கிலாஃபத் அஹ்மதிகளின் மீது ஏற்படுத்திய அன்பின் தாக்கம்


ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் ஓரிடத்தில் கூறுகிறார்கள்:

நான் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன். அவன் எனக்கு ஒரு கலப்பற்ற நன்றியுணர்வு மிக்க ஜமாஅத்தை வழங்கினான். நான் பார்க்கிறேன். நான் என்ன நோக்கம் அல்லது பணிக்கு அவர்களை அழைக்கிறேனோ அதற்கு அவர்கள் மிகவும் விரைவாகவும் அழுத்தமாகவும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு தமது ஆற்றல் தகுதிக்கு ஏற்ப முன்னால் வருகின்றனர். மேலும் நான் பார்க்கிறேன். அம்மக்களிடம் ஓர் உண்மையும் கலப்பற்றத்தன்மையும் இருக்கின்றது. (மல்ஃபூஸாத் தொகுதி 1 பக்கம் 336)

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் மக்களிடம் ஓர் உண்மை மற்றும் பற்றுணர்வைக் கண்டார்கள்.

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய சஹாபாக்களின் எண்ணற்ற சம்பவங்கள் உள்ளன. பழைய அஹ்மதி குடும்பங்களில் இந்த தொடர்பின் நடைமுறை தொடர்கிறது. அவர்களது படைப்புகளிலும் கலீஃபாக்களின் எழுத்துக்களிலும் இருந்து அதனை அறிய முடிகிறது. ஆனால் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடன் இருந்த இந்தத் தொடர்பு அந்தக் குடும்பங்களில் தொடர்ந்தது போன்று புதிதாக சேர்ந்தவர்களிடமும் இருக்கிறது; இருக்கவும் வேண்டும். இந்தத் தொடர்பு அந்த அளவில் நின்று விடவில்லை. மாறாக ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களிடம் இறைவன் தந்த வாக்குறுதிக்கேற்ப அதன் பின்னால் உள்ள தொடரிலும் அதேபோன்ற தொடர்பு தொடர்கிறது. அந்தத் தொடர்பே ஜமாஅத்தின் ஒருமைப்பாட்டின் அடையாளமும் உத்திரவாதமும் ஆகும்.

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து செய்தியைப் பெற்ற பிறகு தாம் விடைபெறப் போகும் செய்தியை ஜமாஅத்திற்குக் கூறினார்கள். அத்துடன் ஜமாஅத்தின் ஆறுதலுக்காக அல்லாஹ்விடமிருந்து செய்தியைப் பெற்று ஜமாஅத்தில் கிலாஃபத் தொடர் தொடரும் என்றும் நற்செய்தி வழங்கினார்கள்.  

இந்த வகையில் அன்னார் கூறினார்கள்: ரிஸாலா அல் வஸிய்யத்தில் (உயில் என்ற நூலில்) எழுதியுள்ளார்கள். நீங்கள் நான் கூறுவதைக் கேட்டு கவலைப்பட வேண்டாம். உள்ளத்தில் சங்கடம் கொள்ள வேண்டாம். ஏனெனில் நீங்கள் இரண்டாவது வல்லமையைக் காண்பதும் அவசியமாகும்.  அது வருவது உங்களுக்கு சிறந்ததாகும். ஏனெனில் அது நிரந்தரமானது. அந்தத் தொடர் மறுமை வரை முறியாது. நான் செல்லாத வரை அந்த இரண்டாவது வல்லமை வராது. நான் சென்றால் இறைவன் அந்த இரண்டாவது வல்லமையை உங்களுக்காக அனுப்புவான். இறைவன் பராஹீனே அஹ்மதிய்யாவில் வாக்களித்ததுபோன்று அது எப்போதும் உங்களுடன் இருக்கும். அந்த வாக்குறுதி எனக்காக வழங்கப்பட்டதில்லை. மாறாக உங்களுக்காக வழங்கப்பட்டதாகும்.

(ரிஸாலா அல் வஸிய்யத், ரூஹானீ கஸாயின் தொகுதி 20 பக்கம் 305,306)

இறைவன் கூறியதுபோன்று நான் இந்த ஜமாஅத்திற்கு உம்மைப் பின்பற்றுபவருக்கு கியாமத் வரை பிறர் மீது மேலோங்குதலை வழங்குவேன் என்ற அல்லாஹ்வின் இந்த வாக்குறுதிக்கேற்ப அன்னாரின் வஃபாத்திற்குப் பிறகு கிலாஃபத் அமைப்பு தொடர்ந்தது. வெறுமனே அமைப்பு தொடர்வது மட்டுமே எந்த உண்மைத்தன்மையையும் கொண்டு வராது.  காலத்தின் கலீஃபா மற்றும் ஜமாஅத் மக்கள் இரு தரப்புக்கும் பற்று நேசத்தின் தொடர்பு மற்றும் அன்பு நேசத்தின் தொடர்பு இல்லாத வரை அதில் உண்மை இருக்காது. இந்த தொடர்பை அல்லாஹ்வே உருவாக்க முடியும். எந்த மனித முயற்சியும் இந்தத் தொடர்பை உருவாக்கவும் முடியாது. நிலைநாட்டவும் முடியாது. ஜமாஅத்தின் ஒருமைப்பாடு ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு இதுவே அடிப்படையாகும்.

இதுவே அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியதற்கும், ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடன் அல்லாஹ்வின் உதவி ஒத்தாசை இருப்பதற்கும், அஹ்மதிய்யா இயக்கத்தின் உண்மைக்கும் ஆதாரமாகும். கிலாஃபத்துடன் அஹ்மதிய்யா ஜமாஅத் மக்களின் தொடர்பைப் பொருத்தமட்டில் அதில் பழைய அஹ்மதியாயினும், புதிய அஹ்மதியாயினும் இளைஞர்களாயினும் சிறுவர்களாயினும் ஆண்களாயினும் பெண்களாயினும் தூரப் பகுதியில் உள்ளவர்களாயினும் அவர்கள் காலத்தின் கலீஃபாவைப் பார்த்தது கூட இல்லை என்றபோதிலும் அனைவரும் அடங்குவர்.

ஆனால் இவர்கள் அனைவரும் தமது பற்று நேசத்தில் அதிகமாகி உள்ளனர். அதிகமாகவே முயற்சியும் செய்கின்றனர். காலத்தின் கலீஃபாவின் தூதுச் செய்தி கிடைத்தால் அதன்படி செயல்பட முயற்சி செய்கின்றனர். அன்புத் தொடர்பின் வெளிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்துவதைப் பார்க்கும்போது வியப்பு ஏற்படுகிறது. இந்த அனைத்து விஷயங்களும் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியதன் செயல் சாட்சியங்கள் ஆகும்.

நான் ஏற்கனவே கூறியதுபோன்று ஜமாஅத்தின் முன்னேற்றமும் இதனுடன் தொடர்புடையதாகும். ஜமாஅத்திற்கு கிலாஃபத்துடன் தொடர்பு இருக்கிறது. காலத்தின் கலீஃபாவுக்கு ஜமாஅத்துடன் தொடர்பு உள்ளது. இது அல்லாஹ்வின் உதவி ஒத்தாசையின் மூலம் நிரூபணமாகும். இது வெறும் பேச்சல்ல. மாறாக ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான சம்பவங்கள் உள்ளன. ஜமாஅத் மக்கள் இதனை வெளிப்படுத்துகிறார்கள். அந்த சம்பவங்களை ஒன்றுகூட்டினால் பெரும் கனத்த தொகுப்புகளாக மாறி விடும்.

எவ்வாறிருப்பினும் நான் சில சம்பவங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள் குறித்து கூறுவேன். ஜமாஅத்திற்கு காலத்தின் கலீஃபாவுடன் எப்போதும் அவை இருந்து வந்துள்ளன. இப்போதும் இருக்கின்றன. ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களது வஃபாத்திற்குப் பிறகு ஆரம்பித்து இப்போது வரை 112 வருடங்கள் ஆன பிறகும் அதேபோன்று தொடர்கிறது. ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் வஃபாத் ஆன பிறகு ஜமாஅத் முடிந்து விடும் என்று எதிரிகள் நினைத்தனர். ஆனால் ஜமாஅத் மக்களின் நட்பு, பிணைப்பு, பற்று, நேசத் தொடர்பு கிலாஃபத்துடனும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடனும் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது. இது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முன்னறிவிப்பிற்கேற்ப இருக்கிறது என்று ஏன் இருக்கக்கூடாது? எவ்வாறிருப்பினும் நான் சில சம்பவங்களை எடுத்து வைக்கிறேன்.

ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்களிடமிருந்து தொடங்குகிறேன். அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்களை முதலில் தொடங்குகிறேன்.  அல் பத்ர் பத்திரிகையின் ஆசிரியர் ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் உடல்நலமற்ற காலத்தின் சம்பவங்களைக் கூறுகிறார்கள். அந்த நாட்களில் குத்தாமின் கடிதம் அதிகமாக வந்தன. அந்தக் கடிதம் குறித்து முதல் கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள்,  என்னை உடல்நலம் விசாரித்து கடிதம் எழுதிய அவர்கள் அனைவருக்காகவும் நான் துஆ செய்கிறேன் என்று கூறினார்கள்.

ஆசிரியர் சாஹிப் எழுதுகிறார்: அவர்கள் மிகவும் வியக்கத்தக்க முறையில் தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதில் ஒரு சில கடிதங்களை முன்மாதிரியாக எடுத்து வைக்கிறேன். ஹகீம் முஹம்மது ஹுஸைன் சாஹிப் குறைசி எழுதுகிறார்கள். ஒருநாள் இறைவனிடம், என் எஜமானனே! ஹஸ்ரத் (அலை) அவர்களுடைய வாழ்வு ஒரு குறிப்பிட்ட பகுதியுடன் தொடர்புடையது. அப்போதுள்ள தேவையை நீயே அறிந்தவன். நீ எமது துஆவை ஏற்றுக் கொள். எங்கள் இமாமுக்கு நூஹ் போன்று வாழ்நாளை வழங்குவாயாக என்று கேட்டேன்.

பிறகு பிராதர் முஹம்மது ஹஸன் சாஹிப் பஞ்சாபி மத்ரஸாவிலிருந்து எழுதுகிறார்: ஹஸ்ரத் சாஹிபின் உடல்நிலை சரியாகி விட்டது என்று கேள்விப்பட்டு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது என்பதை எஜமானனும் சிறந்தவனும் ஆகிய இறைவனே நன்கு அறிந்தவன்.

(அல்பத்ர் 16 பிப்ரவரி 1911, பக்கம் 2 தொகுதி 10 இதழ் 16)

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் சாஹிப் எழுதுகிறார்: அன்பு ஒரு வியத்தகு ஒன்றாகும். நமது நண்பர் மியான் முஹம்மது பக்ஷ் சாஹிப் ஆஸ்திரேலிய நாட்டில் வணிகம் செய்கிறார். அவர் தனது கடிதத்தில் எழுதுகிறார். நீங்கள் காதியானிலிருந்து வரும் பத்திரிகையில் ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் அவர்களின் கூற்றை செந்நிற எழுத்துக்களில் எழுதுவது போன்று அன்னாரது வார்த்தைகளை மட்டுமின்றி அன்னாரின் உடல்நிலை குறித்தும் செந்நிற எழுத்துக்களிலேயே அந்த வார்த்தைகளே சுட்டிக் காட்டுவதாக அமைந்தால் நலம். பத்ர் பத்திரிகையைத் திறக்கும்போது எங்களது பார்வை எங்கு செல்கிறது எனில் சிவப்பு எழுத்துக்களின் பக்கமே செல்கிறது. எனவே சிவப்பு எழுத்துக்களில் அன்னாரின் உடல்நிலை குறித்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று உள்ளம் விரும்புகிறது. நாம் இந்த கண்ணியத்திற்குரிய நண்பரின் பற்றைக் கருத்தில் கொண்டு அன்னாரின் விருப்பத்திற்கேற்ப சிவப்பு எழுத்தில் தருகிறேன்.

(அல்பத்ர் 16 பிப்ரவரி 1911, பக்கம் 1 தொகுதி 10 இதழ் 22,23)

பிறகு கேவோ பாஜோவைச் சார்ந்த ஹஸ்ரத் அபூ அப்துல்லாஹ் சாஹிப் அவர்கள் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய ஒரு சஹாபி ஆவார். ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது முதலாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களிடம், எனக்கு ஏதாவது போதனை செய்யுங்கள் என்று கூறினார்கள். அதற்கு முதலாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள், ஏதாவதொரு பணி செய்ய வேண்டியதிருந்து அதை நீங்கள் செய்து முடிக்காமல் இருக்க மாட்டீர்கள் என்று நான் எண்ணுகிறேன் என்று கூறினார்கள். அதற்கு அவர், மவ்லவி சாஹிப்! இப்போது குர்ஆன் மனனம் செய்யும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது என்றார்கள். பிறகு அவர்கள்ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்களின் கூற்றைக்கேட்டு தமது 65 வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்யத் தொடங்கினார்கள். அத்தனை வயதிலும் திருக்குர்ஆனை மனனம் செய்து விட்டார்கள்.

(ரோஸ்நாமா அல்ஃபஸல் 8 டிசம்பர் 2010 பக்கம் 4)

அதாவது ஹஸ்ரத் கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் கட்டளைகளை பின்பற்றி அதன்படி செயல்பட வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் இருந்தது.

ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் காலத்தில் 'சுத்தி இயக்கம்' மேலோங்கியது. அதனைப் பார்த்து ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் உள்ளம் கஷ்டப்பட்டது. 9 மார்ச் 1923 -ல் மல்கானா என்ற பகுதியில் ஆரம்பமானது. அதே வருடம் 9 மார்ச் ஜுமுஆவில் அன்னார் அஹ்மதிகள் தத்தமது செலவில் அப்பகுதிக்குச் சென்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்குமாறு கூறினார்கள். அந்த மார்க்கத்தை விட்டு விலகிச் சென்றவர்களை ஜமாஅத்தின் பக்கம் அழைக்குமாறு கூறினார்கள். இந்த திட்டத்திற்கு ஜமாஅத் செவிமடுத்து பதில் கூறியது. மிகவும் கல்வி கற்றவர்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள் அப்பகுதிக்குச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தனர். அவர்களின் முயற்சியால் ஆயிரக்கணக்கானோர் ஒரே இறைவனின் கலீமாவைக் கூறினர்.

ஒரு வயது முதிர்ந்த மனிதராகிய காரி நிஃமுத்தீன் சாஹிப் பங்காளி ஒருநாள் கலீஃபத்துல் மஸீஹ் அவர்களைச் சந்தித்தார். அனுமதி பெற்று கூறினார். எனது மகன் மவ்லவி ஹில்லுர் ரஹ்மான் மற்றும் பி.ஏ-வுக்கு பாடம் நடத்துகிற ஃபதீவுர்ரஹ்மான் ஆகியோர் என்னிடம் கூறாவிட்டாலும் நான் யூகித்தேன். ஹுஸூர் ஜோகல் ராஜ்புத்தானா சென்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக் கூறியுள்ளார்கள். அவர்கள் அங்கு தங்குவதற்கு தாங்கள் கட்டளையிட்டால் அவர்கள் தம்மை ஹுஸூரிடம் அர்ப்பணித்து விட்டால் நான் அவர்களின் வயது முதிர்ந்த தகப்பனாக இருப்பதால் கஷ்டமாக இருக்குமோ என்று அவர்கள் கருதினால் நான் இறைவனை சாட்சியாக்கிக் கூறுகிறேன்.எனக்கு அவர்கள் செல்வதினால் எனக்கு சிறிதளவும் கஷ்டம் இல்லை.

நான் தெளிவாகவே கூறுகிறேன். இருவரும் இறை வழியில் பணி செய்து மரணித்து விட்டாலும் கூட நான் சிறிதும் கண்ணீர் விடமாட்டேன். மாறாக, இறைவனுக்கு நன்றியே தெரிவிப்பேன். எனது மூன்றாவது மகன் மஹ்பூப் ரஹ்மான் மார்க்கச் சேவையில் கொல்லப்பட்டாலும் மேலும் பத்து மகன்கள் இருந்து அனைவரும் கொல்லப்பட்டதும் நான் கவலைப்பட மாட்டேன். இதனைக் கேட்டு ஹுஸூருடன் இருந்தவர்களும் ஜஸாக்கல்லாஹ் கூறினார்.

(அல் ஃபஸல் 15 மார்ச் 1923 பக்கம் 11)

1924 -ல் ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் ஐரோப்பா சென்றபோது அது ஒரு தற்காலிக பிரிவாகவே இருந்தபோதிலும் ஜமாஅத் மக்களுக்கு அது நிம்மதி குலைவை ஏற்படுத்தியது. ஓர் அறிவிப்பிலிருந்து அதனை அறிய முடிகிறது. பாபு சிராஜுத்தீன் சாஹிப் ஸ்டேஷன் மாஸ்டர் எழுதுகிறார்: எனது எஜமானரே! நாங்கள் தூரத்தில் இருக்கிறோம். நிர்பந்தத்தில் இருக்கிறோம். எங்களுக்கு முடிந்தால் ஹுஸூர் காலின் கீழுள்ள மண்ணாகி இருப்போம். அதன் மூலம் பிரிவை மேற்கொள்ள வேண்டியிராது.

எஜமானரே! நான் நான்கு வருடம் தாருல் அமான் செல்லவில்லை. ஆனால் உள்ளத்தில் விரும்பினால் ஹுஸூரின் பாதத்தை முத்தமிட முடியும் என்ற ஓர் ஆறுதல் உண்டு. ஆனால் இந்தப் பிரிவு எங்களுக்கு கஷ்டமாக உள்ளது. ஹுஸூர்! நல்ல நலத்துடன் விரைவில் ஊர் திரும்பி வரவேண்டும்.

(சுவானிஹ் ஃபஸ்லே உமர் தொகுதி 5 பக்க;ம் 475)

இந்த அன்பை யார் உருவாக்கினார்கள்? ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் கூறுகிறார்கள்: இளைஞர்கள் கடந்த வருடம் எனது திட்டத்தை கேள்விப்பட்டதில் சர்கோதா மாவட்டத்தின் சனாபா பகுதியிலிருந்து ஓர் இளைஞர் பாஸ்போர்ட் இல்லாமலேயே ஆப்கானிஸ்தானுனக்கு போய் சேர்ந்து விட்டார்.

காலத்தின் கலீஃபாவின் வழிகாட்டல் எனில் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று கருதினார். திட்டம் தப்லீக் குறித்து இருந்தது. கேட்டதும் உடனே புறப்பட்டு ஆப்கானிஸ்தான் சென்று சேர்ந்தார். தப்லீகை தொடங்கினார். பாஸ்போர்ட் அவரிடம் உடன் இல்லை. அரசு அவரைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டது. அங்கும் கைதிகளிடமும் ஆபீஸர்களிடமும் தப்லீக் செய்தார். அங்குள்ள அஹ்மதிகளுக்கும் அது தெரிய வந்தது. சிறையில் சிலர் மீது தாக்கம் ஏற்பட்டது என்று சிறையிலுள்ளவர்கள் மேல் மட்டத்தில் தகவல் தந்தனர். முல்லாக்கள் கொலை தண்டனை தருமாறு கூறினர். ஆனால் அமைச்சர் கூறினார். இவர் ஆங்கிலேயே நாட்டைச் சார்ந்தவர். அவரைக் கொல்ல முடியாது. பிறகு அரசு அவரைப் பிடித்து பாதுகாப்பாக இந்தியாவில் கொண்டு வந்து விட்டு விட்டது.

ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் கூறுகிறார்கள்: அவர் பல மாதங்களுக்குப் பிறகு திரும்பி வந்தார். அவரது தைரியத்தின் நிலை இவ்வாறிருந்தது. அவரிடம் நான்  கூறினேன். நீர் தவறு செய்துள்ளீர். பல நாடுகள் உள்ளன. அங்கு சென்று சிறை செல்லாமல் தப்லீக் செய்ய முடியுமே? என்றதும் அவர் உடனே கூறினார். எந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினால் நான் அங்கு செல்லத் தயாராக உள்ளேன். இந்த இளைஞரின் தாயார் உயிருடன் இருந்தார். தாயாரை சந்திக்காமலேயே வேறு நாட்டுக்குப் போகவும் தயாராக இருந்தார். நான் கூறியதற்கிணங்க தாயாரைச் சந்திக்கச் செல்கிறார்.

ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் கூறுகிறார்கள்: ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பி வந்த இளைஞரைப்போன்று மற்ற இளைஞரும் துணிந்தால் உலகையே புரட்டிப் போட்டு விடலாம்.

(தாரீகே அஹ்மதிய்யத் தொகுதி 8 பக்கம் 44)

சிரியாவிலிருந்து ஒரு நண்பர் முஹம்மது அஷீயா சாஹிப் என்பவர் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) சிரியா சென்றபோது அன்னாருடன் சேர்ந்து லெபனான் செல்லும் வாய்ப்புப் பெற்றார். சிறந்த வக்கீலாக இருந்தார். கிலாஃபத்துடன் சிறந்த ஆழிய தொடர்புள்ளவர். வக்கீலாக இருந்ததால் ஒவ்வொரு காரியத்தையும் ஆதாரத்துடன் செய்ய விரும்புவார். அவரிடம் காலத்தின் கலீஃபா இவ்வாறு கூறினார்கள் என்று கூறினால், கட்டளையிடப்பட்டால் அதுவே தீர்ப்பு என்று கூறுவார். இதுவே இம்மக்களின் தொடர்பாகும்.

(குத்பா ஜுமுஆ 23 அக்டோபர் 2009 & குத்பாத்தே மஸ்ரூர் தொகுதி 7 பக்கம் 503,504)

ஹஸ்ரத் மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் காலம் வந்தது. ஓர் அஹ்மதிப் பெண்மணி இருந்தார். அவர் ஸிஸ்டர் நயீமா லதீஃப் காலத்தின் கலீஃபா மீது அளவு கடந்த அன்பு இருந்தது. காலத்தின் கலீஃபாவுக்கு முதன்மை தருபவராக இருந்தார். மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் அமெரிக்கா சென்றபோது ஒரு பல்கலைக்கழகத்தில் பர்தாவின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தினார்கள். மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களின் உரையைக் கேட்டு உடனே திரையை இட்டுக் கொண்டார்.  அக்காலத்தில் அப்பகுதியில் இஸ்லாமிய பர்தாவில் தென்படக்கூடிய ஒரே நபராக அவர்  இருந்தார்.

(குத்பாத்தே மஸ்ரூர் தொகுதி 12 பக்கம் 605 & குத்பா ஜுமுஆ 3 அக்டோபர் 2014)

இது காலத்தின் கலீஃபாவின் கட்டளையாகும். மேலும் அன்னாருடன் இருக்கின்ற தொடர்பை பேண வேண்டும். மேலும் நான் பைஅத் செய்துள்ளேன். எனவே கட்டளைகளை முழுமைப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு அவர்களிடம் இருந்தது.

நஸீர் அஹ்மது சாஹிப் ஒரு சம்பவம் கூறுகிறார்: மெஹர் முக்தார் அஹ்மது என்ற ஒரு தூய அஹ்மதி பாக்கு சர்சானாவைச் சார்ந்தவர். இவரது சம்பவத்தைப் பற்றிக் கூறப்படுகிறது. 1974 -ன் சம்பவத்தில் எதிரிகள் வாழ்வை மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகினர். அவர் ஒரு துடிப்புள்ள தாயி இலல்லாஹ் (அல்லாஹ்வின் வழி அழைப்பாளர்) ஆக இருந்ததால் அவரை கடுமையாக எதிர்த்தனர். முழுமையாக உறவைத் துண்டித்தனர். இதனால் அவரது ஈமான் முன்பை விட அதிகமாகி விட்டது. தமது வட்டத்தை இன்னும் அதிகமாக்கினார். எதிரிகளும் தமது பணிகளை விரைவுபடுத்தினார்.

எதிரிகளின் நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கின. அவர் தமது குழந்தைகளின் கல்வி தூய பகுதியில் தொடர வேண்டும் என்பதற்காக தமது நிலத்தை விற்று விட்டு ரப்வா அருகில் ஓரிடம் வாங்கி விவசாயம் தொடங்கினார். ஹஸ்ரத் மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் அவர்களைச் சந்தித்தபோது பாக்குசர்கானாவிலுள்ள இடத்தை விற்று விட்டு ரப்வா  அருகில் ஓரிடம் வாங்கி பயிர் செய்யப் போகிறேன் என்று சொன்னதும் ஹுஸூர் அதனை விரும்பவில்லை. அந்தப் பகுதியை விட்டு நீர் காலி செய்து இருக்கக் கூடாது என்றார்கள். அவர் உடனே அதனை செயல்படுத்தினார்.

அவர் குத்தகை எடுத்த இடத்தில் தொகையைத் திரும்பக் கேட்டார். அவர் மறுத்தவுடன் குத்தகை தொகையைத் திரும்பப் பெறாமலேயே தமது ஊரான பாக்கு சர்கானா சென்று தாம் விற்ற நிலத்தை திரும்ப வாங்கினார். அதிக விலைக்கு வாங்கினார். பிறகு மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹிடம் சென்று உங்கள் வழிகாட்டலைச் செயல்படுத்தி விட்டேன் என்று கூறினார். ஹுஸூர் ரஹிமஹுல்லாஹ் தமது திருப்தியை வெளிப்படுத்தினார்கள். மஹர் சாஹிபுடம் அதில் மகிழ்ச்சி அடைந்தார்.

(ரோஸ்நாமா அல்ஃபஸல் 10 மே 2010 பக்கம் 5)

ஹஸ்ரத் மூன்றாவது கலீஃபத்துல் மஸீஹ் தமது ஒரு குத்பாவில் கூறினார்கள்: 1970 -ல் ஆப்பிரிக்கா பயணம் சென்றேன். அங்கு நமது நிகழ்ச்சிகளை முபல்லிக் சாஹிப் எவ்வாறு அமைத்திருந்தார் எனில் எனக்கு அது பெரும் கஷ்டம் ஏற்படுத்தியது. ஏனெனில் 100 மைல் தூரம் கடந்து சென்று ஓரிடத்தை அடைந்தேன். அங்கு ஜமாஅத்துகளுடன் கைகுலுக்கவும் முடியவில்லை. பயணம் 100 மைல் தூரம் நிகழ்ச்சிகளோ மிகவும் சிறியது. மக்களுடன் கை குலுக்கக் கூட முடியாது. அங்கு ஒரு உரை நிகழ்த்த வேண்டியிருந்தது. அதில் அந்நிய நாட்டு கிறித்தவர்களும் வந்திருந்தார்கள். நான் உரை நிகழ்த்தினேன். கேள்வி பதில் கூட்டம் நடந்தது. மிகவும் நேரமாகி விட்டது. குறித்த நேரத்தில் கழிந்து விட்டது. எனவே முஸாபஹா கிடையாது என்று நமது முபல்லிக் அறிவிப்பு செய்தார்.

ஹுஸூர் கூறுகின்றார்கள்: மக்கள் முதன் முறையாக என்னைச் சந்திக்கிறார்கள். இனி எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. இந்த அறிவிப்பு செய்யப்பட்ட பிறகும் மக்கள் கை குலுக்க முன்வந்தனர். உள்ளூர் அஹ்மதிகள் எனது பிரைவேட் செகரட்டரி போன்றவர்களை எப்படி நெருக்கி விட்டார்கள் எனில் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. மக்கள் கை குலுக்கத் தொடங்கினர். சரி முஸாபஹாதான் தொடங்கியது என்றால் முஸாபஹா சாதாரண முஸாபஹாவாக இருக்கவில்லை. ஒவ்வொருவரும் எனது கையைப் பிடித்துக் கொண்டு விடவே இல்லை. நான் பார்க்கிறேன். அவர்கள் விடுவதில்லை.

அடுத்துள்ளவர் எதிர்பார்த்து நிற்கிறார். அவர் கஷ்டத்திற்குள்ளாகி முன் இருப்பவரின் விலாவைப் பிடித்து தள்ளுகிறார். இன்னொரு கையால் எனது கையைப் பிடித்து இழுக்கிறார். பிறகு அந்த முஸாபஹா செய்யத் தொடங்குகிறார். பிறகு அவரும் விடுவதில்லை. அடுத்த மனிதரும் இவரைப் போன்றே செய்ய வேண்டியது ஏற்படுகிறது. பிறகு மிகவும் சிரமப்பட்டு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். பிறருக்காக கூறுகிறோம். கிலாஃபத் மற்றும் ஜமாஅத் மக்களுக்கும் உள்ளே தொடர்பு குறித்து நம்மவர்களுக்குத் தெரியும்.

மக்களுக்கு கூறுகிறேன். நான் எனது ஏதாவது சிறப்பின் காரணத்தால் 5000 மைல் தூரத்திலுள்ள மக்களிடம் என் மீது இவ்வளவு அன்பு உருவாகி விட்டது என்று கருதும் அளவுக்கு முட்டாள் அல்ல. அவர்கள் என்னை முன்னர் பார்த்ததும் இல்லை. எனது நிலைமைகளை மக்கள் பார்த்துள்ளதால் அவர்கள் முன்னோக்கி வரவில்லை. இந்த அன்பை அல்லாஹ் உருவாக்கியுள்ளான்.

(குத்பாத்தே நாஸிர் தொகுதி 6 பக்கம் 547,548 & குத்பா ஜுமுஆ 22 அக்டோபர் 1976)

ஹஸ்ரத் நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் காலம் வந்தது. அன்னார் கூறுகிறார்கள்: ஆப்பிரிக்காவில் மகத்தான மாற்றங்கள் உருவாகி உள்ளது. இது முன்னர் இருந்த வாழ்வை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தால் விளைந்தது ஆகும். மிகச் சிறந்த மாற்றங்கள் உருவாகியுள்ளன. அதனை ஜமாஅத் கற்பனை செய்தும் பார்க்க இயலாது. நாட்டில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சில அஹ்மதிகள் அனுபவங்களும் தொடர்புள்ளவர்களும் ஆக இருக்கக் கூடிய அஹ்மதிகள் என்னிடம் கூறினர். எங்களுக்குக் கூட தெரியாது. இவர்கள் அன்பில் இவ்வளவு முன்னேறி இருப்பார்கள் என்று அறியவில்லை. இவர்கள் எவ்வளவு தயாராக உள்ளார்களோ அவ்வளவு அதிகமாக தூதுச் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

ஒரு சாஹிப் கூறுகிறார்: அவரது பெயரையும் நாட்டையும் கூறுவதும் பொருத்தமானதல்ல. அவர் கூறுகிறார். எனக்கு புரியவே இல்லை. இங்கே என்ன நடக்கிறது. எங்கள் மக்களுக்கு அஹ்மதியாக ஜமாஅத்தின் கலீஃபாவுக்கு இத்தகைய சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை. இவ்வளவு அன்பு காட்டும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் நினைத்துப் பார்க்கவில்லை.

நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் கூறுகின்றார்கள்: நானும் நினைத்துப் பார்க்கவில்லை. இங்குள்ள நாட்டின் தலைவர்களிடம் கூட இப்படி அன்பு செலுத்தப்படுவதைக் கண்டதில்லை. அன்பு இருந்தும் உலகியல் பார்வையில் இருக்கிறது. வேறு எந்த அன்பும் இருப்பதில்லை.

மேலும் கூறுகிறார்: இதில் ஜமாஅத்தின் முயற்சியின் தலையீடு எதுவும் இல்லை. என்ன நடக்கிறதோ அது மறைவான முறையில் நடக்கிறது. வியப்பான முறையில் நடக்கிறது.

(குத்பாத்தே தாஹிர் தொகுதி 7 பக்கம் 134,135)

இவை அனைத்தும் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்டதாகும்.  பிறகு நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் (ரஹி) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் தொடர்பாக குறிப்பிட்டவாறு சில தீமைகளைப் பற்றி குறிப்பிட்டவாறு குறிப்பாக வீடியோ கேசட்டுகளைப் தவறாக பயன்படுத்துதல் பற்றி எடுத்துக் கூறினார்கள்:

நான் ஒரு குத்பாவில் அறிவித்தேன். சிலர் அசுத்தமான அனாச்சார வழிகளில் செல்கிறார்கள். இதனால் சமுதாய நல்லொழுக்கம் அழியும். வீடுகளில் அமைதி அழியும். கணவன் மனைவிக்கிடையில் நம்பிக்கை அழியும். அவர்களின் தொடர்புகளில் விரிசல் ஏற்படும். பிளவு ஏற்படும். இதனை நீங்கள் ஏற்பட விட வேண்டாம் என்று கூறியபோது எனக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு கடிதம் கிடைத்தது.

அதனைப் படித்து எனது உள்ளம் இறைவன் முன் ஸஜ்தாவில் விழுந்தது. மீண்டும் மீண்டும் விழுந்தது. பல தீமைகளில் மூழ்கியிருப்பவர்கள் தெளிவாக எழுதினார்கள். நாங்கள் இந்த தவறான பணியைச் செய்தோம். அல்லாஹ்வின் பெரும் கருணையால் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய ஜமாஅத்தில் இருப்பதால் உங்களது குரல் எங்களை வந்தடைந்தது. இந்த எல்லா பொய்யான சிலைகளையும் உடைத்து உள்ளத்தை விட்டு எறிந்து விட்டோம்.

பிறகு நான்காவது கலீஃபத்துல் மஸீஹ் கூறுகிறார்கள்: ஜமாஅத்தில் நன்மையின் குரலுக்குப் பதில் கொடுக்கின்ற தன்மை உண்மையில் அசல் ஆன்மாவாகும். இந்த உண்மையின் ஆன்மாவை ஒரு பொய்யரால் உருவாக்க முடியாது.

(குத்பாத்தே தாஹிர் தொகுதி 11 பக்கம் 920)

பிறகு எனது காலத்தின் விஷயங்கள்: நைஜீரியாவிற்கு 2004 -ல் நான் பயணம் சென்றேன். முதலில் அந்த நிகழ்ச்சிகள் இருக்கவில்லை. தற்செயலாக நிர்பந்தமாக அந்தப் பயணம் ஏற்பட்டது. விமானம் அங்கு சென்று நின்றது. அங்கு சென்ற உணர்வு ஏற்பட்டது. இங்கு வருவது அவசியமாக இருந்தது. வராவிட்டால் தவறாக இருந்திருக்கும் என்ற தோன்றியது. சில காலத்திற்கு முன்பு நைஜீரியா ஜமாஅத்தின் மாநாடு நடந்து முடிந்திருந்தது. மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். நான் செல்வதால் மக்கள் தொலைதூரத்திலிருந்து வருவார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே சந்திக்க முடியும் என்ற நிலையிலும் மக்கள் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பற்று விசுவாசக் காட்சியைக் காண முடிந்தது. அது காணத்தக்கதாக இருந்தது.

கிலாஃபத்துடன் கலப்பற்ற தொடர்பு விவரிக்க முடியாததாக இருந்தது. அந்த மக்கள் காலத்தின் கலீஃபாவை நேரில் பார்த்தது கூட இல்லை. பார்த்தபோது அவர்கள் வெளிப்படுத்திய உணர்வு ஆச்சரியமானது. திரும்பும்போது துஆவில் அந்த மக்களிடம் எத்தகைள உணர்வு இருந்தது எனில் எவ்வளவு துடிப்பு இருந்தது எனில் வியப்பு ஏற்பட்டது. இந்த அன்பை இறைவன்தான் ஏற்படுத்த முடியும். இறைவனுக்காகவே ஏற்படவும் முடியும். மவ்லவிமார்கள் ஆப்பிரிக்காவின் இன்ன பகுதியில் ஜமாஅத்தின் பிரச்சார நிலையத்தை மூடச் செய்தோம் என்று கூறுகிறார்கள்.

இன்ன பகுதியில் மிஷனை மூடுவதாக வாக்குறுதி தந்து விட்டனர் என்று கூறுகிறார்கள். அப்படி செய்தோம்; இப்படி செய்தோம் என்று கூறுகின்றனர். ஆனால் கேட்டால் இந்த ஒரு கலப்பின்மை, பற்று ஆகியவற்றை ஆப்பிரிக்க மக்கள் காட்டுகிறார்கள் என்றால், அதனை MTA அவர்களின் முகத்தைக் காட்டுகிறது. நாம் அதனை அங்கு சென்று கண்டோம். இவை அனைத்தும் என்ன? இதெல்லாம் மிஷனை மூடியதன் விளைவா? எவ்வாறிருப்பினும் அவர்கள் எவ்வளவு செய்ய வேண்டுமோ செய்யட்டும். இந்த விஷயங்கள் நமது ஈமானை உறுதிப்படுத்துகின்றன. அதனை அதிகரிக்கச் செய்கின்றன.

(குத்பாத்தே மஸ்ரூர் தொகுதி 2 பக்கம் 253,254)

பிறகு கானா சுற்றுப்பயணம். அங்கு அல்லாஹ்வின் அருளால் 2008 -ல் சென்றோம். அங்கு ஜமாஅத் ஒரு பெரிய இடம் வாங்கியது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவாக அது இருந்தது. அங்கு மாநாடு நடந்தது. பெண்கள் முதலில் வந்து விட்டனர். புதிய இடம். அங்கு முதலில் ஒரு செட் இருந்தது. அதனை மாற்றி அந்த ஜமாஅத் மாநாட்டிற்காக ஓர் இடத்தை உருவாக்கி இணைத்து பெரிய இடமாக தயார் செய்தது. ஆனாலும் அது போதுமானதாக இல்லை. இடப்பற்றாக்குறையால் எவரும் குறை கூறவில்லை. எந்த முறையீடும் செய்யவில்லை. நிறைய பேர் அங்கு வந்திருந்தனர். அவர்களுள் நல்ல வசதி படைத்தவர்கள் இருந்தனர். வியாபாரிகள் இருந்தனர். பள்ளிகளில் கல்வி கற்பவர்கள், வேறு பணி செய்பவர்கள் இருந்தனர். அவர்களுக்கு இடம் இல்லா விட்டாலும் ஒரு போர்வையை விரித்து படுத்து உறங்கி விட்டனர். அவர்கள் பெரும் பயணத்திற்குப் பிறகு பெரும் பொறுமையை மேற்கொண்டனர். ஒருவர் வெளியில் படுத்திருந்த அம்மக்களிடம் கேட்டார். உங்களுக்கு பெரும் கஷ்டம் ஏற்படுமே என்றதும் அவர்கள் கூறினர். நாங்கள் மாநாட்டைக் கேட்கவே வந்தோம். காலத்தின் கலீஃபா இருக்கும் மாநாடு நடக்கிறது. இரண்டு நாள் தற்காலிக சிரமத்தால் என்ன ஆகிவிடப்போகிறது? நாங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். அல்லாஹ் எமக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளான்.

புர்கினோஃபாஸோ போன்ற அக்கம் பக்கத்து நாடுகளிலிருந்தும் மக்கள் வந்தனர். புர்கினோஃபாஸோவிலிருந்து பெருங்கூட்டம் வந்துள்ளதை அறிந்தேன். அவர்களில் பலருக்கு உணவும் கிடைக்கவில்லை. அவர்கள் 3000 பேர் இருந்தனர். அவ்வளவு பெரிய கூட்டம் அங்கு வந்திருந்தது. 300 குத்தாம் சைக்கிளில் வந்தனர்.

அங்குள்ள முபல்லிக் என்னிடம் கூறினார்: அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை. மன்னிப்புக் கோரினேன். வருங்காலத்தில் உங்களை கவனத்தில் கொள்வோம் என்றேன்.  அவர்களுக்கு மன்னிப்புக் கேட்ட செய்தி கிடைத்ததும், நாங்கள் எதற்காக வந்தோமோ அதனைப் பெற்று விட்டோம். உணவு என்ன? அதுதான் தினமும் உண்கிறோமே? என்றார்கள். பாவம் ஏழை மக்கள். தினமும் என்ன உண்டிருப்பார்கள்? ஆனால் அவர்கள், நான் இந்த உணவை உண்கிறோம்; பயன் அடைகிறோம். இது தினமும் எங்கே கிடைக்கும்? என்று கூறினார்கள்.  

புர்கினோஃபாஸோ ஜமாஅத் ஒன்றும் மிகவும் பழைய ஜமாஅத் அல்ல. அப்போது ஒரு 10 வருட ஜமாஅத் ஆக இருந்தது. இப்போது இருபது வருடமாகி இருக்கும். ஆனால் அவர்களிடம் பற்று, நேசம், அன்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  அவர்களின் ஏழ்மை எத்தகையது எனில் சிலர் ஒரு ஜோடி உடைiயே உடுத்தி வந்தார்கள் எனில் அதே உடையில் மூன்று நான்கு நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் இருந்து விட்டு திருப்பி பயணம் செய்தனர். சிறிது சிறிதாக பணம் சேர்த்து மாநாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

கிலாஃபத் ஜுபிளி மாநாடு காலத்தின் கலீஃபாவின் முன்னிலையில் நடக்கிறது. எனவே நிச்சயம் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்று கருதி வந்து சேர்ந்தனர். அத்தகைய ஒரு நேசத்தை இறைவனைத் தவிர வேறு எவர் உருவாக்க முடியும்? சைக்கிளில் வந்த குத்தாமின் கலப்பற்ற தன்மையை கீழ்க்கண்ட சம்பவத்தால் உணரலாம். பல்வேறு இடங்களில் தங்கி ஏழு நாட்கள் பயணம் செய்து வந்தனர். சைக்கிளில் வந்தவர்களுள் சிலர் 50-60 வயதை உடையவர்களாக இருந்தனர். 13-14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

அங்குள்ள குத்தாமுல் அஹ்மதிய்யாவின் சதர் சாஹிபிடம் ஒருவர், இது மிகவும் சிரமமான பயணமாக இருந்ததா? என்று கேட்டபோது, பதில் கூறினார். ஆரம்ப கால முஸ்லிம்கள் இஸ்லாத்திற்காக பெரும் பெரும் தியாகங்கள் செய்தனர். எங்கள் குத்தாமும் எல்லா தியாகத்திற்கு தயாராக வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் விருப்பம் கிலாஃபத் ஜுப்ளியின்போத எங்கள் கிலாஃபத்தின் மீதுள்ள பற்று நேசத்தை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதாகும் என்றனர். நாங்கள் தியாகம் செய்யத் தயார் என்றும் நாங்கள் எல்லா சவாலையும் ஏற்கத் தயார் என்றும் காலத்தின் கலீஃபாவிடம் கூற விரும்பினோம்.

தொலைக்காட்சி மீடியாக்கள் அவர்களிடம் சைக்கிள் ஓட்டத் தொடங்கியபோது கேட்டனர். உங்களது சைக்கிள் மிகவும் மோசமாக இருக்கின்றது. இங்குள்ள சைக்கள் ஐரோப்பாவிலுள்ள சைக்கிள் போன்றதல்ல. அந்த சைக்கிளில் தொலைதூர பயணம் எவ்வாறு செய்ய முடியும்? ஜமாஅத் பிரதிநிதி அவரிடம் கூறினார். சைக்கிள் மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் எங்கள் ஈமான் வலுவானது.

நாங்கள் கிலாஃபத்துடைய வெகுமதிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்தப் பயணம் மேற்கொள்கிறோம். National TV இந்தச் செய்தியை ஒளிபரப்பியதும் அந்த டி.வி செய்தியை தொடக்கத்தில் இவ்வாறு கூற ஆரம்பித்தது. அல்லாஹ்வுக்காக கிலாஃபத் ஜுப்ளிக்காக வாகாவிலிருந்து அக்ராவுக்குப் பயணம். வாகா என்பது புர்கினோஃபாஸோ தலைநகர். அக்ரா என்பது கானாவின் தலைநகர் ஆகும். மேலும் கூறினர். சைக்கிள் பழையது;  மோசமானது. எமது ஈமான் மிகவும் வலுவானது என்று தலைப்பிட்டது.

அந்த அஹ்மதிகள் பிறப்பு அஹ்மதிகள் அல்லர். அவர்கள் சஹாபாக்களின் சந்ததிகள் அல்லர். மாறாக ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலுள்ள மக்கள் சில பகுதிகளின் சாலைகள் மிகவும் மோசமானவை. சில இடங்களில் பாதையே இருக்காது. இம்மக்கள் சில வருடம் முன்பு அஹ்மதிய்யத்தை ஏற்று வந்தவர்கள். அவர்கள் வாழும் பகுதியில் குடி தண்ணீர் இருக்காது.

சில வருடங்களுக்கு முன் ஈமான் கொண்டு பற்று நேசத்துடன் எத்தகைய முன்மாதிரி காட்டினார்கள் எனில் வியப்பு ஏற்படுகிறது. சில இடங்களில் இவர்களின் ஏழ்மை அவர்களை செயலிழக்கச் செய்தது.  ஆனால் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடைய உண்மைப் பேரன்பரின் ஜமாஅத்தில் இணைந்து அவர்களிடம் ஒரு கலப்பின்மை உருவானது. மார்க்கத்திற்காக அவர்களின் உறுதி பாறையைப் போன்று ஆக்கி விட்டது. அவர்கள் எல்லாத் தியாகத்திற்கும் தயாராக இருந்தனர். அவர்கள் அன்பால் நிறைந்திருந்தனர். ஆகவே நாம் எப்போதும் துஆ செய்து வர வேண்டும். அல்லாஹ் இவர்களின் பற்று நேசத்தை அதிகரிப்பானாக.

புர்கினோஃபாஸோவின் ஒரு நண்பர் ஈஸா சாஹிப் கூறுகிறார்: நான் 2005 -ல் பைஅத் செய்தேன். கேட்கும்போது அவர் கூறினார். மூன்று வருடங்கள் ஆகி விட்டது. இன்று எனக்கு தெரிய வந்தது. மூன்று ஆண்டுகளில் என்ன பெற்றேன்? என்று நினைத்தால் எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஏனெனில் இன்று நான் காலத்தின் கலீஃபாவைப் பார்த்து சந்திக்கவும் வாய்ப்புப் பெற்றேன் என்றார். இன்னும் சிலரது அன்பு அவர்களின் கண்களில் கண்ணீர் மூலம் வெளிப்பட்டது. இந்த அன்பு நேசம் புதிதாக உருவான ஜமாஅத்துகளில் ஏற்பட்டுள்ளது.

(குத்பாத்தே மஸ்ரூர் தொகுதி 6 பக்கம் 181-186)

கடந்த வருடம் குழப்பம் விளைவிக்கக்கூடியவரின் காரணமாக, அவர் ஒரு தப்பெண்ணத்தின் காரணமாக அதை பரப்ப முயற்சி செய்தார். கலப்பற்ற அஹ்மதிகளிடமும், புதிய கலப்பற்ற இளைஞர்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். சில இளைஞர்கள் களங்கமற்றவர்களாக இருந்தும் அவர்களின்      கூற்றுக்கு இசைந்து விட்டனர். அவர்கள் தம்மை அஹ்மதி என்றனர். ஆனால் அமைப்பை விட்டும் விலகி இருந்தனர். நான் மாலியிலிருந்து முபல்லிக்கை அனுப்பினேன். அவர் உள்ளூர்வாசி ஆவார். அவர் அங்கு சென்று அவர்களுக்கு புரிய வைத்தார். ஒருபுறம் கிலாஃபத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக கூறிக்கொண்டு மறுபுறம் ஜமாஅத் அமைப்பை விட்டும் விலகுகிறீர்கள். இது சரியல்ல என்று புரிய வைத்ததும் கிட்டத்தட்ட எல்லாருமே மன்னிப்புக் கடிதம் எழுதத் தொடங்கினர்.

நாங்கள் தப்பெண்ணத்தால் தர்பிய்யத் இல்லாததால் இந்த தவறான எண்ணத்திற்கு வந்து விட்டோம். ஆனால் கிலாஃபத்திற்கு கட்டுப்படுகிறோம். நாங்கள் கிலாஃபத்தை விட்டு விலகியதை நினைத்துப் பார்க்கவில்லை என்றனர். பிறகு அவர்கள் அல்லாஹ்வின் அருளால் ஜமாஅத்தின் அங்கமாக மாறி விட்டனர். தர்பிய்யத் குறைவால் பிறழ்ந்தனர். உணர்வூட்டப்பட்டதும் தமது தவறை உணர்ந்தனர். கிலாஃபத்துடன் முழுமையான பற்றுறுதியை வெளிப்படுத்தினர்.

நாங்கள் விலகினோம். அப்போதும் கிலாஃபத்தை விட்டு விலகவில்லை. நாங்கள் சில பொறுப்பாளர்களை விட்டுத்தான் பிரிந்தோம் என்று அவர்கள் கூறினர். இதுவே அவர்களின் கலப்பின்மை மற்றும் பற்றின் முன்மாதிரி ஆகும். அதுபோன்று கேம்பியாவிலிருந்து வந்தவர்களின் நிலையும் இதுவேயாகும். ஐவரிகோஸ்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் பிற நாடுகளிருந்து வந்தவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது நிலைக்கேற்ப கலப்பின்மை மற்றும் பற்றில் முன்னேறவே செய்கின்றனர்.  

கானாவின் மாநாடு நடக்கும்போது நடந்த சம்பவம் பற்றி நான் முதலில் கூறி வந்தேன். மாநாட்டின் திடலுக்கும் எனது தங்குமிடத்திற்கும் இடையில் வெகு தூரம்  இருந்தது. தூரம் ஒரு கிலோ மீட்டர் ஆகும். ஆண்களும் பெண்களும் வழியில் நின்றனர். பெண்கள் குழந்தைகளைத் தூக்கி ஸலாம் கூற வைத்தனர். அன்பை வெளிப்படுத்தினர். கிலாஃபத் ஜூப்ளி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் பேர் இருந்தனர். அனைவரும் கிலாஃபத்துடன் அன்பு நேசத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் அன்பு அவர்களின் செயல்கள் மற்றும் கண்ணிய முகங்களில் வெளிப்பட்டது. இவர்கள் தமது தொழுகை மற்றும் தஹஜ்ஜுதைப் பேணி வந்தனர். அம்மக்கள் முறையாக வந்து கலந்து கொண்டனர்.

நான் நைஜீரியா சென்றபோது இரண்டாவது முறையாக பெனினிலிருந்து சென்றபோது வழியில் ஓரிடத்தில் நிற்க வேண்டியது இருந்தது. முதலில் நிகழ்ச்சிகள் இருக்கவில்லை. பிறகு பள்ளி உருவாகிறது பாருங்கள் என்றார்கள். அங்கு மக்கள் இருந்தனர். அங்கு ஆண்கள் குழந்தைகள் எல்லாரும் முஸாபஹா செய்ய (கை குலுக்க) விருப்பம் இருந்தது. பெண்கள் அருகில் வந்து காண விரும்பினர். நேரம் குறைவாக இருந்ததால் கை குலுக்க இயலவில்லை. நெருக்கி அடியத்துக் கொண்டு வந்து கை கொடுத்தனர்.

இந்த நெருக்கடியில் நமது குழுவினரில் ஒருவர் அம்மக்களில் ஒருவரைப் பார்த்து சற்று விலகுங்கள் என்று கூறவும் அந்தப் பெண்ணுக்குப் பெரும் கோபம் ஏற்பட்டது. கோபத்தில் அப்பெண் அந்த மனிதரைத் தூக்கி வெளியில் எறிந்து விடுவது போன்று இருந்தார். அவர் கோபத்துடன், எனக்கும் கலீஃபாவுக்கும் இடையில் தடையை ஏற்படுத்த நீர் யார்? என்று கேட்டார். இதுவே இவர்களின் உணர்வாகும். சில நேரம் அமைதியாக இருக்குமாறு கூறினேன். உடனே அவர்கள் அமைதியாக அமர்ந்தனர். இதுவே இவர்களின் கிலாஃபத்துடன் உள்ள தொடர்பாகும்.

(குத்பாத்தே மஸ்ரூர் தொகுதி 6 பக்கம் 191-192)

அமெரிக்கா பற்றி மக்கள் உலகாதாய சிந்தனையுள்ள மக்கள் இருப்பார்கள் என்று மக்கள் கருதுகின்றனர். இவர்களுக்கு மார்க்கத்துடன் தொடர்பு இருக்காது என்று நினைக்கின்றனர். மூன்றாவது கலீஃபாவும் தமது ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள். அவர்களுக்கு ஆபத்து குறித்து கடிதம் கிடைத்தது. உடனே செய்தி வெளியில் வந்து விட்டது. மேலும் அவர்களில் சிலர் பாதுகாப்புப் பணியில் அனுவபமுள்ள அஹ்மதிகளாக இருந்தனர். தாமே வந்து முழு இரவும் காவலுக்கு நின்றனர் என்று கூறி இருந்தார்கள்.

அமெரிக்க மக்களிடம் பெரும் பற்று இருந்தது. எனது பயணத்தில் நான் அங்கு சென்றபோது அவர்கள் எப்போதும் கலப்பின்மை மற்றும் பற்றை வெளிப்படுத்தினர். இங்கும் அமெரிக்கக் குழு வருகிறது. அவர்களும் அதனை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வாறு இவர்களுக்கு கிலாஃபத்துடன் கலப்பின்மை மற்றும் பற்றின் தொடர்பு உள்ளது. அவர்கள் உலகாதாய சிந்தனைமிக்கவர்கள் என்ற கருத்தை அவர்களின் செயல் முறியடிக்கிறது. இளைஞர்களான டியூட்டி தருபவர்கள் நிரந்தரமாக என்னுடன் தங்கினார்கள். பயணத்தில் உடன் இருந்தனர். சிலர் தமது வேலையையும் பொருட்படுத்தவில்லை. அத்தகையவர்கள் கூறினார்கள். எங்கள் பணியைத் தொடங்கிதான் இருந்தோம். இந்நிலையில் மாநாட்டில் தங்களைச் சந்திக்க விடுப்பு கிடைக்கவில்லை. நாங்கள் பணியை விட்டு விட்டு வந்து விட்டோம் என்றனர்.  (குத்பாத்தே மஸ்ரூர் தொகுதி 10 பக்கம் 424)

கனடாவில் குத்தாமின் நடைமுறையும் இவ்வாறு இருந்தது. இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள், உலகில் எல்லாப் பகுதியிலும் கனடா, அமெரிக்கா, ஐரோப்பா எல்லா இடத்திலும் களங்கமின்மையின் முன்மாதிரி காண முடிகிறது. இந்த களங்கமின்மை மற்றும் பற்றை எந்த மனித முயற்சியும் செய்ய முடியாது. சில வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நான் குத்பா கொடுத்தேன். அதில் கிலாஃபத்துடன் கட்டுப்படுதல் மற்றும் பற்று கொள்ள வேண்டும் என்ற கருத்தைக் கூறினேன். இது ஜெர்மனியினருக்கு மட்டுமல்ல. எல்லாருக்கும் தான் கூறினேன்.

ஆனால் ஜெர்மனியில் சில உதாரணங்களை அப்போது கொடுத்திருந்தேன். இதனால் உலகம் முழுவதும் அஹ்மதிகள் நடவடிக்கை எடுத்தார்கள். உடனடியாக மக்கள் தமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். ஜெர்மனியர்களும் வெளிப்படுத்தினர். ஜெர்மனியில் சில பொறுப்பாளர்கள் நமது வழிகாட்டலுக்கேற்ப விளக்கங்கள் கொடுத்தனர். இன்ஷா அல்லாஹ் வருங்காலத்தில் அவ்வவாறு செய்ய மாட்டோம் என்றார்கள். இந்த உணர்வு அங்கும் நிலைக்கட்டும். உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் நிலைக்கட்டுமாக.

(குத்பாத்தே மஸ்ரூர் தொகுதி 12 பக்கம் 369)

காஸிம் சாஹிப் எழுதுகிறார்கள்: ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய  உண்மைக்கு பெரிய ஆதாரமாவது இறைவன் கிலாஃபத்தின் நேசத்தையும் கட்டுப்படுதலையும் என் உள்ளத்தில் ஏற்படுத்தினான். சில நாள் முன் நான் பைஅத் செய்ய முடிவெடுத்தபோது எனது உள்ளத்தில் ஓர் எண்ணம் ஏற்பட்டது. உண்மையில் ஜமாஅத் உண்மையில் இருக்கிறதா? ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய கருத்தில் நிலைநிற்கிறதா? என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது கிலாஃபத் பற்றி எனக்கு எந்த அறிவும் இருந்ததில்லை.

அப்போது இறைவன் எனக்கு கனவில் காட்டினான். கலீஃபத்துல் மஸீஹ் அமைதியைப் பரப்புகிறார்கள். சண்டை சச்சரவு செய்பவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு கூறுகிறார்கள். நான் எனது கையை உங்கள் கை மீது வைக்கிறேன். உங்கள் மோதிரத்தை முத்தமிடுகிறேன். அப்போதுதான் உங்கள் கருணை மற்றும் பரிவை உணர்ந்தேன். உங்கள் மீது எனது உள்ளத்தில் அளவு கடந்த நேசம் உருவானது. நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பைஅத்தை புதுப்பிக்க நினைக்கிறேன். கிலாஃபத்திற்கு வெளியிலுள்ள ஒவ்வொருவர் பற்றியும் ஆதங்கம் கொள்கிறேன் என்று கூறுகிறார்.

(அல் ஃபஸல் இன்டர்நேஷனல் 6 ஏப்ரல் 2018 பக்கம் 15)

பிறகு பல்கேரியாவில் நமது எதிரிகள் பெரும் கஷ்டங்களைத் தருவதில் எந்தக் குறைவும் வைக்கவில்லை. அங்கு ஜமாஅத் நீண்ட நாளுக்குப் பிறகு ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. முதலில் அது கேன்ஸல் ஆனது. பிறகு ரிஜிஸ்டர் ஆனது. பல்கேரியாவின் முஃப்தி பேராசை காட்டி மக்களை மறுக்குமாறு கூறினார். எல்லா அஹ்மதிகளும் ஈமானில் நிலை நின்றது மட்டுமின்றி முன்னரை விட அதிகமாக கலப்பின்மையை வெளிப்படுத்தினர். கிலாஃபத்துடன் நேசத்தின் தொடர்பை நிரூபித்துள்ளனர். ஒரு பெண்ணிடம் மூன்று பேர் சென்று ஜமாஅத்தை மறுக்குமாறும் தம்முடன் சேர்ந்தால் உதவி செய்வதாகவும் கூறினார்கள். அந்தப் பெண் முஜாஹிதா வேகமாக கூறினார். அஹ்மதிய்யத் உண்மையானது. நான் எனது கலீஃபாவை சந்தித்து வந்துள்ளேன். எல்லாவற்றுக்கும் முதலில் இறைவன் எனக்கு இரண்டு மூன்று கனவுகளும் காட்டியுள்ளான். ஜமாஅத் உண்மை என்று கூறியுள்ளான். எனவே இதனை விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

(அல்ஃபஸல் இன்டர்நேஷனல் தொகுதி 20 இதழ் 44, 1 நவம்பர் 2013 பக்கம் 14)

பெனின் உடைய முபல்லிக் இன்சார்ஜ் எழுதுகிறார்: புதிதாக பைஅத் செய்தவர்களின் மாநாட்டில் ஒரு புதிதாக பைஅத் செய்த ரஸாக் சாஹிப் புதிதாக பைஅத் செய்த அவர்களின் பிரதிநிதியாக வந்து கூறினார். உலகில் ஒருவருக்கு ஒரு பிரச்சனை எனில் Chief இடம் செல்கிறார். முடியாத நிலையில் தாசில்தாரிடம் போகிறார். பிறகு நாட்டின் தலைவரிடம் போகிறார். அவருடைய பேச்சையும் கேட்டாரா? இல்லையா? தெரியாது. ஆனால் ஜமாஅத் அஹ்மதிய்யாவின் அமைப்பு முழுமையானது. ஜமாஅத் அஹ்மதிய்யாவிடம் கலீஃபா இருக்கிறார். ஒவ்வொருவரின் பேச்சையும் புரிகிறார். ஒவ்வொரு அம்சத்தையும் வழங்குகிறார். இது கிலாஃபத்தே அஹ்மதிய்யாவின் பரக்கத் ஆகும். நாங்கள் குர்ஆன் படிக்கிறோம். ஹஸ்ரத் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் இன்று எங்களுக்கு கிடைத்து விட்டது என்கிறார்.

பிரான்ஸின் டீலா சாஹிபா கூறுகிறார்: நான் 2017 -ல் பைஅத் செய்தேன். உங்கள் கடிதம் படித்து எனது வாழ்வு மாறி விட்டது. உங்கள் பாதுகாப்பு மற்றும் உதவி ஒத்தாசைக்காக எல்லா தொழுகையிலும் துஆ கேட்கிறேன். இந்த துஆவின் தூண்டுதலை இறைவனே ஏற்படுத்துகிறான். பைஅத்திற்குப் பிறகு புதிய மனிதன் ஆகிறான்.

மாலி மண்டலத்தின் சான் உடைய முபல்லிக் எழுதுகிறார்: எங்களுக்கு ஒரு ஜமாஅத் ஓலோனின் அப்துர் ரஹ்மான் சாஹிப் வஃபாத் ஆகி விட்டார். அவர் அதற்கு சற்று முன்பு தமது பிள்ளைகளை அழைத்து வஸிய்யத் செய்தார். நான் இளைஞனாக இருந்தால் ஜமாஅத்தின் மிஷன் ஹவுஸ் சென்று அமர்ந்து ஜமாஅத் தருகிற பணியைச் செய்வேன் என்று கூறியவாறு போதனை செய்தார். எனக்கு இரண்டு மாத சந்தா கொடுக்க வேண்டியுள்ளது வாழ்வு குறித்துக் கூற இயலாது. எனவே நிச்சயம் அதனை தந்து விட வேண்டும். நான் கடன் காரனாக உலகைக் விட்டுச் செல்ல விரும்பவில்லை. மேலும் வஸிய்யத் செய்தார். கிலாஃபத்துடன் விசுவாசமாக இருக்க வேண்டும். நன்றிகேடு காட்டக் கூடாது. எப்போதும் சந்தா கொடுத்து வர வேண்டும்.

கேம்பியா அமீர் சாஹிப் எழுதுகிறார்: ரஹ்மத் ஜாலூ சாஹிபா என்ற பெண் பைஅத் செய்தார். இறைவழியில் தியாகம் செய்ய வேண்டியது பற்றி கூறப்பட்டது. அவர் உடனே 100 டாலாஸி வழங்கினார். சிறிய கடை. தமது தகுதிக்கு மீறி சந்தா வழங்கினார். அவர் கூறினார்: நான் அல்லாஹ் மற்றும் காலத்தின் கலீஃபாவின் அன்பை வேண்டுகிறேன். இந்தத் தொடர்பு மற்றும் அன்பினால் தருகிறேன். அதற்காக தியாகம் செய்கிறேன்.

தாஜகிஸ்தானின் ஒரு நண்பர் இஸ்ஸத் அமான் சாஹிப் கூறுகிறார்: எனது தாயாரின் வயது 72. மிகவும் நோயுற்றிருந்தார். பல வருடங்களாக நெஞ்சு வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனால் உடல் மிகவும் பலவீனமாகி விட்டது. மருத்துவர்களின் கூற்றால் உறவினர்கள் நம்பிக்கையிழந்து விட்டனர். அப்போது எனக்கு கலீஃபத்துல் மஸீஹுடன் சந்திப்பு நிகழ்ந்திருந்தது. எனவே எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. நான் கலீஃபாவிடம் துஆவுக்காக கூறியதால் இறைவன் ஒப்புக் கொள்வான். எவ்வாறிருப்பினும் எனக்கு எழுதினார். துஆவுடன் எனது தாயார் குணமாகி விட்டார். இப்போது எனது தாயாரின் வயது 80 என்று எழுதியுள்ளார். இது கிலாஃபத்துடன் உள்ள தொடர்பு மற்றும் துஆவின் விளைவு என்ற கருதுகிறேன் என்று கூறுகிறார். அல்லாஹ் ஈமான் மற்றும் உறுதிப்பாடு ஏற்படுத்துவதற்காக இதனை ஏற்படுத்துகின்றான்.

ஓர் அஹ்மதி சிறுவனுடைய கிலாஃபத்துடன் உள்ள நேசம் பற்றி ஒரு சம்பவம் தாஹிர் நதீம் சாஹிப் எழுதுகிறார்: துருக்கி பயணத்தின்போது ஓர் அஹ்மதி நண்பரின் வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. நாங்கள் உட்கார்ந்திருக்கும்போது அவருடைய 3-4 வயது சிறுவன் வந்தான். ஸலாம் சொல்லி விட்டு என் காதில் ஏதோ கூறினான். நான் ஹுஸூருக்கு ஒரு கடிதம் தருகிறேன். கொண்டு போய் சேர்த்து விடுவார்களா? என்று கேட்டேன். ஏன் செய்ய மாட்டான்? என்றதும் சிறுவன் ஒரு கடிதத்தின் இரு வரிகளை எழுதினான். நான், நீ என்ன எழுதுகிறாய்? என்று கேட்டதும் அவன், 'ஹுஸூர் எனக்கு உங்கள் மீது நேசம் உள்ளது என்று எழுதுகிறேன்' என்று கூறினான். என்னிடமிருந்து அவனுக்குப் பதிலும் அனுப்பப்பட்டது. அந்தப் பையனுக்குக் கடிதம் கிடைத்ததும் அவனுக்கும் வீட்டினருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதுபோன்று பெஸபடோனியாவின் முபல்லிக் இன்சார்ஜ் எழுதுகிறார்: இதுவும் ஒரு குழந்தையின் சம்பவமாகும். கடந்த நாள்களில் போஸ்னியா பயணத்தில் ஒரு பாகிஸ்தான் நண்பருடன் தப்லீக் சம்பந்தமான உரையாடல் நடந்தது. சந்திப்பு தொடர்ந்து நடந்தது. அவர் கூறினார். துபாய் விமான நிலையத்தில் ஓர் அஹ்மதி குடும்பத்தைச் சந்தித்தேன். அதிலிருந்த 3-4 வயது சிறுமி, அனைவரும் தொழ வேண்டும்; உண்மையே பேச வேண்டும் என்று கூறினாள். எனக்கு அந்தக் குடும்பம் அஹ்மதி குடும்பம் என்று தெரிய வந்தபோது அந்த சிறுமியிடம், 'உனது வாழ்நாளில் பெரிய விருப்பம் என்ன?' என்று கேட்டேன். உடனே அவள், 'இலண்டனில் அன்புக்குரிய ஹுஸூரைச் சந்திக்க வேண்டும்' என்று கூறினாள்.

அவர் கூறுகிறார்: இது என்னிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு சிறிய வயதில் பெரும் பயணம் செய்து கலீஃபாவைச் சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதுபோன்று தற்போது குழந்தைகளின் ஒரு கேமை (விளையாட்டை) நான் தடுத்து விட்டேன். அதனை விளையாடுவதால் ஆபத்துகள் நிகழ்ந்து விடுகின்றன. பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகளைத் தடுப்பது என்ற பதறிப்போய் இருக்கிறார்கள். நிறைய பெற்றோர் எனக்கு எழுதினார்கள். உங்கள் குத்பா கேட்ட பிறகு குழந்தைகள் தாமே வந்து, 'இப்போது காலத்தின் கலீஃபாவிடம் இருந்து விளையாடக் கூடாது என்று கட்டளை வந்து விட்டது. இனி விளையாட மாட்டோம்' என்று கூறினர். மக்கள் நிறைய பேர் எனக்கு கடிதம் எழுதுகின்றனர். நாங்கள் எவ்வளவு கூற முடியும்? ஆனால் காலத்தின் கலீஃபாவிடம் தொடர்பு கொண்டுள்ளோம். எனவே நாம் ஏமாற்றக் கூடாது என்ற உணர்வு குழந்தைகளிடம் உள்ளது. காலத்தின் கலீஃபா நமது முன்னேற்றத்தையே விரும்புகிறார் என்ற கருதினர்.

ஹுண்டோரஸ் முபல்லிக் எழுதுகிறார்: உள்ளூர் அஹ்மதி பர்லீமோர் பல்வேறு பிரச்சனைகளில் மூழ்கி இருந்தார். அவரது பிரச்சனைகளைப் பார்த்து அவரிடம், காலத்தின் கலீஃபாவுக்கு துஆவுக்கு கடிதம் எழுதுமாறு கூறினேன். அவர் உடனே கடிதம் எழுதினார். பிறகு அவர் தன்னைத்தானே ஒவ்வொரு பிரச்சனையாக தீர்ந்து விட்டது; ஒரு மறைவான சக்தி கிடைத்துள்ளது என்ற திடஉறுதி ஏற்பட்டுள்ளது.

மராகஸிலிருந்து அஃபாரி சாஹிப் கூறுகிறார்: எனது உள்ளம் வாழ்வு ஆகியவற்றை ஒளிமயமாக்கி விட்டீர்கள். இறைவனுக்கு நன்றி. அவன் எனக்கு நேர்வழி வழங்கினான். உங்களைப் பார்த்து எனக்கு ஈடுபாடு ஏற்படுகிறது. நான் உங்களுடன் ஒருபோதும் அமர்ந்ததும் இல்லை. பேசியதுமில்லை. இது இறைவனது ஆற்றலால் விளைந்த உண்மையான நேசம் ஆகும். அல்லாஹ் உங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்குவானாக.

பிறகு எமனிலிருந்து ஈமான் சாஹிபா கூறுகிறார்: எனக்கு எனது குடும்பம் மற்றும் குழந்தைகளை விட ஹுஸூர் அவர்கள் மீது அதிக அன்பு இருக்கிறது.  அதன் மூலம் எனது உள்ளத்தில் நிம்மதி ஏற்படுகிறது. பிறகு நிலைமை சரியாகி விடும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகின்றது. வழிகேடு சீர்பெறுவதற்காகவும் இழந்து விட்ட வாழ்வைப் பெறும் நம்பிக்கை ஏற்படுவதற்காகவும் ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய தோற்றம் மற்றும் அவர்களுக்குப் பிறகு கிலாஃபத் நிலைபெற்றுள்ளது. எனது நிலை ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதுபோன்று இறைவா நீ என் மீது கோபம் கொள்ளவில்லை எனில் வேறு எது குறித்தும் எனக்கு கவலை இல்லை என்பதாகும். எனது துஆ, நான் நீங்கள் நேசிக்கிற எவரது மனைவி மக்கள் மீது நேசம் கொள்கிறீர்களோ அந்த நற்பேறு பெற்றவர்களுடன் இருக்க வேண்டும். 

பிறகு தப்லீக் சாஹிப் தியூனஸிலிருந்து எழுதுகிறார்: எங்களுக்கு உங்கள் மீத நேசம் உள்ளது. ஒரு கப்பலில் பயணம் செய்கிறோம். தர்பிய்யத் பெற்றோம். ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களுடைய ஊற்றிலிருந்து உண்டோம்; குடித்தோம். நாங்கள் எங்கள் உடன்படிக்கையில் நிலைத்து நிற்கிறோம். உங்களுடன் இணைந்து இருக்காமல் எங்களுக்கு சீர்திருத்தம் ஏற்படாது. நாங்கள் உலகை விரும்பவில்லை. இன்ன மனிதர் ஜமாஅத்தின் பரக்கத்தால் வெற்றி பெற்றார். உடன்படிக்கையில் நிலை நிற்கவும் அமல் செய்யவும் வாய்ப்பு பெற்றார் என்று கூற வேண்டும் என்பதே விருப்பமாகும். முஸ்லிம்களின் கட்டுப்படுதலுக்காக துஆ செய்யுமாறு வேண்டுகிறேன்.

எவ்வாறிருப்பினும் சில உதாரணங்கள் தந்துள்ளேன். இது தெளிவுபடுத்துகிறது. உள்ளத்தில் பற்று நெருக்கத்தின் தொடர்பை இறைவனே ஏற்படுத்துகிறான். உலகில் எந்த சக்தியும் அதனைப் பிடுங்க முடியாது.

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறக் காண்பீர்கள். அல்லாஹ் இந்த வாக்குறுதியை நிறைவேறக் காண்பதற்கு பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கச் செய்வானாக.

(ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மது ஐந்தாவது கலீஃபத்துல் மஸீஹ் | குத்பா ஜுமுஆ 29.05.2020)


கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.