நபிமார்களில் சிறந்தவரான முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் உயர்ந்த மற்றும் மேன்மையான மகிமையை வெளிப்படுத்த இறைவன் திருக்குர்ஆனில்; "இறைவன் இந்த நபியின் மீது அருள் மழை பொழிந்து கொண்டே இருக்கின்றான் மலக்குகளும் இந்த நபிக்காக பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர். எனவே நம்பிக்கை கொண்டவர்களே! இந்த நபியின் மீது எப்போதும் அருள் பொழியும் மாறும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகவும் பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள் என்ற கட்டளையிட்டுள்ளான். (அல் அஹ்ஸாப் வசனம் 57)
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"இறைவன் இவ்வாறான வசனத்தை வேறு எந்த ஒரு நபியின் மகிமைக்காக உபயோகிக்கவில்லை. அன்னார் (ஸல்) கொண்டிருந்த உண்மை மற்றும் நம்பிக்கை மேலும் இறைவன் பார்வையில் அன்னாருடைய செயல்கள் எந்த அளவிற்கு விருப்பமானதாக இருந்தது என்றால் இதற்காக இறைவன் இனிமேல் மக்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அன்னார் மீது தரூத் ஷரீஃப் ஒதட்டும் என்ற கட்டளையை பிறப்பித்துள்ளான். ( மல்ஃபூஸாத் பாகம்1 பக்கம் 37-38)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(مَنْ صَلّٰی عَلَیَّ وَاحِدًا صَلّٰی اللّٰہُ عَلَیْہِ عَشْراً (مسلم
அதாவது எவர் ஒருவர் என்மீது ஒரு முறை தரூத் ஓதுவாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகின்றான். (முஸ்னத் அஹ்மத்)
மேலும் கூறினார்கள், " எவரொருவர் என்மீது தரூத் ஓதுவாரோ அவர்மீது அல்லாஹ் தஆலா பத்து மடங்கு அருட்களை இறக்குகின்றான். (முஸ்னது அஹ்மது)
ஒருமுறை கூறினார்கள், "எவர் என் மீது அதிகமாக தரூத் ஓதுகின்றாரோ அவரே கியாமத் நாள் அன்று அனைவரையும்விட மிக அதிகமாக என் அருகில் இருப்பார். (திர்மிதி)
ஒருமுறை இவ்வாறு மாபெரும் நற்செய்தி ஒன்றை வழங்கினார்கள் அதாவது, "எவர் என் மீது சலாம் அனுப்புகின்றாரோ அவரின் சலாத்திற்கு பதில் அளிப்பதற்காக இறைவன் என் ஆன்மாவை திரும்ப தருவான். (அபூதாவூத்)
மாநபி (ஸல்) அவர்கள்மீது அனுப்பப்படுகின்ற தரூத் ஷரீஃபினால் ஏற்படுகின்ற பௌதிக மற்றும் ஆன்மீக பலன்களை குறித்து ஏனைய அறிவிப்புகளில் வருகின்றன. அதற்கான சான்றுகள்ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சஹாபாக்கள் மற்றும் முன்சென்ற சான்றோர்கள் மேலும் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) மற்றும் அன்னாரின் கலிஃபாமார்கள், அன்னாரின் சஹாபாக்களின் புத்தகங்களில் மற்றும் மேற்கூறப்பட்ட அனைத்து முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றில் கிடைக்கின்றன.
முஹம்மத் முஸ்தபா (ஸல்) போன்ற அரசர் இம்மையிலும் மறுமையிலும் இல்லை மேலும் இருக்கப் போவதுமில்லை என்று திருக்குர்ஆன் மற்றும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் அருள் நிறைந்த வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர்கள் அறிகின்றனர். மேலும் மிகுந்த கம்பீரம் உடையவர்களாக இருந்தும்கூட அன்னாரை விட தன்னலமற்ற மற்றும் பணிவான மனிதர் யாருமில்லை என்று கூறினால் அதில் எவ்வித மிகையும் இல்லை. மேலும் அரபு நாட்டின் இந்த மகத்துவமிக்க அரசனின் சபை வெளிப்படையில் மிகச் சாதாரணமாக காணப்பட்ட ஒரு மஸ்ஜிதில் கூட்டப்பட்டது. அன்னாரின் ஓய்வு படுக்கை உடம்பில் அச்சு பதிக்கின்ற பாயாக இருந்தது. செல்வம் குவியல் குவியலாக வந்தும் கூட அவர்களின் வீட்டில் அதிக பொருட்கள் இருப்பதில்லை. மேலும் அவர் மக்களினுல் எவ்வாறு அமர்ந்திருப்பார் என்றால் புதியதாக வரக்கூடிய மனிதர் சில சமயங்களில் நபி (ஸல்) யார் சஹாபாக்கள் யார் என்று வித்தியாசம் காண இயலாது.
ஆக உலக பெயர் மற்றும் புகழ் இவற்றை கைவிட்ட இந்த மனிதர் தனக்காக தரூத் வேண்டுவது மேலும் எவன் கையில் எனது உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக ஒரு நம்பிக்கையாளருக்கு அவருடைய தந்தை மற்றும் மகன் மேலும் மக்களில் அனைவரையும் விட நான் மிகுந்த விருப்பத்திற்குறியவனாக ஆகாதவரை அவர் முழுமையான மூமின் அல்ல (புகாரி ) என்ற அவர்களின் கட்டளை எந்த நோக்கத்திற்காக இருக்க முடியும்?
ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை) மற்றும் கண்ணியத்திற்குரிய கலிஃபாமார்கள் உடைய கூற்றிலிருந்து தெரியவருவது என்னவென்றால் அன்னாருடைய பேச்சு وَحْیٌ یُّوْحٰی தவிர வேறு ஒன்றும் இல்லை,
மேலும் அன்னாருக்கு;
حَرِیْصٌ عَلَیْکُمْ بِالْمُؤْمِنِیْنَ رَؤُوْفٌ رَّحِیْمٌ
(அதாவது அவர் உங்கள் நலனில் மிகுந்த ஆர்வங்கொண்டவராயும், நம்பிக்கை கொண்டவர்களை நேசிப்பவராயும், அவர்களுக்கு மிக்க கருணை காட்டுபவராயுமிருக்கின்றார். (சூரா அத்தவ்பா வசனம் 128)
என்ற பட்டம் வழங்கப்பட்டது. அன்னார் இந்த கட்டளையிலும் கூட தன்னை விட தனது உம்மத்தின் பலன்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார்கள். ஏனென்றால் எங்கு ஒரு மூமின் தரூத் ஓதுவதால் தன்னுடைய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கின்றாறோ அங்கு செயல் வடிவை மேற்கொண்டவாறு இந்த மகத்துவம் வாய்ந்த நபியின் என்றும் அழியாத அழகிய முன்மாதிரியை அமல்படுத்தியவாரே மார்க்க மற்றும் உலக முன்னேற்றம் மற்றும் ஈடேற்றத்தின் நேரான வழியில் நிலைத்து இருப்பார்.
மேலும் நபி (ஸல்)அவர்களுக்குப் பிறகு தரூத் ஷரீஃப், சலாம் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் ஆகியவற்றை நன்றாக புரிந்தவர்களாகிய, அன்னாருக்காக உயிர் தியாகம் செய்யக்கூடிய சஹாபாக்களின் செயல்களை பார்க்கும்போது, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கட்டளை ஏற்று ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் வீட்டின் அனைத்து பொருட்களையும் அர்ப்பணம் செய்த, ஹஸ்ரத் உமர்(ரலி) அவர்கள் வீட்டின் பாதி பொருட்களை அர்ப்பணம் செய்த, ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கிணற்றை விலைக்கு வாங்கி அதை முஸ்லிம்களுக்காக அர்ப்பணம் செய்த, ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் நோயுற்று இருந்தும்கூட நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்று கைபர் நோக்கி போருக்காக புறப்பட்ட காட்சிகள் தென்படுகின்றன.
ஹஸ்ரத் ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள் நான் (போர்) நிலைமை குறித்து அறிய போர்க்களம் நோக்கி சென்று கொண்டிருந்தேன் வழியில் அம்ரூ பின் ஜமூஹ் (ரலி) அவர்களின் மனைவி ஹிந்த் ஓர் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு மதீனாவை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். நான் போர்க்களத்தில் நிலைமை என்னவென்று வினவினேன். அதற்கு அந்தப் பெண்மணி அல்ஹம்துலில்லாஹ் அனைவரும் நலமாக உள்ளனர், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் நலமாக உள்ளார்கள் என்று பதில் அளித்தபோது எனது பார்வை பெண்மணியின் ஒட்டகத்தின் மீது விழுந்தது. அதில் ஏதோ கட்டப்பட்டிருந்தது. நான் கட்டப்பட்டிருப்பது என்னவென்று கேட்டேன். அந்த பெண்மணி இது என்னுடைய கணவர் அம்ரூ பின் ஜமூஹ் (ரலி), என்னுடைய சகோதரர் அப்துல்லாஹ் பின் அம்ரூ என்னுடைய மகன் கல்லாத் உடைய சடலம் ஆகும் என்று பதிலளித்தார்கள். இவ்வாறு கூறியவாறு அப்பெண்மனி மதினாவை நோக்கி புறப்பட ஆரம்பித்தாள்.
(ஹஸ்ரத் ஐந்தாவது கலிஃபத்துல் மஸிஹ் அவர்களுடைய 30 அக்டோபர் 2020 ஜும்ஆ குத்பாவில் இருந்து எடுக்கப்பட்டது)
அதாவது அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களின் நலனுக்காக கணவன், சகோதரன் மற்றும் மகனின் தியாகத்தை கூட மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை இவர்களைவிட அதிக நேசிப்பவர்களாக (அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்) கண்டார்கள்.
இன்று இஸ்லாத்தின் எதிரிகள் புறமிருந்து ரஸுலே கரீம் (ஸல்) அவர்கள்மீது தொடுக்கப்படுகின்ற இழிவான விஷயங்களுக்கு ஹஸ்ரத் அமீருல் மூமினீன் ஐந்தாவது கலீஃபத்துல் மஸிஹ் அவர்களின் சரியான பதில் என்னவென்றால், "எல்லா முஸ்லிம்களும் தரூத் ஷரீஃபின் பரகத்துகளிலிருந்து பலன் பெற வேண்டும் மேலும் நபி (ஸல்) அவர்களின் சஹாபாக்களின் வழியில் சென்று கொண்டு, எங்கு மீண்டும் மீண்டும் தரூத் ஷரீபை ஓதியவாறு தத்தமது நாவினை புத்துணர்ச்சியாக வைத்திருப்பீர்களோ அங்கு அழகிய முன்மாதிரியை பின்பற்றியவாறு, இறைவன் சன்னதியில் நற்செயல்கள், கட்டுப்படுதல், நன்றி உணர்வு மற்றும் செயல்களின் சீர்திருத்தம் இவற்றின் அன்பளிப்பை (இறைவனிடம்) வழங்குங்கள். நாம் அஹ்மதி முஸ்லிமாக இருப்பதால் நமக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால் தரூத் ஷரீஃப் அருள்களின் பலன்களை பெற நம்முன் சரியான பாதை உள்ளது.
அந்த சரியான பாதை என்ன? அல்லாஹ்வின் திருப்தியைப் பெற ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் வாக்குறுதிக்கேற்ப நிலைபெற்ற கிலாஃபத்தை பின்பற்றி, நல்ல எண்ணங்களுடன்; சொல்லிலும் செயலிலும் எல்லா வகையிலும் தன்னுடைய உயிர், பொருள், நேரம், மரியாதையை இந்த கிலாஃபத்திற்காக அர்ப்பணம் செய்து, எல்லா விஷயங்களிலும் கட்டுப்படுத்தல் மற்றும் நன்றி உணர்வில் ஒப்பற்ற முன்னுதாரணத்தை நிலைபெறச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். அவ்வளவுதான்!
நபி ஸல் அவர்களை இழிவு செய்தல் குறித்த விஷயத்தை பொருத்தவரை, இதனை பற்றி சிக்கலில் உள்ளவர்கள் இவ்விஷயத்தை குறித்து சிந்திக்க வேண்டும் அதாவது எவர்மீது ஈருலகத்தின் எஜமான் மற்றும் அவனின் மலக்குமார்கள் தரப்பிலிருந்து இரவும் பகலும் அருட்கள் இறங்கும்போது அவரை இந்த பூமியின் புழுபூச்சிகள் எவ்வாறு இழிவுபடுத்த முடியும்!
நன்றி அல்-ஃபஸ்ல் (https://www.alfazl.com/2020/11/06/24066/)
மொழியாக்கம்: முரப்பி ஜாஹிர் ஹுஸைன் ஸாஹிப் - ஈரோடு


கருத்துகள் இல்லை:
Love for All Hatred for None