துஆவின் அற்புதங்கள்



அஹ்மதி முஸ்லிம்கள் இறைஅடையாளங்களை பல்வேறு வழியில் காண்கின்றனர் என்பதை அஹ்மதிய்யத்தின் கடந்த கால வரலாறு பறைசாற்றுகிறது. இதில் துஆ என்ற வழி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு அஹ்மதிகளின் துஆக்கள் நிறைவேறியதின் காரணமாக அவர்கள் அதன் வாயிலாக தமது இறைவனை கண்டு தனது ஈமானை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறார்கள். நாம் துஆக்கள் நிறைவேறிய இவ்வாறான சம்பவங்களை பல்வேறு குத்பாக்கள் மற்றும் சொற்பொழிவுகளின் வாயிலாக கேட்டு அவ்வப்போது தத்தமது ஈமானை வலுப்படுத்திக் கொண்டு வருகிறோம். 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! இன்று நான் இந்த சிறு கட்டுரையின் வாயிலாக அவ்வாறான ஈமானுக்கு வலுவூட்டக்கூடிய ஒரு சில சம்பவங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். நான் கீழே குறிப்பிடும் சம்பவங்கள் அனைத்தும் டாக்டர் மீர் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் (ரலி) அவர்கள் தமது வாழ்க்கையில் துஆ நிறைவேறிய சம்பவங்களில் ஒரு சிலவற்றை அவர்களே கூறுவதை நான் பதிவு செய்துள்ளேன்.

டாக்டர் மீர் முஹம்மத் இஸ்மாயில் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: "...இறைவனின் அருட்களின், துஆ நிறைவேறியதன் எண்ணற்ற அற்புதங்களை நான் கண்டிருக்கிறேன்.

(1) ஒருமுறை ஹஸ்ரத் மவ்லவி அப்துல் காதிர் (ரலி) அவர்களின் கண் சிகிச்சை செய்தேன். நான்காவது நாள் கட்டு அவிழ்க்கும்போது அவரின் இரண்டு கண்களிலும் உள்திரைகளில் அதிக வலியும் வீக்கமும் இருந்தது. உடனே நான் நிம்மதியிழந்து ஹஸ்ரத் சாஹிப் இடமும், எனது சகோதரியிடமும் துஆவிற்காக கூறினேன். நானும் நிறைய துஆச் செய்தேன். (விளைவாக) ஒரு வாரத்திற்குள் கண்கள் முற்றிலும் சரியாகியது. மேலும் பொதுவான விதிமுறைகளுக்கு மாற்றமாக நோயின் எந்தவொரு அறிகுறியோ, அடையாளமோ மீதமாகவில்லை. ஏனெனில் இவ்வாறான நோய் முழுமையாக குணமானதாகவும், இரு கண்கள் தப்பித்ததும் எனது அனுபவத்தில் ஒருபோதும் வந்ததில்லை மாறாக மக்களை குருடானதையே பார்த்திருக்கின்றேன்.

(2) 1905-ல் நான் பணியில் சேர்ந்தபோது மூன்று மாதம் மிகவும் கடனாளி ஆனேன். மேலும் கடுங்கஷ்டத்திலும், வேதனையிலும் - அல்லாஹ்வே என்னை ஒருபோதும் கடன் தொல்லையில் சிக்க வைக்காதே என துஆச் செய்தேன். எனவே இப்போது முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகு ஒருபோதும் எந்தவகையிலும் எனக்கு கடன் இல்லை. மேலும் கடன் பற்றி கவலையின்றி நிம்மதியாக உறங்குகிறேன் என்பதை நான் வெளிப்படுத்திக் கொள்வதில் எதுவும் தவறில்லை என கருதுகிறேன்.

நான் கவலையின்றி உறங்குவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அது ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூத் (ரலி) அவர்கள் ஒருமுறை கூறியதாகும். மனிதன் உறங்குவதற்காக படுக்கும்போது மற்றவர்களின் பிழைகளை மன்னித்துவிட்டு உறங்க வேண்டும். நான் இந்த அறிவுரையின்படி மனதளவில் மட்டுமல்ல. நாவாலும் அமல் செய்கின்றேன்.

(3) ஒரு குளிர்காலத்தில் முழு இரவும் இரயிலில் பயணிக்க வேண்டியது வந்தது. பெர்த் ரிஸர்வ் செய்ய இயலவில்லை. நான் துஆச் செய்தேன். டிக்கெட்-ஐ வாங்கினேன்; இரயிலில் ஏறிவிட்டேன். அனைத்து பயணிகளும் பெர்த்தில் இருந்தனர். ஆனால் நான் பெட்டியின் வாசலில் இறைவனின் ஃபஸலின் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தேன். இரயில் கிளம்புவதற்கு 5 நிமிடம் முன்னதாக ஒருவர் வந்தார். அவர் ஒரு பயணியை முக்கியமான வேலையொன்று மீதியுள்ளது; நாளை பயணித்து கொள் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டார். சென்றவரின் பெர்த் மேல்தளமாகும். எனக்கு மேல் Seat உகந்ததல்ல. எனவே கீழ் Seat-ஐ விரும்பினேன். இதன் பிறகு ஒரு ஆங்கிலேயர் எழுந்து நான் மேல் Seat-ல் உறங்கிக் கொள்கிறேன். எனக்கு கீழ் Seat-ல் உறங்க விருப்பமில்லை என்றார். அப்படியா என்று கூறியவாறு நான் படுக்கையை விரித்து படுத்துவிட்டேன். எனினும் தூக்கம் எங்கே (வந்தது?) இந்தச் சம்பவம் என் உள்ளத்தை எனது கருணை கொண்ட இறைவனின் அருளால் நன்றியில் முற்றிலும் உருகச் செய்தது.

(4) ஒருமுறை நான் ஷிம்லாவிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டேன். அங்கு கர்னல் ஜோட்வாயின் என்பவரின் ஏச்சுப்பேச்சு மற்றும் கடுமை காட்டுதல் எந்த அளவிற்கு பிரபலமாக இருந்ததெனில் - இறைவா! என்னை எல்லாவகையான கடுமை காட்டப்படுவதிலிருந்தும் பாதுகாப்பாயாக என நான் துஆச் செய்யலானேன். பிறகு நான் ஷிம்லா வந்தடைந்தவுடன் கர்னல் நோயுற்று ஆஸ்பத்திரியில் உள்ளார் என கேள்விப்பட்டேன். ஏறக்குறைய ஒருவாரத்திற்கு பிறகு மருத்துவ ஆலோசனையால் நீண்ட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றுவிட்டார். அவருக்குப் பகரமாக கர்னல் ஹேலேலே வந்தார். அவர் ஒரு நல்லியல்பு கொண்ட அலுவலர் ஆவார். மேலும் என்மீது பரிவு காட்டுபவராக இருந்தார்.

(5) ஒருமுறை எவ்வாறான கடினமான வேதனை மிக்க காலம் எனக்கு வந்ததெனில்-எனக்கு பண நஷ்டமும், மிகுந்த ஆரோக்கியக் குறைவும் ஏற்பட்டது. மேலும் வேலைகள் என்னை ஒடித்துவிட்டது. சிலர் ஒரு பெரிய மனிதரின் அடைக்கலத்தின் காரணத்தால்-எனது பல்வேறு பணிகளை முடக்கினார்கள். மேலும் என்போன்ற ஒரு நல்ல மனிதரை இழிவுபடுத்த பல வழிமுறைகளை மேற்கொண்டார்கள். நான் அச்சப்பட்டு துஆவும் செய்யாமலிருந்தேன். ஏனெனில் நான் இந்த வேதனையின் (காலத்தில்) ஒரு சோதனையின் வண்ணத்தை கண்டேன். இறுதியில் இறைவன் தானே எனக்காக ஒரு அஸிஸ்டெண்ட்-ஐ ஏற்படுத்தினான். அவர் எனக்கே தெரியாமல் எனது மேலதிகாரியிடம் எவ்வாறான விஷயங்களை எடுத்துரைத்தார் எனில்-மேலதிகாரி எனது செயல்களை பாராட்டினார்.

மேலும் இன்னொரு மேலதிகாரி விஷயம் தெளிவாகிவிட்டது. அவர்கள் புறம் பேசினார்கள் என்பது தெரிந்துவிட்டது என என்னிடம் கூறினார். எனவே அரசாங்கம் எனது நஷ்டங்களுக்கு இழப்பீடும், டிக்ரியும் வழங்கியது. மேலும் அவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள். பிறகு நான் விடுப்பில் காதியான் வந்தேன்.

ஒருநாள் முழு State-ம் பூகம்பத்தால் கடும் பாதிப்பிற்குள்ளானது. மேலும் எந்த பெரிய மனிதரின் ஆற்றலின் பேரில் மக்கள் குழப்பம் விளைவித்தார்களோ சற்று நேரத்திலேயே அவர் மரணித்தார். அல்லாஹ் எனக்கு மிகவும் சிறந்த இடத்திற்கு எனது விருப்பம் கேட்டு அனுப்பிவிட்டான். மேலும் அங்கு பணியை குறைத்து சம்பளம் மிகவும் அதிகரிக்கச் செய்தான். மேலும் எனக்கு அந்த இறந்தவரின் மனைவி மக்களுக்கு பரிவுடன் இலவச மருத்துவம் நீண்ட நாள் வரை செய்வதற்கான வாய்ப்பும் அளித்தான். அப்போதுதான் எனது உள்ளத்தில் அவர் மீது எந்தவகையான பகையும் இல்லை. மாறாக இறைவனின் விதி நேரடியாக இறங்கியது என்பதை நிரூபிப்பதற்காக அவ்வாறு செய்தான்.

(6) ஏறக்குறைய 1925-ல் எனது பணிமாற்றம் கோஜ்ராவிற்கு செய்யப்பட்டது. நான் மோட்டார் சைக்கிள் மற்றும் Side Car-ல் அமர்ந்தவாறு காதியானை கடந்து நதிப்பாலம் வழியே முன்னேறிச் சென்றேன். மோட்டார் சைக்கிளை வாடகை ஓட்டுனர் ஓட்டினார். நான் Side Car-ல் அமர்ந்திருந்தேன். நாங்கள் காதியானை விட்டு 18-20 மைல் கடந்தவுடன் மோட்டார் சைக்கிள் திடீரென துண்டித்து விட்டது. ஜண்டியாலா இரயில்வே ஸ்டேஷன் 5-6 மைல் தூரத்தில் இருந்தது. நான் கூறியதற்கிணங்க ஓட்டியவர் ஒரு சுமைவண்டியை கொண்டு வந்தார்.

அதில் மோட்டார் சைக்கிள் போடப்பட்டது. அது சூரியன் மறையும் நேரமாகும். காட்டுப் பாதையாகும். ஓட்டுநரும் நம்பத்தகுந்தவரல்ல. சுமை வண்டிக்காரரும் அவ்வாறே! ஆகையால் இவற்றால் எனக்கு கவலை ஏற்பட்டது. பிறகு என்னிடம் பணம் அதிகமிருந்தது. மேலும் இரவு நேரம் நடப்பதும் கடினமாகும். இறைவா! நீயே கொஞ்சம் ஏற்பாடு செய்வாயாக (என்றேன்). 

நாங்கள் மீண்டும் பயணத்தை தொடங்கவிருந்தோம். அப்போது ஹாரன் ஒலி கேட்டது. பிறகு திடீரென்று முன்னால் ஒரு கார் வந்து நின்றது. உள்ளே ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூத் (ரலி), சவுத்ரி சாஹிப் (ரலி) ஆகியோரின் முகங்கள் தென்பட்டது. இவர்கள் எவ்வாறு இங்கே? என்ற ஏமாற்றம் ஏற்பட்டது. கற்பனையா அல்லது கனவா என தோன்றியது. பிறகு அவர்கள் பேசினார்கள். அப்போது மலக்குகள் அல்ல. மனிதர்கள்தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனவே அவர்களுடன் லாஹூர் வரை வந்தடைந்தேன். 

இந்த விநோதமான மற்றும் குறிப்பிட்ட நேரத்தின் விண்ணியல் உதவியால் உள்ளம் நன்றியுணர்வின் காரணத்தால் எந்த அளவிற்கு நிரம்பி இருந்ததெனில் முழுப்பாதையும் மிகவும் கஷ்டப்பட்டு என்னை (அழாமல்) கட்டுப்படுத்தியவாறு இருந்தேன்.

சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ் எவ்வகையில் எல்லாம் அன்னாருக்கு அவர்களின் துஆவின் ஏக்கத்தை கேட்டு அவர்களின் கஷ்டங்களை அப்புறப்படுத்தியுள்ளான். இதற்கு ஒரே காரணம் அன்னார் இறைவனோடு கொண்டிருந்த அளப்பரிய நேசம் மற்றும் தொடர்பு மட்டுமே ஆகும். 

அல்லாஹ் நமக்கும் இறை நேசம் மற்றும் அவனது நெருக்கத்தை பெறுவதற்கான தௌஃபீக்கை தந்தருள்வானாக. மேலும் நாம் அந்த அன்புக்குரியவனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான தௌஃபீக்கை தந்தருள்வானாக. ஆமீன். 

- முஅல்லிம் J.J.நாஸிர் அஹ்மது | சங்கரன்கோவில்

-நன்றி மிஷ்காத் (குத்தாமுல் அஹ்மதிய்யா பாரத் மாத இதழ்)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.