெனில் ஈசா இறந்தாலன்றி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நடந்திருக்காது. குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கும் ஈசாவின் இயற்கையான மரணத்திற்கும் இடையில் முதவஃப்ஃபீக்க வைக்கப்பட்டால், ஈசா இறந்தாலன்றி அவரைப் பின்பற்றுபவர்கள் ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த மாட்டார்கள்! ஆக இதுவும் தவறானது. நாம் முதவஃப்ஃபீக்கவை கடைசியில் வைத்தால், இறுதி நாளுக்குப் பிறகு இயேசு இறந்துவிடுவார் என்று வசனம் கூறுவதாக ஆகும். ஆக இதுவும் சரியான வரிசையாக இருக்க முடியாது.

ஆகவே முதவஃப்ஃபீக்க என்பது உண்மையில் முதல் வாக்குறுதியாக இருந்தது என்பது உண்மை, அது நமது இறைவனால் நிறைவேற்றப்பட்டது என்பதும் உண்மை.

ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத் (அலை) கூறுகிறார்கள்:

இந்த வசனத்தில்,‘ நான் உன்னை இறக்கச் செய்வேன்’ என்பது ‘ நான் உன்னை உயர்த்துவேன்’ என்பதற்கு முன் வந்துள்ளது, இது உயர்வுக்கு முன்னர் மரணம் நிகழ்ந்தது என்பதைக் காட்டுகிறது. மேலும் ஆதாரம் என்னவென்றால், மகிமைமிக்க அல்லாஹ் கூறியிருக்கிறான்: உன் மரணத்திற்குப் பிறகு உன்னைப் பின்பற்றுபவர்களை நம்பிக்கை கொள்ளாதவர்களை விட  (அதாவது யூதர்களை) நியாயத்தீர்ப்பு நாள் வரை மேலோங்கவைப்பேன். இஸ்லாமிய வருகைக்கு முன்னர் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேற்றப்பட்டதாக அனைத்து கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒப்புக்கொள்கிறார்கள், சர்வவல்லமையுள்ள இறைவன் யூதர்களை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அடிபணியச் செய்ததோடு, அவர்கள் பல நூற்றாண்டுகளாக கீழ்ப்படிந்த நிலையில் தொடர்ந்திருக்கிறார்கள். இயேசு சொர்க்கத்திலிருந்து திரும்பியபின் இதுபோன்ற அடிபணிதல் நடக்கும் என்று இந்த வசனம் கூற முடியாது.” (இசலா-இ-ஆஹாம், ருஹானி கசேன், தொகுதி 3, பக்கம் 330, 332)

உதவியது: www.ahmadianswers.com

மொழியாக்கம்: தன்வீர் அஹ்மது | திருச்சி

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.