நீ உன் வேலையை எப்பொழுதும் பார்த்து செய்

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை...) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வை தேட வேண்டுமென்றால் ஏழைகளின் உள்ளத்திற்கு பக்கத்தில் தேடுங்கள். இதனால்தான் தூதர்கள் ஏழ்மை என்னும் ஆடையை அணிந்திருந்தனர். அவ்வாறே பெரிய சமுதாயத்தினர், சிறிய சமுதாயத்தினரை எள்ளி நகையாட வேண்டாம். மேலும் என் குடும்பம் பெரியது என எவரும் கூற வேண்டாம்.
அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் என்னிடம் வரும்போது உங்களுடைய சமுதாயம் எது? என்று நான் கேட்க மாட்டேன். மாறாக, உங்கள் செயல் எது? என்று கேட்பேன்.
அவ்வாறே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் மகளிடம், ஃபாத்திமாவே! இறைவன் குலத்தை பார்க்க மாட்டான். நீ ஏதாவது தீய செயல் செய்தால் நீ இறைத்தூதரின் மகள் என்பதால் இறைவன் உன்னை மன்னிக்க மாட்டான்.
எனவே நீ உன் வேலையை எப்பொழுதும் பார்த்து செய் என்று கூறினார்கள்.

(Malfoozat, vol 3 page no. 370 new edition)

கருத்துகள் இல்லை:

Love for All Hatred for None

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.