தஹ்ரீக்கே ஜதீதின் முக்கியத்துவம்


(தஹ்ரீக்கே ஜதீதின் நிறுவனர் சய்யிதுனா ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்ஊது (ரலி) அவர்களின் கூற்றுக்களிலிருந்து)

தஹ்ரீக் ஜதீத் என்றால் என்ன? 

அனைத்து மக்களையும் சந்திப்பதற்கு ஆட்களின் தேவை உள்ளது, பணப் பற்றாக்குறையும் இருக்கின்றது, நமக்கு அதிகமான துஆவின் அவசியமும் உள்ளது, எது இறைவனின் அரசை உலுக்குகின்றதோ அதன் முழு வடிவ பெயர்தான் தஹ்ரீக் ஜதீத் ஆகும். (நாளிதழ் அல்ஃபஸ்ல் 2 செப்டம்பர் 1842)

தஹ்ரீக் ஜதீத் ஏன் அமல்படுத்தப்பட்டது?

1-தஹ்ரீக் ஜதீதை அமல் படுத்தியதன் நோக்கம் என்னவென்றால், இதனால் ஜமாஅத் வேலைக்கு தேவையான பொருளாதார தட்டுப்பாடு நீங்கி இறைவனின் பெயரானது உலகின் மூலைமுடுக்கெல்லாம் சுலபமாக சென்றடையக் கூடும். 

2-தஹ்ரீக் ஜதீத் அமல்படுத்த மற்றொரு காரணம் என்னவென்றால் இறைவனின் மார்க்கத்தை பரப்ப, தன்னை அர்ப்பணிப்பது மட்டுமில்லாமல் தமது ஆயுளையே இந்த நற்செயலில் ஈடுபடுத்த கூடிய சேவகர்கள் இணைய வேண்டும்.

3-தஹ்ரீக் ஜதீத் தை அமல்படுத்த மற்றொரு காரணம் என்னவென்றால் முழு செயல்பாட்டில் இருக்கக்கூடிய ஜமாஅத்தில் உள்ள அனைத்து அவசியமிகு சிறப்பம்சங்களும் நம் ஜமாஅத் உறுப்பினர்களிடமும் உருவாக வேண்டும் என்பதாகும். (அல்ஃபஸ்ல் 2 டிசம்பர் 1942) 

தஹ்ரீக் ஜதீதின் பங்களிப்பு ஏன் அவசியமானதாகும்?

எனது புரிதல் என்னவென்றால் ஒருவர் தன் உள்ளத்தில் ஒரு துளி அளவு ஈமானை வைத்திருந்தாலும் கூட எனது இந்த இயக்கத்தில்(தஹ்ரீக் ஜதீத் தில்) தாமாக முன் வருவார், யார் அல்லாஹ்வின் பிரதிநிதியின் கூற்றை செவியேற்கவில்லையோ, அவரின் ஈமான் வலுவிழக்க கூடியதாகும். (குத்பாத்தே மஹ்மூது பாகம் 15 பக்கம் 365)

தஹ்ரீக் ஜதீத் நிரந்தர இயக்கமாகும் 

தஹ்ரீக் ஜதீதின் வேலை நிரந்தரமான இயக்க வேலையாகும், இதில் பங்கேற்பவர்கள் அல்லாஹ்வின் கருணையை பெரும் பாக்கியசாலிகளாவார்கள். (அல்ஃபஸ்ல் 24 நவம்பர் 1938) 

தஹ்ரீக் ஜதீத் ஒரு தெய்வீக இயக்கமாகும் 

எனது சிந்தனையில் இந்த இயக்கம் சம்பந்தமாக எதுவும் இல்லாமல் இருந்தது. திடீரென இறைவன் புறமிருந்து இந்த இயக்கம் தொடர்பாக என் மனதில் போடப்பட்டது. எவ்வித தவறான கூற்றையும் கூறவில்லை, மெய் என்னவென்றால் தஹ்ரீக் ஜதீத் இயக்கம் இறைவனால் செயல்படுத்தப்பட்ட இயக்கமாகும். மீண்டும் தெரிவிக்கின்றேன் இதுதொடர்பாக எந்த யோசனையும் இல்லாமல் இருந்தேன், திடீரென இறைவன் இந்த ஸ்கீம் தொடர்பாக என் மனதில் உதிக்க செய்தான். மேலும் நான் இதனை ஜமாஅத்தில் தெரியப்படுத்தி விட்டேன். ஆக இது நான் உருவாக்கிய இயக்கம் அல்ல மாறாக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும். (அல்ஃபஸ்ல் 2 நவம்பர் 1942)

மேலும் கூறுகின்றார்கள்:

இது அவனது பணியாகும் என்று இத்திட்டம் முழுமை அடைவதற்கான பாரத்தை நான் இறைவன் மீது இறக்கி வைத்து விட்டேன். மேலும் நான் இதனின் சாதாரண தொண்டனாவேன். வார்த்தை என்னுடையதாக இருந்தாலும், இதற்கான கட்டளை இறைவனிடமிருந்து வந்ததாகும். (அல்ஃபஸ்ல் 19 நவம்பர் 1935)

தஹ்ரீக் ஜதீத் வேலைகளின் மறுபரிசீலனை மற்றும் குத்பா கொடுப்பதற்கான வலியுறுத்தல்:

அல்லாஹ்விடம் இருந்து இது( தஹ்ரீக் ஜதீத்) தொடர்பாக என் மனதில்  போடப்பட்ட விஷயங்கள் நான் முன்பே கூறியது போன்று தஹ்ரீக் ஜதீத் இயக்க விஷயங்களை மக்களின் முன்பு எந்த அளவு கொண்டு செல்ல வேண்டும் என்றால், நீங்கள் எடுக்கும் முயற்சிகளின் பலனாக இறைவன் அதில் வெற்றியை வாரி வழங்கிட ஒவ்வொரு ஆறு மாதமும் இதை மீண்டும் மீண்டும் செயல்படுத்த வேண்டும். (அல்ஃபஸ்ல் 12 ஜூன் 1935)

தஹ்ரீக் ஜதீத் தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

தஃலீம் (ஆன்மீக மற்றும் பௌதீகக் கல்வி) மற்றும் தர்பியத் இவ்விரண்டும் மிக முக்கிய பணிகள் ஆகும். இவ்விரு பணிகளை தஹ்ரீக்கே ஜதீதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  தஃலீம் மற்றும் தர்பிய்யத்தை கவனத்தில் வைத்தவாறு, சாதாரண உணவு உண்ணுதல், எளிமையான உடைகள் உடுத்தல், (சிறு தொழில்) கைத்தொழிலை மேற்கொள்ளுதல், சினிமாவை ஒதுக்குதல், ஏழை மற்றும் எளியவர்களுக்கு உதவுதல் , போர்டிங் தஹ்ரீக்கே ஜதீத் முதலிய வேலை பாட்டினை குறித்து ஆலோசனை செய்துள்ளது. இவை அனைத்து விஷயங்களும் எப்பொழுதும் புறக்கணிக்கப்படாத விஷயங்கள் ஆகும்.(அல்ஃபஸ்ல் 24 நவம்பர் 1938)

தஹ்ரீக் ஜதீத் கோரிக்கைகளின் சுருக்கம்:

(தஹ்ரீக் ஜதீத்) இதன் கோரிக்கைகளின் சுருக்கம் நான்கு விஷயங்கள் ஆகும். 

1- ஜமாஅத் நபர்களிடம் (தஹ்ரீக் ஜதீத்) இதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த, முக்கியமாக இளைஞர்களிடம் உருவாக்குவதும் அதற்காக உற்சாகமூட்டுவதும் ஆகும். 

2- ஜமாத்தின் வேலைகளின் அடிப்படை, பொருளாதார சுமைகள் மீது அல்லாமல், அவரவர் தனிப்பட்ட தியாகங்கள் மீது அதிகம் வைக்க வேண்டும். 

3- ஜமாத்தில் தஹ்ரீக்கே ஜதீத் ஃபன்டை (fond) நிறுவி, அதன் மூலமாக (தப்லீக்) செயல்பாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் தடுப்பது.

4- ஜமாத்தை தப்லீக்கின் பக்கம் முன்பைவிட அதிகமாக கவனம் செலுத்த செய்வது.

 (ரிப்போர்ட் மஜ்லிஸே முஷாவிரத், ஏப்ரல் 1939 பக்கம் 2,3)

மேலும் கூறுகின்றார்கள்: 

தஹ்ரீக் ஜதீத்தின் அனைத்து கோரிக்கைகள் ஏன் என்றால், நீங்கள் அல்லாஹ்வின் பண்புகள் (உங்கள் மூலமாக) வெளிப்படுபவர்களாக இருக்க வேண்டும். 

எவரும் அறிவாளியை ஏமாற்ற முடியாது, பின்பு நீங்கள் எவ்வாறு இறைவனுக்கு ஏமாற்றி விடலாம் என நினைக்க முடியும்?  (கூற வருவது (பழமொழி) தியானம் இல்லாமல் தரிசனம் இருக்காது. ஆக இறை நெருக்கம் பெற தியாகங்கள் அவசியமாகும்.) 

இந்த உணர்வை அடிப்படையாக வைத்துதான் நான் தஹ்ரீக்கே ஜதீதை துவக்கி வைத்தேன். (அல்ஃபஸ்ல் 4 டிசம்பர் 1937)

அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கடமை: 

மேற்கூறப்பட்ட அனைத்து விஷயங்களையும் நீங்கள் நிற்கும் பொழுதும் சரி, நடக்கும் பொழுதும் சரி, அமர்ந்து இருக்கும் போதும் சரி, விழித்திருக்கும் போதும் சரி எல்லா நேரமும் எல்லாக் கணமும் உங்கள் மனைவியிடமும், குழந்தைகளிடமும், உறவினர்களிடமும், தோழர்களிடமும் அவர்கள் செவியில் போட வேண்டிய விஷயமாகும்.

பின்பு  இவர்களிடம் இது இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅத் ஆகும், மேலும் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅத் சில பல கஷ்டங்களை எதிர் கொள்ளாமல் வெற்றிக்கனியை நிச்சயமாக சுவைக்க முடியாது என்று கூறி அவர்களை இவ்வழியில் நிலைபெறச் செய்ய வேண்டும்.

இந்தக் கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறுங்கள், கூறிக் கொண்டே இருங்கள்.... எந்த அளவிற்கு என்றால் அது உங்களின் பழக்கம் மற்றும் வழக்கமாக ஆகிவிட வேண்டும்.

அஹ்மதியா ஜமாத்திற்கான வெற்றியின் மூலக்கூறு என்னவென்று ஒரு சிறுவனிடம் கேட்டாலும்  அவன், 'நாம் நமது தியாகம் மற்றும் தமது ஆத்மாவை அர்ப்பணிக்கும் பட்சத்தில் வெற்றியை பெற முடியாது மேலும் எத்தருணமும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூற வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களிடம் கேட்டாலும் இதுவே அவர்களின் பதிலாக இருக்க வேண்டும். ஆக அனைவரிடத்திலும் இவ்வாறான சிந்தனையை அவர்களின் மனதில் ஏற்படுத்த வேண்டும். மேலும் தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் செய்வது பெரும் சிரமம் கிடையாது என்ற விஷயத்தை கூறுவதுடன் அதற்கேற்ப சூழ்நிலையையும், சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.(ரிப்போர்ட் மஜ்லிஸ் முஷாவிரத் 1938 பக்கம் 137)

தஹ்ரீக் ஜதீத் பொறுப்பாளர்கள்: 

இறைப்பணிகள், பிரசிடன்ட் (president) அல்லது செக்ரட்டரி (secretary)இவர்களை சார்ந்து அல்ல. மேலும் அல்லாஹ் இறுதி நாளன்று இறைவன் எந்த ஜமாஅத்திடமும், 'உங்களது பிரசிடென்ட் (president)அல்லது செக்ரட்டரி (secretary)எவ்வாறு நடந்து கொண்டார் என்று ஒருபோதும் கேட்கப் போவதில்லை, மாறாக (ஜமாஅத் உறுப்பினர்களிடம்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள் என்று தான் கேட்பான். எவ்விடத்திலாவது, பிரசிடென்ட் (president) மற்றும் செக்ரட்டரி (secretary)சோம்பலாக இருந்தால், அவர்களின் சோம்பலின் விளைவாக ஜமாஅத்தின் உறுப்பினர்களும் இவ்வியக்கத்தில் பங்கேற்காமல் பின் தங்கிவிட்டால் இறைவன் ஒருபோதும் அவர்களை மன்னிக்க மாட்டான். மாறாக அவன் கூறுவான் உங்களில் ஒவ்வொருவரும் பிரசிடென்ட் (president) மற்றும் செக்ரட்டரி (secretary) யாகத்தான் இருந்தீர்கள். உங்கள் கடமை என்னவாக இருந்தது என்றால் ஒரு பிரசிடென்ட் (president) அல்லது செக்ரட்டரி (secretary) சோம்பலாக இருந்தார்கள் என்றால் அந்த இடத்தை நீங்கள் பூர்த்தி செய்து அந்த வேலையை நீங்கள் நிறைவேற்றி இருக்கலாமே. 

எந்த ஜமாஅத்தும் நாம் இந்த தஹ்ரீக் ஜதீத் இயக்கத்தில் இணைந்து விட்டோம் என்று கூறி திருப்தி அடைந்து விடாதீர்கள், மாறாக ஜமாஅத்தில் அனைவரும் இதில் (தஹ்ரீக் ஜதீத்) பங்குபெறும் அந்த தருணம் வரை நிம்மதி பெருமூச்சு விடக்கூடாது.

(அல்ஃபஸ்ல் நாளிதழ் 16 நவம்பர் 2007 பக்கம் 5 லிருந்து எடுக்கப்பட்டது)

ஆக்கம் : மதிப்பிற்குரிய மாலிக் முனவ்வர் அஹ்மது சாஹிப் ஜாவீத்)

மொழியாக்கம் : முரப்பி அப்துல் மவ்லானா சாஹிப்


கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.